Monday, July 6, 2020

சட்டுண்னு சொல்லுடா?


சட்டுண்னு சொல்லுடா?
புதியவன்

நமக்குள் நான்
விதைக்கத் துடிப்பதெல்லாம்
மக்களுள் கலந்துள்ள வாழ்வை

மின்னல் போல்
ரத்தினச் சுருக்கமாக
சொல்லிவிட பயம்

நமக்கு பளீரென்று கூசலாம்
குருட்டு வாழ்க்கை நீளலாம்

கண்களில் படபடக்கும்
வியர்வையில் கமகமக்கும்
மாறாதா சமூகம் என்ற ஏக்கம்
மாற்றியே தீர்வோம் என்ற ஊக்கம்!


நம் விதைப்பின்
விளைச்சலும் அறுவடையும்
நொடிப்பொழுது மின்னலில் அல்ல!
நீண்ட கால வெயிலில்
சிறுசிறு நிழலில்
வரலாற்றின் சாட்சியால்
நிச்சயம் நிகழும்!

மறந்துபோன சதிகளை
மறத்துப்போன வலிகளை
கலைந்துபோன இன்பங்களை
உரைந்துபோன உண்மைகளை
நமக்கான அறுவடைக்கு
நானும் விதைக்கிறேன்!

இருட்டு வாழ்வின் நடுவில்
நாக்குபோல அசைகிறது மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தியின் ஒளியாக
பரவி நின்று சொல்கிறேன்
சுனாமியில் கால் நனைத்து விளையாட

என்னால் முடியவில்லை!

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை