Monday, July 6, 2020

கொம்பில்லாத காளைகள்


கொம்பில்லாத காளைகள்
புதியவன்
என் எதிரில் நீ
உன் எதிரில் நான்

என்நிலை உனக்கு
உன்நிலை எனக்கு

என் சூழலில் நீ
உன் சூழலில் நான்
நம் சூழலில்
எத்தனையோ
நீ நான் நம்மைப்போன்றே...

இருவர் மூக்கனாங்கயிறும்
இன்னொருவன் கையில்

அழகான கண்ணாடிப் பாத்திரத்தில் பூட்டப்பட்டுள்ளது
நம் உரிமைகளும்உணர்வுகளும் சிந்தனையும் சாவியும்

இன்னும் எத்தனைக்காலம்
என் மீதும்
உன் மீதும்
 நம் கோபங்களும்வெறியும்
மாறிமாறி மோதுவது, வெட்டுவதுகுத்துவது?

பனித்துகள்களாய் இருக்கும்வரை
நம் பாதைகளும்பயணங்களும்
நமக்கானது அல்ல

இனியாவது!
'இருவர்'களும் சந்திப்போம்
தெருமுனையில்

எதிரிகளாய் அல்ல
எதிர்ப்பவர்களாய்...

No comments:

Post a Comment

நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை