Saturday, May 23, 2020

காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல் 1


                                                     இயல்2
     காவல் கோட்டம் நாவலில் சாதிய அரசியல்    

மாலிக்காப்பூரின் படையெடுப்பின் விளைவுதுக்ளக்கின் கையில் மதுரைகாலம் 1328. அடுத்தடுத்த ஏழுசுல்தான்களின் ஆட்சி. மதுரையின் கடைசி சுல்தான் அலாவுதின் சிக்கந்தர்.  குமாரகம்பணனின் படையெடுப்போடு மதுரையில் இஸ்லாமியர் ஆட்சி இறுதி பெற்றது. மதுரையில் நாற்பத்திமூன்று ஆண்டுகள் சுல்தான்கள் நீடித்துள்ளனர். கம்பணனின் படை முற்றுகைக்குள் மதுரை குறுகியிருந்தது. காலம் 1371. 

யானைகுதிரைகாலாட்படையென திசைக்குத்திசை படை. படைக்குப்படை தலைமை. பொறுப்பான தளபதி. உறுதியான ராணி. நிகரான ராஜா. படைப்பிரிவுகளை விவரிக்கும் போதே சாதிப்பெயரையும் குறிப்பிட்டே வருகிறார்நாவலாசிரியர்.
          செலகொல்ல லட்சுமய்யாநேதிவாரி ஒபுலுவின் குதிரைப்படைக்கும் ஜடாதாரி கங்கையாவின் யானைப்படைக்கும் தலைவர். காலாட்படையின் தலைவர் கொமனால் நரகிரி. முந்நூற்றுவர் பெண்கள் படைக்குத்தலைவர் நலகாவுலசிவக்கா. பெதவீரலு வெங்கடாத்திரிசக்கிலியர்களின் கோசாங்கியர் அணிக்குத்தலைவர். ரம்பாவுலகேசவன்ஆறாயிரம் குதிரைகளுக்;குத்தலைவர். அதனூர் ஒபண்ணாமூவாயிரம் மாதிக வில்லாளிகளுக்குத் தலைமை. பன்னீராயிரம் காலாள் வீரர்களுக்குத் தலைவர்தகுசில்ல ரெக்கிரபுரி. அச்சுதவாருபுல்லாவுலவாரு,  பந்துமுலவாரு,  சூர்ணவாரு போன்ற நாற்பத்தியிரண்டு குறுங்குலங்களும் களத்தில் நிற்கின்றன.

இந்த நாற்பத்தியிரண்டும்சில்லவாரு என்ற தொன்னூற்றாறு குறுங்;குலங்களை உள்ளடக்கிய பிரிவில் அடங்கும். சில்லவாரு படையின் தலைவர் சில்லநரசய்யா. காலாட்படையின் நாற்பத்தியிரண்டு தலைவருள் இருவர் புகழ் பெற்றவர்கள.அவர்கள் மருலபின்னமன்ராகுடிமல்லய்யா. செஞ்சு வேடர்களில் ஆயிரம் வில்லாளிகளை அழைத்து வந்தவர் கரிவரதபெத்தய்யா. வல்லக்கவாரு குலம்வீரத்திற்குப் பேர் போன படை. இதன் தலைவர் தரிகோடிபசவய்யா.

அனைத்து படைகளையும் வழிநடத்தும் தளபதியும் ஒரு வல்லக்கவாரு. அவன் பெயர் பொய்யாவுல மங்கன். கிணறுஅகழி இவற்றை நோட்டமிட்டுப் போருக்குச் சாதகம் செய்தவர்கள் உப்பலவாரு குலம். கிணறு வெட்டுவதும்கல் உடைப்பதுமே இவர்களது பாரம்பரியத்தொழில். அத்தனை ஆருகளையும் உள்ளடக்கிய பெரியவாருதான் கொல்லவாருகுலம்.

போர் தொடங்கியதும் எல்லம்மன் வழிபாடு. எல்லம்மனின் வஞ்சி மாலையைச் சூடப் போவது யார்ரேணுகை தெய்வத்தின் வாளை உருவப் போவது யார்தன்னையே பலியிடப் போகும் வீரர் யார்அனைத்து வீரர்களும் ஓடுகிறார்கள்எல்லம்மனை நோக்கி. இது வெறும் சடங்கல்லபோட்டி. வல்லக்கவாருக்கும்சில்லவாருக்கும் கௌரவப் பிரச்சினை. யார்?... யார்?... வெற்றியைக் கணித்து விட்ட உறுதியுடன் பேரிரைச்சலுக்கும் இடையில் ‘பாலமவாரு’ என்ற சொல் ஒலித்துக் கொண்டிருந்தது.

முந்நூற்றுவர் பெண் வீராங்கனைகளுள் ஒரு வீரர்ஸ்ரீஜானகிவாரிகனகநூகா. அனைத்து ஓட்டக்காரர்களையும் உதறிக் கொண்டு முன்னே பாய்ந்தாள். எல்லம்மனின் அருகில் அவள். வஞ்சி மாலை அவள் கழுத்தில். ரேணுகையின் சிவப்புக்கச்சையின் குறுவாள் அவள் கையில். தன் கழுத்தைத் தானே அறுத்துப்பலியானாள். இவள் குலம்பாலமவாரு.
          
கங்கையம்மன் வழிபாடுஎல்லம்மனின் வழிபாட்டுக்கு முன்னதாக நடைபெறுவது. இவ்வழிபாட்டில் குலங்களின் வரலாறு பாடப்படும். பன்னிரு கைகளை விரித்துக்கொண்டு கங்கை நின்றாள். ஆவு என்றால் பசு. தேவியின் முன்னால் ஒவ்வொரு குலத்திற்கான ஆவும் ஒவ்வொன்றாக வரவழைக்கப்பட்டு ஜென்டடுவாருவால் குலவரலாறு பாடப்படும். ஜென்டடுவாரு என்பவன் வரலாற்றுப்பாடகன். முதலில் வந்தது கொல்லவாருகளின் பொலி ஆவு. அடுத்து வர வேண்டிய ஆவு கொல்லவாருகளின் மூத்த குடியினரான சக்கிலியர்களுடையது. ஆனால்அவர்களுக்கு ஏது ஆவு

ஆதியில் ஒருமுறை ஆவையே கொன்று தின்று விட்டார்களாம். அதனால் ஆவுடன் கூடிய வாழ்க்கை இவர்களுக்குக் கிடையாது. ஆனாலும் சடங்குகளில் முதல்மரியாதை இவர்களுக்குத்தான். இவர்களுக்காக பசவண்ண ஆவு வந்தது. அடுத்தடுத்து ஒவ்வொன்றாக இச்சடங்கு அனைத்து குலத்திற்கும் நிகழ்ந்தது. அத்துடன் கங்கை வழிபாடும் முடிவுற்றது. இவ்வழிபாட்டில் சக்கிலியர் குலம் பற்றிய தொன்மத்தை நாவலாசிரியர் கூறியுள்ளார்.

          நாகமரின் முழுப்பெயர்தட்சிண மண்டலேஸ்வரர் கொட்டியம் நாகம நாயக்கர். கொல்லவாரு  குலத்தைச் சேர்ந்தவர். விஜய நகரப் பேரரசின் பல்வேறு ஆளுநர்களுள் இவரும் ஒருவர். இராணுவ நடவடிக்கைக்குப் பொறுப்பாகிய இவர் அரசரின் நண்பருமாவார். வீரகதைப்பாடல்களின் நாயகன் விஷ்வநாதன்நாகமருக்கு மகன்அரசனுக்கு மெய்க்காப்பாளன்.

விஜயநகர அரசன் கிருஷ்ணதேவராயர்காப்புபலிஜர் குலம். அரச கட்டளைக்கு எதிராக நடந்து கொண்ட நாகமரைச் சிறைபிடிக்க உத்தரவிட்டார். ராயரின் உத்தரவு அவையை நடுங்க வைத்தது. ரோசப்பட்ட வி~;வநாதன் முந்திக் கொண்டான். தந்தையைச் சிறைபிடிக்க படையுடன் விரைந்தான். சகரம் தம்மைய நாயக்கர் விஷ்வநாதனின் தூதுவன்.நாகமரை நடுக்கத்துடன் சந்தித்தான். விஷயத்தை கேள்விப்பட்ட நாகமர் தன் மிடுக்கான குரலில் பேசினார். அன்பு நிறைந்த அடக்கத்துடன் தம்மையா செவிமடுத்தார். நாகமரின் பேச்சில் வெளிப்படும் விஷயம் இதுதான். காப்புபலிஜர்கள் மீதான கொல்லவாருகளின் வரலாற்றுக் கோபம். முட்டிக் கொள்ளும் இவ்விரண்டு குலமும் நாயக்கர் குலம் என்பதை மறக்க வேண்டாம்.

விஜயநகருக்கு முன்பிருந்தே போராட்ட வரலாறுடையவர்கள் கொல்லவாருகள். ஏறத்தாழ ஐநூறு வருடங்களாக இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். விஜயநகர வரலாற்றில் காப்புபலிஜர்களின் போராட்ட வரலாறு அதிக பட்சம் அறுபது ஆண்டுகளே. இதை விளக்குவதற்காக ராயரின்  தாத்தா கதையையும் சொல்லுகிறார்நாகமர். ஆயினும்விஜயநகரின் நிலையும்நாகமரின் ஆதங்கமும் இதுதான். அரசனும்சேனாதிபதிகளும்ஆளுநர்களும்அதிபதிகளும் காப்புபலிஜர்களே. முன்களத்தில் போராடி மடியும் படைத்தலைவர்களும்வீரர்களும் மட்டும் கொல்லவாருகள். நாகமரின் விருப்பமெல்லாம் கொல்லவாருகளின் விஜயநகரத்தைப் படைக்க வேண்டும்.

          மகன் என்பதால் சரணடைந்து விட்டார்நாகமர். விஜயநகரம் விரைந்தது விஷ்வாவின் படை. நாகமர்மறுநாள் அவையில் நிற்பார்ஒரு குற்றவாளியாக. அரண்மனையே அரண்டு கிடந்தது. அதற்கு அவசியம் இல்லாமல் செய்தாள் வீரநாகம்மா. இவள்விஷ்வாவிற்கு துணைவிராயருக்குச் சொந்தக்காரிநாகமருக்கு மருமகள். செல்லி  என்ற செல்லப்பெயரும் உண்டு. விஷ்வா விஜயநகரம் நுழைவதற்குள் விரைந்து சென்றாள் நாகம்மா. ராயரைச் சந்தித்து அடம்பிடித்தாள். உறவுக்காரி உரிமையாகப் பேசியதில் ராயர் அடங்கிப்போனார். விளைவுஅதிகாலை நேரம் ஆற்றங்கரையில் சந்தித்தனர்ராயரும் நாகமரும்.

நாகமரை நலம் விசாரித்தார் ராயர். நாகமரின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆதங்கம் கொட்டியது. அதை அள்ளிப்போட முயற்சித்தார் ராயர். காப்புபலிஜர்களின் வரலாறு விஜயநகருக்கு வலிமை சேர்த்துள்ளது. வரலாறு இதை மறுக்காது. அதனால்தான்கோவாவிலிருந்து கன்னியாகுமரி வரை விஜயநகரம் பரந்திருக்கிறது. இல்லையென்றால் தேவகிரி அகமது நகரானது போல முகமதியர் நாடாக இருந்திருக்கும்விஜயநகரம். கொல்லவாருகளுக்கான தனிநியாயம் அர்த்தமற்றது என்பதை நாகமருக்கு உணர்த்த எவ்வளவோ முயற்சித்தார். நாகமரும் முரண்டுபிடிப்பதை விடவில்லை. நிலைதடுமாறிய ராயரும் விடுவதாக இல்லை. கேசவாஅவர் தலையை எடு! என்று ஆணையிட்டார். ஏதும் செய்யமுடியாமல் பதறி நின்றான் கேசவன்.

 இங்கும் முந்திக் கொண்டான் விஷ்வநாதன். வாளை ஓங்கியவனை சுற்றியிருந்தவர்கள் தடுத்தார்கள். கையைப்பற்றிக்கொண்ட செல்லியிடம் முகம் புதைத்துக் குறுகினான் விஷ்வா. கிடைத்த அவகாசத்தில் ராயரின் முடிவும் மாறியது. ராயர்நாகமரை மன்னித்தார்வி~;வாவை அரவ நாட்டின் அரசனாக அறிவித்தார். ராயரும் நாகமரும் ஒருவருக்கொருவர் மன்னிப்புக்கேட்டு மன்றாடினார்கள். அரசு பொறுப்புகளிலிருந்;து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்நாகமர்.

நாகமரின் கொல்லவாருக்கான விஜயநகரக் கொள்கையைக் கைவிடச்செய்தது எதுவிஷ்வாவுக்கு கிடைத்த அரவநாடாக இருக்கலாம். விஜய நகர அதிகாரத்தைகாப்புபலிஜர் குலமே நீட்டிக்குமாகொல்லவாருகுலம் கைப்பற்றுமாஎன்ற போட்டி சமரசத்தில் முடிந்துள்ளது.  உடைமைச் சமூகத்தில் எல்லாமே சொத்துதான். மண்ணும்பொன்னும்பெண்ணும் இவற்றின் மீதான அதிகாரமும் அனைத்தும் சொத்துக்;களே. இதற்காகத்தான் போட்டிகளும்சண்டைகளும். சொத்துடைமைச் சமூகத்தில் அதிகாரத்திற்கான போட்டியில் சமரசத்தின் பங்கு என்னஎதிர்ப்பவன் தோப்பு கேட்கிறான். அதிகாரத்தில் உள்ளவன் பழத்தைக் கொடுத்து சமரசத்தை வலியுறுத்துகிறான். பழத்தைப் பெற்றுக் கொண்டவன் சமரசத்தை ஏற்றுக்கொள்கிறான். சமரசத்தின் வரலாறே இப்படித்தான். விஜயநகர அதிகாரம் காப்புபலிஜனுக்காகொல்லவாருக்காஇரண்டிற்கும் இடையில்  சமரசத்தின் சின்னமாக அமைந்தது அரவ நாடு.

          அரவநாடு என்பது மதுரை.  மதுரையின் அரசன் வி~;வநாதன். அரசனின் அரண்மனை செங்கல்லால் ஆனது. மிகப் பழையக் கோட்டை. கல்கோட்டை கட்டுவது விஷ்வாவின் விருப்பம். தேவையான ஆட்களெல்லாம் வரவழைக்கப்பட்டுப் புதிய கோட்டைக்குத் திட்டம் வரைந்தாயிற்று. திட்டம் நடைமுறைப்படுத்தும் முன் கோட்டைக்கான பூஜை நடைபெற வேண்டும்.

இருபத்தியிரண்டு மந்திரவாதிகள் முன்னிலையில் அமாவாசை நடு இரவில் பூஜை துவங்கியது. திசைக்கு ஒருவனாக நான்கு திசையிலும் நிகழும் மனிதப்பலி. மேற்கு வாசலில் சக்கிலியனும்வடக்கு வாசலில் வெக்கிலியனும்கிழக்கு வாசலில் சில்லவானும்தெற்கில் வல்லக்கவானும் தயாராக இருந்தனர். மூத்த குடியான சக்கிலியனுக்கே முதல் மரியாதை. மந்திரவாதிகளின் உடுக்கை ஒலி மேற்கிலிருந்து அதிர்ந்தது. சத்தத்தின் ஊடே சக்கிலிய இளைஞன் முதல் மரியாதையை எடுத்துக்கொண்டான். கையிலிருந்த குறுவாளால் தன் கழுத்தையே அறுத்துக்கொண்டான். மேற்கு திசையில் காரியம் முடிந்தது. அடுத்தடுத்து மூன்று திசையிலும் அதேபோல் அதிர்ந்தது உடுக்கை ஒலி. இறுதியாக அடங்கியதுஉடுக்கையும் மற்ற மூவரின் உயிரும். இந்த பூஜையில் பலியான நான்கு இளைஞர்களும் கொல்லவாருகளே.

          கொல்லவாருகளுள் அதிகாரமுடைய வாரும் அதிகாரமற்ற வாரும் சரிசமமற்றவர்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்கள். சக்கிலியர்கள் மூத்த குடிகளாம்புகழ்கிறார்கள். இவர்கள் அதிகாரமுடையவர்கள் அல்லர். அதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டியவர்கள். இந்த மூத்த குடிக்கே முதல்மரியாதையாம். புகழில் மயங்கியவர்களுக்கு இரத்தம் சிந்துவதே முதல் மரியாதையாக அமைகிறது. கோட்டை கட்டுவதற்காகப் பூஜை. கோட்டை அரசனின் நலனுக்கானது. இந்த பூஜையில் தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் துணிச்சல் ஒருமனிதனுக்கு எப்படி வர முடியும்துணிச்சல் வருவதைத்தவிர வேறுவழியுமில்லை. மறுக்க முடியாதுஏற்றுக்கொண்டால் அரச மரியாதையோடு உயிர் விடலாம்.  சிறைசித்திரவதைபடுகொலையெல்லாம் எவ்வளவு கொடூரம்இதற்கு விடைதான் கோட்டைபூஜையில் தானே முன்வந்து நிகழ்ந்துள்ள நான்கு பலிகளும்.

          பாளையம் பிரிக்கும் திட்டத்திற்கு வேகம் காட்டினான் விஷ்வா. வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் அதிகாரம் செலுத்துபவன் பாளையக்காரன். மக்களிடம் வரியை வசூலித்து அரசனுக்குரியதை ஒப்படைப்பதும்போருக்குத் தேவையான படைகளை வழங்கிச் சேவை செய்வதும் பாளையக்காரர்களின் பொறுப்பு. அரசனுக்குக் கட்டுப்படுவதில்தான் பாளையக்காரர்களின் பாதுகாப்பு இருக்கிறது. இதுதான் பாளையக்காரமுறை. பிரிக்கப்பட்ட பாளையங்களின் பாளையக்காரர்களை வாசித்தான்அரியநாதன். பாளையக்காரர்கள் பட்டியலில் ராமபத்ர நாயக்கரும்செஞ்சு வேடர்குலத்தலைவரும் இடம் பெற்றிருந்தார்கள். அமைதியாக கலைந்த கூட்டத்தில் ஒவ்வொரு மனதும் புகைந்ததுமறுநாள் காலை வெடித்தது. விஷ்வநாதனிடம் கேசவன் வெளிப்படுத்திய தளபதிகளின் ஆதங்கம் இதுதான்.

ராமபத்ர நாயக்கர் ஒரு காப்புபலிஜர். செஞ்சு வேடர்குலத்தலைவனோ தாழ்ந்த சாதிக்காரன். ஒருபலிஜனுக்கு பாளையம் கொடுத்தது பரவாயில்லை ஏனெனில் வடுகநாட்டில் பாளையக்கார வரலாற்றில் கொல்லவாருகளும் காப்புபலிஜர்களுமே பாளையக்காரர்கள். ஆனால்தாழ்ந்த சாதிக்காரனுக்கு பாளையக்கார அந்தஸ்து கொடுத்து சக சாதியினனாக நடத்துவது வழக்கத்திற்கு மாறானது என்பதே பிரச்சினை. உறுதியாகவும்இறுதியாகவும் சொன்னான் வி~;வா. தீர யோசித்து எடுத்த முடிவில் இனி மாற்றமில்லை. அவரவர் பிரச்சனையை மட்டும் பேசச்சொல் என்று அனுப்பி வைத்தான்.

பிரிக்கப்பட்ட பாளையத்தில் அதிக எண்ணிக்கையும்அதிக பலமும் கொண்டவர்கள் எந்த சாதியாக இருந்தால் என்னஅந்த சாதிக்காரனை பாளையக்காரனாக ஆக்குவதுதான் பலம். விஷ்வாவின் வாதம் இதுதான். அவன் கணக்குப்படி அதிகார நலனுக்காகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்காக அமைந்தான் செஞ்சு வேடர் குலத்தலைவன்.

          பாளையக்காரர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டினான்விஷ்வா. எர்ரஜக்குவுக்கும்கண்டமனுக்கும் பிரிக்கப்பட்ட பாளையம் வெறும் காடுகளே. காட்டை அழித்து விளைநிலமாக்கினாலும் விவசாயம் செய்வது யார்அந்தப்பாளையக்காரர்களுக்கு விவசாயிகள் கிடையாது. இந்தப் பிரச்சனையே அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

திண்டுக்கல் வட்டத்தில் அதிகம் இருக்கும் காப்பு ஒக்கலிகர்களை குடியேற்றிவிடலாம். இரண்டு தலைமுறையில் நஞ்செய் நிலமாக்கி விடுவார்கள் என்று யோசனையை எடுத்து விட்டார் சகரம் தொப்பள நாயக்கர். பாஷை தெரியாதவர்களை எப்படி சமாளிப்பதுஅதுவும் காப்புபலிஜர் குலம் என்று தயங்கினார் எர்ரஜக்கு. ஒக்கலிகர்கள் காப்புகளல்ல,  வடுகர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை விளக்க முயற்சித்தார் வெக்கிலியர் கோடங்கி நாயக்கர். இவர் குலக்கதைப் பாடல்களையெல்லாம் அறிந்தவர்.

 ‘ஒக்கலிகர் ஆதியில் வடுகர்கள்தான். முன்னொரு காலத்தில் காப்புகள் ஸ்ரீஜைலத்தை இழந்து வடக்கே போன போது அதில் ஒரு பிரிவினர் மேற்கே வந்து நம்மோடு கலந்து விட்டனர். நமது சடங்குகள்தான் அவர்களுக்கும். புதிதாக வந்தவர்கள் ஆதலால் அவர்களது தேவர ஆவுக்கு கம்பளி அதிகாரம் மட்டும் தரவில்லை. பிறகு பெனுகொண்டாவில் இருந்து கன்னடதேசத்திற்குப் போய் வடுகை மறந்து விட்டனர். ஆனால்முன்னொரு பஞ்ச காலத்தில் நம்மிலிருந்து பிரிந்து கிழக்கே நதியோரம் போன சக்கிலியர்களை காப்புகள் அடிமைபடுத்தி விட்டனர்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-101). இது வெக்கிலியர் கோடங்கி நாயக்கரின் வார்த்தைகள். இறுதியில் காப்பு ஒக்கலிகர்களை குடியேற்றும் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விஷ்வநாதன் இறந்தார். அவர் மகன் கிருஷ்ணனே மதுரையின் அரசன். கோல்கொண்டா சுல்தான் இப்ராகிமின் படையெடுப்பில் ஏராளமான மக்கள் இறந்தார்கள். தப்பித்தவர்கள் காடுகளில் ஓடித்திரிகிறார்கள். காடுகளில் எப்படி வாழ முடியும்?. விஷயம் கேள்விப்பட்ட லட்சுமியம்மாள் செஞ்சிவேலூர்மதுரைக்கு ஓலை அனுப்பினாள். இவள்கிரு~;ண தேவராயரின் மகள்செல்லிக்குத் தோழிகிருஷ்ணனுக்கு சித்தி. உணவும் உதவிகளும் தந்து காப்புகளை பராமரிக்கும்படி கேட்டுக் கொண்டாள்.

 அவ்வளவுதான் அரியநாத முதலி பொரும ஆரம்பித்தார். காப்புகளும்அவர்களோடு மாதிகர்களும்கொஞ்சம் வணிகர்களும் வருகிறார்கள் என்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. லட்சுமியம்மாளை தூண்டி விட்டது வடுகபார்ப்பான் நரசிம்மையாவின் வேலை என்று நம்பினார். காப்புகள் குடியேறிவிட்டால் பாளையங்களை கொடுக்கச் சொல்வான் நரசிம்மைய்யா. எக்காலத்திலும் ஒத்துக்கொள்ளாதே என்று கிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.  மதுரை அரசின் காட்டுப்பகுதியில் குடியேற்றுமாறு யோசனை கூறினார்.

அரியநாத முதலியின் ஒவ்வொரு சொல்லிலும் பாளையங்களின் மீதான அக்கறை வெளிப்படுகிறதே ஏன்காப்புகள் திமிர்பிடித்தவன்கள்கொல்லவாருகளோடு ஒத்துப்போக மாட்டான்கள் என்றெல்லாம் கிருஷ்ணனிடம் எதற்காக சொல்கிறார்ஆயிரந்தானிருந்தாலும் காப்புபலிஜர்களும்கொல்லவாருகளும்நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அரியநாதரோ ஒரு முதலியார். இவருக்கு ஏன் இவ்வளவு வருத்தம்இதன் அர்த்தம் கிருஷ்ணனின் வார்த்தையில் உறைந்திருக்கிறது.

விஷ்வநாதனுக்கு விசுவாசமானவர்பொறுப்பான மந்திரிமுப்பத்தைந்து ஆண்டுகளிலும் அரியநாதமுதலி இப்படித்தான். ஆனால் கிருஷ்ணனின் ஆட்சியில் எப்படித்தெரியுமாமுதலிகளைக் குடியேற்றி சர்வ வசதிகளும் உடைய நான்கு  ஊர்களை உருவாக்கியுள்ளார். பாளையங்களை முதலிமார்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார். அனைத்துப் பாளையங்களிலும் முதலிகளையே ராயசமாக நியமித்திருக்கிறார். எல்லாம் அறிந்திருந்த கிருஷ்ணன், ‘இதை எல்லாம் நீங்கள் ஏன் என் தந்தையின் காலத்தில் செய்யவில்லை?’ என்று முதலியின் கண்ணைப்பார்த்து கேட்க பலமுறை நினைத்திருக்கிறார். மரியாதையின் காரணமாக இதுவரை கேட்கவில்லை. ஆனாலும்ஒரு வேகத்தில் பேசிய கிருஷ்ணனது வார்த்தைகள் அரியநாத முதலியை குறுக வைத்தது.

வீரசின்னுவின் புருசன் பொம்மலுநாயக்கன். கண்டமனூரிலேயே மந்தை வைத்திருந்தான். வீரசின்னுவின் தங்கை ரேணுகா. ரேணுகையின் அழகில் சொக்கிப்போய் அவளையும் கட்டிக் கொண்டான். வீட்டுக்குப் பெரியமனுசி அவ்வா. சண்டையென்று வந்துவிட்டால் யாரென்று பார்க்காமல் வெட்டும்அவ்வளவு கெடுபிடியான ஆள். கண்டமனூர் ஜமீனே அவ்வாவைக்கண்டால் கொஞ்சம் பம்முவான். பொம்மலுநாயக்கன் பாம்புகடித்து செத்துப் போனான். ரேணுகை இரண்டே ஆண்டில் விதவையான கொடூரம். பாவம்சின்னப் பொண்ணுதான் என்ன செய்யப் போகிறாள்.

வீட்டுக்கு தேவையானது போக மற்ற மாடுகளை விற்றுவிட்டு நிலம் வாங்குவது அவ்வாவின் முடிவு. மாட்டுவியாபாரி ராமானுஜம் அவள் முடிவுக்கு ஒத்தாசை. ரேணுகாவின் கண்ணெல்லாம் ராமானுஜம் மீதுதான். இவன் ஒரு காப்புபலிஜன். மாட்டுவியாபாரியாகத்தான் ஊருக்கு அடிக்கடி வருவதாக அவ்வா நினைத்தது. அவன் ஏழெட்டுமுறை படிதாண்டி நுழைந்திருக்கிறான் என்பது அவ்வாவுக்குத் தெரியாது. ஆனால்அக்காவிற்குத் தெரியும். அக்காவுக்கு தெரியுமென்பது ரேணுகாவிற்கும் தெரியும். வீரசின்னுவின் கண்ணெதிரிலேயே சில சமயம் அவனை அறைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறாள். வண்ணாத்தி சொல்லிதான் அவ்வாவுக்குத் தெரியும். இனிஊர்ப்பக்கம் தலைகாட்ட மாட்டான் ராமானுஜம். அந்த அளவிற்கு அவ்வா பேசி விட்டது.ரேணுகாவின் கருவை குச்சிவைத்துக் கலைத்தாள் மருத்துவச்சி.

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை