Sunday, July 5, 2020

கர்ஜனை மே 22


கர்ஜனை மே 22
புதியவன்

பதின் மூவர் உயிர் சரிந்தால்
எம் போராட்டம் தோற்குமோ!
தோட்டாக்கள் உயிர் குடித்தால்
உன் துப்பாக்கி ஜெயிக்குமோ!

பதின் மூவர் தியாகத்திற்கு
பதின் இலட்சம் கரம் சேர்வோம்
உன் ஒருவனின் கதை முடித்து
உலகிற்கே பதில் சொல்வோம்…
உன் உலகையே துடைத்தெறிந்து
இயற்கைக்கு அரண் செய்வோம்!

கிழட்டு நரியே
உன் தந்திரங்களுக்கு அடங்க
ஆட்டு மந்தைகள் அல்ல…
கர்ஜனை செய்வது
மக்கள் பெரும்படை!

வேதங்கள் முதல் வேதாந்தாவரை
இந்துத்துவா முதல் இலாபத்துவாவரை
சவம் அடங்கப்போவது கல்லறை
வெற்றி மட்டுமே கலங்கரை
களத்தில் மக்களின் பெரும்படை
உன் மரண ஓலமே பேரிசை!

No comments:

Post a Comment

உடலாற்றுப்படை

உடலாற்றுப்படை   ஒரு மாணவர் இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள் 'டேய் உடும்பு' என்பா...

அதிகம் பார்க்கப்பட்டவை