Saturday, May 23, 2020

முன்னுரை


ஆய்வு முன்னுரை

முன்னுரை:
காவல்கோட்டம்’ சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த நாவலே ஆய்வுக்களமாக அமைகிறது. காவல் கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்’ இது ஆய்வின் தலைப்பு. சொத்துடைமை சமூகத்தில் எல்லாமே அரசியல்தான். அரசியல் இல்லாமல் எதுவும் இருக்கமுடியாது. மனிதர்களின் அத்தனை வெளிப்பாடுகளும் பண்பாடுதான். ஆய்வின் தலைப்பு சாதியப் பண்பாடுசமயப்பண்பாடுபாலினப்பண்பாடு இவற்றை முதன்மைப்படுத்தி மூன்று இயல்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை
1.    காவல் கோட்டம் நாவலில் பாலின அரசியல்
2.    காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல்
3.    காவல் கோட்டம் நாவலில் சமய அரசியல்
முன்னுரைமுடிவுரைநன்றியுரை எல்லாம் இயல்களுள் அடங்கா.

ஆய்வுப் பொருள் :
           எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்து கொண்டிருக்க முடியாது. ஆனால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்கின்ற ஆர்வமும,; விருப்பமும் எல்லோருக்கும் அவசியம். முடிவெடுத்து செயல்படுகின்ற உணர்வு மிக்க வீரர்களுக்கு இது அடிப்படை என்பதில் சந்தேகமற்றவன்நான். சு.வெங்கடேசன் அவர்களை எனக்கு இதற்கு முன் தெரியாது. சிக்கலின் முடிச்சவிழ்க்கும் வேலை போன்றது ஆய்வு. இந்த உண்மையை நானும் உணர்ந்திருக்கவில்லை. பெரும்பாலான ஆய்வு மாணவர்களைப் போல சிக்கலில்லாத தலைப்பைத் தேடினேன். ஏதாவது நாவலை எடுத்துக் கொள்ள விரும்பினேன். மதிப்பிற்குரிய பேராசிரியர் என் விருப்பத்தை உணர்ந்து குறிப்பிட்டிருந்த நாவல்களுள் காவல்கோட்டமும் ஒன்று. இலக்கிய விமர்சகர்களின் இன்றைய காரசாரமான பேச்சுக்களுள் அடிக்கடி அடிபடுகின்ற பெயர் காவல்கோட்டம்’. இந்த நாவலையே தேர்வு செய்யலாமேகாவல்கோட்டத்தில் கண் வைத்தேன். ஆயிரம் பக்கத்தை வாசிப்பதா! என்னால் முடியுமாஎன்ற பயம். என் அச்சத்தை அகற்றி வாசிக்கத்தான் வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்தியது ஓர் விமர்சனம். விமர்சனம் என்ற பெயரில் ஓர் அபத்தம் காவல்கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’. இந்த அபத்தத்துக்குச் சொந்தக்காரர் எஸ்.ராமகிரு~;ணன் என்ற சக எழுத்தாளர். இவரையும் இதற்கு முன் தெரியாது. இவரது விமர்சனமே இரண்டு எழுத்தாளர்களையும் எனக்கு உணர்த்தியது. காவல்கோட்டம் நாவலையே தேர்ந்தெடுக்கவும் தூண்டியது. காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்’ என்ற தலைப்பு மலர்ந்தது.

ஆய்வுநோக்கம்:
காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் வெளிப்படுகின்ற முறையைப்பற்றி விளக்குவதும் ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் பண்பாட்டு அரசியலை விளக்குவதும்இ காவல்கோட்டம் கதை நிகழும் காலக்கட்டங்களில் ஆண்பெண் பாலினங்களுக்கு இடையிலானசமயங்களுக்கு இடையிலானசாதிகளுக்கு இடையிலான முரண்பாடு பற்றிய சமூக இயங்கியலை விளக்குவதும் ஆய்வின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வுஎல்லை:
      ‘காவல்கோட்டம்’ இந்த நாவல் சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்டு, 2008ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த நாவலுடைய பனுவல் மட்டுமே ஆய்வின் எல்லையாக அமைகிறது.
ஆய்வுக் கட்டமைப்பு:
 ‘காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்’ என்ற இத்தலைப்பின் கீழ் முன்னுரைமுடிவுரை நீங்கலாக மூன்று இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. காவல் கோட்டம் நாவலில் பாலின அரசியல்
2. காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல்
3. காவல் கோட்டம் நாவலில் சமய அரசியல்

பாலினம்’ இது பெண் திருநங்கை ஆண் ஆகிய முரண்பட்ட மூன்று இனத்தையும் பிரதிபலிக்கின்ற சொல். பெண்கள் ஆணுக்குள் அடங்குவர்அதிகாரம் ஆணுக்கு மட்டுமே’ இது ஆணாதிக்க சிந்தனை. ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள்அதிகாரம் பெண்களுக்கும் உரியது’ இது பெண்ணிய சிந்தனை. வக்கிரமும் திமிரும் நிறைந்த அடக்குமுறையின் சின்னம் ஆணாதிக்கம்’. ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையின் குரல் பெண்ணிய சிந்தனை’. இரண்டு சிந்தனைகளும் ஒன்றுக்கொன்று எதிரானது. மூர்க்கமாக சண்டையிடும் தன்மைக்குரியது. இவைகளின் சண்டை நாவலுக்குள்ளும் இருக்கிறது. இதற்கான மேடையாகவும் நாவல் அமைந்திருக்கிறது. இதை விளக்குகின்றது இயல் ஒன்று.

சாதியம்’ இந்தக் குட்டிச்சாத்தானைப் பெற்றுப் போட்டது நிலப்பிரபுத்துவம். இன்னும் கட்டியாகிறது. சமூகத்தில் கணக்கிறது. இதன் இதயத்துடிப்பை நிறுத்துவது எப்படிஇதன் நாடி நரம்புகளை அறுத்தெரிவது எப்படிஇப்படி இடைவிடாமல் சிந்திக்கும் சமூகமாற்ற வீரர்களின் முன் மலையைப் போல உயர்ந்து பயங்கரமாக நிற்கிறது சாதியம்’. இன்றைய ஏகாதிபத்திய சூழல் இன்னும் கரடுமுரடாக்குகிறதுசாதியத்தின் கரங்களை. நாவலாசிரியரும் ஒரு சமூக மாற்ற வீரர். இத்தகைய நிலைமைகளிலும் சாதியைக் கட்டுக்கட்டாக பதிவு செய்திருக்கிறார்ஏன்? ‘சாதியம்’ கதை நிகழும் காலத்தை விளக்க இயல்பாக பதிவு பெற்றுள்ளதாநாவலாசிரியரின் சாதியச் சார்பு எங்காவது வெளிப்படுகிறதாசமூகமாற்றப் போர்வைக்குள் இருந்து சாதிச் சனியனுக்கு ஆதரவு தருகிறாராசாதியச் சிந்தனைகளோடு சண்டையிட சிறு களமாகவாவது நாவலைப் பயன்படுத்தியிருக்கிறாராஆசிரியரின் நோக்கம் என்னஇதை விளக்குகிறது இயல் இரண்டு.

சமயம்’ இது கடவுள் பற்றிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது.  கடவுள் இருக்கிறாரோ இலலையோஇன்றும் மக்களால் பயன்படுத்தப்படுகிறார். விஞ்ஞான உணர்வு வளர்க்கப்படாத மக்களின் இன்றைய வாழ்நிலையிலும் கடவுள் பற்றிய சிந்தனை ஒருவகைத் தேவையாக இருக்கிறது. இத்தகைய நிலைமையில் காவல்கோட்டம் நாவலுள் பல்வேறு சமயங்கள் பல சமயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  சமயத்திற்கான சரியான வரையறை ஏதுமில்லாமல் நானும் சமயம்தான்” என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட இந்து சமயத்தோடு இஸ்;லாமிய சமயம் மோத வைக்கப்பட்டுள்ளது. சைவ வைணவ சமயத்தின் நெருக்கம் மற்றும் விரிசல்களை அளந்திருக்கிறது. கிறித்தவ நிறுவனங்களின் மனித நேய வேலைகளை முதன்மைப்படுத்தி இருக்கிறது. சமண சமயத்தைச் சின்னதாகச் செதுக்கி இருக்கிறது. நாட்டுப்புறச் சமயத்தின் வீரத்தை வெளிக்காட்டியிருக்கிறது. ஆசிரியரின் இத்தகைய பதிவுகள் இந்த இயலில் விவரிக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறசமயத்திற்கும்நிறுவனச் சமயத்திற்கும் என்ன வேறுபாடுஇஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பெற்றெடுத்த இந்து பயங்கரவாதம் வலிமை பெற்று வருகின்ற இன்றைய சூழலில் நாவலின் விளைவு என்னசமயம் பற்றிய இரண்டு வர்க்கப் பார்வை என்னசிறு சிதறலாகவாவது சமணத்தைப் பதிவு செய்திருக்கும் ஆசிரியரின் நோக்கம் என்னஇதை விளக்குகிறது இயல் மூன்று.


No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை