Monday, July 6, 2020

பூமிக்கும் மூளைக்கும் இடையில்


பூமிக்கும் மூளைக்கும் இடையில்
புதியவன்

ஆங்கிலச் சோறு போட்டு
அறிவியல் சாம்பார் ஊத்தி

கணக்கு உப்பு
கணிப்பொறி அப்பளம்
வரலாறு வருவல்
புவியியல் பொறியல்
குடிமையியல் கூட்டு

மொத்தமாய் பிசைந்து
சோத்துல கொட்டி

தாய்மொழி ஊறுகாய்
தொட்டு நக்கி
கல்வி உரிமைய
காசுக்கு வாங்கி

எதுக்கு படிச்சோம்?
என்னத்தப் படிச்சோம்?
படிச்சதே நெனவில்ல
பாதையும் தெளிவில்ல
வாழ்க்கையே புரியல
வாழவும் தெரியல
எதுய்யா வாழ்க்கை?
எதுய்யா படிப்பு?

மனப்பாடம் செஞ்சு
வாந்தி எடுப்பத
நாடு நக்கிக் குடிச்சு
வளரவாப் போவுது?
நாடே வாழல...
நாம எப்படி வாழ?


வெளிவந்த விபரம்


காக்கை சிறகினிலே, ஜுன் 2012 (பக் 26)
காக்கை சிறகினிலே, ஆகஸ்டு 2012 (பக் 43)
சாளரம் மாணவர் இதழ் விபரம் குறிப்பில்லை
நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்ற நூலில்

காணொளி கவிதைகள்

பூமிக்கும் மூளைக்கும் இடையில், 1+1=(2)ரிமை –





No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை