Thursday, January 25, 2024

மலை மலை மலை அண்ணாமலை

மலை மலை மலை அண்ணாமலை

மலை அண்ணாமலை

 இலை இலை இலை ஒட்டு இலை

தாமரை காலில் ரெட்ட இலை

தூண்டிலுக்கு பக்தி மலை

 மக்களுக்கு இந்து போதை

மீடியாக்கு வெத்து மலை

 நேர்ந்து விட்ட ஆடு மலை

 மலை மலை அண்ணாமலை

நாட்டை விற்கும் மாமா

 போடு…

பாஜக உடை ஆர் எஸ் எஸ் மூளை அண்ணாமலை

 அழுக்கு மொந்தை அழுக்கு மொந்தை அண்ணாமலை

 

மலை மலை பாஜக மலை

 மலை மலை ஆர் எஸ் எஸ் மந்தை

 இலை இலை ரெட்டை இலை

 தாமரை பூக்கும் ரெட்டை இலை

 

சுடச்சுட செய்தியில் வரவும் மீம்ஸ்ல வேகவும்

ஊடகம் சாகவும்

மொக்கை போட்டு திமிரா வரும்

அண்ணாமலை நான் தானே

 

அப்படியே கிளப்பிக் கொண்டு போயி

கடத்தல் மன்னர்கள் கடத்த பாக்குற  

அஞ்சு லட்சம் ரஃபேல் வாட்ச்ச

கட்டின ஏழை நான்தானே

 

இந்து போதை அம்மா

நாட்டை கூறு போடணும் அம்மா

கூச்சம் ஏண்டி அம்மா

போடு அதானிக்கு சும்மா

மலை மலை அண்ணாமலை

தாமரைக்கு ரெட்டை இலை

 

பாலியல் ஜல்சா கட்சியா

இவிங்க வார்த்தைகள் வெறும் ரீலைய்யா

ஆருத்ரா பலகோடி அமிக்கிட்டா  

கூட ஆடுது அண்ணாமலை வேட்டிப்பா

 

மலை மலை அண்ணாமலை

தாமரைக்கு ரெட்டை இலை

இலை இலை ஒட்டு இலை

தாமரை காலில் ரெட்டை இலை

 

பேரம் பேசுனான் மீடியா கதறுறான்

 பேமஸ் ஆகுறான் நாட்டை ஏய்க்கிறான்

 மச்சான் பொல்லாதவன் மூளை இல்லாதவன்

 மானம் போனாலும் வெளியே சொல்லாதவன்

 

பச்ச பச்ச வீடியோ சிக்குற

பெண்களை கொல்லுற ஆபாசம் பேசுற

 மதச் சண்டை கிளப்பி ஆடும்

பரமப்படம் நான்தானே

 

வேதம் டூ வேதாந்த வரைக்கும்

ஊழலு பண்ணுனா என் பங்கு வரும்

வாக்காளர் எல்லாரும் தொடும்

தாமரை சின்னம் நான்தானே

அய்யோ அய்யோ ஜோக்கர்
ஊரு விரட்டி அடிச்சா மர்டர்

அய்யோ அய்யோ ஜோக்கர்

நாடு திருப்பி அடிச்சா அம்பேல்

மலை மலை அண்ணாமலை

தாமரைக்கு ரெட்டை இலை

 

கோகிலா ஏண்டி அழுகுறா

அவ கோலத்தை பார்த்துட்டு சிணுங்குறா

 வாசலில் தாமரை கோலம்தான்

தேச்சி அழிக்குறா தண்ணி ஊத்துறா

 

மலை மலை மலை அண்ணாமலை

மலை அண்ணாமலை

இலை இலை இலை ஒட்டு இலை

தாமரை காலில் ரெட்ட இலை

தூண்டிலுக்கு பக்தி மலை

 மக்களுக்கு இந்து போதை

மீடியாக்கு வெத்து மலை

 நேர்ந்து விட்ட ஆடு மலை

 மலை மலை அண்ணாமலை

நாட்டை விற்கும் மாமா

 போடு…

பாஜக உடை ஆர் எஸ் எஸ் மூளை அண்ணாமலை

அழுக்கு மொந்தை அழுக்கு மொந்தை அண்ணாமலை

 

 

 

 


Wednesday, January 24, 2024

ஏய் ரவி இது தமிழ்நாடு!

 காக்கி சட்டை கழற்றிய பாம்பு

காவி சாட்டை ஆட்டும் குரங்கு

எம் சமூகநீதி தலைவர்கள் நாமம்
நீ உச்சரித்தால் நாக்கில் சிரங்கு

பகலவனுக்கு பல் இளித்தாய்
இருளுக்குத்தான் பூஜை செய்தாய்
விண்மீன்களைப் பூசிக்கொண்டே
நிலவுக்குத்தான் வலை விரித்தாய்

வியர்வை மழையில் விளைந்த உலகை
அதளபாதாளத்தில் உருட்டிவிட்டாய்

இமாலய உயரத்தில் பொருளாதாரமென
மெழுகு வெளிச்சத்தில்
நிழல் ஆட்டுகிறாய்

ஆயிரம் மாளிகை ஏழைகளுக்கு
ஒதுக்கீடு வர்ணம் தீட்டுகிறாய்

கஞ்சிக்கு இல்லா பணக்காரர் வயிற்றில்

ஆனந்த தாண்டவம் ஆடுகின்றாய்

 

எம் தலை கொய்தவரின் மகுடியே
எம்மை அகிலம் உயர்த்தவா பிதற்றுகிறாய்!

 

ஒன்றிய நரியை சீராட்டும்
இலாப வெறி பேய்க்கே
கையும் காலும் தூக்கத் தூக்கும்
கண்ணாடி பிம்பம் நீயே

 

 https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/hey-ravi-this-is-tamil-nadu/

அதான் நீ

ந்தி சாய்ந்த
ஆற்றுப் பாலத்தின் கீழ்
நதி சலனமின்றி பயணித்திருந்தது

 

கரையோர மாடுகள்

சிறு மழையைப் பொருட்படுத்தாது

அசமந்தமாய் அமர்ந்திருந்தன

 

திசைகள் பறக்கும் வாகனங்களால்
தூரம் தெரியும் பாலங்கள்
காதலரின் உதட்டு புன்னகைபோல் அழகிட்டன

 

மக்களின் இருள் நிறைந்த வாழ்வை
விளக்குகளால் திரையிட்டு மறைத்தபடி

நகரம் வசீகரித்தது

 

சிறுவர்களின் விளையாட்டுக்களில்
நாட்டை விற்ற தலைவர்கள்
வசை சொற்களாகவும்
கேலி கிண்டல் ஏச்சுக்களாகவும்

பெயர் பெற்றுவிட்டார்கள்

மக்களின் ஒட்டுமொத்த செல்வங்களும்
சில கேடிகளின் கோடிகளாயின

மக்களோ தெருக்கோடியில் பிச்சையர் ஆகினர்

கண்ணுக்கு தெரியாமல் களவு போனது தேசம்

 

இணையதள விளையாட்டுகளில்

தேசத்தின் மன்னர்கள்

திறன் மிகு வீரர்களாய் சண்டையிட்டபோதும்

 

சினிமா நாயகர்களின் பாதங்களை

கொஞ்சி மகிழ்ந்தபோதும்

 

நாட்டிற்காக பந்தாடியவர்களை

கொண்டாடி ஆர்ப்பரித்தபோதும்

 

மது போதை உச்சம் ஏற

உளறித்தீர்த்தபோதும்

 

பல மணிநேரம் அலங்கார பிம்பங்களாக

கண்ணாடியில் மூழ்கி திளைத்தபோதும்

 

மதவிழா கூட்டங்களில்

பக்தி பெருக கண்கள் மூடி
தெய்வம் தொழுதபோதும்

 

சாமி காப்பாத்து என்று

குழந்தைகளைச் சொல்லச்சொல்லி

சாமியைக் காப்பாற்றிக் கொண்டிருந்தபோதும்

 

சாதி மத வெறியர்களின்
வதை படுகொலை காட்சிகளை
காண ஒண்ணாத் துயரங்களை
கடந்து சென்றபோதும்

கண்ணுக்கு தெரியாமல் களவு போனது தேசம்

 

எஜமானன் ஊதும் மகுடிபடி
நாட்டு தலைவன் படமெடுத்து ஆடுகிறான்

 

அடித்த வெயிலுக்கு தாங்காத சிறுமழை
வெக்கையை கிளப்பிற்று

அடித்த கொள்ளையில் மிஞ்சாத எம் நாடு
வெறுப்பை கிளப்பிற்று

 

அடி வயிற்றிலிருந்து எழுந்த

கெட்ட வார்த்தையை
அதான் நீ என்று
நாட்டுத் தலைவனை வசை பாடினேன்

அதானி அதானி என்று
நாடெங்கும் எதிரொலித்தது


https://makkalathikaram.com/arasiyal/adani-poet/

ஆகப்பெரிய கெட்ட வார்த்தை

 பாலுக்கும் கஞ்சிக்கும் வரிவலை

விலையின் உயரமோ எரிமலை
உம் கரங்கள் இரக்கமற்ற இதயம்
எம் வாழ்க்கை இறக்கின்ற தருணம்
போடாங்…

உழைப்பின் அழுத்தமோ சரவெடி
கிடைக்கும் ஊதியம் சிறுபொரி
உம் கரங்கள் கொளுத்துகின்ற மரணம்
எம் வாழ்க்கை எரிகின்ற சடலம்
போடாங்…

கனவின் விருப்பமோ விடுதலை
நனவின் வழக்கமோ படுகொலை
உம் கரங்கள் வன்புணர்ந்த கோரம்
எம் வாழ்க்கை சிதைந்துபோன தேகம்
போடாங்…

நீ இலாபவெறி பிடித்த மிருகம்
பூணூல் குடும்பி உன்னை வணங்கும்
கழுத்தை பிடிகொடுத்த உலகம்
மரண ஓலத்தில் கதறும்
போடாங்…

மூச்சிழந்தவர் அடிவயிற்றில் சிக்கிப்போனது அந்த வார்த்தை
உன்னை திட்டித்தீர்க்க முடியவில்லை

கிடைத்தவர் உதவுங்கள்
ஆகப்பெரிய
கெட்ட வார்த்தையால் திட்டித்தீர்க்க வேண்டும்.

https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/kavithai/15-02-2023-a-very-bad-word-newcomer/

புரட்சி பல்லாக்கு!

பல்லாக்கு இனிமை
குருபீடத்தின் மகிமை
மகிமை நீ எனில்
எம் மனிதம் சிறுமையோ
ஆதினம் மேல் எனில்
மானிடம் கீழ்தானோ
இனி கீழ் செய்த நாவினம்
எம் முன்னே ஆடுமோ!

எம் தோள்களில் அமரவா
சொகுசு பல்லாக்கு
உலகை படைத்த எம் தோள்கள்
இனி சுமக்க இசைவதில்லை நாங்கள்

உன்னை பீடம் என்கிறாய் நீ
பீடை என்கிறோம் நாங்கள்

எம் தோள்களை வதைப்பது
பல்லாக்கு வன்மம்
அந்த பீடையின் அழுத்தமோ
ஆயிரமாண்டு கதை சொல்லும்
அடிமையாய் மூச்சிழந்த
பாட்டிமாரின் வதை சொல்லும்

வாயிலும் மார்பிலும்
தொடையிலும் சூத்திலும்
விதவிதமாய் பிறப்பென்ற
சனாதன வக்கிரம்
கோர நகமாய் அழுத்தும்
பல்லாக்கு இதயம்வரை கீறும்

உடன்கட்டை நெருப்பிலே பொசுங்கிய தேகம்
பெண்களின் ஓலத்தை கட்டைகள் பாடும்
பல்லாக்கு தகனம் உயிரெல்லாம் நடுங்கும்

சாதியின் விளக்கிட்டு வடதிசை காட்டும்
மதவெறி கைநீட்டி தென்திசை காட்டும்
இரண்டுக்கும் நேரிட்டு இலாபவெறி சேரும்
கார்ப்பரேட் காலடிதான் பல்லாக்கின் ஜாலம்

எம் தோள்களில் சுமந்தது மானிட கேடு
பள்ளத்தில் வீசினால் தலைமுறைக்கு நாடு

அனுமன் வைத்த தீ
கதையோடு அணைந்தது
எம் மக்கள் வைத்த தீ
அலரி மாளிகை அலறுது

பல்லக்கின் மோகம்
இனியும் தொடரும் எனில்
108ல் பவனி

வீதிகள் முழங்கிடும்
மக்கள் விடுதலை பாட்டு
மக்கள் அதிகாரம் அமர்ந்தது
புரட்சி பல்லாக்கு.

https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/kavithai/15-05-2022puratchi-pallakku/

காரிருள் பூத்த தாமரை

 

கருங்குழி இரவு
குளமெங்கும் தாமரை மலர்ந்தன

பண மதிப்பிழப்பால்
வரிசையில் சோர்ந்த சீமாட்டிகள்போல
பொலிவிழந்தன தெருவெங்கும் மரங்கள்

பல்லாயிரம் கால்களில் பயணித்த மரணம்
பிணமான தாயின் பாலில்லா மார்பை
பசியுடன் உந்திய குழந்தைபோல
எலும்பு தோல் போர்த்திய நாயினை குட்டிகள்
குடிசையின் முற்றத்தில் மொய்த்தன

தாயின் வயிறு கிழித்து
சிசுவை எரித்த சூலாயுதம்போல

பொந்திலிருந்த கிளிக்குஞ்சுகளை

விழுங்கித் தீர்த்தது சுழல் பாம்பு

ஏந்திய மெழுகுவர்த்திகளின் சிற்றொளிக்கு
அஞ்சி மறைந்த கொரனாபோல்
மின்மினிக்கு அஞ்சி முளித்தன
பெருங்கண் ஆந்தைகள்

பேரிருள் சூழ
தேர்தல் இரதங்களில் யாத்திரை தொடங்கிட

சாதி வெறியுடன் சனாதன நடனம்

பரப்புரை எங்கும் மதவெறி ஜாலம்

இலாப வெறிக்கு சாகச மகுடம்

மனிதநேயத்தின் அஸ்தம கோலம்

கோமாளிகள் கூத்திட வெடிப்பொலி அதிர்ந்தன

 

ச்ச்சீ…
நரியிடும் ஊளை என்றனர் பலர்
பேய் என்றது பிள்ளை
நீ என்றேன் நான்.

  

https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/carirul-flower-lotus-newbie/

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை