Sunday, July 5, 2020

இணையர் உடன்படிக்கை


                             


வாழ்வைப் புதுப்பித்தலுக்கான இணையர் உடன்படிக்கை

இணையர்கள் சௌந்தர்யா & சிவக்குமார் (புதியவன்)
                                                       நாள் : 28.12.2017 வியாழன்
இணையர்களாகிய நாங்கள் எமது குடும்ப பாரம்பரிய இந்து சாதி முறைக்கு உட்பட்டு பிப்ரவரி 02, 2017 ல் திருமணம் செய்துவைக்கப்பட்டோம். இனி எங்கள் வாழ்வை சமூகவிஞ்ஞானத்தால் மேன்மையுறும் இணையர் வாழ்வாக புதுப்பித்துக்கொள்ள முன்வருகிறோம்.

            பெண்களை இழிவானவர்களாகப் போதிக்கின்ற கடவுள் மதச் சிந்தனைகளை எதிர்த்து வாழ முயல்கிறோம். குறிப்பாக சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் இழிவானவைகளாகக் கருதுகின்ற இந்து சாதி மதத்தை எதிர்த்து வாழும் முயற்சிக்கு முன்வருகிறோம்.
            சரியாகச் சொல்வதென்றால் ஆணாதிக்கத்திற்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதிவெறிக்கு எதிராக, மதவெறிக்கு எதிராக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, அரச பயங்கரவாதத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக, ஒட்டுமொத்த சமூக மேன்மைக்கு ஆதரவாக, சமூக அக்கறையுடன் வாழ்வதற்காக எங்களது இணையர் வாழ்வை சமூகவிஞ்ஞானப் பண்பாட்டில் இணைத்துக்கொண்டு வாழ்வதற்கு முன்வருகிறோம்.
            நாங்கள் இருவரும் நல்ல அறிவார்ந்த நண்பர்களாகவும், அன்பு நிறைந்த காதலராகவும் ஒன்றுபட்டு கொள்கை மாறாமல் வாழ்வோம்.
            பிரிந்து செல்வதற்கான ஜனநாயக உரிமைக்கு தேவை ஏற்படாதபடி மேன்மையுற வாழ்வோம்.
            ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொண்டும் உதவி செய்துகொண்டும் சகல வேலைகளையும் வசதி வாய்ப்புகளையும் துன்ப துயரங்களையும் மனதாரப் பகிர்ந்துகொண்டு நேர்மையுடன் வாழ்வோம்.
            பணத்தால் மதிக்கும் உறவுகளை உடைத்துக்கொண்டும், குணத்தாலும் சமூக மேன்மையாலும் மதிக்கும் உறவுகளை உயர்த்திக்கொண்டும் வாழ்வோம்.
            சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்க்கும்படி எங்கள் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ள முன்வருகிறோம்...

சுய விருப்பத்துடன்
சௌந்தர்யா & சிவக்குமார் (புதியவன்)

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை