Monday, May 25, 2020

வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும் 1


இயல் – 2
வாழ்விடங்களும் 
சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும்

2.1.முன்னுரை
          இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து இயற்கையின் அங்கமாகிய பழங்குடி மக்கள் தங்களுடைய செயலூக்கத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ள வாழ்விடங்கள் பற்றி ஆராயப்பெறும்தங்களுடைய சமூக வாழ்விற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக எத்தகைய தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பற்றியும் அவர்கள் பயன்படுத்துகின்ற கருவிகள் பற்றியும்  இவ்வியலில் ஆராயப்பெறும்.

2.2.வாழ்விடச் சூழல்
சோளகர்கள் தங்களுடைய ஊரை தொட்டி’ என்கிறார்கள். ‘சோள’ என்பது சோலை (காடுஎன்று மருவியுள்ளதுஅந்த ஊரின் பெயர் சோளகர்தொட்டி’ என்று அழைக்கப்படுகின்றதுகாடுகளில் உள்ள ஊர் என்பது இதன் பொருள்சோளகர் தொட்டியில் நாற்பது குடும்பத்திற்கு மேலாக வாழ்கிறார்கள்வனத்திற்கு அருகிலேயே அந்த ஊர் அமைந்திருக்கின்றதுஅந்த ஊரிலிருந்து வனத்தைப் பிரிப்பதற்காக ஒரு பச்சை நிறத்திலான ஓர் அளவை கல் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றதுவனத்தில் நீர் வற்றிவிட்டால் ஊரில் வன எல்லைக்கு அருகிலுள்ள நீர்நிலையில் தண்ணீர் குடிக்க காட்டு விலங்குகள் வந்து செல்கின்றன.
மலையாளிகள் வாழ்கின்ற கொல்லிமலையில் சலசலத்தோடும் நீரோடைகளும்உயர்ந்த மலைமுகடுகளும்திட்டுத்திட்டாக மேகங்கள் படர்ந்திருக்கும் மலைகளும் இருக்கின்றனநன்கு வெயில் அடித்தாலும் குளிர்ச்சி குறையாத தட்பவெப்ப சூழலும்கண்களை மறைக்கின்ற பனிமூட்டமும் இருக்கின்றனசிறுசிறு சமவெளிப் பிரதேசங்களும்பலாஎலும்பிச்சைநாரத்தைகொய்யா ஆகியவை நிறைந்த சிறுசிறு தோப்புகளும் இருக்கின்றனஏலக்குத்துச் செடிகளும்அன்னாச்சிச் செடிகளும்காப்பிச் செடிகளும் இருக்கின்றனதரிசு பூமிகளில் இண்டு முள் புதர்கள்சூத்தை முள் புதர்கள் இருக்கின்றனபுங்கம் பூக்களும் அவற்றின் மணமும் பரவியிருக்கின்றனமலையாளிகள் வாழ்கின்ற குடிசைகள் மிகவும் தாழ்வாக இருக்கின்றனமாட்டுக்கொட்டகைகள் இருக்கின்றனபன்றிகள் வளர்வதற்கான கூண்டுகள் இருக்கின்றனகொல்லிமலை மலையாளிகளின் வாழ்விடச் சூழல் இவ்வாறு அமைந்திருக்கின்றது.
            படகர்கள் தாங்கள் வாழும் ஊரை ஹட்டி’ என்று அழைக்கின்றார்கள்மரகதமலை ஹட்டியின் தெற்குத் திசையில் சோலைகள் சூழ்ந்த கானகங்கள் நீண்டு செல்கின்றன.  மரகத மலை ஹட்டியையும் சோலைக்காடுகளையும் முற்றிலும் சுற்றி மரகத மலைகள் சூழ்ந்திருக்கின்றனஹட்டியின் மேற்குத் திசையிலுள்ள உயரமான மலையைத் தேவர் பெட்டா என்று அழைக்கிறார்கள்தேவர் பெட்டா என்பது தேவர் சிகரம் என்று பொருள்படுகின்றதுஹட்டியின் அருகிலேயே நீர் கொட்டுகின்ற அருவிக்கரை இருக்கின்றதுவிளைச்சலுக்கான நிலங்கள் இருக்கின்றனமரகத மலை        ஹட்டியில் படகர்களது இருபது வீடுகள் இருக்கின்றனஹட்டியின் சரிவில் நான்கு தொரியர் பழங்குடிகளின் வீடுகள் இருக்கின்றனமரகதமலையிலிருந்து வனங்களுக்கு இடையிலுள்ள பள்ளப்பகுதிகளில்  இருக்கின்ற நீர்நிலைகளுக்கு அருகில் குறும்பர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனமரகதமலை ஹட்டியில் படகர்கள் அமைத்துள்ள நீண்ட மாட்டுத்தொழுவம் இருக்கின்றதுஹட்டியின் கீழ்ப்புறமாக இருக்கின்ற மைதானத்தில் ஹேத்தப்பா என்றழைக்கப்படுகின்ற தெய்வத்திற்குக் கோயில் இருக்கின்றதுகோயிலுக்குப் பின்புறத்தில் ஒரு கல்மேடை இருக்கின்றதுஇந்தக் கல்மேடை கீழிருந்து ஹட்டிக்கு வருபவர்களைக் கவனிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
            தாணிக்கண்டி என்ற கிராமத்தில் இருளர்கள் வாழ்கிறார்கள்இந்தக் கிராமமானது வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் இருக்கின்ற மலைகிராமங்களில் ஒன்றாக இருக்கின்றதுமலைகளில் பூர்வீகமாக வாழ்ந்த இருளர் போன்ற பழங்குடி மக்கள் வனத்துறையினரால் மலையடிவார கிராமங்களுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள்.  வெள்ளியங்கிரி மலையின் அடிவாரம் பூண்டி என்று அழைக்கப்படுகின்றதுமலையும் மலைக்கிராமங்களும் வனங்களால் சூழப்பட்டிருக்கின்றனயானைகளின் வலசைப் பாதைகள் கிராமங்களுக்கு இடையில் இருக்கின்றனதாணிக்கண்டிசாடிவயல் ஆகிய இரண்டு மலையடிவார கிராமங்களுக்கு இடையில் ஈசா யோகா மையம் அமைந்திருக்கின்றதுதாணிக்கண்டியிலிருந்து ஈசா யோகா மையத்தைக் கடந்து தண்ணீர்பந்தல் பேருந்துநிலையம் இருக்கின்றதுசித்திரை பௌர்ணமி தொடங்கிய முதல் பத்து நாட்களுக்கு வெள்ளியங்கிரி மலையிலுள்ள சுயம்பு லிங்கத்தை வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் பக்திச் சுற்றுலா வருகிறார்கள்வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலைகளைக் கடந்து சுயம்பு லிங்கத்தை அடைகிறார்கள்முதல் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்ற வெள்ளை விநாயகர் கோவிலிலிருந்து மலையேற்றம் தொடங்குகின்றதுமலைக்கிராமத்தில் வாழ்கின்ற இருளர் இன மக்கள் பூண்டிக் கோயிலுக்கு வருகின்ற கவுண்டர்கள் போன்ற கீழ்நாட்டுப் பக்தர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
            கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘குட்டி இந்தியா’ என்று அழைக்கப்படுகின்ற தேன்கனிக்கோட்டை வட்டம் இருக்கின்றதுதமிழ்கன்னடம்தெலுங்குஉருது ஆகிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் இந்த வட்டத்தில் வாழ்கிறார்கள்இந்த வட்டத்தில் ‘குட்டி இங்கிலாந்து’ என்று புகழப்படுகின்ற தளி ஒன்றியம் இருக்கின்றதுமலைகளில் பூர்வீகமாக வாழ்ந்த இருளர் போன்ற பழங்குடி மக்களின் பெரும்பகுதியினர் வனத்துறையினரால் மலையடிவார கிராமங்களுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள்மலையடிவார கிராமங்களில் ரெட்டிகவுடாநாயுடுபறையர்சக்கிலிஇருளர் பழங்குடிகள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்நிலப்பிரபுத்துவ சமூக அதிகாரத்திற்கு எதிரான பொதுவுடைமை இயக்க செயலாளர்களின் செயல் திட்டங்களில் இவர்களது வாழ்கையும் இணைந்திருக்கின்றதுஇந்தக் கிராமங்கள் வனங்களின் சூழமைவுகளில் அமைந்துள்ளனஇத்தகைய கிராமங்களில் ஒன்றாக பழமரத்துப்பட்டி இருக்கின்றது.

2.3.ஊர்கள்
2.3.1. சோளகர் தொட்டி என்ற ஊரிலுள்ள சோளகர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.1.1.பாலப்படுகை – ஈரம்மாவின் கணவராகிய புட்டனது ஊர்.
2.3.1.2.பூதிப்படுகை – கொத்தல்லியின் மனைவியின் ஊர்.
2.3.1.3.சத்தி – சத்தியமங்கலம் என்ற ஊரை சத்தி என்று சுருக்கமாக அழைக்கிறார்கள்சத்திப்பகுதியிலிருந்து துப்பாக்கிக்குத் தேவையான கந்தகத்தையும் வெடிமருந்தையும் சிக்குமாதா வாங்கிவருகிறார்.
2.3.1.4.மூச்சுக்குழி – சந்தன மரத்தைக் கடத்துபவர்களும் பணிசெய்பவர்களும் தங்கியிருக்கின்ற இடம்புட்டன் இங்கிருந்து வீடு செல்லும்போது வழியில் சந்தித்த சிவண்ணாவிடம் வேலை சூழ்நிலையை விளக்குகிறான்.
2.3.1.5.கோயம்புத்தூர் – வேட்டையாடும் விருப்பத்துடன் சாலி துரை கொத்தல்லியைச் சந்திக்க கோயம்புத்தூரிலிருந்து வருகிறார்.
2.3.1.6.நொய்தலாபுரம் – கரடியை வேட்டையாடிய சிக்குமாதாவைச் சித்திரவதை செய்த வனபங்களா நொய்தலாபுரத்தில் இருக்கின்றது.
2.3.1.7.குரும்பூர் – வனத்துறை அதிகாரிகளால் பிரச்சனை வரும்போதெல்லாம் சோளகர்கள் குரும்பூர் மணியக்கார மாதப்பாவிடம் சென்று முறையிடுவது வழக்கம்.
2.3.1.8.புளியம்பட்டி – வனத்துறையிடமிருந்து சிக்குமாதாவை மீட்டுத்தர மணியக்காரரால் அனுப்பப்பட்ட ஆளாகிய துரையன் புளியம்பட்டியிலிருந்து மலைக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவன்.
2.3.1.9.இட்டறை – சிக்குமாதாவின் மனைவி கெம்பம்மா பிறந்த ஊர்.
2.3.1.10.பெஜ்ஜிலெட்டி – கரியனுக்கு அவனது தந்தை பெஜ்ஜிலெட்டியில் பெண்பார்க்க முயன்றார்.
2.3.1.11.ஆசனூர் – பேதன் தனது சீர்காட்டை அபகரிக்க முயன்ற துரையனை எதிர்த்தக் காரணத்திற்காக ஆசனூர் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டான்.
2.3.1.12.மாவள்ளம் – ஜோகம்மாளின் மகள் ரதி மாவள்ளம் ஊரிலுள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கின்றாள்.
2.3.1.13.சோளகணை – படகல் மாதேஸ்வரன் கோயில் சோளகணையில் இருக்கின்றதுகிழவன் ஒண்ணனின் குடிசையும் சோளகணையில்தான் இருக்கின்றது.
2.3.1.14.கரை ஒந்தனை – ரதியின் தோழியாகிய மல்லியின் தந்தை ஊர்.
2.3.1.15.குன்றி மலை – சிக்கையதம்பிடியின் சம்பந்தியாகிய உச்சித்தம்படியின் ஊர்.
2.3.1.16.குட்டையூர் – ஒண்ணனின் மருமகளாகிய கெஞ்சியின் பிறந்த ஊர்.
2.3.1.17.தலமலை – அரப்புலி என்பவன் தலமலை பகுதியில் தீக்கங்காணியாக பணிசெய்கிறான்.
3.1.18.கோத்தகிரி – ரதியின் காதலன் சேகரனது ஊர்
3.1.19.உருளிக்குட்டை – சிவண்ணாவின் மனைவி சின்னத்தாயி பிறந்த ஊர்.
2.3.1.20.தொட்டமாரா – மாதியின் அண்ணன் கெஞ்சனது குடும்பம் கர்நாடகாவிலுள்ள தொட்டமாரா எனும் ஊரில்தான் இருக்கின்றது.
2.3.1.21.மேட்டுப்பாளையம் – சிவண்ணா வீரப்பன் ஆட்களைப் பிரிந்து சென்று மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைகிறான்.
2.3.2.கொல்லி மலை மலையாளிகள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.2.1.நரியாங் கெணறு – கால்நடைகளின் மேய்ச்சலுக்கு உரிய நீர் மடுவுகளில் வற்றிய தருணங்களில் நரியாங்கெணறு என்ற பகுதியிலுள்ள ஊத்து நீருக்கு வருகிறார்கள்.
2.3.2.2.சக்கரப்பட்டி – பிரசவ வேதனையைப் பொறுக்க முடியாத பொன்னம்மாள் தான் சக்கரப்பட்டி வாலிபருடன் தொடர்பு கொண்ட உண்மையை மருத்துவச்சி  திருமியிடம் ஒப்புக்கொள்கிறாள்.
2.3.2.3.இலங்கை – சிலோன் சீரங்கன் என்ற மலையாளி இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளியாகப் பணி செய்து மலைக்கு திரும்பியிருக்கிறான்.
2.3.2.4.பூங்குளம் – சாவித்திருமனின் மகள் பிடாரி பூங்குளத்து சக்கரவர்த்தி கருமன் என்பவனை மணந்துகொள்கிறாள்.
2.3.2.5.சேலம்  –  மலையில் சங்கம் உருவாக்குவதற்காகப் பொதுவுடைமைக் கட்சியின் சங்க அலுவலகத் தலைவரை சீரங்கனும் சடையனும் தொடர்புகொள்கிறார்கள்.
2.3.2.6.கெராங்காடு பட்டி – கீழ்நாட்டுக்கார கந்துவட்டிக்காரர்கள் கெராங்காடு பட்டி மைதானத்தில்தான் மலையாளிகளிடம் புளியங்கா தண்டத்தை கூடுதலாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
2.3.2.7.வலப்பூரு – கந்துவட்டிக் காரனுக்குப் பணம் கொடுக்க முடியாத நிலையில் வலப்பூரு தொரையனின் வீட்டுப் பெண்ணை வசூல்காரன் சுக்ரபள்ளன் அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறான்சங்கம் மலையாளிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தால் மலையாளிகள் ஒற்றுமையாக இணைந்து அவனை விரட்டியிருக்கிறார்கள்.
2.3.3.மரகரமலை ஹட்டியிலுள்ள படகர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.3.1.மொட்ட மலைபுலிக்குன்று ஆகிய பகுதிகளைக் கடந்துதான் ஒத்தை நகருக்குச் செல்ல முடியும் என்பதை ரங்கன் கேள்விப்பட்டிருக்கிறான்.
2.3.3.2.கோயம்புத்தூர்பொள்ளாச்சி போன்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் விவசாயக் கூலிகளாக கரியமல்லரின் தேயிலைத் தோட்டத்தில் பணிசெய்கிறார்கள்.
2.3.3.3.மணிக்கல் ஹட்டி – கிருஷ்ணன் பிறந்த ஊர்.
2.3.3.4.கீழ்மலை – பாருவின் தாய்க்குப் பிறந்த ஊர்கிருஷ்ணன் படிக்கும் மிஷன் பள்ளி கீழ்மலையில்தான் இருக்கின்றது.
2.3.3.5.சின்னக் கொம்பை – மணியகாரர் கரியமல்லருக்கு கட்டுப்பட்டுள்ள ஊர்களில் சின்னக்கொம்பையும் ஒன்று.
2.3.3.6.மூக்கு மலை –  ஜோகியின் மாமன் வீடு மூக்குமலையில் இருக்கின்றது.
2.3.3.7.தொதவர் மந்து – மரகதமலையிலிருந்து ரங்கன் ஒத்தை நகருக்கு ஓடிய போது தொதவர்கள் வாழ்கின்ற தொதவர் மந்துவில் ஓர் இரவு அடைக்கலம் அடைந்தான்தொதவர்கள் ஊர் என்பதனை மந்து என்று அழைக்கிறார்கள்.
2.3.3.8.ஒத்தை – மரகத மலையிலிருந்து ரங்கன் ஒத்தை நகருக்கு ஓடிவந்து நகரவாசியாக மாறுகிறான்.
2.3.3.9.வண்டுசோலை – ஒத்தையில் காய்வியாபாரியாகவும் மேஜர் துரை பங்களாவின் ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராகவும் இருக்கின்ற சுப்புப் பிள்ளையின் வீடு வண்டுசோலையில்தான் இருக்கின்றதுஇவனிடம்தான் ரங்கன் பணியில் சேர்கிறான்.
2.3.3.10.ஒஸஹட்டி – ரங்கனுடைய சிற்றன்னையின் மகளாகிய ரங்கியை ஒஸஹட்டியிலிருந்து வந்தவன் திருமணம் செய்திருக்கிறான்.
2.3.3.11.தேன்மலை – கிருஷ்ணனின் மனைவியாகிய ருக்மணி பிறந்த ஊர்.
2.3.3.12.உதகை – உதகை ஆனந்த கிரியிலுள்ள ஹில்வ்யூ மாளிகையில் கிருஷ்ண கௌடரின் மருமகள் ஆண்குழந்தை பெற்ற மகிழ்ச்சியை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார்கள்.
2.3.3.13.பழனி – பாருவின் வளர்ப்பு மகன் நஞ்சனுக்கும் கிருஷ்ண கௌடரின் பேத்தி  விஜயாவுக்கும் திருமணம் பழனி கோயிலில் நிகழ்கின்றது.
2.3.4.தாணிக்கண்டி என்ற மலையடிவார கிராமத்திலுள்ள இருளர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.4.1.பூண்டி – வெள்ளியங்கிரி மலையேற வருகின்ற கவுண்டனாகிய ரங்கராஜனின் குடும்பத்தை இருளர் இனத்தைச் சார்ந்த மருதன் சந்தித்து நட்பு பாராட்டுகின்ற இடம்.
2.3.4.2.முட்டத்து வயல் – நீலி மற்றும் ராசி வாய்க்கால்களை வெட்டி உருவாக்கிய இருளச் சகோதரிகளின்  ஊராகும்.
2.3.4.3.காரமடை - பொன்னான் என்கின்ற இருளப்பூசாரியிடம் தன் மகளுக்குப் பேயோட்டுவதற்காக அழைத்துவந்த தங்கவேலுவின் வீடு அமைந்துள்ள ஊர்.
2.3.4.4.ஆலாந்துறை – பொன்னி பூப்பெய்ததற்காக ஆலாந்துறையிலிருந்து பாவாடை தாவணி வாங்கிவருகிறார்கள்.
2.3.4.5.பிற ஊர்கள் - இருளனாகிய மருதன் தாணிக்கண்டியில் இறந்தபோது அட்டப்பாடிஆனகட்டிகூக்கம் பள்ளம்கோட்டத்துறைபோரத்திசர்க்கார் போரத்திவெள்ளப்பதிபொட்டப்பதிசீங்கப்பதிசாடிவயல் ஆகிய இருளர் வாழ்கின்ற ஊர்களுக்கு இறப்புச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறார்கள்இருளர்கள் ஊர் என்பதனைப் பதி’ என்று அழைக்கிறார்கள்.
2.3.5.பழமரத்துப்பட்டி என்ற மலையடிவார கிராமத்திலுள்ள இருளர்கள் தொடர்பு கொள்கின்ற பிற ஊர்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
2.3.5.1.அத்தானூர் – தேன்கனிக்கோட்டை ஏரியிலிருந்து மூன்று மைல் தூரம் கடந்து அத்தானூர் இருக்கின்றதுஇந்த ஊரில்தான் லட்சுமையாவின் வீடு இருக்கின்றது.
2.3.5.2.நாற்றாப்பாளையம் – கடவுளின் ஆற்றலுள்ள வனமாக நம்பப்படுகின்ற தேவர்காடு இங்குதான் உள்ளது.
2.3.5.3.பிற ஊர்கள் - நிலப்பிரபுத்துவ சமூக அதிகாரத்திற்கு எதிரான பொதுவுடைமை இயக்க செயலாளர்களின் செயல் திட்டங்களில் மலையடிவார கிராம மக்கள் அனைவரது வாழ்கையும் இணைந்திருக்கின்றதுதேன்கனிக்கோட்டைதளிஓசூர்பழமரத்துப்பட்டிசந்தானபுரம்அஞ்செட்டிநாற்றாப்பாளையம்வரதனூர்சின்ன உப்பனூர்திப்ப சமுத்திரம்இராயக்கோட்டைகமலாபுரம்பிக்கப்பள்ளிநெல்லுமார்கேரட்டிஉரிகம்தக்கட்டிகோட்டையூர்மஞ்சு கொண்டப்பள்ளிமஞ்சுகொடகரைபெட்டமுகலாளம்தொளாமலைமோட்ராகிகஸ்தூர்பேல்பட்டிஅர்த்தக்கல்நூரொந்துசாமி மலைஓதிபுரம்பயில்காடஅத்திநத்தம்மாடக்கல்செப்புகுட்டபுதூர்அட்டப்பள்ளம்கெலமங்கலம்சூலகிரி ஆகிய ஊர்களோடு பொதுவுடைமை இயக்கத்தினர் தொடர்புகொண்டு செயல்படுகின்றனர்.

2.4.வீடுகள்
2.4.1.குடிசை – சோளகர்கள் குடிசை வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள்மூங்கில் தப்பைகளைப் படலாய் பிணைத்து அதில் செம்மண் பூசிய  சுவர்களுடன் நிறுத்தப்பட்டிருப்பதாக குடிசைகள் அமைந்திருக்கின்றனசிவண்ணாவின் காவலை மீறி கொம்பன் யானை உள்ளே வந்ததும் தனது குடிசை யானையின் சின்ன உரசலைக்கூட தாங்காமல் உடைந்துவிடும் என அஞ்சுகின்றான்அந்த அளவிற்கு குடிசைகள் எளிமையாகவும் பலவீனமாகவும் இருக்கின்றன. (பாலமுருகன்,.2013: 5-6).
          கொல்லிமலை மலையாளிகளின் குடிசைகள் புல்லால் வேயப்பட்டிருக்கின்றனமழை ஈரம் பட்டுப்பட்டு சாம்பல் நிறம் பூத்ததாகக் காணப்படுகின்றதுஒட்டுத்திண்ணையுடையதாக அந்தக் குடிசைகள் இருக்கின்றனபனிக்குளிரை எதிர்கொள்வதற்கு ஏற்றமுறையில் எரவானத்துக் கூரைகள் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கின்றனபனிக்காலங்களில் வீடுகளுக்குள் அட்டுப்பால் சொட்டியிருக்கும்அட்டுப்பால் என்பது சமையல் அடுப்பின் நீராவியும்பனித்துளிகளும்குடிசையில் படிந்திருக்கும் அழுக்கும் கலந்து மேலிருந்து சொட்டுகின்ற திரவமாகும். (சின்னப்ப பாரதி,கு. 2008: 59).
2.4.2.ஓடுகள் – படகர்கள் ஓடுகள் வேய்ந்த வீடுகளில் வாழ்கிறார்கள்காரை பூசிய சுவர்களால் அந்த வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளின் வாயில்கள் தாழ்வாகவும் குறுகியதாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றனவாயிலைக் கடந்து வராந்தா என்ற பகுதி இருக்கின்றதுவீடுகளின் வராந்தாவைக் ஒட்டி  இரண்டு மனைகள் இருக்கின்றனவெளியே இருப்பது வெளிமனை ஆகும்உள்ளே இருப்பது உள்மனை ஆகும்உள்மனையின் வாயிலிலிருந்து நேர் வளைவில் சமையல் பகுதி இருக்கின்றதுஉள்மனை வாயிலில் இருந்து வலது ஓரத்தில் பால்மனை அல்லது பூசை அறை இருக்கின்றதுசமையலறைக்கும் உள்மனைக்கும் இடையிலான சுவர்த் தண்டில் தீபமாடம் இருக்கின்றதுதீபமாடத்திற்கு மேலாக பொருட்களை சேகரித்து வைக்கின்ற மூங்கில் பரண்கள் இருக்கின்றன. (ராஜம் கிருஷ்ணன். 2001: 32-33).
2.4.3.தொதவர் குடிசை – மரகதமலையிலிருந்து ஒத்தை நகருக்குச் செல்கின்ற வழியில் தொதவர்கள் வாழ்கின்ற தொதவர் மந்து இருக்கின்றதுதொதவர்களின் குடிசைகள் கணக் எனும் புல் வகையால் வேயப்பட்டிருக்கின்றனஅந்தக் குடிசைகளின் வாயில்கள் குறுகிய பொந்து வடிவில் இருக்கின்றன. (ராஜம் கிருஷ்ணன். 2001: 72-73).
2.4.4.மாடி வீடுகள் – மரகத மலையில் தேயிலைகளைப் பயிர் செய்து பணக்காராகிய கரியமல்லரின் வீடு நீளத்திலும் அகலத்திலும் பெரிதாக அமைந்து சகல வசதிகளையும் உள்ளடக்கிய மாடிவீடுகளாக அமைக்கப்பெற்றிருக்கின்றன.
2.4.5.இருளர்களின் குடியிருப்பு - வெள்ளியங்கிரி மலையடிவாரம் தாணிக்கண்டியில் மக்கள் வாழ்கின்ற வீடுகள் வனத்துறையால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனஅவை அழகாகவும் வரிசையாகவும் அமைந்திருக்கின்றன. (ஆட்டனத்தி. 2010: 26).
தேன்கனிக்கோட்டையில் உரிகம்தக்கட்டிகோட்டையூர்மஞ்சு கொண்டப்பள்ளி போன்ற மலைக்கிராமங்களின் மக்கள் மூங்கிலாலான வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 133).
இருளர்களின் வீடுகள் பற்றிய விவரங்கள் புதினங்களில் செறிவாக இடம்பெறவில்லை.

2.5.நீர்நிலைகள்
2.5.1.பாறைக் குழி குட்டை - சோளகர் தொட்டியின் வன எல்லைக்கு அருகே இருக்கின்ற தண்ணீர் குட்டையை பாறை குழி குட்டை என்கிறார்கள்மழைக்காலத்தில் வனத்திலிருந்து நீர் வடிந்து அந்தப் பாறைகுழியில் தேங்கியிருக்கும்அந்தக்குட்டையில் கடும் வறட்சியில்கூட நீர் வற்றாமல் இருக்கும்வனவிலங்குகளும் தண்ணீர் குடிக்க அங்கு வருவதுண்டு.
2.5.2.சீர்காட்டுக் கிணறு – பேதனுக்குச் சொந்தமாகிய சீர்காட்டில் ஒரு கிணறு இருக்கின்றதுஅந்தக் கிணற்றில் அணையைப் போல தண்ணீர் பெருக்கெடுத்திருக்கும்எல்லாக் காலங்களிலும் அந்தக் கிணற்றில் நீர் நிறைந்திருக்கும்நீர் இடி விழுந்ததன் காரணமாக இந்தக் கிணறு வற்றாத கிணறாகத் திகழ்கிறது என்று சொல்கிறார்கள்.
2.5.3.தண்ணீர்த் தொட்டி -  குடிசைகளின் பின்புறமாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றனவீட்டிற்குத் தேவையான நீரை அதில் நிரப்பி வைத்துக்கொண்டு பயன்படுத்துகிறார்கள்
2.5.4.சுனை நீர் மடுவு -  கானகம் வழியாக சோளகணை செல்லும் வழியில் சுனைநீர் மடுவு இருக்கின்றதுபெரும் பாறைகளின் நடுவே கசிந்து வருகின்ற நீரானது சிறிய  பள்ளத்தில் தேங்கி வழிந்துகொண்டு இருக்கின்றதுஇந்தச் சுனைநீர் மடுவில் வறட்சிக் காலங்களில்கூட நீர் வற்றாமலிருப்பதால் விலங்குகள் வந்து தாகம் தீர்த்துக்கொள்கின்றனமடுவை சுற்றிலும் வனவிலங்குகளின் அடையாளமாக அவற்றின் சாணங்கள் இருக்கின்றன.
2.5.5.ஊத்து – பூமிக்கடியில் இருந்து நீர் ஊறி வரும் பகுதியை ஊத்து நீர் என்பர்நரியாங் கெணறு என்ற பகுதியில் ஊத்து நீர் இருக்கிறதுவறட்சி காலத்தில் மலையாளிகள் தங்களது மாடுகளை நீரருந்தச் செய்ய இங்கு அழைத்துவருகிறார்கள்.
2.5.6.அருவி – மரகத மலை ஹட்டியின் அருகில் அருவிக்கரை இருக்கின்றதுபடகர்கள் நீரெடுக்க இந்த அருவிக்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.
2.5.7.குமரியாறு – மணிக்கல் ஹட்டிக்கு வெளியில் வனத்திற்கு நடுவில் குமரியாறு என்னும் நதி ஓடுகிறதுகிருஷ்ணனும் பாருவும் காதல் நிமித்தமாக சந்திக்கின்ற பகுதி.
2.5.8.சிறுவாணி – பூண்டியிலிருக்கின்ற வெள்ளியங்கிரி மலையானது மேற்குத்தொடர்ச்சி மலையுடன் இணைந்தருக்கின்றதுஇந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கின்ற மடுவிலிருந்து சிறுவாணி நதி உற்பத்தியாகின்றதுகோயம்புத்தூர் மக்களின் முதன்மையான குடிநீர் ஆதாரமாகத் திகழ்கின்றது.
2.5.9.பாம்பாட்டி சுனை – வெள்ளியங்கிரி மலையின் இரண்டாவது மலையில் பாம்பாட்டிச் சுனை இருக்கின்றது.
2.5.10.கைதட்டிச் சுனை – வௌ்ளியங்கிரி மலையின் மூன்றாவது மலையில் கைதட்டிச் சுனை இருக்கின்றது.
2.5.11.ஆண்டி சுனை - வௌ்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையில் ஆண்டி சுனை இருக்கின்றது.
2.5.12.நீலி வாய்க்கால் – ஆண்டி சுனையிலிருந்து உருவாகும் வாய்க்கால் மூன்று தடங்களை ஏற்படுத்தி ஓடுகிறது. 1.போரத்தி செட்டில்மென்டை சுற்றி ஓர் ஓடை ஓடுகிறது. 2. மேற்கே கேரளத்தை நோக்கி ஓர் ஓடை ஓடுகிறது. 3.தாணிக்கண்டியை நோக்கி ஓர் ஓடை ஓடுகின்றதுமுட்டத்து வயல் ஊரின் மூப்பன் என்ற இருளனின் மகள் நீலியால் உருவாக்கப்பட்ட நீர் வழி என்பதால் நீலி வாய்க்கால் என்ற பெயரில் வெள்ளியங்கிரி மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
2.5.13.ராசி வாய்க்கால் – முட்டத்து வயல் ஊரிலுள்ள மூப்பனது மகள் ராசியால் உருவாக்கப்பட்ட வாய்க்கால் என்பதால் ராசி வாய்க்கால் என்ற பெயரில் வெள்ளியங்கிரி மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
2.5.14.ஊமை மதகு – ஊமைப் பெண்ணை நரபலியிட்டு புதைத்து உருவாக்கிய ஏரியை ஊமை மதகு என்ற பெயரில் வெள்ளியங்கிரி மக்கள் அழைக்கிறார்கள்.
2.5.15.நொய்யல் ஆறு – வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகின்ற இந்த ஆறு  நொய்யல் என்று அழைக்கப்படுகின்றதுநெல் வயல்களின் வளமைக்கு இந்த ஆறு முக்கியக் காரணமாக இருக்கின்றது.
2.5.16.சின்னாறு – கல்கொத்திப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி சாடிவயல் வழியாக ஓடுகின்ற ஆறுதாண்டிக்கண்டி நஞ்சனின் மகள் பொன்னி நீலி வாய்க்காலில் குளிப்பதைவிட சின்னாற்றில் குளிப்பதையே மிகவும் விரும்புகிறாள்.
2.5.17.தேன்கனிக்கோட்டை ஏரி – குளிப்பதற்கும் குடிப்பதற்கும் மற்றும் அனைத்துக் காரியங்களுக்கும் தேன்கனிக்கோட்டையின் ஏரி பகுதி மக்கள் ஏரி நீரையே பயன்படுத்துகிறார்கள்உழுவு மாடுகளை விவசாயிகள் இந்த ஏரியில்தான் குளிக்கச் செய்கிறார்கள்.
2.5.18.தளி ஏரி – தளி ஏரியிலிருந்துதான் சின்னாறு உற்பத்தியாகிறதுஇந்த ஆறு ஒகேனக்கல் வரை ஓடி காவேரியில் கலக்கின்றது.
2.5.19.ஊற்று நீர் – தேன்கனிக்கோட்டைப் பகுதியிலுள்ள மக்கள் வறட்சியின் காரணமாகக் காட்டாறுகளிலும்ஓடைகளிலும் மணலில் ஊற்று தோண்டி ஊற்றுநீரைப் பயன்படுத்துகிறார்கள்.
2.5.20.மலை ஓடை – தளிப்பகுதியிலுள்ள ஒரு மலையின் அருகே ஓடுகின்ற ஓர் ஓடை ஆகும்தளியில் நிகழ்ந்துள்ள நிலவரங்களைப்பற்றி ரவியிடம் கதைகேட்டுக்கொண்டிருந்த கெம்பண்ணாவும் நரேந்திரனும் இந்த ஓடையில்தான் குளிக்கிறார்கள்.
2.5.21.தென்பெண்ணை – கெலவரப்பள்ளி என்ற கிராமம் இந்த ஆற்றங்கரையில்தான் இருக்கின்றது.

வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும் 2

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை