Monday, July 6, 2020

அன்புள்ள அத்தான்


அன்புள்ள அத்தான்
புதியவன்

நாக்கும் மூக்குமே
மொத்த உடம்பு
என்னை ருசிக்க
போதுமானது அவருக்கு
எனக்கான மரியாதை?

'அக்கா
அத்தான் உன்னை
சொத்தாய் மட்டும்
பார்ப்பதா!'

தம்பியின் கோபத்தில்
தவறேதும் இல்லை

ருசிப்பதிலுள்ள ஆர்வம்
சமமாக மதிப்பதில் இல்லையே

ஆண்களை இப்படியே
செதுக்கியிருக்கிறது உலகம்

வக்கிரமும் திமிரும் நிறைந்த
ஆண்களின் வரலாறையும்
சதை கிழிகின்ற மரண வலியையும்
வேறுபாடின்றி உணர்த்தியது
என் குழந்தையின் பிறப்பு!


கூடும்போது புரியாத
விந்துவின் கணம்
பிறக்கும்போது தெரிந்தது

கண்ணீர் வடிந்து
காதோரம் சொன்னது

தாய்மையாலும்
பிழைத்து வந்திருக்கலாம்
ஆண்களின் அயோக்கிய வரலாறு!

அந்த இரவுக்கும் அவருக்கும்
என் அழகு மட்டும்
என் அறிவு?

பூ போன்ற மென்மையென்றார்
என்னை ஐஸ்...ஜாம் என்றார்

நான் காட்டாததாலோ
அவர் காணாததாலோ
எனக்கும் அவருக்கும்
தெரியாமல் போனது
என் வீரமும் வலிமையும்

பிரசவ வலியை
தாங்கும் வலிமையை
ஆண்களின்
அதிகாரக் கொட்டம் அடக்கவும்
உபயோகித்திருக்கலாம் பெண்கள்!

அப்போதுதானே உரைத்திருக்கும்
அவரைப் போன்றவர்களுக்கு...
(வெளிவந்துள்ள விபரம்)
மார்ச் 31,2017.
முதுகுளத்தூர்







No comments:

Post a Comment

இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

  இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் – பிறப்பும் வளர்ச்சியும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் (அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ...

அதிகம் பார்க்கப்பட்டவை