Monday, July 6, 2020

தறுதலைகள்

                                தறுதலைகள்
                                   புதியவன்

எங்களைப் பெற்றெடுக்கவா
புணர்ந்தீர்கள்!

உங்கள்
கட்டளைகளையும்ஆசைகளையும்
சுமப்பதற்கு
கழுதைகளா நாங்கள்!

எங்கள்
சுதந்திரம்உரிமைகளை
அதிகாரக் கொடுக்குகளால் கிழிக்காமல்
வழிகாட்டத் தெரியாத நண்டுகளே!
உங்களுக்கு ஏன்
குழந்தைச் செல்வம்?
ஒப்பந்தம் இல்லாத கைதிகள் என்பதாலா?

'புரியாதவர்கள்என்றே
புத்தியைப் புண்ணாக்குனீர்களே...
அதிகாரம் என்பது
புரிதல் இல்லை - இது
உங்களுக்குப் புரியாதா!

சரியாக பயன்படுத்தாத
அதிகாரங்கள் அழகற்றது

உங்கள் யாருக்குமே
அதிகாரம் செய்ய தகுதிஇல்லை!

அனுபவம்  + வழிகாட்டுதல்=புரிதல்
புரிதல் நிகழ்ந்தால்
பயணம் வெற்றி!
புரியாவிட்டால்..?


'வாழ்க்கை'
ஜனனம் முன்வாசல்
மரணம் பின்வாசல்

வாழ்க்கையின் பயணம்
எந்தவாசலில் இருந்து
எந்தவாசலை நோக்கியது
என்பதே புரிதலின் இரகசியம்...

எங்களை வாழவிடுங்கள்!
பயணத்தின் இறுதி
பசுமையோபாடையோ
எல்லை வரையில் காத்திருங்கள்!





No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை