Monday, July 6, 2020

வைகை நதி ரோடு


வைகை நதி ரோடு
புதியவன்

மாட்டிறைச்சிக் கடையில்
விளையாடிக்கொண்டு இருக்கின்றன
ஈக்கள்…

விற்பவரும்  வாங்குபவரும்
வாதம் செய்கிறார்கள்…

இடுப்பு வலிக்க ஓங்கப்படுகின்றன
இரும்புக் குண்டுகள்…
கட்டை விரல்களுக்கு அருகே
மாறி மாறி அறையப்படுவதால்
பக்குவமடைகின்றன இரும்புகள்…

இரும்பு மனிதர்களின் வியர்வை வாசனைக்கும்
இறைச்சிக் கடைகளின் இரத்த வாசனைக்கும்
இடைப்பட்ட போட்டிகள் முடிவதற்கில்லை!

மனிதத் தலைகளின் விமர்சனங்கள்
இரைச்சலாக சலசலக்கின்றன…


ஆ(ள்)லைக் கழிவுகளும் குப்பைகளும்
அடைத்துக்கொண்டு இருப்பதால்
வைகையின் காது செவிடு!

எவற்றையும் கண்டுகொள்ளாமல்
“சர்ர்…” சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது
வைகை!



No comments:

Post a Comment

கூலாங்கற்கள் உருட்டிய காலம்

  கூலாங்கற்கள் உருட்டிய காலம்     முனைவர் புதியவன்   வகுப்பில் அமைதி நிறைந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்கள் மாணவர்கள். அது படைப்பி...

அதிகம் பார்க்கப்பட்டவை