Monday, July 6, 2020

சொரனைக்கெட்ட நமக்காக


சொரனைக்கெட்ட நமக்காக
புதியவன்

உன் கையை
அருவாளால் வெட்டுவேன்
இன்னொரு கையால்
ஆப்பிள் கொடு எனக்கு...

உன் காலை
துப்பாக்கியால் சுடுவேன்
இன்னொரு காலால்
ஆட்டமிடு எனக்கு...

உன் மூளைக்குள்
அமிலத்தை ஊற்றுவேன்
பதிலுக்கு உன் நாவால்
துதிபாடு எனக்கு...

உன் கண்களை
சிகரெட்டால் பொசுக்குவேன்
என் கால்களைப் பிடித்து
தாராளமாய் பயணம் செய்...

தவறியும்
கண்சிவக்காதே
முஷ்டியை முறுக்காதே
வன்முறை செய்வது

அநீதியடா...




No comments:

Post a Comment

உடலாற்றுப்படை

உடலாற்றுப்படை   ஒரு மாணவர் இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள் 'டேய் உடும்பு' என்பா...

அதிகம் பார்க்கப்பட்டவை