Monday, July 6, 2020

விதி-1.1.3 நட்பு முரண்பாடும் x பகை முரண்பாடும் (சம்பவம் 2) (சிறுகதை 3)


விதி-1.1.3 நட்பு முரண்பாடும் x பகை முரண்பாடும் (சம்பவம் 2) (சிறுகதை 3)

        குரங்குகள் நிறைந்த அழகர் மலைஅழகான குழந்தை அடம்பிடிக்கிறதுஅடிகூட வாங்கினாலும் உண்ண மறுக்கிறதுநெய் மணக்கும் பருப்புச் சாதம்குழந்தைக்குப் பிடிக்காதது ஆச்சரியந்தான்குழந்தையாக நாம் இருந்திருந்தால் தட்டோடு தின்றிருப்போம்எனக்குஉனக்குஎன்று சண்டைவேறு நிகழ்ந்திருக்கும்சரிகுழந்தையைக் கவனிப்போம்அன்னை ஊட்டகுழந்தை மீண்டும் துப்புகிறதுகுழந்தை துப்பஅன்னை மீண்டும் ஊட்டுகிறாள்இந்த வேடிக்கையை என்னவென்பதுஅன்னையின் நோக்கம் குழந்தையை உண்ண வைப்பதில் இருக்கிறதுஇறுதி முயற்சியாக  குழந்தையை அரட்டுகிறாள்இதற்கிடையே குரங்குகளின் தொல்லைகுரங்குகளின் நோக்கம் உணவைப் பறிப்பதேஒரு கையில் சோறும் மறுகையில் கோலுமாக நிற்கிறாள் தாய்முகம் மட்டும் கோபத்தில் சிவந்துள்ளதுஇந்தக் காட்சியிலிருந்து நட்புxபகை முரண்பாடுகளை உணரலாம்.
            உணவூட்டும் அன்னைக்கும் உண்ண மறுக்கும் குழந்தைக்கும் சண்டை நிகழ்கிறதுஇது நட்பு முரண்பாடு.
            உணவைப் பறிக்கும் குரங்கிற்கும் கோலை உயர்த்தும் அன்னைக்கும் சண்டை நிகழ்கிறதுஇது பகை முரண்பாடு.
            சரிசகமக்களைக் கவனியுங்கள்மலைக் காடுகளில் இரவு நேர வண்டுகளின் கரகரப்பு ஓசைப் போல கேட்கிறதுமக்களின்  பேச்சுஇரவு பதினொன்றரை மணிவரை என்ன பேச்சுதெருவே பேசுகிறதுஆறு மணிக்குப் போன கரண்ட்டு இன்னும் வரவில்லைதமிழ்நாட்டில் கரண்ட்டு போனால் திரும்பி வருவது சந்தேகந்தான்பிறகு தூங்கவா முடியும்இப்படி அலுத்துக்கொண்டார்கள்இரண்டு பக்கத்து வீட்டுப் பெண்கள்அரசை நாறடித்துப் பேசினார்கள்அவர்களின் பேச்சை சின்னத்திரையும் அவ்வப்போது அலங்கரித்ததுஇரவு 12.10க்கு கரண்ட்டு வந்துவிட்டதுதூக்கம் இருவரையும் பிரித்ததுவிடிந்ததும் வேலையில் மும்முரமானார்கள்அவரவர் வீட்டில் அவரவர் வேலைஇந்தத் தோழிகளைச்  சண்டை மூட்டத் தெருக்குழாய் காத்திருந்ததுஅடிகுழாயில் சண்டையிடும் நமது பெண்களின் வலிமையைச் சொல்லித் தெரிய அவசியமில்லைநேற்று முகம் நக பேசியவர்கள் இன்று முகம் சீறிப் பேசுகிறார்கள்நாட்கள் ஓடியதுஇவர்கள் முகம் பார்த்துப் பேசாத ஒரு மாத காலத்திற்குள் இவர்களை இணைப்பதற்காக ஒரு பிரச்சனை முளைத்திருந்தது.
            சிறுநீரகக் கோளாரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து நாற்பதாக உயர்ந்துவிட்டதுஇவர்கள் பகுதியில் நீர் நஞ்சாக மாறியிருப்பதே காரணமாம்தொழிற்சாலைகளின் கழிவுகள் இதைச் சாதித்திருக்கின்றனதொழிற்சாலைகளுக்கு எதிராக மக்கள் களமிறங்கினார்கள்அரசும் களமிறங்கியதுதொழிற்சாலை முதலாளிகளிடம் நல்ல விலைக்கு பேரம் பேசி காவல்துறையைக் குவித்திருந்ததுவேட்டைக்காரனின் கட்டளைக்காக நாய் காத்திருப்பதைப் போலவேட்டைப் பொருளுக்காக  வாலைக் குழைந்து குழைந்து ஆட்டுவதைப் போலகாவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்காவல்துறை உங்கள் நண்பன்இந்த வாசகத்திலுள்ள உங்கள் என்ற சொல் நிச்சயம் மக்களைக் குறிப்பதல்லஇந்த உண்மையைப் போராட்டக் களம் பலமுறை உணர்த்தியிருக்கிறதுமீண்டும் உணர்ந்தனர் மக்கள்அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்தங்கள் போராட்டத்தின் நியாயத்தை விண்ணதிர முழங்கினர்இந்தப் போராட்டக் களத்தில் தேடிப்பாருங்கள்நமக்கு அறிமுகமான இருவரின் குரல்கள் கலந்திருப்பதைக் கவனிக்க முடிகிறதாஇவர்களை நம்மால் அடையாளம் காண முடியும்கரண்டு இல்லாத இரவில் சிரித்துப் பேசினார்களே.
தண்ணீருக்காக குழாயடியில் சண்டைப் போட்டார்களேஅந்தப் பெண்கள்தான் இந்த இருவர்முறைத்துக்கொண்டு நிற்கிறார்கள்எதிரிகளாய் அல்லஎதிர்ப்பவர்களாய்!
            இது சமூகத்தின் எதார்த்தமான சூழல்களில் ஒன்றுஇந்தச் சூழல்களிலிருந்து நட்புxபகை முரண்பாடுகளைக் கணக்கிட முயல்வோம்பக்கத்து வீட்டு நண்பர்களாக இருக்கின்ற இரண்டு பெண்களுக்கு இடையில் சண்டை நிகழ்ந்துள்ளதுஇந்தச் சண்டையே நட்பு முரண்பாடாக இருக்கின்றது.

            அரசின் உண்மையான முகத்தை உணர்கின்ற மக்களுக்கும்மக்கள் நலனில் அக்கறையற்ற அரசிற்கும்ஒட்டிக்கிடந்தப் போலி நட்பும் உடைந்துபோனதுமக்களுக்கும் அரசுக்கும் இடையில் சண்டை நிகழ்கிறதுஇந்தச் சண்டையே பகை முரண்பாடாக இருக்கிறது.

            இனி இயங்குதலின் இரண்டாம் தன்மைஇப்பொழுது முரண்பாட்டிலிருந்து ஒரு அடி தள்ளி நின்று கவனிப்போம்.

விதி-1.2 முரண்பாட்டின் மோதல்களுக்குள் நிகழ்கின்ற அளவு மாற்றமும், பண்பு மாற்றமுமே இயங்குதலை நகர்த்துகின்றன. (சிறுகதை 4)

No comments:

Post a Comment

நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை