டப்பிங்
பாடல்-3
சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி பட பாடல் காட்டுக்குயிலே மனசுக்குள்ளே என்ற பாடல்
சமூக அக்கறையுடை பாடலாக டப்பிங் செய்யப்பட்டுள்ளது. – அறிவன்புடன் புதியவன்
1 வீட்டுக்குள்ளே நாட்டுக்குள்ளே
மக்கள் வாழும் அடிமை வாழ்ககை மாயத்தான்
2
அன்பு தொட்டு வீரம் தொட்டு
உண்மை அறிவின் உச்சம் பெற்று வாழத்தான்
T
மனிதர் வந்த பாதை என்ன?
தோல்வி கண்டு சோகம் என்ன?
நம்மை வீழ்த்தும் துரோகம் என்ன?
நாளை வெல்லும் பாதை என்ன?
(வீட்டு..)
1
அறிவு தேடி வாழ்ந்தாலென்ன
அன்பு வேண்டி மாய்ந்தாலென்ன
வாக்கு கேட்டவன் பாடை செய்வான் மாற்றம்
ஏதடா டோய்
2
போதை எல்லாம் விட்டுத்தள்ளு
பழமை எல்லாம் பாடம் பெற்று
புதுமை உலகம் படைப்போமென்று சபதம் கொள்ளடா டோய்
1
கொடுமை வாழ்க்கை வீச
தனிமை வாழ்க்கை கூச
அறிவு பொங்கி வீரம் சேர்த்து வெல்லலாம்
2
பொய் வழக்கில் நம்மை
ஒடுக்கும் கெட்ட தொல்லை
துணிவு பெற்று வெல்ல என்ன செய்யலாம்?
½
அச்சம் எல்லாம் விட்டுத்தள்ளு
பேதம் எல்லாம் முட்டித்தள்ளு
மக்களாக வென்றிடுவோம் நாம் தான்!
(வீட்டு..)
1
படிப்பு என்ன வேலை என்ன
லாபம் என்ன நட்டம் என்ன
பிழைப்புக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம்
நாமல்ல
2
பாசம் வைக்க பாடம் கற்க
மக்கள் உண்டு வாழ வைக்க
அவரைப்போல உறவுக்காரர் யாரும் இங்கில்ல
1
உண்மை வெல்ல நாமே
உசுரக்கூடத் தானே
2
நம் மக்கள் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவோம்
1
நம் மக்கள் போட்ட சோறு
நிதமும் தின்னோம் பாரு
2
நாட்டைக் கூட தாயைப் போல எண்ணுவோம்
½
சோர்வு விட்டு மடமை விட்டு
சொர்க்கம் ஒன்று மண்ணில் கட்டு
நல்லுலகம் மலரச் செய்வோம் நாம்தான்! (வீட்டு..)
•
வீட்டுக்குள்ளே நாட்டுக்குள்ளே
No comments:
Post a Comment