Monday, July 6, 2020

விதி-1 இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்


விதி-1        இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்
            இயங்குதல் என்பது இயங்கிக்கொண்டிருப்பது (Dialectical Philosophy)இதிலிருந்து அதுவரைக்கும் இயங்குதலே இருக்கின்றதுஅதாவதுஎட்ட முடியாத பொருளிலிருந்து எட்ட முடியாத காலம்வரைநினைவிற்கு எட்டாத பொருட்களிலிருந்து நினைவிற்கு எட்டாத கருத்துக்கள்வரைஉலகம் எப்படியெல்லாம் தோன்றி வளர்ந்தது என்பதிலிருந்து எப்படியெல்லாம் மாறப்போகிறது என்பதுவரைஅனைத்தும் இயங்குதலேஇயங்குதல் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுதல்மாறுதல் என்ற செயல்பாடு முழுமையிலும் இயங்குதலே நடைபெறுகிறது.
            இயங்காது இருத்தல் என்று எதை சொல்வதுஅப்படி எதையாவது நம்மால் சுட்ட முடியுமாநிச்சயம் முடியாது.  அப்படிச் சுட்டினால்அதுவே இயங்குதல் பற்றிய அறியாமையாகும்ஏனெனில் இயங்குதலின் உண்மைகளை உணராதிருத்தல் என்பதே இயங்காதிருத்தலுக்கு அர்த்தம்ஆகஇயங்குதல் மட்டுமே இயங்குதல் ஆகும்இப்படியே முடித்துக்கொள்ள முடியாதுஇயங்குதலின் நுனியைத்தான் இதுவரைப் பார்த்தோம்இனி இயங்குதலின் முழுமையைப் பார்க்க முயல்வோம்.
            இயங்குதல் என்பது திசைகளைப்போலமனிதனது பார்வையின் போக்கை இயற்கை நான்கு திசைகளாக வரையறை செய்திருக்கிறதுகிழக்குமேற்குவடக்குதெற்குஇதுபோல இயங்குதல் தன்னை நான்கு தன்மைகளால் வரையறை செய்துள்ளதுஇந்த நான்கை குறிப்பிடும்போது திடீரென்று நமக்குக் காரிருள் கவ்வலாம்சூரியன் ஓடி ஒளிந்ததுபோல தோன்றலாம்கவலையில்லைவிளக்கத்தில் நிச்சயம் வெளிச்சம் பிறக்கும்.
            இயங்குதலின் நான்கு தன்மைகள்
விதி-1.1        முரண்பாடுகளே இயங்குதலை நிகழ்த்துகின்றன.
விதி-1.2 முரண்பாட்டின் மோதல்களுக்குள் நிகழ்கின்ற அளவு மாற்றமும்பண்பு மாற்றமுமே இயங்குதலை நகர்த்துகின்றன.
விதி-1.3        பழைய நிலையை அழித்துக்கொண்டு புதிய நிலைக்கு மாறுதலும்புதிய நிலையை அழித்துக்கொண்டு வேறொரு நிலைக்கு ஓடுதலும் இயங்குதலின் இலக்காதல்.
விதி-1.4        இயங்குதல் தன் இலக்கை அடைதல் என்பது முன்பிருந்த நிலைக்கு திரும்பாமல் அந்நிலையைவிட உயர்ந்த நிலைக்கு மாறுதல் மட்டுமே.

            இப்பொழுது கண்கள் கட்டப்பட்டு நடுக்காட்டில் நிற்பதாக உணரலாம்தயக்கத்தைத் தவிர்த்துவிட்டு பக்குவமாய் நடப்போம்கண்கட்டு அவிழும் தூரம் அருகில்தான் உள்ளதுவெளிச்சத்தை உணரும்போது கட்டற்ற இன்பத்தை உறுதியாக அனுபவிப்போம்வியர்த்த உடலுடன் நிற்கின்ற உச்சி வெயில் உழைப்பாளரைத் தென்னந்தோப்பின் ஈரக்காற்று முத்தமிட்டால் எப்படியிருக்கும்இத்தகைய ஓர் ஆனந்தத்தை நம் மூளை அனுபவிக்க வேண்டும்இத்தகைய உணர்வோடு தொடர்ந்து பயணிப்போம்.


விதி-1.1 முரண்பாடுகளே இயங்குதலை நிகழ்த்துகின்றன

No comments:

Post a Comment

உடலாற்றுப்படை

உடலாற்றுப்படை   ஒரு மாணவர் இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள் 'டேய் உடும்பு' என்பா...

அதிகம் பார்க்கப்பட்டவை