Monday, July 6, 2020

தெருவில் முடிப்போம் கணக்கு


தெருவில் முடிப்போம் கணக்கு
புதியவன்
ருநூறுக்கும் மேல் சென்றா பலியானாய்
காமக் கயவன்களிடம் எப்படி சிறைபட்டாய்
அவன்களின் பழக்கத்தை எப்படி மதிப்பிட்டாய்
வெறும் நம்பிக்கையால் நீயே பாழ்பட்டாய்
உனக்கு உன்னை பற்றியும் அறிவில்லை
உன் உலகம் பற்றியும் தெளிவில்லை

தோழிகளே
ஆண்களின் தோளுக்குப் பின்னால்
உனக்கென்ன ஒழியல்…
ஆண்களின் வருமானத்தில்
உனக்கென்ன சமையல்…
ஆண்களின் வழிகாட்டலில்
உனக்கென்ன விடியல்…
ஆண்களின் அதிகாரத்தில்
உனக்கென்ன மிளிரல்…

உனக்கான ஓர் உலகமில்லையே
உனக்கென்ன வெறும் சிணுங்கள்
இருப்பதெல்லாம் உன் சிறைகள்
நீ கெஞ்சினால் தீருமா வலிகள்?


உனக்கான வாழ்க்கை உனதல்ல
அது ஆணாதிக்கத்தின் பாலிச்சை
அது சாதித்திமிறின் வாய் எச்சை
அது மதவெறியின் மண் பிச்சை
அது இலாபவெறியின் பண இச்சை
உனக்கான வாழ்க்கை அடிமை வாழ்க்கை!

அடிமையாக வாழ்வதில் உனக்கென்ன பெருமிதம்
அழகியாய் வாழ்வது அவமானம்
அறிஞராய் வாழ்வதே தன்மானம்
வீரராய் வாழ்வதே பிடிமாணம்

உன் வீரத்தால்
ஆணாதிக்கத் திமிறை
உடைத்து நொறுக்க வேண்டும்!
உன் பேரறிவால்
உனக்கான உலகை
கட்டி எழுப்ப வேண்டும்!
உன் விடுதலையில்தான்
சமூகத்தின் இடுப்பில்
சமத்துவ சிசு கருவாகும்
அதனை பிரசவிக்கும் திருநாள்
அரங்கேறும்!
உனக்கான கடமைகள் ஏராளம்
நீ உன்னையே நிந்தித்தால் அவமானம்

அடிக்காதே அண்ணா
கழட்டுறேன்.. கழட்டுறேன்..
உதடு இழிந்து அழுதவளே!

ஆணாதிக்க காமவெறி
சாதி மத இன நுகர்வுவெறி சனியன்களுக்கு
அனைத்தையும் கழட்டிவிட்டு
அடிக்கும் அடியில்
நம் மூட்டுகள் உரமேறட்டும்
அவன்களின் பிணத்தில் மலம் நாறட்டும்…

சட்டம் அரசு எல்லாம் ஃபிராடு
விரட்டி விரட்டி அடித்து நொறுக்கு
மக்கள் படையாய் கரத்தை முறுக்கு
இனி தெருவில் முடிப்போம் கணக்கு!

சுயநல வெறியுடன் வாழ்வது
நமக்கே வைத்துக்கொள்ளும் வேட்டு…
சமூக மேன்மையே நமக்கு பாதுகாப்பு
இனி வாழ்வதென்றால்
மக்கள் அதிகாரமே மாற்று!

எண்ணிப்பார்
இனி மண்ணில் நமக்கோர்
பாதுகாப்பான சொர்க்கம்
செய்து பார்!





No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை