Monday, July 6, 2020

கிரிக்கெட் சவக்குழி

கிரிக்கெட் சவக்குழி
புதியவன்

கூண்டுக்குள்முளிக்கும்
சிறுத்தைபோல
அழகானது கிரிக்கெட்
எங்கள் உழைப்பிற்குள் மட்டும்

பந்து வீசுபவர்களைவிட
திறமையாக வீசினோம்
கரையில் குவிந்தது
கடல்மீன் கூட்டம்

சதம் அடிப்பவர்களைவிட
திறமையாக அடித்தோம்
வண்ண ஆடைகளைக் கட்டிக்கொண்டு
உலகம் வெட்கப்பட்டது

பந்தை விழுந்து பிடிப்பவர்களைவிட
திறமையாக பிடித்தோம்
செங்கல் கூட்டமும்
தட்டு சிமெண்ட்டும்
கட்டிடங்களாக மின்னின

உங்கள் கிரிக்கெட்ரவுடி
மக்கள் மூளைக்குள்
கஞ்சா கசக்குகிறது

எங்கள் பையிலிருந்து
லட்சங்களையும் கோடிகளையும்
திருடுகிறது

எஙகள் தலையில்
சந்து பொந்து சண்டைகளை
வாந்தி எடுக்கிறது

எங்கள் வாழ்விற்காக
ஏமாற்றங்களைத்தவிற
ஏதேனும் சாதித்ததா!


உழைக்கும் மலர்களுக்கு வண்ணமாகுமா?
கற்பனை மனங்களுக்கு காவியமாகுமா?
மண்ணின் வியர்வைக்கு பசுமையாகுமா?
உள்ளன்போடு ஒரே ஒரு முத்தமிடுமா?...

விளையாட்டு எங்களுக்கு விருந்தல்ல
விருந்தும்மருந்தும்!

உங்கள் வெளுத்துப்போன அழகில்
புளுத்துப்போனது எங்கள் மூளை!
உள்ளே நிரம்புகிறது
உண்மைப் பேரொளி
அணையை உடைத்து
வெள்ளம்போல வெளிவரும்!

நேரம் நெருங்கிவிட்டது
விளம்பரக் குப்பைகளே
மூலதனப் பொறுக்கிகளே
உங்கள் சவக்குழிகளை
தயார் செய்யுங்கள்!





No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை