Saturday, May 23, 2020

இலக்கிய அறிவியல் 2



1. மனிதவரலாற்று படிநிலை
    


வரலாற்று உணர்வின் அடிப்படையில் இலக்கியவாதி பெற்றிருக்க வேண்டிய பொதுவான வரலாற்று புரிதலாகும்.  மனித வரலாற்றை சமூக உற்பத்தி முறையியலின் அடிப்படையில் எட்டு படிநிலைகளாகப் புரிந்துகொள்ளலாம்.  சமூக உற்பத்தி முறையியல் என்பது சமூக பண்பாட்டை முழுமையாகச் சுமந்திருக்கின்ற அடித்தளமாகும். சமூகப் பண்பாடு என்பது  சமூகளாவிய நிறுவனங்களின் முழுமையாகும். (சிவக்குமார்,கே.2016:8) இம்முழுமை பற்றி பண்பாட்டு உறவுகள் என்ற தலைப்பில் அறியப்போகிறோம். சமூக உற்பத்தி முறையியலும் சமூகப் பண்பாட்டியலும் இணைந்ததே சமூக அறிவு ஆகும். இலக்கியம் படைப்பவருக்கும் படிப்பவருக்கும் சமூக அறிவு இன்றியமையாததாகும். சமூக அறிவின் முழுமை பற்றி அறிவெனும் பெரும் பசி என்ற வசன இலக்கியத்தில் வரைபடத்துடன் விவரித்துள்ளோம். இலக்கிய அறிவியல் குறித்த நமது சிந்தனைக்காக அவ்வரைபடம் இணைக்கப்படுகிறது. மேலும் சமூக உற்பத்தி முறையியல், சமூகப் பண்பாட்டியல் குறித்து அறிவெனும் பெரும் பசி என்ற கட்டுரையின் விவரிப்புகளை இலக்கிய அறிவியலின் அவசியம் கருதி புதுப்பித்தலுடன் முழுமையாகக் கையாள்கிறோம். (புதியவன் 2015:45-49)


                                             


சமூக அறிவின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம்
(இணைவு - தனிமனித உள்ளத்தியல்)

சமூக உற்பத்தி முறையியல் என்பது சமூகத்தில் நிகழும் சமூகப் பொருளுற்பத்தி பற்றிய அறிவாகும். அதாவது உழைப்பில் இருந்து மனிதன் தோன்றினான். உற்பத்தியில் இருந்து சமூகம் தோன்றியது. பொருளாதார உற்பத்தியே சமூகத்தின் இதயத்துடிப்பு. சமூகம் உயிர் வாழ உற்பத்தி தொடர்ந்து நிகழ வேண்டும். உற்பத்தி நின்றுவிட்டால் சமூகம் இறந்துவிடும். எனவேசமூகப் பொருளாதார உற்பத்தி எப்படி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றதுஒரு சமூகம் எத்தகைய மனிதக் கூட்டத்தால் உற்பத்தியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறதுஎத்தகைய அறிவும்ஆற்றலும்அனுபவமும் நிறைந்த மனிதர்களால் உற்பத்தி நிகழ்கிறதுஎத்தகைய இயற்கை வளங்களைக் கொண்டு உற்பத்தி நிகழ்த்தப்படுகிறதுஎத்தகையக் கருவிகளும் அறிவியல் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றனஉழைப்பாளர்கள் உற்பத்திப் பொருட்களை எத்தகைய முறையில் பகிர்ந்துகொள்கிறார்கள்உற்பத்திச் சாதனங்கள் மீதும்உற்பத்திப் பொருட்கள் மீதும் உழைப்பவர்களுக்கு எத்தகைய உரிமை நிலவுகிறதுசமூக உற்பத்தியில் நிகழ்கின்ற உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகைய விளைவுகளை உருவாக்கப் போகின்றனஇவற்றைப் பற்றிய அறிவே சமூக உற்பத்தி முறையியல் ஆகும். 
இந்தியச் சூழலில் சாதியக் குலத்தொழில் பற்றிய அறிவும் சமூக உற்பத்தி முறையில் இன்றியமையாததாக அமைந்துள்ளது என்பதாக நான் வரைபடத்தில் விளக்கியிருப்பது தவறாகும். இந்தியச் சூழலில்   சமூக உற்பத்தி முறையைத் தாமதப்படுத்தியதில் சாதியப் பண்பாட்டிற்கு தனித்துவம் இருக்கின்றது. எனினும், சாதி என்பது  பண்பாடே அல்லாமல் உற்பத்திமுறையாகாது. (Social Production Methodology) 
மேற்கண்டவைகள் அனைத்தும் மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவை. மனித சிந்தனையின் திட்டமிடலுக்கு உட்படாதவை. அதனால் மனிதர்களால் இந்த உற்பத்தி முறைகளைப் பண்படுத்த முடியாது. மனிதப் பண்பாட்டு முயற்சிகள் அனைத்தும் உற்பத்தி முறைகளின் இயக்கத்தை தாமதிக்கவோ விரைவிக்கவோ செய்கின்றன. ஆனால், தீர்மானிப்பதில்லை. மாறாக, உற்பத்தி முறைகளை அடிப்படையாகக் கொண்டே மனிதர்களின் பண்பாடு தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில், மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட புறநிலை உண்மைகளாக இவை இயங்கிக்கொண்டு இருக்கின்றன. எனவேதான் உற்பத்திமுறை என்பது சமூகத்தின் பண்பாடல்ல என்று சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது. மேலும், உற்பத்தி முறையையே சமூகத்தின் அடிக்கட்டுமானம் என்பதை உறுதிபடுத்துகின்றது. (சிவக்குமார்,கே.2016:8)

இவற்றின் அடிப்படையிலேயே மனித சமூகத்தின் முழுமையான வரலாறு கட்டமைந்துள்ளது. சமூக உற்பத்தி முறையியலின் வளர்ச்சி மனிதகுல வரலாற்றை எட்டு நிலைகளாகக் கட்டமைத்துள்ளது. முனைவர் கே. சிவக்குமார் அவர்களது ஆய்வேட்டில் குறிப்பிடப்படுகின்ற சமூகப் பொருளாதார படிமலர்ச்சியின் ஆறு கட்டங்களும் மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இக்கட்டுரையில் மனிதகுல வரலாற்றின் எட்டு நிலைகளாக விளக்கம் பெறுகின்றது (சிவக்குமார்,கே.2016:223)
சமூக உற்பத்திமுறையியலின் வளர்ச்சி பற்றிய துல்லியமானக் குறிப்புகளை அறிவதற்கு 
1. சமூக விஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள் (புதியவன். 2017:30-33)
2.   புராதனம் முதல் பொதுவுடைமை வரை - புதியவன். 2019 : https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82 

ஆகிய வசன இலக்கியங்களை அணுகவும்.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)

8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

அட்டவணை படம் - 
சமூக வடிவமும் மனித வரலாற்றுப் படிநிலையும்



மனித வரலாற்றுப் படிநிலை (8)



சமூக வடிவம்

தாய்தலைமை / தந்தையதிகாரம்
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்

ஆதிப் பொதுவுடைமை சமூகம்
தாய் தலைமை சமூகம்
2.வேட்டை நாகரிகம்
ஆதிப் பொதுவுடைமை சமூகம்

தாய் தலைமை சமூகம்
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்

ஆண்டான் அடிமை சமூகம்
தந்தை அதிகார சமூகம்
4.விவசாய நாகரிகம்
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகம்

தந்தை அதிகார சமூகம்
5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகம்

தந்தை அதிகார சமூகம்
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்

முதலாளித்துவ சமூகம்
தந்தை அதிகார சமூகம்
7.நிதி மூலதன பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்

முதலாளித்துவ சமூகம்
தந்தை அதிகார சமூகம்
8. மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்

சோசலிச சமூகம்
ஏற்றத்தாழ்வுகள் மதிப்பிழந்த சமூகம்



இலக்கிய அறிவியல் 3


No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை