Sunday, April 30, 2023

ஒரே மருந்து

 ஒரே மருந்து

புதியவன்


கொக்கரிக்க மறந்து 

கறி சட்டியில் கொதிக்கிறாள் தாய்


செல்லப்பிள்ளைகளோ

ஓடு உடைத்து உலகை காணும் கனவுகளுடன்

ஆம்லேட்டுகளாக 

மடிந்து போயின

மக்களின் தலைமுறைகள் போல சத்தம் இல்லாமல் கதை முடிகின்றன


உணவு விலை அடுக்குமாடி ஏறிட

வயிற்று பள்ளத்தாக்கு

ஒருவேளை உணவை மறுக்கிறதா


துளி பாலில் 

லிட்டர் வெந்நீர் 

தேநீராக கொதிக்கிறதா


பெட்ரோல் விலை 

வானம் தொட்டிட

பயணங்கள் 

இறகிழந்த ஈசலானதா


கருகும் வாழ்வை 

கண்ணெட்டாதபடி மறைக்க

கண்கூசும் வெளிச்சம் பளீரிடுகின்றதா


எவன் வீட்டு மல்லிகை

எவனுக்கோ மணப்பதுபோல

சேமித்த பணம் எவனெவனுக்கோ

டிஜிட்டல் எண்களாக பறிபோகிறதா


மக்கள் ஈக்களாக மொய்த்திருந்தும்

மனம் 

கருங்காட்டின் அகதியாக கலங்குகிறதா

எவராகினும் லொள்ளென்று வெடிக்கின்றதா


கற்க பணம்

சுவாசிக்க பணம்

தாகம் தணிய பணம்

நோய் நீங்க பணம்

மகிழ்ச்சி நிம்மதி பணம்

இல்லையென்றால் நீ பிணம்

பொட்டில் அடித்தாற்போல்

உலகம் சொல்கிறதா


வலியின்றி சாக மருந்திருந்தால்

வயிறாற அருந்த 

மனம் ஏங்குகிறதா


தலைமுறைகளை வீழ்த்தும் பெருந்தொற்றின் அறிகுறிகள்


பூணூல் இழுத்து 

முதுகு சொறியும் முதலாளிய கிருமிகள்


குருதி சுவாசம் சிந்தனை

முற்றிலும் பரவிவிட்டன


ஒரே மருந்து

மக்கள் அதிகாரம் பழகு

தஞ்சை புத்தகத் திருவிழா - 2026

 தஞ்சை புத்தகத் திருவிழா - 2026 சிறப்புரை- வீட்டில் வாசிப்பும் சமுகத்தில் மாற்றமும் நாள் - 05.09.2026

அதிகம் பார்க்கப்பட்டவை