Monday, July 6, 2020

சமூகக் கதைகளின் சுவையுடன் சமூகவிஞ்ஞானத் தத்துவ விதிகள்


சமூகக் கதைகளின் சுவையுடன் 
சமூகவிஞ்ஞானத் தத்துவ விதிகள்

இது சமூகவிஞ்ஞானத் தத்துவத்தின் எளிய அறிமுகம் (Social scientism). விஞ்ஞானம் இரண்டு வகைப்படும். 1.இயற்கைவிஞ்ஞானம், 2.சமூகவிஞ்ஞானம்இவை இரண்டையும் உணர்வது நமது நோக்கம்ஆனால்இரண்டு விஞ்ஞானங்களுக்கும் பொதுவாக இருக்கின்ற சமூகவிஞ்ஞானத் தத்துவத்தையே இங்கு முதன்மையாக உணரப்போகிறோம்சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்பவர்களுக்கு சமூகவிஞ்ஞானப் பயிற்சிகள் இயல்பாகக் கிடைத்துவிடும். இத்தகைய மேன்மையான இயல்பை அடைகின்ற முயற்சியுடன் நம் உரையாடலைத் தொடங்குவோம்.
            சாதாரண மனிதர்களால் விஞ்ஞானியாக முடியமாஇந்த கேள்வியே விரக்தியான மனநிலையை வெளிப்படுத்துகிறதுஆனால் உண்மை இதற்கு மாறுபட்டதுசாதாரன மனிதர்களே சாதனையாளர்களாக மாறுகிறார்கள்ஏனெனில் சரித்திரம் என்பது சாதாரண மனிதர்களால் படைக்கப்படுவதேஎனவே சாதாரண விஞ்ஞானியல்லநம்மால் சமூகவிஞ்ஞானியாகவும் நிச்சயம் மாற முடியும்.
            விஞ்ஞானியாவதோசமூகவிஞ்ஞானியாவதோ அத்தனை கடினமல்லகுழந்தையை நினைத்துப் பாருங்கள்அது உணவைக் கையிலெடுத்துச் சாப்பிடக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கிறதுஇந்த முயற்சி எவ்வளவு அழகாகவும் கடினமாகவும் இருக்கிறதுஎதிர்காலத்தில் எவ்வளவு எளிமையாகச் சாப்பிடுகிறதுநாமும் இப்படித்தான் சாப்பிடப் பழகினோம்பயிற்சி எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி விடுகிறதுஇது போலவே சமூகவிஞ்ஞானியாவதும் எளிமையானதே.
            மனித உடலின் இயக்கத்தில் மூளையின் சிறப்பு வேலை என்னஇதற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததேகவனித்தல்அறிதல்புரிந்துகொள்ளுதல்உணர்தல்செயல்படுதல் இவையே மனித மூளையின் இன்றியமையாத வேலைகள்இதன் பயணத்திற்கு எல்லை கிடையாதுஎல்லை கடந்து பயணிப்பதே இதன் இயற்கைத் தன்மைமனித மூளையின் இயற்கைத் தன்மைக்கு எதிராக மனிதர்களையே மாற்றியிருக்கிறது இன்றைய சமூகம்இதன் விளைவாக நாம் அறிவுச் சோம்பேறிகளாகவும்குருட்டுச் சிந்தனையாளர்களாகவும் இருக்கின்றோம்இன்று மாறுவதற்குத் தயாராகிவிட்டோம்.
            இனி சமூகவிஞ்ஞானியாக மாறுவதற்கு முயற்சிப்போம்நமது சிந்தனைமுறையை ஒழுங்குபடுத்த ஐந்து வழிமுறைகள் தேவைப்படும்வழிமுறைகள் ஐந்தும் மிக எளிமையானவைஇவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும்இந்த வழிமுறைகள் நம் சிந்தனைகளில் கலந்திருந்தால் போதும்நாமும் விஞ்ஞானிகளே.
            வழிமுறைகள் – 5
1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்
2.பொருளையும் கருத்தையும் உணர்தல்
3.வரலாற்றை உணர்தல்
4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல்
5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல்
            இந்த வழிமுறைகளைச் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்உலக வரலாற்றிலேயே உண்மை அறிவதற்கான சிந்தனைமுறையாக இவை நமக்கு கிடைத்திருக்கின்றனஇயற்கை விஞ்ஞானத்திற்கும் சமூகவிஞ்ஞானத்திற்கும் இவையே அடிப்படைஇந்த வழிமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்இதன் வழியில் சிந்தித்துப் பழக வேண்டும்இந்த வழிமுறைகளால் செய்யப்பட்டுள்ள சிந்தனை ஆற்றலின் வழியாக உலகைப் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டால்நாம் சமூகவிஞ்ஞானிகளாகச் செயல்படத் துவங்கியுள்ளோம் என்று அர்த்தம்.
            இந்த இலக்கை அடைய நாம் ஒத்துழைக்க வேண்டும்கற்றுக்கொள்ளும் வழிமுறைகளை நமக்கு நாமே பயிற்சி செய்ய வேண்டும்நம் சிந்தனைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும்சகநண்பர்களின்  உதவியுடன் நம் சிந்தனைப் பயிற்சியைச் சரி செய்துகொள்ள வேண்டும்சகமக்களாக நாம் இணைந்து செயல்படுவது அவசியம்ஒற்றுமையே நம் பயிற்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும்மற்றபடி இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமேசோர்வடையாமல் படிப்போம்நமக்குத் தெம்பூட்ட பல சுவையான உணவுகளும் நல்லக் கதைகளும் எடுத்துக்காட்டுகளாக வரப்போகின்றன.

            இனி ஐந்து வழிமுறைகளையும் ஒவ்வொன்றாக எடுப்போம்நம் சிந்தனைக்குள் கலக்க முயற்சிப்போம்.

No comments:

Post a Comment

கற்றதனால் ஆய பயன்

  கற்றதனால் ஆய பயன்   முனைவர் புதியவன்    அப்பாவிடம் எங்க அம்மா சொல்வாங்க. ஏங்க இவனுக்கு பரோட்டா கடைக்காரர் மகளை ப் பார்த்து கட்டிக் ...

அதிகம் பார்க்கப்பட்டவை