Monday, July 6, 2020

யம்மா யம்மா கரண்ட்டே இல்லம்மா


டப்பிங்பாடல்–1
நடிகர்சூர்யாநடித்தஏழாம்அறிவுஎன்றதிரைப்படத்தில்மிகவும்பிரபலமடைந்தபாடல். யம்மாயம்மாகாதல்பொண்ணம்மா..என்றபாடல்மெட்டில்பாடலாம்!

யம்மா  யம்மா  கரண்ட்டே  இல்லம்மா
எம்  மின்மினிப்பூச்சிக்கு  காய்ச்சல்  ஏனம்மா
நட்சத்திரங்கள்  அழுகுது  பாரம்மா
எம்  தொழிலும்  இருட்டில்  செத்துப்  போச்சம்மா

மக்கள்  கண்ணீரப்  பாரு  குளமாச்சு  ரோடு
மேகத்தில்  பாரு  இடி  மின்னல்  நூறு

தூக்கம்  எங்கோ  தூங்கிப்  போச்சம்மா
இரவில்  தூங்கி  நாட்கள்  ஆச்சம்மா
மக்கள்  கோபம்  பெருகிப்  போச்சம்மா
சிரிப்பும்  இங்கே  செத்துப்  போச்சம்மா

நெஞ்சுக்குள்ளே  வீரம்
நெருப்பாக  எரியும்
அட  வீரம்  சொல்லும்  பாடம்
நம்  மனசுக்குள்  ஈரம்

ஒற்றுமையா  நாமும்
ஈசல்  போல  பறப்போம்
நம்  விடுதலை  விளைய
நாம்  மொத்தமாக  விதைவோம்

அரசின்  விசப்  பல்லு  பட்டுருச்சு
மக்கள்  மனசெல்லாம்  நெருப்பாச்சு
உணர்வும்  உரிமையும்  ஜெயிக்கலனா
வாழ்க்கையும்  செத்துப்  போச்சு!

நம்பிக்கை  மட்டும்  வாழ்க்கை  இல்லடா - ஆனால்
வாழ்க்கை  உள்ளே  நம்பிக்கை  ஆடுதடா
கனவு  எல்லாம்  உண்மை  இல்லடா – ஆனால்
கனவில்  தெரிய  உண்மை  உள்ளதடா

யம்மா  யம்மா  கரண்ட்டே  இல்லம்மா
எம்  மின்மினிப்பூச்சிக்கு  காய்ச்சல்  ஏனம்மா
நட்சத்திரங்கள்  அழுகுது  பாரம்மா
எம்  தொழிலும்  இருட்டில்  செத்துப்  போச்சம்மா

எங்களோட  உழைப்பு
முன்ன  சூரியன  உசுப்பும்
பின்ன  சூரியனும்  முழிக்கும்
அட  உங்களுக்கும்  விடியும்

மரக்கிளைகளப்  பாரு
அங்க  பறவைகள்  கூடு
எங்கக்  கூரைகளப்  பாரு
அட  நீங்க  வச்ச  நெருப்பு

வாழ்க்கை  ஒளியை  நீ  அணைக்கிறியே
எம்  மக்கள்  உயிரை  நீ  பறிக்கிறியே
எங்கள்  எரிமலை  வெடித்து  விடும்
நீ  மோதாதே  மோதாதே

வர்க்கக்  கடலாய்  வாழ்க்கை  உள்ளதடா
வலியில்  நொந்து  வாழ்வது  ஏனடா?
வறுமை  இல்லா  உலகம்  எங்கடா?
வழியை  நாமே  செய்வோம்  வாங்கடா!

யம்மா  யம்மா  கரண்ட்டே  இல்லம்மா
எம்  மின்மினிப்பூச்சிக்கு  காய்ச்சல்  ஏனம்மா
நட்சத்திரங்கள்  அழுகுது  பாரம்மா
எம்  தொழிலும்  இருட்டில்  செத்துப்  போச்சம்மா

மக்கள்  கண்ணீரப்  பாரு  குளமாச்சு  ரோடு
மேகத்தில்  பாரு  இடி  மின்னல்  நூறு

தூக்கம்  எங்கோ  தூங்கிப்  போச்சம்மா
இரவில்  தூங்கி  நாட்கள்  ஆச்சம்மா
மக்கள்  கோபம்  பெருகிப்  போச்சம்மா
சிரிப்பும்  இங்கே  செத்துப்  போச்சம்மா

வெளிவந்த விபரம்




புதிய கோடாங்கி, ஏப்ரல் 2016. (பக் 8 - 9)


நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்

•  காணொளி கருத்துரையாடல்


          ஏழாம் அறிவு படத்திலிருந்து யம்மா யம்மா.. -


No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை