டப்பிங் பாடல் - பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே
(விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப்பாடல் டப்பிங்)
குதிர தமிழர கழுத ஆக்கிட்டானே
தமிழ வேதம்சொல்லி பன்னி மேச்சுட்டானே
டப்பிங் பாடல் - பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே
(விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப்பாடல் டப்பிங்)
குதிர தமிழர கழுத ஆக்கிட்டானே
தமிழ வேதம்சொல்லி பன்னி மேச்சுட்டானே
உறுதிமொழி
1.நான் இயற்கையையும் மனித குல முன்னேற்றத்தையும் பேரன்புடன் நேசிக்கிறேன்
2.நான் என்னையும் என் தாயையும் விரும்பி பாதுகாப்பது போல இயற்கையையும் மனிதகுல முன்னேற்றத்தையும் விரும்பி அரவணைத்து பாதுகாப்பேன்
3.மக்கள் அனைவரும் தேவையானவற்றை பெற்று மகிழவும் வாங்கும் சக்தி உள்ளவர்களாக உருவாகவும் மனதார விரும்புகிறேன்
4.மக்கள் அனைவரும் உடலாலும் மனதாலும் அறிவாலும் உறவாலும் சுற்றுச்சூழல் முழுமையாலும் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக வாழ ஆசைப்படுகிறேன்
5.அறிவாலும் செல்வத்தாலும் மதிப்பாலும் மக்கள் அனைவரும் சமமானவர்களாக வாழ ஆசைப்படுகிறேன்
6.சாதி வெறி மதவெறி இனவெறி போர் வெறி லாபவெறி போதை வெறி ஆதிக்க வெறி காட்சி போதை வன்முறைகள் அடிமைத்தனம் அறியாமை ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் ஏழை பணக்கார பாகுபாடுகள் அனைத்தும் செத்தொழிந்து நல்ல உலகம் புத்துயிர் பெறுவதை விரும்புகிறேன்
7.மனிதர்கள் முகம் பார்த்து சிரித்து ஒன்றுபட்டு கூடி உழைத்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பேரானந்தமான வாழ்வையே விரும்புகிறேன்
8.ஆறு மணி நேர உழைப்பும் எட்டு மணி நேர ஓய்வும் பத்து மணி நேர பண்பாட்டு முயற்சிகளும் கொண்டாட்டங்களும் என்ற வாழ்க்கை விதிமுறைகள் இயல்பாகிட விரும்புகிறேன்.
9.மனிதராகப் பிறந்த அனைவருக்கும் மேன்மையான வாழ்வைப் பெற அனைத்து வாய்ப்புகளும் சமமாக கிடைத்து மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற நல்லுகை அடைவதற்காக ஆசைப்படுகிறேன்
10.எமது ஆசைகளையும் மனிதகுல மேன்மைகளையும் நல்லுலக கனவுகளாக கூடி சிந்திக்கின்ற மனித குழுக்களின் அறிவியல் மனப்பான்மை நிறைந்த கனவுகளோடு எமது கரம் ஆசைப்படுகிறேன்
11.எமது உழைப்பில் நான் நல்லுலக சிற்பியாகவும் எதிர்கால தலைமுறைகளின் கலங்கரை வெளிச்சமாகவும் எமது வாழ்வை புன்னகை பூக்களால் நிறைவு செய்திட மனதார விரும்புகிறேன்
(விருப்பத்தை சொல்லிக்கொள்வதாக இருக்கிறதே. உறுதிமொழி எடுப்பதுபோலத் தெரியவில்லையே என்று நீங்கள் கருதலாம். மேற்கண்ட விருப்பங்கள் உங்கள் ஆழ்மனதின் பண்பட்ட கனவுகளாக இலக்கு பெற்றிருந்தால் அவற்றை செயல்படுத்தும் செயல்வீரர்களாக நீங்கள் திகழ்வீர்கள் என்பதை மனிதகுலம் உறுதியாக நம்புகிறது என்று பொருள். மற்றபடி உறுதிமொழி என்று வாயில் வடைசுட்டுவிட்டு செயலில் மாமா பிஸ்கோத்து என்பதாக நடந்துகொண்டால் மனிதகுலத்தின் மேன்மைக்கும் தங்களுக்கும் எந்த பயனும் இல்லையல்லவா! அதனால், உங்கள் விருப்பங்களில் இருந்தே உறுதிமொழி அங்கீகாரம் பெறுகின்றது நண்பர்களே.)
டப்பிங் பாடல் - சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராளே.. பவழ
மல்லிய கட்டிக்கவா
அவ வயசு போனா கெழவி
ஆனா ஆள் மயக்கும் குமரி
தமிழ போல இந்தி உண்டா காட்டு
வெரல் பட்டா கணினி தமிழு
பழங் காட்டு பாட்டி அணங்கு
தொடர் சங்கிலி போல வரலாற்று பாட்டு
அல்லா
அந்தோணி
இந்து எல்லாம் ஓர் உசுரு
அறிவு கணக்கு நம் மேல
ஊரே மணக்க அன்புக்கனி
ஏய் ஆத்தாடி என்ன மினுக்கு
ஆமாடி நம்ம தமிழு
கீழடி சான்று எடுத்து கத்துக்கடி
ரொட்டில
சாணம் வெச்சு திங்கிற உன்னை
நாட்டு அரசன் ஒத்துக்கவா
நாட்டு அரசன் ஒத்துக்கவா
நான் நாட்டு அரசன் ஒத்துக்க
நெஞ்ச குத்துனா மரணம் செத்துக்கிட்டேன்
காவி கல்லறை செஞ்சிடவா
காவி கல்லறை செஞ்சிடவா
அனில் அதான்னி
ரெண்டா ரெண்டாக்க லாபவெறி ஜோடி
பாத்தா கிறுக்குதான் போத மத சாதி
உன்ன நீ கூட விட்டுருக்கலாம் டி
காவி வெறியன் நம் உயிர் குடிப்பான்
டி
ஏய்
ஒத்துக்க வெச்சான்
ஒத்துக்க ஒத்துக்க
பத்திக்க வெச்சான்
பத்திக்க பத்திக்க
செத்துக்க வெச்சான்
செத்துக்க செத்துக்க
ஆத்தாடி அம்மா அம்மா
மறக்க வெச்சான்
மறக்க மறக்க
இப்போ நெனச்சா
உண்ம புரிய
ஒத்த எமன்தான்
காவிவெறிதான்
லா லா லா லா
மச்சி சிக்கலு சிக்கலு வேணாண்டி
வேணாண்டி வேணாண்டி
ஜொலிக்கும் நீலம் கருப்பு சிவப்பாலே
சேர்வோண்டி சேர்வோண்டி
எமனை கொல்லும் கொற்றவை எங்கேடி
கீழடி வாங்கோடி
உசுர எடுக்கும் சாதி சாவே...
அவ வயசு போனா கெழவி
ஆனா ஆள் மயக்கும் குமரி
தமிழ போல இந்தி உண்டா காட்டு
வெரல் பட்டா கணினி தமிழு
பழங்காட்டு பாட்டி அணங்கு
தொடர் சங்கிலி போல வரலாற்று பாட்டு
நீ பாக்கு துப்பினு காதுல குத்துற
வேதாந்தா காவலா வேதம் ஓதுற
வேதாந்தா காவலா வேதம் ஓதுற
வேதம் கிழிஞ்சு பறக்க
மனு எத்தனை சட்டங்கள் ஒன்னா சேர்ந்து
மக்களைக் கொன்னு குவிச்சதே
நம்ம சூத்திர சாதி முத்திரையே
விட மாட்டோமே
தொல்லியல் ரெண்டாக்க பொட்டலம் கட்டினா சூடா
சரஸ்வதி ஆறு நிலாவில் சுட்ட போண்டா
இந்தியா சாதிபொய்யில் சுட்ட பக்கோடா
கீழடி தொன்மைதான் இந்திய வரலாறுடா
சங்கி வட்டாரமே தெளிய கண்டா அதானி
நம்ம பட்டாளமே மனிதகுல பூபாளமே
மச்சி சிக்கலு சிக்கலு வேணாண்டி
வேணாண்டி வேணாண்டி
ஜொலிக்கும் நீலம் கருப்பு சிவப்பாலே
சேர்வோண்டி சேர்வோண்டி
எமனை கொல்லும் கொற்றவை எங்கேடி
கீழடி வாங்கோடி
உசுர எடுக்கும் சாதி சாவே...
அவ வயசு போனா கெழவி
ஆனா ஆள் மயக்கும் குமரி
தமிழ போல இந்தி உண்டா காட்டு
வெரல் பட்டா கணினி தமிழு
பழங் காட்டு பாட்டி அணங்கு
தொடர் சங்கிலி போல வரலாற்று பாட்டு
மாமா நீ வாம்மா கீழடி பார்த்து
மாத்து நீ மாத்து வரலாறு பார்த்து
வடக்குக்கு வாத்தி தமிழ்நாடு (மாமா)
நான் உழவு வணிகம் ஓங்கிய பண்பாடு..
ஹோய்..
நீ ஆடு மாடு மேய்ச்ச பழங்கூடு ஹோய்..
அறம் செய விரும்பு தமிழ் மரபு
மாமா நீ வாம்மா கீழடி பார்த்து
நேற்று என் வானில் சாதிகள் இல்லை
இன்று என் வாழ்வில் சனாதனத் தொல்லை
வைகை தமிழின் பண்பாடுண்மை
நிலவுக்குள் பாட்டி சரஸ்வதி தொன்மை
பல மொழி நட்பு தாண்டிதான்
தமிழராய் வாழ்கிறோம்
சமஸ்கிருதம் வேதம் வந்துதான்
அடிமையாய் மாறினோம்
வேதத்தை வீழ்த்தி மீளுவோம்... ஆ... (மாமா)
உனக்கொரு துணையாய் வர்ணங்கள் படைத்தாய்
வேந்தர்கள் தொடர்ந்து வெள்ளையர் பிடித்தாய்
இந்தியா வெத்தல அதானிக்கு ஊட்டுற
அமைதியா செத்திட கோழியாடா மாப்பிள்ள
இசைவிழா தமிழர் பெருங்கடலில் சனாதனம் மூழ்குமே
இந்தியக் கீழடி தாய் மடிதான் வேதக் குப்பை நீங்குமே
வரலாறு வைகையில் பாடுமே.. ஆ..
மாமா நீ வாம்மா கீழடி பார்த்து
மாத்து நீ மாத்து வரலாறு பார்த்து
வடக்குக்கு வாத்தி தமிழ்நாடு
மனித
குல மேன்மை பண்பாட்டு பயிற்சிகள்
(பண்பாட்டு பாட வகுப்பின் உடனடி அவசியம் குறித்த அறிவிப்பு)
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இரண்டில் ஏதோ ஒன்றில் முடியப்போகின்றோம். ஒன்று, இலாபவெறி போர்களில் இயற்கையும் மனிதகுலமும் பேரழிவிவாக
முடியப்போகின்றன. அல்லது இரண்டு, இலாபவெறி போர்களிலிருந்து இயற்கையையும் மனிதகுலத்தையும்
காப்பாற்றி அடுத்த தலைமுறைகளுடன் நிம்மதியாக வாழத்தகுந்த நல்லுலகம் உருவாகப்போகின்றது.
இந்த இரண்டில் ஏதோ ஒன்றில் நாம் முடியப்போகின்றோம்.
சனாதன காவிபாசிசம் ஒன்றாவது இலக்கை நூறாண்டுத் திட்டங்களுடன்
வேகமாகச் செயல்பட்டு இறுதி இலக்கை எட்டிக்கொண்டு வருகிறது. நாம் இரண்டாவது இலக்கை நுறாண்டுகளாக
ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திட்டங்களின்றி நிறைவேற்ற இயலாமல் தோற்று வருகிறோம்.
இலாப வெறிக்கு சேவை செய்கின்ற
சனாதன காவி பாசிசம் மனித குலத்தை அழுகச் செய்வதற்காக நடைமுறை உண்மைகளுக்கு தகுதியில்லாத
கனவுகளை பண்பாடாக்க 100 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி முன்னேறி வருகின்றது இதற்காக தனது
பண்பாட்டு பாட கேந்திரத்தை ஆகச் சிறந்த கருவியாக பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில்
ஜனநாயக சக்திகளும் முற்போக்கு சிந்தனையாளர்களும் புரட்சிகர சக்திகளும் லாப வெறியிடம்
இருந்து மனித குலத்தை காப்பாற்றுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால்
ஒன்றிணைந்த பண்பாட்டு முயற்சியிகளில் நாம் ஈடுபடத் தவறியுள்ளோம் என்பது மறுக்க முடியாத
உண்மை. இந்த எதார்த்தத்தைப் பற்றிக்கொண்டுதான் லாபவெறி பாசிஸ்டுகள் முன்னேறுகிறார்கள்.
எனவே நாம் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த முறையில் நமக்கான பண்பாட்டு பாட முறைகளைக் கையாளத்
தொடங்க வேண்டும்.
அப்படி
தொடங்கினால் அவர்களின் நூறாண்டு வளர்ச்சியை பத்தாண்டுகளில் நம்மால் முடித்து வைக்க
முடியும். நடைமுறை உண்மைகளில் இருந்து நடைமுறை மாற்றங்களில் பங்கேற்று மனிதகுல முன்னேற்றத்தின்
திறன்மிக்க பங்களிப்பை நம்மால் அறிவியல் பூர்வமாக சாத்தியப்படுத்த முடியும். இதைச்
செய்ய தயாராக இல்லாவிட்டால் பாசிச கொலை வெறிக்கு ஒட்டுமொத்த மனித குலத்தையே தின்னக்
கொடுத்த துரோகிகளாக நம் கதையை வரலாறு மாற்றி முடித்துவிடும்.
பாசிசத்திற்கு
எதிரான மனித குல ஒற்றுமையை தாமதிக்காமல் நடைமுறைப்படுத்துவோம். மனித குல பண்பாட்டு
பயிற்சிகள் என்ற பண்பாட்டுப் பாடத்திட்டங்களை நாடெங்கும் பரவலாக்கும் முயற்சிகளை
100 மடங்கு வேகத்தில் மேற்கொள்ள தொடங்குவோம். கீழ்காணும் பண்பாட்டு பாட நூலின் இலக்கும்
நோக்கமும் மாறாமல் உங்களது பாடநூலாக பரிமாற்றிக்கொள்ளவும். மேலும் பண்பாட்டுப் பயிற்சி
திட்டம் குறித்த உங்களது கேள்விகள், விளக்கங்கள், ஆலோசனைகள், முன்னெடுப்புகள், விவாதங்கள்
அனைத்தையும் இங்கு பதிவு செய்யுங்கள். அதைவிட அதிகமாக பரவலாக செயல்படுத்துங்கள். வாழ்த்துக்கள்!
மனித
குல பண்பாட்டு பயிற்சிகள்
(பண்பாட்டு வகுப்பு பாடநூல்)
நடைமுறை வகுப்புகள்
- 100 நிமிடங்கள்
சிறப்பு வகுப்புகள்
- 150 நிமிடங்கள்
(சிறப்பு
வகுப்பு விவரம் - தொடக்கவகுப்பு, 7வதுமாத வகுப்பு, இறுதிவகுப்பு)
நடைமுறை வகுப்பு - கால அட்டவணை
15 நிமிடம் -
குழு ஒற்றுமை உடல் பயிற்சி
15 நிமிடம் -
வழிபாட்டு வேண்டுதல்கள்
10 நிமிடம் -
கதை சொல்லி வழங்கும் இலக்கியப் பண்பாடு
5 நிமிடம் -
பண்படுத்தும் பாடல்
15 நிமிடம்-
செவி தியானம் அல்லது வாசிப்பு தியானம் அல்லது எழுத்து தியானம்
10 நிமிடம் -தியானத்தில்
புரிந்தவற்றை உரையாடும் பயிற்சி
15 நிமிடம் -விளையாட்டு
பண்பாடு அல்லது நாடகப் பண்பாடு
5 நிமிடம் -மனித
குல முன்னேற்றத்தில் பங்காற்றிய முன்மாதிரிகள் அறிமுகம்
5 நிமிடம் -உறுதிமொழி
5 நிமிடம் -குழு
ஒற்றுமை மற்றும் விடை பெறுதல்
பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும் இடம்
1. ஆலயம், மண்டபம், வீடு, பள்ளிக்கூடம்,
டியூசன் சென்டர், பொது இடங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றில் தொடர்ந்து நடத்தலாம்.
2.
இடம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்
3.
வகுப்பறை வாசலில் மேன்மையான இலக்கிய வரிகளுடன் கோலமிட்டு இருக்க வேண்டும்
4.
அழகியல் உணர்ச்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாக மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு உதவிய தலைவர்கள்
அல்லது இலக்கிய நூல் அல்லது குறிப்பிடத் தகுந்த வரலாற்று ஆவணம் இவற்றில் ஏதேனும் ஒன்றின்
உருவப்படத்தை அனைவரின் பார்வையிலும் படும்படி வைத்து வீர உணர்வை முன்னிறுத்தி மரியாதை
செய்ய வேண்டும்
பண்பாட்டுப் பயிற்சியாளர்கள் கவனிக்க வேண்டியவை
1. பயிற்சியாளர்கள்
வகுப்பு நடைபெறும் இடத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாகவே வந்து வட வேண்டும்
2. வருகை
பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்
3. பண்பாட்டு
அடையாளமாக அனைவரும் அறம் செய விரும்பு
என்ற வாசகத்துடனான ஔவை பாட்டியின் உருவ
அட்டையை மார்புத் துணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும்
4. மாணவர்களை
தனித்தனியாகக் கையாளக்கூடாது
5. ஐந்து
அல்லது மூன்று நபர் கொண்ட குழுவாக இணைத்துக் கொண்டு கையாள வேண்டும்
6. சிறுவன்
மற்றும் சிறுமியர் இருவரையும் தனித்தனி குழுவாக கையாள வேண்டும்
7. குழந்தைகளின்
வீடுகளுடன் நட்பும் நெருக்கமும் நிறைந்த நம்பிக்கை மிகுந்த தொடர்பினை பராமரிக்க வேண்டும்
8. வகுப்பில்
மனித குல மேன்மைக்கு உதவும் வகையிலான சமுதாய விழாக்களையும் குழந்தைகளின் பிறந்த நாள்
பாடல் கொண்டாட்டங்களையும் கொண்டாட வேண்டும்
9. ஆண்டு
விழாவை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும்
10.
குழந்தைகளில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து
வருங்கால முன்மாதிரி மனிதர் என்ற பட்டத்தை
வழங்கி சிறப்பிக்க வேண்டும்
பண்பாட்டு வகுப்பில் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டியவை
1. ஐந்து
வயதுக்கு மேற்பட்ட சிறுவன்கள் சிறுமியர்கள் கலந்து கொள்ளலாம்
2. வகுப்பிற்கு
ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக வந்து விட வேண்டும்
3. குளித்து
சுத்தமான மற்றும் விளையாடுவதற்கு தகுதியான ஆடையை அணிந்து வர வேண்டும்
4. பண்பாட்டு
அடையாளமாக அறம் செய விரும்பு என்ற வாசகத்துடனான
ஔவை பாட்டியின் உருவ அட்டையை மார்பு துணியில்
ஒட்டியிருக்க வேண்டும்
5. பெயர்
விபரங்களுடன் நோட்டு புத்தகம் மற்றும் பேனா ஆகிவற்றைக் கொண்டு வர வேண்டும்
6. வகுப்பின்
முழு நேரமும் சுய கட்டுப்பாடு மற்றும் குழு கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்
7. சக
மாணவ நண்பர்களுடன் பேரன்புடன் பழக வேண்டும்
8. வகுப்பு
திட்டங்கள் அனைத்திலும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்க வேண்டும்
மாதம் 1 (சிறப்பு வகுப்பு 150 நிமிடங்கள்)
10 நிமிடம்
- குழு ஒற்றுமை உடற்பயிற்சி
20 நிமிடம் -
குழுவினர் அறிமுகம்
(பெயர், திறமைகள்,இலக்கியம் 10, முன்மாதிரிகள்
10, 10 நபருக்கு முன் மாதிரி)
15 நிமிடம் -
ஆறறிவு மனிதர்களா? சட்ட டவுசர் போட்ட ஆட்டு மந்தைகளா?
15 நிமிடம் -
35% ஏன் பாஸ்? 65% பலவித திறமைகள்?
100%
தாய்மொழி திறமைகள் மற்றும்
80
நபர்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வின் அனுபவம்
20 நிமிடம் -
குழுக்களின் விளையாட்டு வழியாக வாழ்க்கை விதிகள்
10 நிமிடம் -
பண்படுத்துவதும் பலப்படுத்துவதும் நாடகம்.
நாடக
வழி கதை சொல்லுதல்
நரி
காகத்திற்கு இரையானது
30 நிமிடம் -குழுவாக
நாடக வழி கதை சொல்தல்
10 நிமிடம் -
வகுப்பின் இலக்குகள் இன்றைய மாணவர் நாளைய அறிஞர்கள் கலைஞர்கள் நல்ல மனிதர்கள் மனித குலத் தலைவர்கள்
10 நிமிடம் -
பங்கேற்பதற்கான குழுக்கள் அறிமுகம்
(இலக்கிய
குழு, கலைக்குழு, அறிவியல் குழுக்கள்)
அரங்கேற்றத்திற்கான
வாய்ப்புகள்
10 நிமிடம்
- வகுப்பு முறைகள் அறிமுகம் - ஏழாம் மாத சிறப்பு வகுப்பு அறிமுகம் -
தாய்மொழித்
திறன் பயிற்சி தேவைப்படுபவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்பு மேற்கொள்ளப்படும்.
மாதம் 2 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம் -குழு
ஒற்றுமை உடல் பயிற்சி
15 நிமிடம் -
வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம் -
கதை சொல்லி வழங்கும் இலக்கியப் பண்பாடு டால்ஸ்டாய் சேவல் நரி
5 நிமிடம் -
டப்பிங் பாடல் மண்ணில் வர்க்கப் போர்கள் இன்றி
https://pazhaiyavan.blogspot.com/2020/09/4.html
15 நிமிடம்
- செவி தியானம்
10 நிமிடம்
- செவி தியான புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- நாடகப் பண்பாடு வெட்டுக்கிளி ஆயிரம் எறும்புகளுடன் ஒப்பந்தம்
5 நிமிடம்
- போபால் விஷவாயு தியாகி துருவன்
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
மாதம் 3 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம்
- குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம்
- கதை சொல்லி வழங்கும் இலக்கியப் பண்பாடு திக் திக் நொடிகள் அறிவியல் மனப்பான்மை பரப்புதல்
5 நிமிடம்
-ஒவ்வொரு பூக்களுமே சினிமா பாடல்
http://tamilpadalvarikal.blogspot.com/2012/11/blog-post_7517.html
https://www.youtube.com/watch?v=umHV5znO9tU
15 நிமிடம்
- வாசிப்பு தியானம்
10 நிமிடம்
- வாசிப்பு தியானப் புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- விளையாட்டுப் பண்பாடு பாம்பு கீரி
5 நிமிடம்
- ஹெலன் கெல்லர் அறிமுகம்
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுவது
மாதம் 4 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம்
- குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம்
- கதை சொல்லி வழங்கும் இலக்கிய பண்பாடு மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்
5 நிமிடம்
- டப்பிங் பாடல் கல்லூரிக்கு வாம்மா
https://pazhaiyavan.blogspot.com/2026/04/blog-post.html
15 நிமிடம்
- எழுத்து தியானம்
10 நிமிடம்
- எழுத்து தியான புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- நாடகப் பண்பாடு பஸ் பள்ளிக்கூடம் சூழல் உருவாக்கம்
5 நிமிடம்
- சார்லி சாப்ளின் அறிமுகம்
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
மாதம் 5 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம்
- குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம்
- கதை சொல்லி வாழும் இலக்கியப் பண்பாடு அறிவியல் தத்துவம் தொல்காப்பியம் டார்வின் ஐன்ஸ்டீன்
5 நிமிடம்
- பகத்சிங் பாடல் அந்த வீரன் இனனும் சாகவில்லை
https://www.youtube.com/watch?v=kn7oPnudr6Q&list=RDkn7oPnudr6Q&start_radio=1
15 நிமிடம்
- செவி தியானம்
10 நிமிடம்
- செவி தியான புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- விளையாட்டு தனி மரம் தோப்பாகாது அழைக்கப்படும் எண்ணுக்கேற்ப நண்பர்களாக இணைதல்
5 நிமிடம்
- கஸ்தூரிபாய் பூலே
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
மாதம் 6 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம்
- குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம் -
வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம் -
கதை சொல்லி வளர்க்கும் இலக்கிய பண்பாடு - செயல் தகுதி
5 நிமிடம் -
டப்பிங் பாடல் செந்தமிழ் நாட்டு தமிழர்களே
https://pazhaiyavan.blogspot.com/2025/11/blog-post.html
15 நிமிடம்
- வாசிப்பு தியானம்
10 நிமிடம்
- வாசிப்பு தியான புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- நாடகம் கதைகளை முடிவு செய்து நாடகமாக நடித்தல்
5 நிமிடம்
- தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர்
5 நிமிடம் - உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
மாதம் 7 (சிறப்பு வகுப்பு 150 நிமிடங்கள்)
15 நிமிடம் - குழு ஒற்றுமை உடல் பயிற்சி
25 நிமிடம்
- குழுவினர் அறிமுகம்
(பெயர், திறமைகள், 10 இலக்கியம், 10 முன்மாதிரிகள்,
10 நபருக்கு மாதிரி)
30 நிமிடம்
- விளையாட்டுகள் வழி வாழ்க்கை விதிமுறைகள்
10 நிமிடம்
- குழுவின் கனவுகள்
ஆறு
மணி நேர உழைப்பு 10 மணி நேரம் பண்பாட்டு முயற்சிகளும் சிறப்புகளும் 8 மணி நேர ஓய்வு
நடைமுறையாகும் நல்ல உலகம் எப்படி இருக்கும்?
45 நிமிடம்
- குழுவின் பன்முகத் திறமைகள் அரங்கேற்றம்
10 நிமிடம்
- இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களா நீங்களே சொல்லுங்கள்?
5 நிமிடம்
- இறுதி வகுப்பில் உங்களை ஒரு பண்பாட்டுப் பயிற்சியாளராக அறிவிக்க விரும்புகிறீர்களா?
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடைபெறுதல்
மாதம் 8 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம் -
குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம்
- கதை சொல்லி வணங்கும் இலக்கிய பண்பாடு
உலகம்
தோன்றிய கதைகள்
5 நிமிடம்
- டப்பிங் பாடல் படிச்சு கிழிச்சு
https://pazhaiyavan.blogspot.com/2020/07/blog-post_7.html
15 நிமிடம் -
எழுத்து தியானம்
10 நிமிடம்
- எழுத்து தியான புரிதலை உரையாட பயிற்சி
15 நிமிடம்
- விளையாட்டு கண்முடி குரல் கேட்டு நடத்தல்
5 நிமிடம்
- ஸ்டீபன் ஹாக்கிங் பெருவெடிப்பில் உலகம் தோன்றியது
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- ஒற்றுமை விடைபெறுதல்
மாதம் 9 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம் -
குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம்
- கதை சொல்லி வழங்கும் இலக்கிய பண்பாடு தீப்பாய்ந்த எறும்பு மற்றும் வெட்டுக்கிளியும்
எறும்பு வேட்டையும்
5 நிமிடம்
- நான் உலகம் கோவன் பாடல்
https://www.youtube.com/watch?v=rHtnQ_f-aVU&list=RDrHtnQ_f-aVU&start_radio=1
15 நிமிடம்
- செவி தியானம்
10 நிமிடம்
- செவி தியான புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- நாடகம் சினிமா காட்சி மாற்றி நடித்தல்
5 நிமிடம்
- ஔவையார் திருவள்ளுவர்
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
மாதம் 10 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம் - குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம்
- கதை சொல்லி வணங்கும் இலக்கிய பண்பாடு
மனித
குல வரலாற்று வரிசை
5 நிமிடம்
- டப்பிங் பாடல் யம்மா யம்மா
https://pazhaiyavan.blogspot.com/2020/07/blog-post_62.html
15 நிமிடம்
- வாசிப்பு தியானம்
10 நிமிடம்
- வாசிப்பு தியான புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- விளையாட்டு கதை உருவாக்குதல்
தொடக்கம்
முதல் புதிதாக சேர்த்தல் வரை
5 நிமிடம்
- ஸ்டீவ் ஜாப்ஸ் இறுதி தகவல் மற்றும் மில் முதலாளி எங்கல்ஸ் வாழ்க்கை
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
மாதம் 11 ( நடைமுறை வகுப்பு - 100 நிமிடங்கள்)
15 நிமிடம்
- குழு ஒற்றுமை உடல் பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல்
10 நிமிடம்
- கதை சொல்லி வணங்கும் இலக்கிய பண்பாடு கடவுளர் கதை
5 நிமிடம்
- டப்பிங் பாடல் வீட்டுக்குள்ளே நாட்டுக்குள்ளே
https://pazhaiyavan.blogspot.com/2020/07/blog-post_54.html
15 நிமிடம்
- எழுத்து தியானம்
10 நிமிடம்
- எழுத்து தியான புரிதலை உரையாடும் பயிற்சி
15 நிமிடம்
- நாடகம் தனி நடிப்பில் கதை சொல்லுதல்
5 நிமிடம்
- லெனின் மாவோ
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
மாதம் 12 (சிறப்பு வகுப்பு 150 நிமிடங்கள்)
15 நிமிடம்
- குழு ஒற்றுமை உடற்பயிற்சி
15 நிமிடம்
- வழிபாட்டு வேண்டுதல் மதிப்பீட்டு முயற்சி
10 நிமிடம்
- உங்களது பலவித திறமைகளால் நீங்கள் யார் உங்கள் தனித்துவம் எத்தகையது என்பதை உணர்கிறீர்களா?
10 நிமிடம்
- நெறிப்படுத்தும் பத்து இலக்கியங்கள் கிடைத்துவிட்டனவா?
10 நிமிடம்
- வாழ்விற்கு பற்றுதலாக பத்து முன்மாதிரிகள் கிடைத்துவிட்டார்களா?
10 நிமிடம்
- உங்களை முன்மாதிரியாக கருதும் பத்து நபர்களை அறிய முடிகின்றதா?
10 நிமிடம்
- உங்கள் தாய்மொழி திறனிலும் சிந்தனை திறனிலும் நம்பிக்கை உள்ளதா?
15 நிமிடம்
- வாசிப்பு செவி எழுத்து தியானங்கள் உங்களது சிந்தனை திறனுக்கு இயல்பாக உதவுகின்றனவா?
20 நிமிடம்
- நீங்கள் வெறும் மாணவர் அல்ல நல்ல மனிதர்களாகவும் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் தலைவர்களாகவும்
உயர்ந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
10 நிமிடம்
- வாழ்நாள் இறுதிவரை பண்பாட்டுப் பயிற்சிகளையும் அதன் மனித குல முன்னேற்றத்தின் கனவுகளையும்
கடைபிடிப்பீர்களா?
15 நிமிடம்
- நீங்கள் ஒரு பண்பாட்டு பயிற்சியாளராக பங்கேற்று மனித குலத்தை உயர்த்துவதற்கான முயற்சியிகளில்
முன்வர விரும்புகிறீர்களா?
5 நிமிடம்
- உறுதிமொழி
5 நிமிடம்
- குழு ஒற்றுமை விடை பெறுதல்
-
பண்பாட்டு
பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் பின்வருமாறு
-
குழு ஒற்றுமை
பயிற்சியாளர்
அல்லது ஒருங்கிணைக்கும் ஒரு மாணவன் தொடங்கி வைப்பார். இந்தத் தொடக்கம் ஒரே மாதிரியான
தொடர்ச்சியான ஓசையாகவோ அல்லது நடிப்பாகவோ அல்லது அசைவாகவோ அல்லது நகர்வாகவோ இருக்கலாம்.
அவர் தொடங்கிய பிறகு தொடர்ச்சியில் நான்காம் கட்டத்தில் அதே மாதிரியான செயல்பாட்டில்
வேறுபாடு இல்லாத படி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தொடர்ந்து ஆறு முதல் எட்டு வரை ஈடுபட்டு
முடித்துக் கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கு வசதியாக எளிமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒற்றுமையாக கூடி சிந்தித்து உழைப்பவர்களே மனிதர்கள், தனியாகவும் தான்தோன்றித்தனமாகவும்
திரிபவர்கள் மந்தைகள் என்ற உண்மையை உணரச் செய்வது தான் இலக்காகும்.
உடல் பயிற்சி
உடல்
மனம் முகம் குரல் மூச்சுப் பயிற்சிகள் அனைத்தும் அடங்கும். பயிற்சிகள் எளிமையானதாக
அமைய வேண்டும். மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தன் ஆரோக்கியம் நிறைந்த வருங்கால நல்
உலகை கனவு காணவும் செயல்களால் செதுக்கவும் முடியும் என்பது இலக்காகும்.
வழிபாட்டு வேண்டுதல்
ஆன்மீகம் இயல்பான பண்பாடாக மக்களிடம் திகழ்கிறது. எனவே அறிவியல் மனப்பான்மையை பரப்புதல், அறிவியல்
தத்துவ பயிற்சியில் மேம்படுதல் என்பதெல்லாம் நீண்டகால உயர்மட்ட நடைமுறை என்பதனால் மனித
குல முன்னேற்றத்தின் கனவுகளை குழந்தைகளின் ஆழ்மனதில் உடனடியாக பற்ற முயல்வதற்கு நடைமுறையில்
உள்ள ஆன்மீகப் பண்பாட்டை கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள்
அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ற கடவுளை நினைத்துக் கொண்டு கீழ்கண்ட வேண்டுதல்களை நெஞ்சுருக
வேண்டுவதற்கும் பயிற்சி வழங்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வேண்டுதல்களின்
கனவுகளை வழிபட பழக வேண்டும். மனித குல முன்னேற்றத்தின் தேவைகளையும் நல்லுலகம் குறித்த
கனவுகளையும் மனித குழுக்களின் பெருங்கனவுகளாக உயிர்ப்பிக்க செய்வதே வேண்டுதல்களில்
இலக்காகும்.
வேண்டுதல்
விபரம் பின்வருமாறு
"
நதிகளாக ஓடுகின்ற மதங்களுக்கு
கடலாக
ஆடிவரும் கடவுளே..
இந்த
மக்களின் கோரிக்கை எல்லாம் நல்லபடியாக நிறைவேற வேண்டும் கடவுளே..
நானும்
என் இணையரும்.. என் அம்மாவும் அப்பாவும்.. என் குழந்தைகளும்.. அக்கா,
தங்கை... அண்ணன் தம்பி.. உற்றார் உறவினர்கள்.. நண்பர்கள்.. அண்டை வீட்டுக்காரர்கள்..
உள்ளூர் காரர்கள் வெளியூர் காரர்கள்.. உள்நாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்..
சர்வதேச உலகில் வாழும்..
சிந்தித்துக் கூடி உழைக்கக்கூடிய மக்கள் அனைவரும்..
ஆறு மணிநேர உழைப்பு.. எட்டு மணி
நேர ஓய்வு.. பத்து மணிநேர பண்பாட்டு முயற்சிகளும் கொண்டாட்டங்களும் பெற்று..
மகிழ்ச்சியாக.. மன நிம்மதியாக..
தம் தேவைகளை எல்லாம்.. வாங்கி மகிழ கூடிய.. ஆற்றல் மிக்கவர்களாக.. சீரும் சிறப்பும்
பெற்று வாழ.. உங்கள் அருள்.. என்றென்றும் வேண்டும் கடவுளே..
மனிதர்கள் ஒற்றுமையாக..
கூடி சிந்தித்து.. உழைத்து வாழக்கூடிய.. ஆற்றல்மிக்க உயிரினங்களாக.. இயற்கையும் சமூகமும்..
பகை இல்லாத நண்பர்களாக.. நீடித்து வாழ.. அருள் காட்டுங்கள் கடவுளே..
பிறக்கும்போதே.. உயர்ந்தவர்
தாழ்ந்தவர் என்றும்.. நம்ம ஆளுக வேற ஆளுக என்றும்.. சகமனிதர்களிடம் பாகுபாடு பார்க்கும்..
மன நோயை தருகின்ற.. சாதி வெறியை... பிறக்கும்போதே பெண்கள் கீழானவர்களாகவும்.. இழிவானவர்களாகவும்..
ஒழுக்கக்கேடானவர்களாகவும்.. இருக்கிறார்கள் என்றும்.. ஆண்கள் மட்டும்.. உயர்வானவர்கள் என்றும்.. மூடத்தனமாகச் சொல்கின்ற..
சாதிவெறி மதவெறியை.. ஒழித்துக் காட்டுங்கள் கடவுளே..
சாதிவெறி இல்லாமல்.. மதவெறி
இல்லாமல்.. பண வெறி இல்லாமல்.. லாப வெறி இல்லாமல்.. போர்வெறி இல்லாமல்.. போதை வெறி
இல்லாமல்.. அதிகாரவெறி இல்லாமல்.. அடிமைத்தனம் இல்லாமல்.. ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு
இல்லாமல்.. ஆண்களும் பெண்களும் ஏற்றத்தாழ்வு இல்லாமல்.. மனம் ஒத்து வாழ்கின்ற காதலர்களை.. ஆணவப் படுகொலைகள் செய்யாமல்.. சொத்தாதிக்க வன்முறைகளும்..
படுகொலைகளும் நிகழாமல்.. மக்கள் எல்லோரும்.. சகோதரர்களாகவும்.. சமத்துவமாகவும்.. மனிதகுலத்தின்
அறம் போற்றி.. சமூகநீதி காத்து.. ஒற்றுமையாகவும்.. இயற்கையின் பேரன்பாகவும்.. இயற்கையின்
அங்கமாகவும் அரணாகவும்.. வாழச் செய்யுங்கள் கடவுளே..
இந்த உலகத்தை பாதுகாத்து.. நாங்களும்..
எங்கள் அடுத்த தலைமுறைகளும்.. நிம்மதியாக வாழ்கின்ற.. ஒரு நல்ல உலகத்தை.. உருவாக்கி
பெறுவதற்கு.. ஆற்றலும் வளமும்.. கொடுத்து உதவுங்கள் கடவுளே.. போதைப் பொருள் ஆசையிலும்..
காட்சி போதை வன்முறைகளிலும்.. பிம்ப நோய்களிலும்.. சீரழிந்து வாழ்வை இழக்கின்ற.. மனதாலும்
அறிவாலும்.. செத்துப் போகின்ற.. இன்றைய இளம் தலைமுறைகளை.. குணப்படுத்துங்கள் கடவுளே..
நல்ல சிந்தனை திறனும்.. தாய்மொழித் திறனும்.. செயல் திறனும்.. உள்ளவர்களாக உருவாக்குங்கள்
கடவுளே..
இந்த உலகத்தை.. படைத்தவர்
நீங்கள்.. பாதுகாக்க வேண்டியது.. உங்கள் பொறுப்பு.. பொறுப்பைக் காப்பாற்றி.. உங்களை
எப்போதும்.. நிரூபித்துக் கொண்டே இருங்கள் கடவுளே..
மனிதர்களின் எல்லா மூடத்தனங்களும்..
மூடநம்பிக்கைகளும் ஒழிந்து.. அறிவில் மேன்மை அடைய.. வழிகாட்டுங்கள்
கடவுளே..
எல்லாம் வல்ல கடவுளே.. எங்களுக்கு
வெளிச்சம் காட்டுங்கள்.."
செவி தியானம்
செவி
தியானத்தில் ஈடுபடுபவர்கள் மனிதகுல மேன்மைக்கும் பயன்படக்கூடிய ஒரு கதையை அல்லது ஓர்
அறிஞரின் பேச்சை அல்லது துறை சார்ந்த அறிஞர்களின் விளக்கங்களை காதுகளால் தியானித்து
கேட்டு புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கல்விப்பாடத் திட்டத்தில் உள்ளவற்றையோ அல்லது தங்களது ஆன்மீக நம்பிக்கை சார்ந்தவற்றையோ முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மற்றபடி வேறு எவற்றிலும் கவனம் திசை திரும்பாமல் செவி தியானத்தில்
மட்டுமே முழு கவனமும் குவிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச அளவாக 10 முதல் 15 நிமிடம்
வரை செவிதியானம் நிகழ வேண்டும். காதுகளால் கேட்டு தான் புரிந்து கொண்டதை விளக்கிப்
பேசுவதற்கு வசதியாக தனது பேனாவால் நோக்கில் நினைவுக் குறிப்புகளை எழுதிக் கொள்ள வேண்டும்.
கேள்விகளும் கூடுதல் விளக்கங்களும் இவற்றில் உள்ளடங்கலாம். செவி தியான புரிதலை உரையாடுகின்ற
பயிற்சி முழு நண்பர்களுக்கு சாராம்சமாக உணர்த்தும் படி பேச வேண்டும் என்பது செவி தியானத்தின்
தற்காலிகமான இலக்காகும்.
வாசிப்பு தியானம்
வாசிப்பு தியானத்தில் ஈடுபடுபவர்கள் மனித குல மேன்மைக்கு பயன்படக்கூடிய கதை கவிதை பாட்டு கலை இலக்கிய கட்டுரை போன்ற கலை இலக்கியங்களை முதன்மையாக பயன்படுத்த வேண்டும். விதிவிலக்காக சில அறிவியல் இலக்கியங்களை பயன்படுத்தலாம். தங்கள் கல்விப்பாடத் திட்டத்தில் உள்ளவற்றையோ அல்லது தங்களது ஆன்மீக நம்பிக்கை சார்ந்தவற்றையோ முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மற்றபடி வேறு எவற்றிலும் கவனம் திசை திருப்பாமல் எழுத்துக்களோடு தகுந்த கற்பனைகளையும் கருத்துகளையும் இணைத்து தியானத்தில் ஈடுபட வேண்டும். குறைந்தபட்ச அளவாக 10 முதல் 15 நிமிடம் வரை வாசிப்பு தியானம் நிகழ வேண்டும். எழுத்துக்களை வாசித்து தான் புரிந்து கொண்டதை விலக்கிப் பேசுவதற்கு வசதியாக தனது பேனாவால் நோக்கில் நினைவு குறிப்புகளை எழுதிக் கொள்ள வேண்டும். கேள்விகளும் கூடுதல் விளக்கங்களும் இவற்றில் உள்ளடங்கலாம். வாசிப்பு தியான புரிதலை உரையாடுகின்ற பயிற்சியில் குழு நண்பர்களுக்கு சாராம்சமாக உணர்த்தும்படி பேச வேண்டும் என்பது வாசிப்பு தியானத்தின் தற்காலிகமான இலக்காகும்.
எழுத்து தியானம்
எழுத்து தியானத்தில் ஈடுபடுபவர்கள் தமது தனித்துவமான நினைவுகளை அனுபவங்களை கனவுகளை கற்பனைகளை உணர்ச்சிகளை விருப்பங்களை உண்மைகளை மனிதகுலம் மேன்மைக்கு பயன்படக்கூடிய கருத்துகளோடு இணைத்து பண்பட்ட மொழியில் ஓர் இலக்கியமாக எழுத முயல வேண்டும். அந்த முயற்சி ஒரு கவிதையாகவோ கதையாகவோ மேற்கோளாகவோ கட்டுரையாகவும் பாடலாகவோ பொதுவான ஓர் இலக்கியமாகவோ எழுத முயல வேண்டும். குறைந்தபட்ச அளவாக 10 முதல் 15 நிமிடம் வரை எழுத்து தியானம் நிகழ வேண்டும். தங்கள் கல்விப்பாடத் திட்டத்தில் உள்ளவற்றையோ அல்லது தங்களது ஆன்மீக நம்பிக்கை சார்ந்தவற்றையோ முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மற்றபடி வேறு எவற்றிலும் கவனம் திசை திரும்பாமல் சுய அறிவு முதல் ஆழ்மன உணர்வு வரை வார்த்தைகளை இணைத்து எழுத்துக்களை எழுதுகின்ற செயலில் மட்டும் தியானித்து ஈடுபட வேண்டும். எழுத்து தியான பயிற்சியை உரையாடுகின்ற பயிற்சியில் தனது பேனாவால் நோட்டில் எழுதிய இலக்கியத்தை நண்பர்களில் ஒருவரிடம் வாசித்து உரையாட கொடுத்து விட வேண்டும். மாறாக உங்கள் நண்பர் ஒருவரின் எழுத்து முயற்சியை நீங்கள் பெற்று வாசித்துப் பார்த்து புரிந்து கொண்டதை நண்பர்களுக்கு உணரும்படி பேச வேண்டும் என்பதே எழுத்து தியானத்தின் தற்காலிக இலக்காகும்.
நாடகப் பண்பாடு
நாடகம்
என்பது நமது மனதையும் அறிவையும் செயலையும் சூழலையும் பண்படுத்துகின்ற கலை வடிவமாகும்.
நாடு + அகம் என்று பிரித்து விளங்கிக் கொள்ள முயலலாம். நாடு என்பது திட்டமிடலுக்கு
உட்படாத ஒழுங்குமுறைகளுக்கு அப்பாற்பட்ட காட்டை மனிதர்கள் திட்டமிட்டு மாற்றியதன் அடையாளமாகும்.
மனிதர்கள் கூடி சிந்தித்து திட்டமிட்டு உழைத்து காட்டை பண்படுத்திய முழுமையே நாடு என்பதாக
அர்த்தம் பெறுகிறது. அதாவது நாடு என்பது திட்டமிட்டு முறைப்படுத்தப்பட்ட பண்பாடாகும்.
அகம்
என்பது மனித உறவை, உடலை, ஆழ்மன உணர்வை, அறிவு நிலையை, பலவித உணர்ச்சிகளை, பன்முகத்திறமைகளை,
கற்கும் முறைகளை, வெளிப்படும் தன்மைகளை, புறநிலை உண்மைகளை, சுற்றுச்சூழல் நிலைமைகளை,
வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்களை, விளைவுகளை தீர்மானிக்கும் செயல்பாடுகளை என்பதாக அனைத்தையும்
ஒருங்கிணைத்த முறையில் உள்ளடக்குகின்ற சொல்லாக 'அகம்' திகழ்கிறது. காட்டைப் பண்படுத்துவது
மட்டுமே நாடு என்பதல்ல, மாறாக காடு போன்று ஒழுங்கு முறையற்று திட்டமிடலுக்கு உட்படாமல்
தான்தோன்றித்தனமாக திகழ்கின்ற அகத்தைப் பண்படுத்துவதும் நாடு என்பதாக அர்த்தப்படும்.
அகத்தை பண்பட்ட நாடாக உயர்த்த வேண்டுமென்றால் நாடகம் என்ற பன்முகத் தன்மைகள் நிறைந்த
கலையை கருவியாக்குவது அவசியமாகும். நாடகம் என்ற கலையில் கற்பனை கருத்து பேச்சு இசை
நடிப்பு நடனம் ஓவியம் உறவுகள் குரல் உரையாடல் உடல் மொழி முகபாவனை இட பயன்பாடு எதார்த்த
வாழ்வை விமர்சிப்பது எதிர்கால கனவை காட்சிப்படுத்துவது மனித மனங்களை கவர்வது விளைவுகளை
தீர்மானித்து செயலைத் தொடங்குவது என்பதாக நாடகத்தில் விளைச்சலாகும் தனிமனித ஆளுமை முதல்
சமூக ஆளுமை வரை ஏராளம். ஒரு குழந்தையின் புரிந்துகொள்ளுங்கள் மற்றும் மொழி வழி வெளிப்படுதல்
என்கின்ற அடிப்படை திறமை முதல் கற்பனை திறன் கலைத்திறன் அறிவியல் திறன் போன்ற பன்முகத்
திறமைகள் வரை மனித ஆளுமையை உயர்த்துவதற்கு நாடகக்கலையைப் பயன்படுத்துவது இன்றியமையாத
பண்பாடாகும்.
விளையாட்டுப் பண்பாடு
விளையாட்டு
என்பது வினை ஆற்று, செயல்படு என்பதாக பொருள்படும். விளைவுகளை உருவாக்கும்படி செயல்படு
என்பதாக பொருள்படும். எனவே கூடி சிந்தித்து உழைப்பில் ஈடுபடுகின்ற செயல்பாடுகளுக்கு
உடலையும் உள்ளத்தையும் அறிவையும் மனித உறவுகளையும் சுற்றுச்சுழல்களையும் தகவமைத்துக்
கொள்கின்ற பண்படுதலுக்கான நிகழ்வாக விளையாட்டுத் திகழ்கிறது. செயல்படுவதற்கு தயார்படுத்துகின்ற
பண்பாட்டு நிகழ்வே விளையாட்டு எனலாம். மனித வாழ்க்கை செயல்பாடுகளால் கட்டமைக்கிறது.
செயல்கள் மனித ஆழ்மனதில் பற்றி கொண்டுள்ள கருத்துகளால் கட்டமைகிறது. கருத்துகள்
அனைத்தும் புறவுலகால் மனித ஆழ்மனங்களில் கட்டமைகின்ற எண்ணங்களை சிந்தனை உழைப்பில் ஈடுபடுத்துவதனால்
கட்டமைகின்றது. எனவே செயல்களில் ஈடுபட வேண்டிய மனிதர்களை உடலாலும் அறிவாலும் உள்ளத்தாலும்
புறவுலகத் தொடர்பாலும் பண்படுத்துகின்ற கலை நிகழ்வாக விளையாட்டுகள் திகழ்கின்றன. அன்றாட
வாழ்வில் மனித ஆளுமை பண்பை இயல்பாக பன்முகத் தன்மைகளில் வெளிப்படுத்துகின்ற கருவிகளாக
விளையாட்டுகள் திகழ்கின்றன. மனித உறவுகளை மதிப்பது கூடி செயல்படுவது மாற்றங்களை உருவாக்குவது
விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது புதிய விதிகளை உருவாக்குவது சவாலான சூழல்களில் துணிச்சலாக
முடிவெடுப்பது விளைவை எதிர்பார்த்து முடிவெடுத்து செயல்படுவது போன்ற பலவிதமான வாழ்வியல்
திறன்களை மனித ஆளுமைக்கு இயல்பாக்குகின்ற வித்தைகளை விளையாட்டு கலைகளே சாத்தியப்படுத்துகின்றன.
குழுவாகவும் சுயமாகவும் மனித ஆளுமையை மேம்படுத்துகின்ற பலவிதமான விளையாட்டுகளை பயன்படுத்துவது
பண்பாட்டு பயிற்சிகளில் இன்றியமையாததாகும்.
விளையாட்டுகளில் சில..
1.குழுவில் ஒருவர் நடிக்கும் நடிப்பை
அடுத்தவர் கவனித்து அடுத்தவருக்கு அப்படியே நடித்துக் காட்ட வேண்டும். கடைசியாக நடிப்பவர்
அதே நடிப்பை நடித்தாரா என்பதுதான் விளையாட்டு
2. கண்ணைப் பார்த்து கைதட்டியவுடன்
பார்த்தவர் கைதட்டை பெற்றுக்கொள்கிறார். தன்னிடம் உள்ள ஓசையை மற்றவரின் கண்ணைப் பார்த்து
கொடுக்க வேண்டும். அருகில் உள்ளவரிடம் கொடுப்பதாகவும் அருகில் உள்ளவரிடம் பெறுவதாகவும்
தொடங்கும் இந்த கைதட்டு விளையாட்டு யாரிடம் வேண்டுமானாலும் உன்னை பார்த்து கொடுக்கலாம்
என்ற நிலைக்கு மாற்றம் பெறும். விதி தன்னைப் பார்த்து பெற வேண்டும் தன்னைப் பார்த்து
கொடுக்க வேண்டும்
3. வட்டத்தில் உள்ளவர்கள் தன்னிடத்தில்
இருந்து வேறு இடத்திற்கு மாற வேண்டும். தன்னிடத்தில் இருந்து மற்றவர் கண்ணை பார்த்து
உறுதி செய்து கொண்டு அவரிடத்திற்கு நகர வேண்டும் அவர் அந்த இடத்தை அடைவதற்குள் இடத்திற்கு
சொந்தக்காரன் வேறொருவரின் கண்ணை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு அவரிடத்திற்கு மாற
வேண்டும். வட்டத்தின் நடு புள்ளியை அடைந்த பிறகு தான் மாற்று இடத்தில் சேர வேண்டும்
என்பதும் விதி.
4. வட்டத்தில் இருப்பவர்களுக்கு வெளியே
அல்லது உள்ளே ஒருவர் ஏதேனும் பொருளைக் கொடுத்து இயக்குவார். அந்தப் பொருளுக்கு ஒரு
பெயரிடுவார். குழுவின வலது கையில் பெற்று தனது இடது கைக்கு மாற்றி இடது கையில் இருந்து
அருகில் இருப்பவரின் வலது கைக்கு பொருளை கொடுக்க வேண்டும். அந்த பொருளுக்கு சொல்லப்பட்ட
பெயரை சொல்லிக் கொடுக்க வேண்டும். பொருளை வேகமாக கைமாற்றி கொடுக்க வேண்டும். ஒரு பொருளிலிருந்து
இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று வட்டத்தின் அளவிற்கு ஏற்றபடி பொருள்களின் எண்ணிக்கையையும்
கூட்டிக் கள்ள முடியும். வேகமாக கைமாறும் பொருளை பெயர் மாறாமலும் கீழே விட்டு விடாமலும்
சரியாக சுழற்சியில் கொண்டு சேர்க்க வேண்டும். கீழே விட்டவர் வட்டத்திற்கு வெளியில்
நின்று விளையாட்டை கவனிப்பவராக மாறி வடுவார்.
5. இருவர் இருவராக நேருக்கு நேர் நின்று
கொண்டு விளையாடத் தொடங்க வேண்டும். ஒருவர் ஒன்று சொன்னால் மற்றவர் இரண்டு சொல்ல வேண்டும்.
இரண்டு சொன்னால் மற்றவர் மூன்று சொல்ல வேண்டும். மூன்று சொன்னால் மற்றவர் நான்கு சொல்லக்கூடாது
மீண்டும் ஒன்று என்று தொடங்க வேண்டும். கண்களை பார்த்து மட்டுமே சொல்ல வேண்டும். யோசித்து
யோசித்துச் சொல்லக்கூடாது. வேகமாகச் சொல்ல வேண்டும். தவறும் போது ஐந்து வாய்ப்புகள்
கொடுக்கப்படும்.
தொடர்ந்து 30 சுழற்சி முடிந்து விட்டால்
விளையாட்டின் அடுத்த கட்டம் தொடங்கும். அதில் இரண்டுக்கு பதிலாக கைதட்டுதல் அல்லது
வேறு செயல் ஒன்றை தீர்மானித்துக் கொண்டு மற்ற விதிகளை அப்படியே பொருத்திக்கொண்டு விளையாட்டு
தொடர வேண்டும்.
6. இருவர் எதிர எதிரே நின்று கொண்டு
விளையாடத் தொடங்க வேண்டும். ஒருவர் சிலையாகவும் மற்றவர் சிற்பியாகவும் விளையாட வேண்டும்.
தொடவும் கூடாது பேசவும் கூடாது. சிற்பி நீ இருப்பவரை ஒரு சிலையாக செதுக்க வேண்டும்.
சிலை சிறப்பி தன்னை உணவாக மாற்றம் யோசிக்கிறார் என்பதை உணர்த்து ஒத்துழைக்க வேண்டும்.
சிலை ஒத்துழைக்கத் தகுந்த முறையில் எளிமையான சிற்பத்தை திட்டமிட்டு சிற்பி செதுக்க
வேண்டும்.
7. வட்டத்திற்கு வெளியே ஒருவர் இருப்பார்.
அவர் வட்டத்திற்குள் ஒரு தலைவர் இயங்குகிறார் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் இருந்து கவனிக்கக் கடாது வட்டத்தில் சுற்றி நடந்து கொண்டே கவனிக்க வேண்டும்.
தலைவர் என்ன செயலை செய்கிறாரோ அதை வட்டத்தில் உள்ளவர்கள் அப்படியே செய்வார்கள். தலைவர்
ஒரே சேலை தொடர்ந்து செய்வதை நீடிக்க கூடாது. பலவிதமான செயல்களை உடனுக்குடன் மாற்றிக்
கொண்டே இருக்க வேண்டும். தலைவர் செயலை மாற்றிய உடனே மற்றவர்களும் மாற்றிக்கொண்டு தலைவரை
காப்பாற்ற வேண்டும். தலைவர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் வட்டத்திற்கு வெளியே புதிய
தலைவரை கண்டுபிடிக்க தயாராகுவார்.
8. சிலைகளின் முன் ஒரு கோமாளி. சிலைகளாக
இருப்பவர்கள் சிரிக்கக் கூடாது. சிலைகளைத் தொடாமல் தனது குரலாலும் செயல்களாலும் கோமாளி
சிலைகளை சிரிக்க வைக்க வேண்டும். எந்தச் சிலை சிரித்ததோ அந்தச் சிலை கோமாளியாக மாறிவிட
வேண்டும்.
9. ஒரு குழுவினர் இருவர் இருவராக கைகளை
கோர்த்துக்கொண்டு நிற்பர். ஒருவர் தன் குழுவை நம்பி பறந்து வந்து கைகளில் விழுவார்.
அல்லது உயரத்திலிருந்து கீழே விழுவார். பூமியை பார்த்து விழுவார் அல்லது வானத்தைப்
பார்த்து விழுவார். அவரை கீழே விழாதபடி தாங்கி காப்பாற்றுவதுதான் விளையாட்டு.
10. வட்டத்திலிருந்து நடுவிலே செல்லும்
ஒருவர் கதையின் தொடக்கத்தை நடிக்க தொடங்குவார். அந்த நடிப்பில் ஒரு கதையை தொடங்கி வைத்துவிட்டு
மீண்டும் வட்டத்திற்கு சென்று விடுவார். அடுத்தவர் அந்த கதையை நடிப்பாக தொடர வேண்டும்.
ஒவ்வொரு தொடர்ச்சியும் ஒரு கதையின் அடுத்த கட்டத்தை சொல்லி முடிக்கும். வட்டத்தில்
இருந்து உள்வரும் ஒவ்வொருவரும் கதையின் ஒரு கட்டத்தை சொல்லி முடித்துவிட்டு வட்டத்திற்கு
சென்றுவிடுவார். குழுவில் உள்ள ஒவ்வொருவரும் நடிப்பாகத் தொட்ட கதை விட்ட கதை என்ற தொடர்ச்சி
எந்த எல்லையில் முடிகிறது என்பதுதான் விளையாட்டு.
11. முன்னே உள்ளவரின் தோளில் கைகோர்த்து
படி வரிசையாக பாம்பு போல் இருப்பார்கள். ஒருவர் பாம்பின் தலைக்கு எதிரே நிற்பார் அவர்தான்
கீரி. இந்தக் கேடி பாம்பின் வாலாக கடைசியில் நிற்பவரின் அருகில் ஓடி தலைக்கு மேலே கைதட்ட
வேண்டும். இனி தன் வாழை நெருங்க விடாதபடி அந்த வரிசை வளைந்து நெளிந்து அவரை தடுக்கும்.
கீரியை பாம்போ அல்லது பாம்பை கீரியோ தொடவோ தள்ளவோ கூடாது. கீரி வெற்றி பெற்றால் பாம்பின்
தலை தனித்துச் சென்று கீரியாக மாறிவிட வேண்டும்.
12. இருவர் இருவராக இணைந்து கொள்ள
வேண்டும். ஒருவர் குருடராக கண்ணி மூடிக்கொள்ள வேண்டும். மற்றவர் அவருக்கு உற்ற துணையாக
அழைத்துச் செல்ல தயாராக வேண்டும். நடுவர் சொல்லியதும் விளையாடும இடத்தில் தன்னை நம்பி
கண்ணை மூடி இருக்கும் நண்பரை பல திசைகளுக்கும் வளைந்து நெளித்து செல்லும்படி பயணம்
செய்யும்படி அழைத்துச் சென்று ஏதேனும் ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும். பிறகு கையை விட்டு
விட்டு ஒரு பத்து நடை எந்த திசையிலாவது தள்ளி நிற்க வேண்டும். நின்ற இடத்தில் இருந்து
நம்பி வந்த நண்பரின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். கண்ணை மூடி இருக்கும் நண்பர்
தன்னை அழைத்த திசையில் நடந்து சரியாக அழைத்த இடத்தில் நிற்க வேண்டும். அவர் நிற்பதற்குள்
அழைத்து நண்பர் 15 நடை மிகாத படி ஏதேனும் திசையில் மாறி சென்று நின்று கொள்வார். பிறகு
மீண்டும் அழைப்பார். ஆனால் அவரின் பெயரைச் சொல்லி அல்ல. அவர் விருப்பப்பட்ட பலவிதமான
பெயர்களில் ஒன்றாக அமையும். அந்தப் பெயர் மனிதர்களுக்கு உரியதாகவோ அல்லது அஃறிணை பொருள்களுக்குரியதாகவோ
இருக்கலாம். ஒவ்வொரு முறையும் அழைக்கப்படும் பெயர் வேறொன்றாக இருக்கும். தன்னை போல்
கண்ணை மூடி கொண்டிருக்கும் பல நண்பர்களின் துணை நண்பர்கள் பல பெயர்களில் அவரவர்
நண்பர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அழைப்புச் சத்தங்களில் தனது நண்பரின்
குரலை சரியாக அறிந்து பயணித்து உரிய இடத்தில் நிற்க வேண்டும். 10 முறை கண்ணை மூடி சென்று
நின்ற பிறகு பொறுப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். அழைத்துக் கொண்டிருந்தவர் குருடரின்
உலகத்தில் பயணிக்க தொடங்க வேண்டும் என்பதுதான் விளையாட்டு.
13. ஒரு பெரிய வட்டத்தில் அனைவரும்
நடிகர்களாக இருக்க வேண்டும். நடுவர் ஒரு பொதுவான இடத்தை குறிப்பிடுவார். உதாரணத்திற்கு
கோயில் என்று குறிப்பிட்டால் ஒவ்வொரு நடிகராக உள்ளே தன் நடிப்பின் மூலமாக கோவிலை உருவாக்கிக்
காட்ட வேண்டும்.
14. வட்டத்தில் ஒருவர் ஒரு கதையை தொடங்கி
வைப்பார். அடுத்தவர் கதையின் தொடக்கத்தை சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியை தொடங்கி வைப்பார்.
அடுத்தவர் கதையின் தொடக்கத்தை சொல்லி அடுத்தவரின் தொடர்ச்சியை சொல்லி தனது புதிய தொடக்கத்தை
இணைத்து வைப்பார். இப்படியாக வட்டத்தில் அனைவரும் தொடக்க முதல் அடுத்தடுத்து கதையின்
தொடர்ச்சியை வரிசைபடச் சொல்லி அதில் தான் இணைக்கின்ற பகுதியை சொல்லி முடிக்க
வேண்டும். 'ஒரு ஊர்ல நரியாம் அத்தோடு எல்லாம் சரியாம்' என்பதாக முடிப்பது விளையாட்டாகது.
ஒவ்வொருவரும் கதைக்கு திருப்புமுனை கொடுத்து வளர்ப்பதற்கு தான் முயற்சி செய்ய வேண்டும்.
இத்தகைய சுழற்சியில் வளர்ச்சி பெறும் கதையை ரசிப்பது தான் விளையாட்டு. அல்லது மிக எளிமையாக
கதைக்கு பதிலாக பொருள்களின் பெயரை பயன்படுத்தி பொருளின் பேரைத் தொடங்கி தொடர்ந்த
பெயர்களை அடுக்கி புதிய பெயரை இணைப்பதாகவும் விளையாடலாம்.
15. வட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும்
தன் பெயரை சொல்ல வேண்டும். ஒருவர் சொன்ன பிறகு அனைவரும் சேர்ந்து அவர் பெயரை உச்சரிக்க
வேண்டும். பிறகு அடுத்தவர் தன் பெயரை சொல்லுவார். ஒவ்வொரு பெயரையும் அனைவரும் உச்சரிக்க
வேண்டும். இந்த முறையில் வரிசையாக பேர் சொல்லி முடிக்க வேண்டும். வட்டத்தில் உள்ள எல்லோரின்
பெயரும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இதற்காக இரண்டாவது சுற்றும் மூன்றாவது
சுற்றும் வரிசையாக பெயர் சொல்லப்படும். பெயர் சொல்பவர் தன் பெயரை ஒரு இசையோடு செயலோடு
இணைத்து சொல்லுவார். மற்றவர்கள் அதே இசையிலும் செயலிலும் இணைந்து மீண்டும் அந்தப் பெயரை
ஒரேமாதிரியாக சொல்ல வேண்டும். மூன்று சுற்று முடிந்ததும் விளையாட்டின் மறுக்கட்டம்
தொடங்கும். உதாரணத்திற்கு சிவக்குமார் அந்தோணியை அழைக்கிறார். சிவக்குமார் தனது பெயரைச்
சொல்லி தான் யாரை அழைக்க விரும்பினாரோ அவரின் பெயரைச் சொல்லி. உடனே அழைக்கப்பட்டவர்
தொடங்குவார். அந்தோணி சங்கீதாவை அழைக்கிறார். உடனே சங்கீதா தொடங்க வேண்டும். சங்கீதா
இஸ்மாயிலை அழைக்கிறார். இப்படியாக தம் பெயரையும் நண்பரின் பெயரையும் இணைத்து அழைக்க
வேண்டும். இவ்வாறு பெயர் சொல்லி அழைத்து விளையாடுவதுதான் இந்த விளையாட்டு.
16. வட்டத்திற்குள் களைந்து ஓட வேண்டும்.
ஒருவர் பூதமாக துரத்துவார். பூதம் தொட்டுவிட்டால் தொடப்பட்டவரும் பூதமாக மாறிவிட வேண்டும்.
பூதம் ஒவ்வொருவரையும் பூதமாக மாற்ற முயலும். ஆனால் பூதம் தொடாமல் பூதத்தின் தலையைத்
தொட்டவர் இருவர் இருந்தால் இருவர் இணைந்து பூதத்தின் முகத்திற்கு அருகில் கைதட்டினால்
பூதம் மனிதராக மாறிவிடும். மேலோங்க போவது பூதத்தின் கையா? மனிதனின் கையா? என்பதுதான்
விளையாட்டு.
17. வட்டத்திற்கு வெளியே நடுவர். வட்டத்திற்குள்ளே
போக்குவரத்து விதியை விளையாட வேண்டும். நடுவர் பச்சை என்றால் ஓட வேண்டும் மஞ்சள் என்றால்
நடக்க வேண்டும் சிவப்பு என்றால் நிற்க வேண்டும் மாற்றி செய்பவர்கள் வட்டத்திற்கு வெளியே
பார்வையாளராவார்கள்
18. வட்டத்தில் அனைவரும் கைகோர்த்து
நிற்க வேண்டும். அதில் ஒருவர் தொடப்பட வேண்டியவர். அவருக்கு நேர் எதிராக வட்டத்திற்கு
வெளியே தொடுபவர் நிற்பார். நடுவர் அறிவித்ததும் வட்டத்திற்குள் உள்ளவரை தொடுவதற்கு
ஓடுவார். வட்டத்திற்கு வெளியே சுற்றி வந்து தான் தொட வேண்டும். எந்த திசையிலும் சுற்றி
வரலாம். வட்டத்தினரும் எந்த திசையிலும் மாறிமாறி ஒற்றுமையாக சுற்றி கொண்டு தொடப்பட
வேண்டியவரை காப்பாற்றுவார்கள். தொட்டு விடுவாரா அல்லது காப்பாற்றப்படுவாரா என்பது தான்
விளையாட்டு.
19. வட்டத்தின் அனைவரும் மெதுவாக ஓடிக்
கொண்டிருக்க வேண்டும். நடுவர் ஓர் எண்ணை குறிப்பிட்டதும் அந்த எண்ணாக வட்டத்தில் உள்ளவர்கள்
தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஏழு என்று நடுவர் சொன்னால் அனைவரும்
7 நபர் கொண்ட குழுவாக மாறி நிற்க வேண்டும். பிறகு மூன்று சொன்னால். மூன்று நபர் குழுவாக
மாறி நிற்க வேண்டும். நடுவர் நேரடியாக ஒரு எண்ணை குடிப்பிடாமல் ஒரு வார்த்தையை சொல்லலாம்.
அந்த வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள் உள்ளதோ அத்தனை நபர்கள்கொண்ட குழுவாக மாற வேண்டும்.
உதாரணத்திற்கு மூன்று என்று குறிப்பிடாமல் மனசு என்று குறிப்பிடலாம். உடனே மூன்று நபர்
குழுவாக மாற வேண்டும். எண் உணர்ந்து மாற்றம் பெறுவது தான் விளையாட்டு.
20. தொடுபவர் தயாராக வேண்டும். யார்
கையில் பந்து இருக்கிறதோ அவரைத் தொட வேண்டும். தொடுவதற்குள் பந்தை வட்டத்தினர் கைமாற்ற
வேண்டும்.
21. வட்டமாக நிற்க வேண்டும். வட்டத்தின
ஒரு திசையில் ஒற்றுமையாக ஓட தொடங்க வேண்டும். ஒருவர் பின் ஒருவராக வட்டத்திற்குள் சீரான
வேகத்தில் ஓட வேண்டும். நடுவர் அறிவித்ததும் ஒருவர் மற்றவரை முந்தி செல்ல முயல வேண்டும்.
ஒருவர் முந்திவிட்டால் பிந்தியவர் வட்டத்திற்கு நடுவே வந்து விட வேண்டும். யார் இறுதியாக
முந்தி ஓடியவர் என்பது தான் விளையாட்டு.
22. வட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு இடத்தின்
பெயராக நிற்பார்கள். வட்டத்தின் வெளியே தபால்காரராக ஒருவர் இருப்பார். நடுவர் தபால்
கொடுக்க வேண்டிய இடத்தின் பெயரைச் சொல்வார். தபால்காரர் அந்த இடப்பெயர் நண்பர் முன்னே
சென்று தபால் என்று கைத்தட்ட வேண்டும். நடுவர் கைதட்டி கைதட்டி இடத்தின் பெயரை மாற்றிச்
செல்வார். இந்த பேர் சொல்லப்பட்ட உடன் அவர் முன் சென்று தபால் என்று கைத்தட்ட வேண்டும்.
தவறாக தட்டினால் கைதட்டு பெற்றவர் தபால்காரரின் முதுகில் வலிக்காதவாறு முத்திரை குத்துவார்.
இடப்பெயரும் தபால்காரரும் சுற்றுச்சுற்று மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.
23 வட்டத்திற்கு வெளியே நடுவர். வட்டத்திற்குள்
அனைவரும் நடிக்கத் தயாருடன் இருக்க வேண்டும். நிலம் என்றால் நிலத்தில் வாழும் உயிரினமாகவும்
நீர் என்றால் நீரில் வாழும் உயிரினமாகவும் காற்று என்றால் வானில் வாழும் உயிரினமாகவும்
மாறி மாறி நடிக்க வேண்டும்
24. வட்டத்தில் உள்ளவர்கள் நடுவரின்
கட்டளைப்படி நடக்க வேண்டும். உள்ளே என்றால் முன்பாக குதிக்கவும்
வெளியே என்றால் பின்பாக குதிக்கவும்
பூமி என்றால் தரையை தொடவும் வானம் என்றால் வானில் தொடுவது போல் குதிக்கவும் சொற்களை
இணைத்து கட்டளையிட்டால் அதாவது பூமி எப்படி வானத்தில் போடு என்றால் தரையைத் தொட்டு
வானை குதிக்கவும்
உள்ளே போட்டு வெளியே எடு என்றால் முன்னே
குதித்து உடனே பின்னே கொதிக்கவும் கட்டளையை
எதிர்மறை பொருளில் விளையாடுவது என்றால்
தலைகீழாக செய்ய வேண்டும். உள்ளே என்றால் வெளியே குதிக்கவும் வெளியே என்றால் உள்ளே குதிக்கவும்
வானம் என்றால் தரையை தொடவும் பூமி என்றால் வானில் தொடவும்
25. வட்டத்தில் அனைவரும் எண்களை வரிசையாக
சொல்லவும். ஆனால் ஏதேனும் ஒரு என் அடையாளத்தை மட்டும் சொல்லக்கூடாது. அதாவது 5 10
15 20 அல்லது 4 8 14 18 24 28 இப்படி ஏதேனும் ஒரு விதிப்படி வரும் எண்ணை சொல்லக்கூடாது.
அதற்கு பதிலாக தலைவர்களின் பெயர் அல்லது இயற்கை பெயர் அல்லது இலக்கியத்தின் பெயர் போன்றதாக
சொல்லலாம். ஆனால் சினிமா நட்சத்திரங்களையும் சினிமா பெயர்களையும் பெரும்பாலும் தவிர்க்கவும்.
சிறிதளவாக இருக்கலாம். எனின் வரிசை ஒன்றிலிருந்து இருந்து நூறு நோக்கியதாகவோ
அல்லது நூறிலிருந்து ஒன்று நோக்கி தலைகீழாகவோ சொல்லலாம்.
26. வட்டத்திற்கு வெளியே எதிரெதிராக
இரண்டு அணி இருப்பர். நடுவர் அறிவித்தது இரண்டு அணியில் எழுதும் வரிசையாக வட்டத்தின்
மையத்தை நொண்டி அடித்துக் கொண்டு வந்து எதிரணி நண்பருக்கு கை கொடுத்து வட்டு வேகமாகச்
சென்று அடுத்தவரை நொண்டி அடிக்க அனுப்ப வேண்டும். எந்த அணி முதலில் நொண்டி அடித்து
வட்டத்திற்குள் வந்து முடிகிறதோ அந்த அணி வெற்றி பெற்றது.
27. நடுவர் சொன்னதும் வட்டத்தில் யார் தனியாக இருக்கிறார் என்பதை பார்த்து தொடுவதற்கு ஓட வேண்டும். நடுவர் இரண்டு என்றால் வட்டத்திற்குள் இருவர் இருவராக நிற்க வேண்டும். நடுவர் மூன்று என்றால் வட்டத்திற்குள் மூன்று மூன்று நண்பர்களாக நிற்க வேண்டும். நடுவர் சொல்லும் எண்ணுக்கேற்ப மாறிக்கொண்டிருக்க வேண்டும். தனியாக நிற்பவர் தொடப்பட்டால் வட்டத்திற்கு வெளியே வந்து தொடுபவராக மாற வேண்டும்.
28. வட்டத்திற்குள் ஒரு ஆடு. வட்டத்தில்
வரிசையாக நிற்பவர்கள் புலியிடம் இருந்து ஆட்டை பாதுகாக்க வேண்டும். புலி உள்ளே
பாய்வதற்காக சுத்தி சுத்தி வருகிறது. வட்டத்தினரின் தடைகளை மீறி புலி உள்ளே வந்து வட்டால்
ஆடு வெளியே தப்பி ஓட உதவ வேண்டும். புலி வெளியே பாய்ந்து வந்தால் ஆட்டை உள் நுழைய உதவ
வேண்டும். ஆட்டை புலி பிடித்துவிட்டால் வட்டத்தில் இருந்து புதிய இருவர் ஆடுபுலியாக
மாறுவர்.
29. இருவராக இணைந்து கொண்டு கண்ணாடி பிம்ப விளையாட்டிற்கு தயாராக வேண்டும். சில நிமிடங்கள் திட்டமிட்டு கொள்ள நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் தாங்கள் திட்டமிட்டுக் கொண்ட படி கண்ணாடி பிம்பமாக தங்களை வெளிப்படுத்த வேண்டும்.
30.அனைவரும்
வட்டமாக நிற்க வேண்டும். வட்டத்தில் ஒருவரை தவிர மற்றவர் அனைவரும் கண்ணாடியாக தங்களை
வெளிப்படுத்த வேண்டும். இந்த கண்ணாடிகள் சற்று புரிந்து கொண்டு பிம்பத்தை வெளிப்படுத்தும்
தன்மையாக செயல்பட வேண்டும். அந்த ஒருவர் வட்டத்தில் நின்று கொண்டு என்னவெல்லாம் செய்கிறாரோ
அதை அப்படியே கண்ணாடிகள் பிம்பமாக செய்ய வேண்டும்.
உறுதிமொழி
1.நான்
இயற்கையையும் மனித குல முன்னேற்றத்தையும் பேரன்புடன் நேசிக்கிறேன்
2.நான்
என்னையும் என் தாயையும் விரும்பி பாதுகாப்பது போல இயற்கையையும் மனிதகுல முன்னேற்றத்தையும்
விரும்பி அரவணைத்து பாதுகாப்பேன்
3.மக்கள்
அனைவரும் தேவையானவற்றை பெற்று மகிழவும் வாங்கும் சக்தி உள்ளவர்களாக உருவாகவும் மனதார
விரும்புகிறேன்
4.மக்கள்
அனைவரும் உடலாலும் மனதாலும் அறிவாலும் உறவாலும் சுற்றுச்சூழல் முழுமையாலும் ஆரோக்கியம்
நிறைந்தவர்களாக வாழ ஆசைப்படுகிறேன்
5.அறிவாலும்
செல்வத்தாலும் மதிப்பாலும் மக்கள் அனைவரும் சமமானவர்களாக வாழ ஆசைப்படுகிறேன்
6.சாதி
வெறி மதவெறி இனவெறி போர் வெறி லாபவெறி போதை வெறி ஆதிக்க வெறி காட்சி போதை வன்முறைகள்
அடிமைத்தனம் அறியாமை ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் ஏழை பணக்கார பாகுபாடுகள் அனைத்தும்
செத்தொழிந்து நல்ல உலகம் புத்துயிர் பெறுவதை விரும்புகிறேன்
7.மனிதர்கள்
முகம் பார்த்து சிரித்து ஒன்றுபட்டு கூடி உழைத்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பேரானந்தமான
வாழ்வையே விரும்புகிறேன்
8.ஆறு
மணி நேர உழைப்பும் எட்டு மணி நேர ஓய்வும் பத்து மணி நேர பண்பாட்டு முயற்சிகளும் கொண்டாட்டங்களும்
என்ற வாழ்க்கை விதிமுறைகள் இயல்பாகிட விரும்புகிறேன்.
9.மனிதராகப்
பிறந்த அனைவருக்கும் மேன்மையான வாழ்வைப் பெற அனைத்து வாய்ப்புகளும் சமமாக கிடைத்து
மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற நல்லுகை அடைவதற்காக ஆசைப்படுகிறேன்
10.எமது
ஆசைகளையும் மனிதகுல மேன்மைகளையும் நல்லுலக கனவுகளாக கூடி சிந்திக்கின்ற மனித
குழுக்களின் அறிவியல் மனப்பான்மை நிறைந்த கனவுகளோடு எமது கரம் சேர ஆசைப்படுகிறேன்
11.எமது
உழைப்பில் நான் நல்லுலக சிற்பியாகவும் எதிர்கால தலைமுறைகளின் கலங்கரை வெளிச்சமாகவும்
எமது வாழ்வை புன்னகை பூக்களால் நிறைவு செய்திட மனதார விரும்புகிறேன்
அரங்கேற்ற வாய்ப்புகள்
பண்பாட்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களின் நல்லுலகக்
கனவுகளையும் பன்முகத் திறமைகளையும் அரங்கேற்றுகின்ற வாய்ப்புகளை பலவிதமான சூழல்களில்
உருவாக்கிக்கொள்ள முயல வேண்டும். இலக்கியக்குழு, கலைக்குழு, அறிவியல்குழு போன்ற பன்முகக்
களங்களில் பண்பாட்டு வகுப்புகளில் பெற்ற பயிற்சிகளை வாழ்விட நண்பர்கள், உறவினர் வழி நண்பர்கள், பள்ளி நண்பர்கள், சமூகவலைதள
நண்பர்கள் அனைவருக்கும் கற்றுத்தந்து பரவலாக பயிற்சி வழங்கி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள
வேண்டும். மேலும், விடுமுறை நாட்களில், குடும்பவிழா சந்திப்புகளில் அரங்கேற்ற வாய்ப்புகளை
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பண்பாட்டு பயிற்சி வகுப்பின் இறுதியில் உங்களை ஒரு பண்பாட்டுப்
பயிற்சியாளராக இணைத்துக்கொண்டு அரங்கேற்ற வாய்ப்புகளை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
டப்பிங் பாடல் - பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே (விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப்பாடல் டப்பிங்) குதிர தமிழர கழுத ஆக்கிட்டானே தமிழ வேதம்சொல்ல...