Monday, July 6, 2020

தட்டுங்கள் திருத்தப்படும்

தட்டுங்கள் திருத்தப்படும்

புதியவன்

நெருப்புமழை பொழிகிறது…
எல்லாத் துளிகளிலும்
கருகிப்போன வாழ்க்கையின்
முனங்கள் சத்தம் கேட்கிறது…

எருமை மாட்டுக்கு
மழை பெய்தால்
சொரணை எப்படி தெரியும்?
நாம் எருமைகளாகவே வளர்ந்துவிட்டோம்!

கிரிக்கெட்டும் சினிமாவும்
கண்களை மேய்வதால்…
நம்மை சுற்றியுள்ள கங்குகளைப்
பூக்கள் என்கிறது நரிகள்…
நாமும் பூமிதிக்கிறோம்!


நமதுசமூகம் – அரசு – குடும்பம்
நம்மை எருமைகளாகவே வளர்த்துவிட்டன!

கடிவாளம் கட்டிய குதிரைகளாக
சொரணைக்கெட்ட எருமைகளாக
பிரச்சனைகளே தெரியாமல்
அடங்கிக் கிடக்கிறோமே…
இது யாருக்காக?

நமக்கும் சொரணை வருமென்றால்!
நெருப்புமழை பொழிகிறது…

குடைபிடிப்பது எப்பொழுது?...




No comments:

Post a Comment

தஞ்சை புத்தகத் திருவிழா - 2026

 தஞ்சை புத்தகத் திருவிழா - 2026 சிறப்புரை- வீட்டில் வாசிப்பும் சமுகத்தில் மாற்றமும் நாள் - 05.09.2026

அதிகம் பார்க்கப்பட்டவை