Monday, July 6, 2020

படிச்சு கிழிச்சு படிச்சு கிழிச்சு நாள் போச்சு




டப்பிங்பாடல் - 2

நடிகர்கமல்ஹாசன்நடித்துபுகழ்பெற்றசலங்கைஒலிபடத்தில்தகிடததினதகிடததினதந்தானா….  என்றமெட்டில்பாடலாம்!
அறிவன்புன் புதியவன்


படிச்சு கிழிச்சு படிச்சு கிழிச்சு நாள் போச்சு
பணிக்கு திரிஞ்சு பணிக்கு திரிஞ்சு வீணாச்சு
மனதிற்குள் ஆயிரம் சகிப்புகள் என்பேனா
விடுதலைக் கனவுகள் இருப்பதைச் சொல்வேனா
அறிவும் அழகும் ஒன்று சேரும் (படிச்சு..2)

கல்வி வெற்று வணிகம்
நம் அறிவுக்கில்லை தொடக்கம்
அட வேலை தேடும் தருணம்
நம் வாழ்க்கை பாடம் தொடங்கும் (2)

மனதில் ஆசை கனவுகள் கொதியாய் கொதிக்கும்
ஏழ்மை வீட்டில் நாட்டில் தினமும் புலம்பும்
மனதில் ஆசை கனவுகள் கொதியாய் கொதிக்கும்
ஏழ்மை வீட்டில் நாட்டில் லலலா லலலா

எட்டு லட்சம் படிச்ச படிப்பு
எட்டு ஆயிரம் பணியின் கிடைப்பு
குடும்பம் சுமக்கும் தனிமை வாழ்க்கை தொல்லை!

படிச்சு கிழிச்சு படிச்சு கிழிச்சு நாள் போச்சு
பணிக்கு திரிஞ்சு பணிக்கு திரிஞ்சு  வீணாச்சு
மனதிற்குள் ஆயிரம் சகிப்புகள் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
விடுதலைக் கனவுகள் இருப்பதை ஆ… ஆ… ஆ…
அறிவும் அழகும் ஒன்று சேரும்
படிச்சு கிழிச்சு படிச்சு கிழிச்சு நாள் போச்சு
பணிக்கு திரிஞ்சு பணிக்கு திரிஞ்சு வீணாச்சு

தகவல் அறிவு குவித்து
நாம் முடித்ததென்ன படிப்பு
சமூக அறிவு நசிந்து
நாம் வாழ்ந்த நாட்கள் பழுது (2)

இது ஓர்அடிமை நாடகமே
விடுதலை அறிவை பெறுவோம் நாமே (2)

பாதை உண்டு போதை இல்லை
காதல் உண்டு சாதல் இல்லை
மனித படைக்கு பொன்னுலகம் எல்லை!
அ…. ஆ… அ… ஆ…
வெளிவந்த விபரம்


புதிய கோடாங்கி, ஏப்ரல் 2016. (பக் 10)

காணொளி கருத்தாடல்

      சலங்கை ஒலி படத்திலிருந்து தகிடததிமி.. - https://www.youtube.com/watch?v=dnUHuSvcr4E&list=UUPganaUFzREwPONNzjFG5Og&index=9


No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை