Monday, July 6, 2020

எழுத்துப் பறவை


எழுத்துப் பறவை
புதியவன்

பத்து பேர் படிப்போம்! 
நூறு பேருக்குச் சொல்வோம்! 
நூறு பேர் கேட்போம்!
ஆயிரம் பேருக்குச் சொல்வோம்!

எழுத்துப் பதிவுகள்
பேச்சுப் பறவைகளாக உருமாறட்டும்...
சிறகிசைக் கேட்டே
மனித வானம் சிலிர்க்கட்டும்...
வளைவு நெளிவுக் கோடுகளில்
சிறைப்பட்டுள்ளக் கருத்துக்கள்
சுதந்திரமாகப் பறக்கட்டும்...
பறவைகளின் பெரு வானம்
அறிவு மழை பொழியட்டும்...
தவித்துள்ள மனித ஆன்மா
நல்லுலகை விதைக்கட்டும்!

வெளிவந்த விபரம்

புதிய கோடாங்கி, ஏப்ரல் 2015, (பக் - 54)



No comments:

Post a Comment

நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை