Monday, July 6, 2020

விதி-1.1.1 முதன்மை முரண்பாடும் x முதன்மையற்ற முரண்பாடும் (சம்பவம் 1)


விதி-1.1.1 முதன்மை முரண்பாடும் x முதன்மையற்ற முரண்பாடும் (சம்பவம் 1)

        இளையராசாவின் பாடல்கள் அதிர்வதைக் கவனியுங்கள்இது புதுச்சேரி நகரப் பேருந்துஇந்த தனியார் பேருந்து சேவையில் நெடுதூர பயணத்திற்கான சீட்டின் விலை ஐந்து ரூபாய்இதில் நாம் பயணம் செய்வோம்அரசு விடுமுறையற்ற நாள்காலை எட்டு மணிக்கே உரிய பொலிவுடன் பயணிகளின் கூட்டம்இருவர் மட்டும் பயணிகளிடம் உறுமுகிறார்கள்அநேகமாக இவர்களே நடத்துனர்களாக இருக்க முடியம்விமானத்தைத் தவறுதலாகக் கோரிமேட்டிற்கும் பேருந்து நிலையத்திற்கும் இறக்கிவிட்டார்களோபயணிகள் இப்படி பதறும்படி சுற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர்இவர்தான் ஓட்டுனர்இந்தப் பேருந்து பயணத்தில் நிரம்பியிருக்கும் முரண்பாடுகளைக் கணக்கிடுவோம்.

பேருந்திற்கு உள்ளே x பேருந்திற்கு வெளியே
உயிரற்ற பேருந்து x உயிருள்ள மனிதர்கள்
இருக்கையிலுள்ளவர்கள் x இருக்கையின்றி நிற்பவர்கள்
மாணவர்கள் x மற்றவர்கள்
ஆண்கள் x பெண்கள்
முதியவர்கள் x இளையவர்கள்
பயணிகள் x நடத்துனர்
இசையை ரசிப்பவர்கள் x இசையை வெறுப்பவர்கள்
நடத்துனர் x ஓட்டுனர்
ஓட்டுனர் x பயணிகள்

இன்னும் விடுபட்ட முரண்பாடுகளும் இருக்லாம்இந்த முரண்பாடுகளே பேருந்தின் திட்டமிட்ட இயக்கத்திற்கு காரணம்எனினும் ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடாக அமைகிறதுமற்ற முரண்பாடுகள் முதன்மையற்றதேமுதன்மை முரண்பாடின்றி பயணிகளின் பேருந்து இயங்கியிருக்க முடியாது.
            சரிபேருந்து பயணத்திலிருந்து சமூக ஆராய்ச்சிக்கூடம் என்ற நிறுத்தத்தில் இறங்கிவிடுவோம்சமூக ஆராய்ச்சிக் கூடத்தைக் கவனியுங்கள்சகமக்களின் சமூகவாழ்விற்குள் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றனஇந்த வேடிக்கையைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.
உழைக்கின்ற மக்கள் x உழைப்பிற்கு எதிரானவர்கள்
அறிவியல் உணர்வாளர்கள் x அறிவெதிர் உணர்வாளர்கள் 
கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்பவர்கள்
உடல் உழைப்பாளர்கள் மூளை உழைப்பாளர்கள்
வாழ வழியற்றவர்கள் சொகுசாக வாழ்பவர்கள்
சொத்து இல்லாதவர்கள் சொத்து உடையவர்கள்
கூலித் தொழிலாளர்கள் x சொந்தத் தொழில் செய்பவர்கள்
கூலி விவசாயிகள் சொந்த நிலமுடையவர்கள்
குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்கூடக் குழந்தைகள்
கற்கும் மாணவர்கள் கல்வி வியாபாரிகள்
ஒடுக்கப்படும் சாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சாதிகள்
ஒடுக்கப்படும் மதங்கள் ஆதிக்கம் செலுத்தும் மதங்கள்
உள்நாட்டு முதலாளிகள் வெளிநாட்டு முதலாளிகள்
விடுதலையை நேசிப்பவர்கள் அடக்குமுறை செய்பவர்கள்
அடக்குமுறையை எதிர்ப்பவர்கள் சொரணையற்று இருப்பவர்கள்
ஓட்டுப்போட்டே ஏமாந்து பழகிய உழைக்கின்ற மக்கள் ஓட்டு வாங்கியே ஏமாற்றிப் பழகிய பாராளுமன்றக் கட்சிகள்
பாராளுமன்றத்தை எதிர்க்கின்ற மக்கள் கூட்டம் x பாராளுமன்றத்தை நம்புகின்ற மக்கள் கூட்டம்
மாற்று அரசியலை முன்வைக்கின்ற சமூகவிஞ்ஞானக் கட்சிகள் பாரளுமன்றத்தையே பாதுகாக்க விரும்பும் ஓட்டுக் கட்சிகள்

இப்படி சமூகத்திற்குள் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றனஇவற்றிலும் பல முரண்பாடுகள் விடுபட்டிருக்கலாம்.  ஆனால் இத்தகைய முரண்பாடுகளைக் கவனிப்பதிலிருந்தே சமூகத்தின் இயக்கத்தை உணர முடியும்.
சமூக இயக்கத்தை உணர முயல்வோம்எந்த முரண்பாடு சமூகத்தின் முதன்மை முரண்பாடாக இருக்கிறதுஉழைப்பில் இருக்கின்ற சமூக முரண்பாடே இதன் விடையாகும்அதாவது உழைப்பு என்ற உயர்ந்தப் பண்பே மற்ற மிருகங்களிலிருந்து மனிதர்களைத் தனித்து அடையாளப்படுத்தியது.. ஆனால் உழைப்பவர்கள் பலனின்றி வாடுவதும்உழைக்காதவர்கள் சொகுசாக வாழ்க்கை நடத்துவதும் சமூக எதார்த்தமாக இருக்கிறதுஎனவே நமது கணக்குப்படி உழைக்கின்ற மக்களுக்கும் உழைக்காமல் அனுபவிப்பவர்களுக்கும்  இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இருக்கிறது.
சமூகவிஞ்ஞானப் பயிற்சியில் மூழ்கியப் பின்பு இவைகளைப்பற்றி மாறுபட்ட கருத்துக்கள் தோன்ற வேண்டும்நம்மில் பலரும் இப்படிக் கேட்கலாம்அதெப்படிவேறுபாடுகளெல்லாம் முரண்பாடுகள் ஆகிவிடுமாபேருந்தின் இயக்கத்திற்கு டீசல் அடிப்படைடீசல் பேருந்தில் இருப்பதற்கும் தீர்வதற்கும் இடையிலான போராட்டமே பேருந்தை இயக்குகிறதுஇந்தப் போராட்டமே முதன்மை முரண்பாடாக இருக்க முடியும்சமூக இயக்கத்தைப் பொறுத்தவரை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இருக்க முடியும்அதாவது அரசு இயந்திரத்தை மக்கள் கைப்பற்றுவதற்கும் கைப்பற்றாமலிருப்பதற்கும் இடையிலான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இருக்க முடியும்.

            இப்படிப்பட்ட சிறப்பான விவாதங்கள் முன்வரலாம்உடனே இந்த எழுத்துக்கள் அனைத்தும் பட்டாம்பூச்சிகளாய் பறக்கும்உற்சாகத்தில் நமது பற்கள் எட்டுத் திசையிலும் சிரிக்கும்நம் சிந்தனைக்களம் ஆயிரம் வண்ண விளக்குகளின் மாளிகையாய் பிரகாசிக்கும்மாளிகை வெளிச்சத்தில் உண்மைகளோடு விளையாடும் மக்களின் அழகை என்னவென்று வியப்பதுவானமே சொக்கி நிற்கப்போகும் நாளதுஅந்த நல்ல நாளை எதிர்பார்த்து முதன்மை முரண்பாட்டிலிருந்து உள் x வெளி முரண்பாட்டிற்குச் செல்வோம்

விதி-1.1.2 உள்முரண்பாடும் x வெளிமுரண்பாடும் (சிறுகதை 1,2,)

No comments:

Post a Comment

கூலாங்கற்கள் உருட்டிய காலம்

  கூலாங்கற்கள் உருட்டிய காலம்     முனைவர் புதியவன்   வகுப்பில் அமைதி நிறைந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்கள் மாணவர்கள். அது படைப்பி...

அதிகம் பார்க்கப்பட்டவை