Monday, July 6, 2020

அறிமுகம்




நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம்
புதியவன்



(YOU MAY ALSO BECOME A SOCIAL SCIENTIST )

அறிமுகம்

சமூகவிஞ்ஞானம் என்பது உலகம் முழுவதும் அறிமுகம் பெற்றுள்ள அறிவியல் தத்துவம். உலகளாவிய உழைக்கும் மக்களிடம் நிறைந்த புகழையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய மக்களின் தத்துவத்தைச் சமகால மக்களிடம் சேர்க்க வேண்டும். சமூகவிஞ்ஞான உலகப்பார்வையைச் சகமக்கள் பெற வேண்டும். இதற்கானச் சிறு முயற்சியே இந்நூல்.
      இது சமூகவிஞ்ஞானத்தின் எளிய அறிமுகம் மட்டுமல்ல. சமூகவிஞ்ஞான வாழ்க்கை முறையையும் நன்கு அறிமுகம் செய்கிறது. சமூகவிஞ்ஞானிகளின் வாழ்வியலை உணரச் செய்கிறது. இதற்கான புதிய முயற்சிகளை இந்நூல் நன்கு பிரதிபலிக்கிறது. ஒரு மாபெரும் அறிவியலை கலை வடிவில் சொல்கிறது. கதைகவிதை போன்ற உணர்வு பொங்கும் மொழிநடையில் பேசுகிறது. அறிவியல் கலை இலக்கியத்தின் சிறப்பானப் படைப்பாக இந்நூலை உணரலாம்.
      இந்நூல் நம் உள்ளத்தில் மூன்று கேள்விகளை எழுப்புகிறது.
      1. சமூக அக்கறையின்றி தனிமனிதனாக வாழ்வது சரியா?
      2. சமூக அறிவின்றி குருட்டுச் சிந்தைனைகளுடன் வாழ்வது சரியா?
      3. சமூகப் பாதுகாப்பின்றி பலவீனமாக வாழ்வது சரியா?
நாம் சமூகவிஞ்ஞானிகளாக மலர்வதற்கான தர்க்கம்இந்தக் கேள்விகளில் இருந்தே துவங்குகிறது. நாம் ஒவ்வொருவரின் சகமனித உணர்வும் உரக்கச் சொல்கிறதுஇவற்றின் விடையை. ~நாம் தவறான சமூக வாழ்வியலை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்!இந்த விடை நம்மைச் சரியான வாழ்வியலுக்காக ஏங்கச் செய்கிறது. சரியான பாதையைத் தேடி அலையச் செய்கிறது. சமூகவிஞ்ஞானிகளின் பாதையே சரி என்பதை உணரச் செய்கிறது.
      சமூக அக்கறையுடனும்சமூக அறிவுடனும்சமூகப் பாதுகாப்புடனும் வாழ வேண்டுமல்லவா! அப்படியென்றால்சமூக அக்கறையுடன் நமது சமூகத்தைச் சரி செய்கின்ற சமூகமாற்றக் களங்களில் இணைந்து வாழ வேண்டும். சமூகவிஞ்ஞானக் களங்களில் குடும்பம் நிகழ்த்த வேண்டும். இத்தகைய வாழ்வியலே சரியாகும்.
      இந்நூலை வாசிப்பவர்கள் சமூகத்தைச் சரிசெய்கின்ற கடமையுணர்வுடன் சமூகமாற்றக் களங்களில் இணைந்து வாழ்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
      சமூகவிஞ்ஞானிகளும் இத்தகைய நிகழ்வை விரிவுபடுத்துவார்கள் என்பதாகவே உணர்கிறோம். இவை நிகழ்ந்தால் அதுவே எங்கள் வெற்றி. 

_முகம்







No comments:

Post a Comment

கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?

    கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?   புதியவன் முனைவர் கே.சிவக்குமார் SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்...

அதிகம் பார்க்கப்பட்டவை