Monday, July 6, 2020

விடுதலைக்காக…

விடுதலைக்காக
புதியவன்

கடலலையாய் சிரிக்கத்தான்
வானம் காலமெல்லாம் அழுதது

விடியலாக வளரத்தான்
பொழுது இருட்டுக்குள்ளே ஒழிந்தது

தடையின்றி பரவத்தான்
காற்று உருவமின்றி அலைந்தது

வாழ்வில் புதுமை மலரத்தான்
நம் பழமை வாடி வதங்குது

ஒற்றுமை பூத்து மகிழத்தான்
வாழ்க்கை தனிமையிலே வேகுது

வெந்துவிட்டால் எளிமைதான்
கனிந்துவிட்டால் இனிமைதான்
மக்கள் வாழ்வின் விடியல்தான்

வர்க்கப் போரின் வழியில்தான்!





No comments:

Post a Comment

உடலாற்றுப்படை

உடலாற்றுப்படை   ஒரு மாணவர் இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள் 'டேய் உடும்பு' என்பா...

அதிகம் பார்க்கப்பட்டவை