விதி-1.3 பழைய நிலையை அழித்துக்கொண்டு புதிய நிலைக்கு மாறுதலும், புதிய
நிலையை அழித்துக்கொண்டு வேறொரு நிலைக்கு ஓடுதலும் இயங்குதலின் இலக்காதல். (சிறுகதை
5)
இப்பொழுது சுழல் வட்ட மாடிப்படிகளில் ஓடி விளையாடப்
போகிறோம். அதாவது, பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கும், புதிய நிலையிலிருந்து
வேறொரு நிலைக்கும் ஓடப்போகிறோம். இதுவே இயங்குதலின் இலக்காகும்.
பழைய நிலையை அழித்துக்கொண்டு புதிய நிலைக்கு மாற
வேண்டும். புதிய நிலையை அழித்துக்கொண்டு வேறொரு நிலைக்கு ஓட வேண்டும். இங்கு புதிய
நிலை பழைமையாவதும், வேறொரு நிலை புதியதாவதும் இயல்பாக உள்ளது.
அதாவது, குழந்தை சிறுவராகி சிறுவர் இளைஞராகி இளைஞர் பெரியவராகி
பெரியவர் முதியவராகி... இப்படி குழந்தையிலிருந்து முதியவர்வரை கணக்கிட்டுப் பார்ப்போம்.
இந்தக் கணக்கிடுதல் வழியாக நகர்தல் என்கின்ற இயங்குதலின் இலக்கை உணர முயல்வோம்.
குழந்தை என்ற பழைய நிலையை அழித்து
சிறுவர் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்
சிறுவர் பழைய நிலை ஆனதும்
இளைஞர் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்
இளைஞர் பழைய நிலை ஆனதும்
பெரியவர் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்
பெரியவர் பழைய நிலை ஆனதும்
முதியவர் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்...
இத்தகைய நகர்தலுக்கு இடையில் ஒருவகை மாற்றத்தின் முடிவு மற்றொருவகை
மாற்றத்திற்கு தொடக்கமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
சரி, சகமக்களின் வாழ்வில் ஒரு நிகழ்வை கவனியுங்கள். இலாபவெறி
பிடித்த நிறுவனங்களிடம் பெரிய இலஞ்சங்களை அரசு வாங்கிக்கொள்கிறது. மக்களின் விவசாய
நிலங்களையும், இயற்கை வளங்களையும்
இவைகளுக்குப் பறித்துக் கொடுக்கிறது. இதற்கு எதிரான மக்களின் பூகம்பம் சில இடங்களில்
அரசைச் சரியாகக் கவனித்திருக்கிறது. ஆனாலும் பல இடங்களில் மக்கள் வேதனைக்குரியவர்களாக
இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் மக்களின் நிலங்கள் இப்படி அபகரிக்கப்பட்டிருக்கிறது.
1600 ஏக்கர் விவசாய பூமியில் 35 ஊருணிகள் இருக்கின்றன.
பணப்பயறுகள் அதிகம் விளைகின்றன. நித்யகல்யாணி என்பது சிறப்பு வகைப் பயறு. 200 வேப்ப
மரங்கள் இருக்கின்றன. வானம் பார்த்த பூமி என்பதால் மக்களை எமாற்ற வசதியாகிவிட்டது.
இவை 15 வருடங்களாக மழையில்லாமல் தரிசாகிப்போன நிலங்களாம்!. கலெக்டரின் கையெழுத்து உறுதியளிக்கிறது.
எத்தனை பெட்டி இலஞ்சம் வாங்கினாரோ! நமக்கு கணக்குத் தெரியவில்லை. வடமாநிலங்களிலிருந்து
கொத்தடிமைகளாகச் சில குடும்பங்கள் வந்துள்ளன. உள்ளூர் மொழி தெரியாத இவர்கள் 40ரூபாய்
கூலிக்கு வேலை செய்துள்ளனர். இன்று இலாபவெறி பிடித்த நிறுவனத்தின் இராட்சச கம்பி வலைகள்
போட்டாயிற்று. மக்கள் கொதித்தெழுந்தார்கள். பல போராட்டங்களை நடத்தினார்கள்.
மனு கொடுக்கும் போராட்டம் – கோரிக்கைப்
போராட்டம் – ஆர்ப்பாட்டப்
போராட்டம் – ஊர்வலப்
போராட்டம் – முற்றுகைப்
போராட்டம் – சாலை
மறியல் போராட்டம்...
இவர்களின் எந்தப் போராட்டங்களையும் அரசு கண்டுகொள்ளவில்லை. சகமக்கள்
ஒன்றிணையாததால் அவர்களின் போராட்டத்திற்கு வலிமை எட்டவில்லை. நிறுவனம் அரசதிகார வலிமையைப்
பயன்படுத்தியும், மக்களின் தீராத வறுமையைப் பயன்படுத்தியும் நிலங்களை அபகரித்துவிட்டது.
ஆனாலும் உள்ளூர் இளைஞர்கள் விடுவதாக இல்லை. கல்லெறிப் போராட்டத்திற்குத் துணிந்துவிட்டதாகத்
தெரிய வருகிறது.
இந்த அநீதி ஆரம்பத்திலிருந்தே மக்களால் எதிர்க்கப்பட்டது.
வெறும் புலம்பல்களாகப் புதைந்து விடவில்லை. பல போராட்டங்களை நிகழ்த்தினார்கள். இவர்களின்
போராட்ட வடிவங்களிலிருந்து நகர்தல் என்கின்ற இயக்கத்தின் இலக்கை உணர முயல்வோம்.
மனுகொடுக்கும் போராட்டம் என்ற பழைய நிலையை அழித்து
கோரிக்கைப் போராட்டம் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்
கோரிக்கைப் போராட்டம் பழைய நிலை ஆனதும்
ஆர்ப்பாட்டப் போராட்டம் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்
ஆர்ப்பாட்டப் போராட்டம் பழைய நிலை ஆனதும்
ஊர்வலப் போராட்டம் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்
ஊர்வலப் போராட்டம் பழைய நிலை ஆனதும்
முற்றுகைப் போராட்டம் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்
முற்றுகைப் போராட்டம் பழைய நிலை ஆனதும்
சாலை மறியல் போராட்டம் என்ற புதிய நிலைக்கு ஓடுதல்...
· அரும்பாகி – மொட்டாகி – பூவாகி – காயாகி – கனியாகி...
· இரவாகி – நள்ளிரவாகி – அதிகாலையாகி - விடியலாகி – பகலாகி – நண்பகலாகி – மதியமாகி – மாலையாகி...
இப்படி எத்தனை ஆகிகளைப் பட்டியலிட்டாலும் அத்தனை ஆகிகளும் இயங்குதலின்
இலக்கால் மட்டுமே நகர்த்தப்படுகின்றன.
No comments:
Post a Comment