இலக்கிய அறிவியல் குறித்த மதிப்புரை
கவிஞர் ஜோ.இளம்பூரணி
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி
முன்னுரை
இக்கட்டுரையான
“இலக்கிய அறிவியல்”ல் எண்ணற்ற முறை இடம்பெற்றுள்ள சொல் “சமூகம்”. வாக்கியத்துக்கு வாக்கியம்
பன்முறை காண நேரிடும் இந்த இயல்பபான சொல்லே, இந்த படைப்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றது.
அதுமட்டுமின்றி, இவ்வுலக உருண்டையின் தொடக்கப் புள்ளியும் முற்றுப் புள்ளியும் ஒன்றாக
அமையுமா என்ற கேள்வியைப் படிப்போர் மனதின் ஆழத்திலிருந்து எழுப்புகின்றது. மேலும்,
தாய்தலைமை சமூகம் என்றும் தந்தையதிகார சமூகம் என்றும் சொல்லாடலின் வாயிலாகவே கருத்தைச்
செறிவுற அமைத்திருப்பதும் இரசிக்கும்படி அமைகின்றது.
நிறைகள்
இலக்கியத்தை
நிலைகளும், வகைகளமாய் பகுத்திருப்பது துவக்கத்திலேயே இலக்கியம் சாராதோரும் புரிந்துகொள்ளும்
விதமாய், எளிமையுடனும், எழிலுடனும் அமைந்துள்ளது. தரவரிசைப் பட்டியல் போல வாய்மொழி
இலக்கியம் துவங்கி சமூகளாவிய இலக்கியம் வரையிலான கட்டமைக்கப்பட்டுள்ளது பொருந்துகிறது.
சுற்றி
வளைக்கும் பார்வைகளாக வரையப்பட்டிருக்கும் தலைப்புகள் இருபதானாலும், எக்கருத்தும் மீண்டும்
மீண்டும் தோன்றி, ஆர்வமின்மை ஊட்டும் விதமாய் அமையாதிருப்பது, இப்படைப்பின் பெரும்பாலான
பலமாய் தோன்றியுள்ளது. கருத்துச் செறிவும், காந்தச் சொற்களும், தமிழழகை மீண்டும் மீண்டும்
ஒருகணம் பறைசாற்றுகின்றது.
மிக
கனமான சமூகக் கருத்துக்களைக் கையாளும் பொழுதில் ஒரு சமூகளாவிய எழுத்தாளருக்குத் தேவையான
துல்லியமும், துணிவும், எதார்த்த மனங்களைச் சென்று சேரும் சூத்திரமும், நன்கறிந்த நடை,
தங்கள் படைப்புதோறும் பரவிக்கிடப்பது, தனிச்சிறப்பு வகிக்கின்றது. மொழியின் களத்தை
சற்றே இளக்கி, அங்குமிங்குமாய் சில நுண்ணிய அறிவியல் சொற்களுக்கு, ஆங்கிலப் பொருள்
அளிக்க, தமிழாசிரியருக்கு தோன்றி இருப்பது, இன மொழி கடந்த சமூக நலன் சார்ந்த எழுத்துப்
பசியை விளக்குகின்றது. ஒளிவு மறைவின்மை மிக அருமை!
குறைகள்
10.முற்போக்கின் எழுச்சி – இதன் கீழுள்ள முதல் 4 வரிகள் மீண்டும் மீண்டும்
ஒரே கருத்தை உரைப்பதாக உள்ளது. ஒன்று அல்லது இரண்டு வரிகளை குறைத்துக் கொள்வது இன்னும்
கருத்தின் கூர்மையை எடுத்தியம்பும்.
18.தாய்தலைமை சமூகம் – சமூக விடுதலையும், பெண் விடுதலையும் உந்தப்படும்
பகுதிகளில், பெரியாரின் கருத்துக்களும் மேற்கோளாக காட்டப்பட்டிருந்தால், முழுமையாக
அமைந்திருக்கும்.
கடைசிப்பக்கம் – மொழி என்பது சமூகத்தின் தனித்த உறுப்பு அல்ல. மாறாக
நமது உடலில் ஓடுகின்ற இரத்தம் போன்றது. நல்ல கருத்து. ஆனாலும், இன்னும் புதிதான, அழுத்தமான
கருத்தாக இடம்பெறலாம்.
“கலையை வழிநடத்துதல் அறிவியலின் கடமை
அறிவியலுக்குச் சேவை செய்தல் கலையின் கடமை”
மாணவர்கள் மத்தியில் சரியாக ஆழமாக புரிந்துகொள்ளப் படாத பட்சத்தில்
இந்தக் கருத்து அடக்குமுறைக்கு வேரிடும் அபாயம் உள்ளது. இந்தக் கருத்தை வேறுவிதமாக
மாற்றி, பொருளில் சிதைவின்றி கூறும் திறனுள்ள எழுத்தாளரான தாங்கள் இதனை மாற்றிச் சொல்ல
இயலும்.
இந்நிறை குறைகளை சமூகத்திலும் சமூக நலம்விரும்பிகளில் ஒருத்தியுமாக
சமர்ப்பிக்கிறேன்.
தமிழ் விதைகள் துளிர்க்கும்போது
தானாய் நல்மழை பொழியும்!!!
No comments:
Post a Comment