Subscribe to:
Posts (Atom)
நால்வர் ஓடும் உலகம்
நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...
அதிகம் பார்க்கப்பட்டவை
-
1.8.2.3.5.6. அன்றாட நிகழ்வுகள் சார்ந்த இனவரைவியல் ஒரு சமூகத்தை அல்லது பண்பாட்டை இனவரைவியல் நோக்கில் ஆராய்ந்து ...
-
இலக்கியப் பெரியார் புதியவன் முனைவர் கே.சிவக்குமார் SSM கலை அறிவியல்கல்லூரி, திண்டுக்கல். இலக்குடைய மனிதர்களுக்கெல்லாம் இலக்கிய...
-
இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு) புதியவன் உலகில் வேறெங்கும் இல்லாத சாதியப்படிநிலை இந்தியாவில் மட்டும...
ReplyDeleteபா.ஜெயபிரகாசம் (சூரியதீபன்)
Jeya Pirakasam jpirakasam@gmail.com
சமுகத்தின் இயங்கு முறைமையினைக் கவனத்தில் கொண்டிருக்க இப்பதிவுகள் அவசியமானவை எனப் பொதுவாக உணர்கிறேன்.
anitha sweet
ReplyDeleteanithasweet83@gmail.com
வணக்கம்,
அறிவன்புடன் புதியவனுக்கு,
உங்கள் வலை பதிவை பார்த்தேன். காதலிலிருந்து கடவுள் வரை கட்டுரையை வாசித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் உசாத்துணைகளை பார்க்கையில் எந்தளவு மினக்கெடலுடன் எழுதி இருக்கிறீர்கள் என்பது புரிகிறது.
கட்டுரையை வெருமனே விவரண கட்டுரையாக எழுதாமல் ஓர் இனணயாளுடனான உரையாடலாக புனைந்தது வெகு சிறப்பாக இருந்தது.
உரிய முறையில் கட்டுரையை வரைந்திருக்கிறீர்கள்.
கண்ணகி பற்றிய விபரங்களை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது.
உங்களுக்கு என் வாழ்த்தும் அன்பும். என்னோடு உங்கள் படைப்புகளை
அன்புடன்,
அனு
Logamadevi Annadurai logmadevi@gmail.com
ReplyDeleteதிரு சிவா
கட்டுரைகளை அனுப்பியதற்கு நன்றி.தாய் தலைமை சமூகம் மற்றும் கற்பனை உரையாடல் மூலம் சாதீய தோற்றம் இவை இரண்டும் நன்றாக இருக்கின்றது.கட்டுரையின் நீளம் மட்டும் வழமைக்கு விரோதமாக மிக அதிகமாயிருக்கிறது. கட்டுரைகளுக்கு பாராட்டுக்கள்
அன்புடன்
லோகமாதேவி-பொள்ளாச்சி
அன்புடையீர்
ReplyDeleteவணக்கம்.
தங்களின் மூன்று கட்டுரைகளும் கிடைக்கப்பெற்றோம் (1.இலக்கிய அறிவியல், 2.கடவுள் வரலாறு, 3.சோளகர்தொட்டி;திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சங்கள்). மகிழ்ச்சி.
இக்கட்டுரைகளில் தங்களின் ஆழ்ந்தகன்ற வாசிப்பின் தன்மைகள் மிகச்சிறப்பாக மார்ச்சியப் பார்வையோடு வெளிப்படுகின்றன. ஆனால் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் பொதுக்கட்டுரை நிலையிலேயே இவை உள்ளமையால் இவற்றை ஆசிரியர் குழு நிலையிலேயே ஏற்க இயலவில்லை. உரிய ஆதாரக் கருத்துக்களுடன், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளையும் சுட்டி ஆய்வுக்கட்டுரைகளாக மாற்றி எழுதுமாரு அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
தாங்கள் அனுப்பும் ஆய்வுக்கட்டுரை உரிய புலம்சார்ந்த ஆய்வறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்கப்படும் நிலையில் அதனை வெளியிடுவதற்குப் பெயல் இதழ் காத்திருக்கிறது.
நன்றி
அன்புடன்
செந்தில்குமார்
peyalpublications@gmail.com
பெயல் இதழ் peyalpublications@gmail.com
அன்புடையீர்
வணக்கம்.
தங்களின் கடவுள் வரலாறு கட்டுரையும் சோளகர் தொட்டி புதினம் குறித்த கட்டுரையும் ஏற்கெனவே பதிவுகள் பன்னாட்டு இணைய இதழில் வெளியிட்டுள்ளீர்கள்.
ஆகவே தங்களது இவ்விரு கட்டுரைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்பே வெளியிட்ட கட்டுரையை வெளியிடும் வழக்கத்தை ஆய்விதழ்கள் கொண்டிருப்பதில்லை.
புதிதாக எழுதும் கட்டுரையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரைகள் தெரிவு செய்யப்படும் முறை குறித்த கோப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி
அன்புடன்
செந்தில்குமார்
வணக்கம் சான்றீர். மன்னிக்கவும். அந்த இரு கட்டுரைகளும் புதுப்பித்தலுக்கு முன்பு அனுப்பிய கட்டுரைகள். எனினும் தங்கள் ஆய்விதழுக்கான அணுகுமுறைகளை உடனே படித்தறிந்து அதன்படி தங்களை அணுகுவேன் என உறுதி அளிக்கிறேன். ஏனெனில் தங்களது மிகச்சரியான அணுகுமுறையால் நான் கவரப்பட்டுள்ளேன். இதுவரை எந்த இதழும் அனுப்பப்படும் படைப்பு குறித்த முறையான தகவல்களை எமக்கு வழங்கியதில்லை. ஆனால் தாங்கள் அக்கறையுடன்
தெரியப்படுத்துகிறீர்கள். நிச்சயம்
தங்கள் பரிசீலனையில் அங்கீகாரம் பெரும்படி ஆய்வினை மேற்கொள்வேன். இதோ தாங்கள் அனுப்பியுள்ள விதிமுறைகளை கற்கத் தொடங்குகிறேன். மகிழ்ச்சியும் நன்றியும்...
அறிவன்புடன் புதியவன்
பெயல் இதழ் peyalpublications@gmail.com
மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் விரிந்த அளவிலும் ஆழ்ந்த நிலையிலும் வாசிக்கும் திறனும் எழுதும் திறனும் பெற்றிருப்பது கண்டு அகமகிழ்கிறேன்.
ஆய்வுச்சிக்கல் கருதுகோள் சார்ந்து ஆய்வுக்கட்டுரை எழுதி அனுப்பவும்.
தமிழ் மொழி said...
ReplyDeleteஅருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_50.html?m=1