Monday, July 6, 2020

வாழ்ந்தா சொரணையோடு வாழனும்


வாழ்ந்தா சொரணையோடு வாழனும்
புதியவன்

கீறுகிறான் நம் கழுத்தை
கிழிப்பதற்காக

உரிகிறான் நம் இரத்தத்தை
குடிப்பதற்காக

குடைகிறான் நம் கண்களை
பறிப்பதற்காக

மெல்லமெல்ல
குழிதோண்டுகிறான்
நம்மை புதைப்பதற்காக

வாருங்கள்
ஒன்றிணைவோம் கற்போம் எதிர்ப்போம்
அணிதிரள்வோம் போராடுவோம் வெல்வோம்

'சமூக பிரச்சனையில
தலைய கொடுத்து
வெட்டியா
வாழ்க்கைய கெடுத்துக்காதீங்க'...

சமூகபிரச்சனைய கண்டுக்காம!
ஓடிஒழிவாயா?
நாயாக விரட்டிக் கடிக்கும்

தனிமரமாக நிற்பாயா?
புயலாக வந்து சாய்க்கும்

எலியாக இருட்டில் சுற்றுவாயா?
பூனையாக வந்து வேட்டையாடும்

நம்மை
பாதுகாப்பதாபலிகொடுப்பதா?
முடிவு உன்னிடமும் என்னிடமும் அல்ல
நம்சமூகத்தின் கையில்!

நீ விட்டாலும்
சமூகம் உன்னை விடுவதில்லை
சிறுவர்கள் நாய் விரட்டுவதுபோல!

ஆத்துக்குள் மூச்சுமுட்டி
செத்திருக்கிறாயா?

நாளை கேட்பார்கள்
நமது பிள்ளைகள்

'பெருசா எங்கள பெத்துட்டீங்களே!
ஆரம்பத்திலேயே நீங்க
ஏதிர்த்து சரிசெய்திருந்தா
இந்தக் கேவலமான
அடிமை வாழ்க்கை
எங்களுக்கு வந்திருக்குமா?'

இந்தக் கேள்வி
நம் மூச்சை முட்டும்
நெஞ்சு வலிக்கும்
சொல்வதற்கென்று
எந்த பதிலும்
எஞ்சி நிற்காது!

நாம் இறப்பதற்கு
...இடையில்...
என்னசெய்யப்போகிறோம்?




No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை