Monday, July 6, 2020

என் செல்லக் காதலி



என் செல்லக் காதலி
புதியவன்

இரவு வானத்தை கோபத்துடன் முறைத்துக்கொண்டு இருக்கிறேன்
அதற்கு எத்தனை திமிர் தெரியுமா?
அத்தனைக் கண்களாலும் உன் அழகைக் கண்ணடித்துக் கொண்டிருக்கிறது!
என்னிடம் நீ பூக்கும் அதே புன்னகையை வானத்திடமும் பூக்கிறாயே என வருந்துகிறேன்…
ஆயினும் உன் மீது நான் வளர்த்தக் காதலை என்னவென்பது!
நட்சத்திரக் கண்களின் எண்ணிக்கையைவிட அதிகம்
என் வருத்தத்தைவிட உன் விருப்பத்தையே மிகவும் மதிக்கிறேன்…
அந்தக் கந்தர்வ வானம்
கண்ணடிப்பதையும் கட்டியணைப்பதையும் முத்தமிடுவதையும்
நீ விரும்பி மகிழ்கிறாய் எனில்
அது வானமானாலும் சரி
எவனாயானாலும் சரி
குழந்தைகளின் அன்பை அவர்களுக்கும் கொடுப்பேன்…
என் மீதான உன் காதல் நிலையானது
நம் இணையாளர் வாழ்க்கை சலிக்காதது!

வெளிவந்த விபரம்

புதிய கோடாங்கி, மே 2016, (பக் - 52)

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை