Monday, July 6, 2020

விதி-1.1.2 உள்முரண்பாடும் x வெளிமுரண்பாடும் (சிறுகதை 1,2,)


விதி-1.1.2 உள்முரண்பாடும் x வெளிமுரண்பாடும் (சிறுகதை 1,2,)

            அந்த அம்மாவுக்கு வயசு அறுபத்தெட்டுஅவரை கெழவி என்று அழைப்பார்கள்கெழவி டெங்கு காய்ச்சலில் படுத்திருந்தாள்கெழவியின் மகளுக்கு சில நாட்களாகவே முகம் செத்துவிட்டதுஅம்மா இறந்துவிடுவாளோஉச்சி முதல் பாதம் வரை பயத்தின் உருவமே அவளுக்குகெழவியின் இழப்பை அவளால் தாங்க முடியாதுமருத்துவச் செலவுக்கு துணிகிறாள்தொடர் வைத்தியம் செய்கிறாள்கெழவியின் கைகளில் ஊசிக்குழாய் வழியாக குளுக்கோஸ் ஏற்றப்படுகிறதுஉடல் குளுமையைச் சமாளிப்பதற்காக மின்விசிறி நிறுத்தப்படுகிறதுமிகவும் கவனிப்புக்குரிய முறையில் உணவும் மருந்தும் ஊட்டப்படுகிறதுஇரவிற்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டதுவிடிவதற்குள் கெழவி இறந்துவிட்டாள்மகள் எழுந்து பார்த்தாள்பொழுது விடிந்துவிட்டதுமனசு இருண்டுவிட்டது.
            கெழவியின் வாழ்க்கையிலிருந்து உள்xவெளி முரண்பாட்டை உணர முயல்வோம்கெழவியின் உடலில் உயிரணுக்களின் இயக்கத்தைக் கவனியுங்கள்புதிய உயிரணுக்கள் ஏராளமாகத் தோன்றுகின்றனபழைய உயிரணுக்கள் நிதானமாக இறக்கின்றனநோய்க்கு ஆளாகும்வரை கெழவியின் ஆரோக்கியம் இப்படித்தான் இருந்ததுஆனால் டெங்கு காய்ச்சல் பாதித்த பிறகு நிலைமை வேறுபுதிய உயிரணுக்கள் தோன்றுவது ஏராளமாக குறைந்ததுபழைய உயிரணுக்கள் ஏராளமாக இறந்தனஇவ்வாறு உயிரணுக்களில் நிகழ்கின்ற தோன்றுதலுக்கும் இறத்தலுக்கும் இடையிலான முரண்பாடே உள்முரண்பாடாக இருக்கிறதுகெழவியின் உடலுக்குள் நிகழ்கின்ற உள்முரண்பாடே அவளது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கிறதுவாழ்தலுக்குத் தேவையான உயிரணுக்களின் அளவை இழந்ததும் கெழவி இறந்துவிடுகிறாள்.
            கெழவியை மரணத்திலிருந்து காப்பதற்காக ஏராளமான மருந்துகள் கொடுக்கப்பட்டனதேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் முறையாக ஊட்டப்பட்டனஇவை கெழவியின் உயிரணுக்களை வலிமைப்படுத்துகின்றனஅவளது வாழ்வு நீடிப்பதற்கு ஊக்கம் தருகின்றனஆனால்பாதுகாப்பற்ற சுற்றுச்சூழலும்பொருத்தமற்ற தட்ப வெப்ப நிலையும்மாசு நிறைந்த சுவாசக் காற்றும் கோடிக்கணக்கில் உற்பத்தியாகும்  நோய் பரப்பும் கொசுக்களும் கெழவியின் உயிரணுக்களை பலவீனப்படுத்துகின்றனஅவளது மரணத்தை வேகப்படுத்கின்றன.
            வாழ்தலை நீடிப்பதற்கும் மரணத்தை விரைவுப்படுத்துவதற்கும் இடையிலான போராட்டம் இங்கு உணரப்படுகிறதுகெழவியின் உடலுக்கு வெளியிலிருந்து இந்த முரண்பாடுகள் செயல்படுகின்றனஇவையே வெளி முரண்பாடுகள்இவை உள்முரண்பாட்டின் மீது ஆளுமை செலுத்துகின்றனவாழ்வையும் சாவையும் தீர்மானிப்பதற்கு ஊக்கம் தருகின்றனஇப்படித்தான் மரணம் நிகழ்கிறது.
            பார்வையற்ற சிறுமிக்கு கெழவியின் கண்கள் பொருத்தப்பட்டு விட்டதுஅந்தச் சிறுமி என்ன அழகாக வேடிக்கை பார்க்கிறாள்மனசெல்லாம் மத்தாப்புஇறந்த உடலில் இறக்காத உயிரணுக்களை உணர முடிகிறதாஇறந்த கெழவியின் உயிருள்ள கண்களை சிறுமியிடம் பாருங்கள்ஆம்கெழவி முழுசாக இறக்கவில்லை.
            கெழவி வாழ்கிறாள் என்ற மகிழ்வோடு ஒரு சாதிய நிகழ்வை கவனிப்போம்ஓர் ஆதிக்கச் சாதியினர் குடும்பத்தில் ஓர் இறப்புசாவுப்பறை ஊரெல்லாம் அதிர்கிறதுஇறந்தவரின் ஊர்வலம் நிகழ்கிறதுஆதிக்கச்சாதி ஆண்கள் குடித்துவிட்டுக் களிப்புடன் ஆடுகிறார்கள்அய்யோ பாவம்அந்தப் பறை இசைக்கின்ற கலைஞர் படாதபாடுபடுகிறார்எத்தனை வசை மொழிகள்எத்தனை இழி சொற்கள்சிறுவர்களிடம் சிக்கிய நாயைப்போல பரிதவிக்கிறார்அந்தப் பறைக் கலைஞரின் குமுறலைக் கவனியுங்கள்ஆதிக்கச் சாதியரின் அடிாவடிப் பேச்சுகளுக்கு எதிராக விண்ணதிர முழங்கும் தலித் சாதியின் பேச்சைக் கவனியுங்கள்இழக்கப்படும் சுயமரியாதையால் கோபம் கொந்தளிக்கிறதுஇவர் எழுப்பும் ஆயிரம் வசைச் சொற்கள் பறையொலியாக விரிகின்றதுபறையைச் சுற்றி ஆடுகின்ற சாவு வீட்டுக்காரர்களுக்கு பறையின் மொழி தெரியாதுபறையொலியாக எழுகின்ற தங்களுக்கு எதிரான வசைச் சொற்களைச் சொரணைக் கெட்டு இரசிக்கிறார்கள்அவர்களது ஆட்டம் தொடர்கிறதுதலித்துக்களின் வரலாற்றுக் கோபம் விண்ணதிர முழங்கியதால் இசைப்பறை கிழிந்ததுஅவனுக்கு கோபம் அடங்கவில்லைவீடு சேர்ந்த பின்பும் அவனது நினைப்பு சாவு வீட்டிலேயே இருந்ததுஅவர்களின் கேவலமான நடத்தையை நினைத்து நினைத்து வருந்தினான்வீட்டுக்காரி வெடுக்கென்று வைத்தாள்நேர்த்தியாக சமைக்கப்பட்ட பன்றிக்கறிவிருப்பமின்றி வாயில் வைத்தான்ஆதிக்கச் சாதியரிடம் வாய்க்கு வாயாகப் பேச முடியாத அவனது கோபத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததுஉண்ண முடியாதபடி உணவில் உப்புவீட்டுக்காரியிடம் பாய்ந்தான்அவளும் விடவில்லைஇருவரும் சண்டையிட்டார்கள்தெருவெல்லாம் நாறியது அந்தச் சண்டைசாவு வீட்டார் ஏற்படுத்திய வேதனைகளை வீட்டுக்காரியிடம் இறக்கிவைத்தான்வீட்டுக்காரியின் வீக்கங்களில் தேங்கியிருந்தது அந்த வேதனை.
            இந்தச் சாதிய சமூகத்தின் நிகழ்விலிருந்தும் உள்xவெளி முரண்பாடுகளைக் கணக்கிட முயல்வோம்பறையர் என்ற தலித் சமூகத்திற்கு உள்ளேயே ஆண் சாதிக்கும் பெண் சாதிக்கும் இடையில் சண்டை நிகழ்கிறதுஆணையும் பெண்ணையும் சாதியாகக் குறிப்பிடுவது சரியாகுமா என்கிறீர்களாபிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது பார்ப்பனியரின் சாதியச் சிந்தனைபிறப்பால் ஆண்களை உயர்வாகவும்பெண்களைத் தாழ்வாகவும் கருதுகிறார்களேஇநதக் கேவலமான சிந்தனையை என்னவென்பீர்கள்சிறு வித்தியாசந்தான்அது பார்ப்பனியரின் சாதியச் சிந்தனைஇது பாலினத்தின் சாதியச் சிந்தனைஇது பறையர் சமூகத்திற்கு உள்ளேயே நிகழ்ந்திருக்கின்ற பாலினச் சாதியின் சண்டைஎனவே இது உள்முரண்பாடாக இருக்கிறது.

            பறையர் சாதிக்கு வெளியிலிருக்கிறது ஆதிக்கச் சாதிஆதிக்கச் சாதிக்கு வெளியிலிருக்கிறது பறையர் என்ற தலித் சமூகம்இரண்டிற்கும் இடையில் சண்டையுணர்வு வெளிப்படுகிறதுஇவை ஒன்றோடொன்று வெளியிலிருக்கின்ற இரண்டு சாதிகளின் முரண்பாடுஎனவே இது வெளிமுரண்பாடாக இருக்கிறதுஉள்xவெளி முரண்பாட்டிலிருந்து நட்புxபகை முரண்பாட்டிற்குச் செல்வோம்இது முரண்பாட்டின் மூன்றாம் தன்மை.


No comments:

Post a Comment

கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?

    கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?   புதியவன் முனைவர் கே.சிவக்குமார் SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்...

அதிகம் பார்க்கப்பட்டவை