Monday, July 6, 2020

நாட்டின் முட்டைகள்


நாட்டின் முட்டைகள்
புதியவன்

நாட்டை கவ்வி இருக்கின்றன பாம்புகள்!
ஒவ்வொரு குடும்பத்தையும் அடுப்பாக்கி
நம்மை அவித்துத்திண்கின்றன...
சூடேறும் நீரில்
நூறு டிகிரி வெப்பத்தில்
வெடித்து சாவோமென
தவளைக்கு தெரிவதில்லை!
நாம் தவளைகளாக இருக்கின்றோம்...
தவளை போல தாவுவதால்
பாம்பு பயப்படப் போவதில்லை!
நாம் வாழ்ந்தாக வேண்டும்...
நாட்டுப்பற்றை அடக்கியிருக்கும்
அத்தனைக் குடும்பங்களையும் அடைகாப்போம்!

அதிகார ஓட்டினை உடைத்துக்கொண்டு
கழுகுகுஞ்சுகளாய் வீரஅழகுடன்
நாட்டுப்பற்று வெளிவரட்டும்

பாம்பிற்கு பலியாக
இனியும் நாம் தவளைகளல்ல…
நம் கழுகு கரங்களில்
பாம்புகளின் கதை நிச்சயம் முடியும்!

வெளிவந்த விபரம்
கவிஞர் புதியவன் வார்த்தவை

அடையாள இலக்கம்: 548


No comments:

Post a Comment

தஞ்சை புத்தகத் திருவிழா - 2026

 தஞ்சை புத்தகத் திருவிழா - 2026 சிறப்புரை- வீட்டில் வாசிப்பும் சமுகத்தில் மாற்றமும் நாள் - 05.09.2026

அதிகம் பார்க்கப்பட்டவை