Monday, May 25, 2020

இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 3


1.16.தமிழகப்பழங்குடிகள்
          தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள் பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்இவர்களது வாழ்விடங்களாக மலைகாடுவயல் ஆகியவை அமைகின்றன. 1991 இன்மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி 36 வகையான பழங்குடியினர்களின் மொத்த மக்கள் தொகை பின்வருமாறு அமைகின்றதுஅண்மையில் (ஜீன் 2016) நடுவண் அரசு நரிக்குறவர்களையும் இப்பட்டியலில் இணைக்க இசைவளித்துள்ளது.

பகுதி
மொத்தம்
ஆண்கள்
பெண்கள்
கிராமம் :நகரம்
5,74,194
2,93,012
2,81,182
கிராமப்புறம்
5,05,208
2,57,853
2,47,355
நகர்ப்புறம்
68,986
35,159
33,827


.எண்
தமிழ்ப்பெயர்கள்
ஆங்கிலப்பெயர்கள்
1.
ஆதியன்
Adiyan
2.
ஆரநாடன்
Aranadan
3.
எரவள்ளன்
Eravallan
4.
இருளர்
Irular
5.
காடர்
Kadar
6.
கம்மாரா(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைவட்டத்தைத்தவிர்த்து)
Kammara (Excluding Kanyakumari dist., and Shenkottahtaluk of Triunelveli dist.)

7.

காணிக்காரன்காணிக்கார்(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைமாவட்டத்தில்வாழ்பவர்கள்)

Kanikaran, Kanikar (In Kanyakumari district and Shenakottahtaluk)
8.
கனியன் :கணையன்
Kaniyan, kanayan
9.
காட்டுநாயக்கன்
Kattunayakan
10
கொச்சுவேலன்
KochuVelan
11
கோண்டகாபு
KondaKapus
12
கோண்டாரெட்டி
Kondareddis
13
கோரகர்
koraga
14
கோத்தர்(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைவட்டத்தைத்தவிர்த்து)
Kota (Excluding Kanyakumari dist., and Shenkottahtaluk of Triunelveli dist.)
15
குடியாமலக்குடி
Kudiya, Malakudi
16.
குறிச்சன்
Kurichcham
17.
குரும்பர் (நீலகிரிமாவட்டத்தில்வாழ்பவர்கள்)
Kurumbas (in the Nilgiris District)
18.
குருமன்
Kurumans
19.
மகாமலசர்
MahaMalasar
20.
மலைஅரையன்
MalaiArayan
21.
மலைப்பண்டாரம்
MalaiPandaram
22.
மலைவேடன்.
MalaiVedan
23.
மலக்குறவன்
Malakkuravan
24.
மலசர்
Malasar
25.
மலையாளி (வடாற்காடுமாவட்டத்திலுள்ளதர்மபுரிமாவட்டம்புதுக்கோட்டைசேலம்தென்ஆற்காடு,திருச்சிராப்பள்ளிமாவட்டங்களில்வாழ்பவர்கள்)
Malayali (in Dharmapuri, North Arcor, Pudukottai, Sakem, South Arcot and Tiruchirapalli districts)
26.
மலையகண்டி
Malayekandi
27.
மன்னான்
Mannan
28.
முதுகர்முதுவன்
Madugar, Muduvan
29.
முத்துவன்
Muthuvan
30.
பள்ளேயன்
Palleyan
31.
பளியன்
Palliyan
32.
பளியர்
Palliyar
33.
பனியர்
Paniyar
34.
சோளகர்
Sholagar
35.
தோடர்(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைவட்டத்தைத்தவிர்த்து)
Toda (Excluding Kanyakumari dist., and Shenkottahtaluk of Triunelveli dist.)
36.
ஊராளி
Uraly


1.17.பழங்குடிகள் பற்றிய புதினங்கள் அறிமுகம்
தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்இனவரைவியல் நோக்கு’ என்ற தலைப்பின் கீழ் அமைகின்ற இவ்வாய்விற்குரிய ஐந்து புதினங்களின் கதைச் சுருக்கங்கள் கீழ்வருமாறு அமைகின்றன.

1.17.1.சோளகர் தொட்டி அறிமுகம்
            சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு புதினம் அமைக்கப்பட்டிருக்கிறதுவிலங்குகள் தொட்டிக்குள் (ஊர்வராமல் காவல் செய்கின்ற பொறுப்பில் சிவண்ணா இருக்கிறார்அந்த இரவில் யானைகள் மூங்கில் வேலிகளை முறித்து வந்துவிடுகின்றனதொட்டியினர் ஒன்றுகூடி வெடியிட்டு விரட்டுகின்றனர்அந்த இரவு முழுதும் தூங்காமல் உக்கடத் தீ மூட்டி ஆட்டமாடி மகிழ்கின்றனர்

உக்கடத் தீ என்பது பொது  வெளியில் மையமாகத் தீயை மூட்டி சுற்றி அமர்ந்து குளிர்காய்வதாகும்மறுநாள் புட்டனின் மனைவி ஈரம்மாளுக்கு பிரசவவலி கண்டதால் குழந்தை பிறந்து மூன்றாம் நாளில்தான் பாங்காட்டு மூங்கில்களால் வேலியைச் சரிசெய்து கொண்டிருந்தனர்வேட்டைநாய் வனத்திலிருந்து ஒரு மானைத் தொட்டிக்கு விரட்டிவந்ததுஅவர்கள் மானை எச்சரிக்கையாக ஒரு திருடனைப்போல வேட்டையாடினார்கள்காட்டில் சுதந்திரம் பறிபோகிக்கொண்டிருக்கும் சூழலையும்முக்கிய விரோதியாக சீர்காட்டு ராஜீ செயல்படுவதைப் பற்றியும்சீர்காட்டுக்கு உரிமையானவர்களாக சிவண்ணாவின்  குடும்பத்தினர் வாழ்ந்த கதையையும் புட்டனுக்கு விளக்கினார்கள்

வேட்டையாடிய மான்கறியை ஊர் தலைமையாளாகிய கொத்தல்லிக்கிழவன் சமைத்தபோது சிவண்ணாவின் அப்பனும் தனது கூட்டாளியுமாகிய பேதனின் கதைகளை நினைத்துக்கொண்டிருந்தார்மணிராசன் கோயில் விழாவில் பேதனின் ஆவி ஊட்டியிருந்த பலிவாங்கும் உணர்ச்சியிலிருந்து சிவண்ணா இன்னும் மாறாமலிருக்கிறான்அப்போது மணிராசன் கோயிலுக்குத் தொட்டியின் கோல்காரனாகிய சென்நெஞ்சா பூசாரியாகத் திகழ்ந்தார்

கோல்காரர் சென்நெஞ்சாவுக்கு கரியன் சிக்குமாதா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்சிக்குமாதா சிறந்த வேட்டைக்காரன்கரடியை வேட்டையாடிய பெருமையை அவனது மனைவி கெம்பம்மாளைத்தவிர எல்லா தொட்டியினரும் பாராட்டினார்கள்வனத்துரை அதிகாரிகள் விசயம் அறிந்து சிக்குமாதாவை நொய்தாளாபுரத்திற்கு இழுத்துச்சென்று சித்திரவதை செய்கிறார்கள்சிக்குமாதாவை காப்பாற்ற வேண்டி குரும்பூர் மணியக்காரர் மாதப்பாவிடம் தொட்டியினர் சென்றார்கள்மாதப்பா தனது கையாளாகிய புளியம்பட்டி துரையனை உதவியாக அனுப்பிவைத்தார்துரையன் நொய்தலாபுரம் வன அதிகாரிகளிடம் அறுநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்துச் சிக்குமாதாவை மீட்டதாகக்கூறி தொட்டியினரிடமிருந்த 96ரூபாயைப் பெற்றுக்கொண்டான்தொட்டியினர் மீதி 504ரூபாய் கடனைத் திருப்ப வேண்டியவர்களாகத்  தொட்டி திரும்பினார்கள்

மழை பொய்த்ததால் கடனைத் திருப்ப முடியவில்லைஇந்தச் சூழலைப் பயன்படுத்தி மணியகாரர் மாதப்பா உதவியுடன் சீர்காட்டின் அருகிலிருந்த கோல்காரனது பூமியைத் துரையன் அபகரித்தான்துரையன் மனைவி சாந்தா மணியகாரருக்கு இணக்கமாக இருந்தது துரையனுக்குச் சாதகமாகவே அமைந்ததுமணியகாரர் தனது செல்வபலத்தாலும் அரசு அதிகாரத்தில் தனக்கிருந்த முக்கியத்துவத்தாலும்  சிவண்ணாவின் சீர்காட்டைத்  துரையன் அபகரிக்க பட்டா வரி ரசீதை வாங்கித் தந்தார்எதிர்த்துப் போராடிய பேதனும் சிவண்ணாவும் ஆசனூர் காவல்துறையினரின் சித்திரவதைகளுக்கு ஆளாயினர்முடிந்தால் சட்டப்படி முயன்று சீர்காட்டை மீட்டுக்கொள் என்ற அறிவுறுத்தலுடன் விடுவிக்கப்பட்டனர்

விவசாயத்தில் அக்கறையின்றி வேட்டையாடித் திரிந்த சிக்குமாதா யானை மிதித்துச் செத்துப்போனான்சிக்குமாதாவின் மனைவி கோல்காரன் சென்னெஞ்சாவுக்கு எதிராகப் பஞ்சாயத்துக்கூட்டி கணவரின் தம்பி கரியனின் விருப்பத்துடன் அவனை திருமணம் செய்துகொள்கிறாள்சென்நெஞ்சா தனது கோல்காரன் பொறுப்பை கரியனிடம் ஒப்படைத்தபின்பு சிறிது காலத்தில் இறந்துபோகிறார்பேதனும் உடல்நலம் தேறாமல் இறந்துவிடுகிறார்.  

ஜோகம்மாள் மகள் ரதியுடன் சோளகனைப் படகல் மாதேஸ்வரன் கோயிலுக்குச் செல்கிறாள்கரைஒந்தனை லிங்காயத்து சிக்கயதம்படியின் மகள் மல்லி ஜோகம்மாளுடனும் ரதியுடனும் இணைந்து கொள்கிறாள்பயணத்தின்போது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டு இறந்துகிடந்த ஒரு யானையின் சடலத்தைப் பார்க்கிறார்கள்ஒரு சோளகனைக்காரரிடம் யானை இறந்த கதையைக் கேட்டு நடக்கிறார்கள்லிங்காயத்தும் சோளகர்களும் வேறல்லஇருவரும் சகோதரர்கள் என்பதை விளக்குகின்ற தொன்மக் கதையை ஜோகம்மாள் இருவருக்கும் சொல்லிக்கொண்டே நடக்கிறாள்.  மாதேஸ்வரனை வழிபட்டுவிட்டுச் சிக்கயதம்படியிடம் நாளை சந்திப்பதாக விடைபெற்றுசோளகனை ஒண்ணன் வீட்டிற்குச் சென்று தங்கினார்கள்

ஒண்ணனது மருமகள் கெஞ்சி பற்றிய கதைகளை அறிந்துகொண்டு மறுநாள் இரவு தொட்டிபோய் சேர்கிறார்கள்சிலமைல்களுக்கு அப்பால் காட்டுத்தீ எரிகிறதுவனத்துறையினர் சோளகர்களின் உதவியுடன் தீயை அணைக்கிறார்கள்சிவண்ணாவின் உழைப்பை உணர்ந்து அவனை மாதம் 100 ரூபாய் சம்பளத்திற்குத் தீக்கங்காணியாக நியமிக்கிறார்கள்பாலப்படுகைவரை தீக்கங்காணியாக சுற்றி அலைகிறான்பாலப்படுகையில் ஜவனனின் மனைவியும் சித்தியின் தாயுமாகிய மாதியும் சிவண்ணாவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள்ஜவணன் கூட்டிய பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு சோளகர்தொட்டிக்கு அழைத்துவருகிறான்சிவண்ணாவின் மனைவி சின்னத்தாயி மாமியாளிடம் சண்டையிட்டு மகன் ரேசனுடன் பிறந்த ஊரான உருளிகுட்டைக்குப் போய்விடுகிறாள்மாதி கொஞ்சங்கொஞ்சமாக சோளகர் தொட்டியில் ஒருத்தியாக மாறிவிடுகிறாள்

ராஜீவின் சீர்காட்டில் வேலைக்கு வந்திருந்த மல்லி ரதியைப் பார்க்க வந்திருந்தாள்மல்லியைத் தேடி மல்லியின் அப்பா சிக்கையதம்பிடி வந்தார்ஏர் செதுக்கிக்கொண்டிருந்த சிவண்ணாவுக்கு உதவியபடி சிறிது நேரம் பேசினர்பாண்டுரெங்கனின் கருப்புக்கல் குவாரியில் மேஸ்திரியாக வேலை செய்யும் சிக்கையதம்பிடிகாட்டின் கடத்தல்காரர்களால் உருவாகியுள்ள பயத்தின் காரணமாக வேலையிலிருந்து விலக விரும்புவதை விளக்கினான்சந்தனக்கடத்தல் வீரப்பனை நேரில் பார்த்த அனுபவத்தை விளக்கினான்தொட்டியில் அறுவடை முடிந்த ஒரு நாளில் சித்தி பூப்பெய்துகிறாள்மாதியின் விருப்பப்படி அவளது  அண்ணன் கெஞ்சனை கர்நாடகம் தொட்டமாரா சென்றுசிவண்ணா  அழைத்துவந்தான்கெஞ்சன் தனது மகன் ஜீருண்டைக்கு விரைவில் சித்தியைப் பெண் கேட்டு வருவதாக உறுதியளித்தான்

தீக்கங்காணி வேலை முடிந்து பல மாதங்கள் ஆயிற்றுஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர்வீரப்பனைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்குநாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும்வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும்நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம்வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.  நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாதுமீறினால் சுடப்படுவீர்கள்

வீரப்பனைத் தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தனஎல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள்கெட்டவாடி பாதையில் ஒசியூரப்பா தலைமையில் கர்நாடக போலீஸ் முகாம் சோளகர் தொட்டியினரை சித்திரவதை செய்தார்கள்தமிழ்நாடு தலமலை முகாமில் அப்பன் தொட்டபந்தையனும் அவனது மகன் பசுவராஜீவும் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.தொட்டியினர் வைத்திருந்த வேட்டை துப்பாக்கிகளை ஒப்படைக்க நிர்பந்தித்து நிராயுதபாணிகளாக மக்களை மாற்றினார்கள்நிராயுதபாணிகளான பழங்குடிமக்கள் மீது பலவடிவங்களில் சித்திரவதைகளை நிகழ்த்தினார்கள்

காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதில் தொடங்கி ஒர்க்சாப் மின்சாரம் ஏற்றுதல்சித்திரவதைகளுக்கு ஆளாகியப் பெண்களின் உடல்களை வன்புணர்ச்சியால் மேலும் துயரப்படுத்துதல்பிறந்த சிசுவை விச ஊசியிட்டுக் கொல்லுதல்சித்திரவதையின் கடைசி கட்டமாக ஆண்களைக் கொன்று வீரப்பன் படையினரது சீருடைகளை அணிவித்து தேடுதல் வேட்டையில் கொன்றதாகக் கணக்கு காட்டுதல் என ஏராளமான சித்திரவதைகளை நிகழ்த்தினார்கள்

சித்திரவதை முகாமிலிருந்து சிவண்ணா தப்பித்துவிடுகிறான்வீரப்பன் படையில் இணைந்து தற்காத்துக்கொள்கிறான்சிவண்ணாவைப் பற்றி விசாரிப்பதற்காக மாதியும் சித்தியும் இழுத்துச்செல்லப்பட்டு பல துயரங்களுக்குப் பிறகு உயிர் பிழைத்து வருகிறார்கள்சிவண்ணா மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான்தலமலை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரண் ஆகிய செய்தி நாளிதழ்களில் வெளிவருகிறது.  தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியினால் மாதி மகிழ்கிறாள்.

1.17.2.சங்கம் அறிமுகம்
கொல்லி மலை மலையாளியான சாவித்திருமனின் மகன் சாவிச்சடையனை மையமாகக் கொண்டு இந்த நாவல் அமைக்கப்பட்டிருக்கிறதுபஞ்சாயத்து ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அதிகாரி தோரணையுடன் இருவர் காரில் மலைக்கு வந்து சாவிச்சடையனை சந்தித்து அவனது அப்பனை அழைத்துவரச் சொன்னார்கள்வந்திருப்பவர்களைப் பற்றிய அச்ச உணர்வுடன் சென்ற சாவிச்சடையன் “சர்க்காரன் வந்திருக்காம்பா” என்று தந்தையை அழைத்தான்

சர்க்காரன் என்றாலே கொல்லிமலை வாசிகளுக்கு காவல் இலாக்காவும் வனப்பாதுகாப்பு இலாக்காவும்தான் தெரியும்அவர்களைக் காவல்துறை என்று நினைத்துக்கொண்ட சாவித்திருமன் அஞ்சி சேவை செய்யத் தயாரானார்அவர்களின் கட்டளைப்படி நாலு பலாப்பழம்இரண்டு வாழைத்தாறுஇருப்பத்தைந்து அன்னாசிப்பழம் ஆகியவற்றை விலையின்றி காரில் ஏற்றினார்அதிகாரிகள் வண்டியைக் கிளப்பிச் சென்றனர்திருமனின் மனைவி திருமி பத்துப் பன்றிக்குட்டிகளைக் குடும்பப் பொருளாதார நலன் பற்றிய கனவுகளுடன் வளர்க்கிறார்திருமனின் மகள் பிடாரி சாமைகஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்தாள்கஞ்சி குடித்துவிட்டுத் திருமனும் சடையனும் விவசாய வேலைக்குக் கிளம்புகின்றனர்.
            மலை அடிவாரத்திலுள்ள சமவெளிப்பகுதியில் ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை கூடும்மலைவாசிகள் இந்தச் சந்தையில்தான் தங்களது உற்பத்தி பொருட்களைச் சுமந்துசென்று விற்பனை செய்வர்சந்தையில் சர்க்கார் தீர்மானித்த வரியைவிட இரண்டுமடங்கு வரிவசூலிக்கின்ற கந்துவட்டிக்காரர்களிடம் அதிகாரம் இருக்கின்றதுமலைவாசிகள் அவர்களது சந்தையை நாடி வாழ்வதன் காரணமாக காலமெல்லாம் கீழ்நாட்டுக்காரர்களிடம் அடிமையைப்போல அஞ்சி வாழ்கின்றனர்
மலைவாசிகள் தங்களது உற்பத்திப் பொருட்களைக் கீழ்நாட்டு வியாபாரிகள் தீர்மானிக்கின்ற விலையில் விற்றுவிட்டுக் கிடைத்த வருமானத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வருவார்கள்வருமானத்தின் போதாமையால் பல நேரம் கடனுக்குப் பொருளை வாங்கிக்கொண்டு கடன்காரனாக மலைக்கு திரும்புவார்கள்திருமன் சந்தையை முடித்துவிட்டுமகள் பிடாரி தாய்மாமன் வீட்டு நோம்பிற்குச் செல்வதற்காகப் புதுத்துணியைக் கடன் பெற்று வாங்கி வருகிறார்.
            ஊர் தர்மகர்த்தா ஊருக்குத் தலைமையாள் ஆவார்மூன்று நியாயத்திற்காக பஞ்சாயத்துக் கூடியிருந்தது. 1.மாட்டைய கோவாலுவின் மனைவியுடன் சினுப்ப பெரியசாமி வாழ்ந்துவிட்டான். 2.முகூர்த்த ஏர் கட்டியபோது சாவித்திருமன் தனது காட்டில் முள்ளு வெட்டி நெருப்பு வைத்துக் கொளுத்தியிருக்கிறான். 3.கலச வெள்ளையனின் மனைவி கருமாயி வீட்டுக்கு தூரமாகிய போது ஊர் கட்டுப்பாடுபடி கிராம பொதுக் குடிசையில் தங்காமல் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.

            சத்தியச்சடங்கின் மூலமாக பெரியசாமியின் குற்றத்தை நிரூபித்து “எரனூறு ரூவா குத்தமும்ரெண்டு மொடா கேவுரும்ஒரு பன்னியும்” பெரியசாமி கொடுக்க வேண்டும் எனவும்சாவித்திருமனும் கருமாயியின் கணவனும் இருபத்தஞ்சு ரூவா குத்தம் செலுத்தனும் எனவும் தர்மகர்த்தா தண்டனை வழங்கினார்.

            மலைவாசிகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்லமாட்டார்கள்ஓடையில் சென்று சுடுநீர் வைத்துக் குளித்துத் துணிதுவைத்துத் தங்களைப் புதுப்பித்துக்கொள்வார்கள்ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தோட்டக்கலை காய்கறி அபிவிருத்தி அலுவலர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்கூட்டத்தில் ஒரு அதிகாரி பேசினார்சர்க்கார் நிறைய உதவி செய்யவிருப்பதை விளக்கினார்இலவசமாகப் பழச்செடிகள்காபிஏலக்காய் செடிகள் கொடுக்கப்படும் என்பதையும் உரம்உழுபடை கருவிகள் பாதி விலையில் கொடுக்கப்படும் என்பதையும் விளக்கினார்பின்னாலிருந்து திட்டமிட்டபடி ஒரு அதிகாரி கையை உயர்த்தியபோதெல்லாம் மக்கள் பேச்சைப் புரிந்துகொண்டதைப்போல கைதட்டி நடித்தார்கள்.

            மழை பொய்த்ததால் மழைவேண்டி சாணிவெட்டுவிழாவிற்கு நாள் குறித்துக் கொண்டாடினார்கள்பிறகு லேசான மழை பெய்ததும் பன்றி வேட்டைக்கு உகந்த பருவமென்று ஊரே ஒன்றுபட்டு தர்மகர்த்தா பூசாரி தலைமையில் பன்றிவேட்டைக்குச் சென்று வேட்டையாடினர்.
            கந்துவட்டிக்காரன் அஜீஸ்சாயபுவின் கையாள் சுக்கரப்பள்ளன் வட்டி வசூலிக்க வரும்போதெல்லாம் உரிய தேதியில் பணம் செலுத்தாதவர்களைத் தண்டித்து வந்தான்சாட்டையால் அடித்துத் துவைப்பதிலிருந்து வீட்டுப்பெண்களை இழுத்துச்செல்வதுவரை கொடுமைகளை நிகழ்த்தினான்மலைவாசிகள் அந்தக் கொடுமைகளை எதிர்க்க இயலாதவர்களாக இருந்தனர்வெள்ளையனை வட்டியைச் செலுத்திவிட்டு திருப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவனது மனைவியை ஊரே பதறும்படி இழுத்துச் சென்றான்.

            சிலோன் சீரங்கன் இலங்கை தேயிலைத் தோட்டத்தொழிலாளியாக வாழ்ந்து வந்தவன்தொழிலாளர் நல போராட்டங்களுக்கான சங்கத்திலிருந்து பிரச்சனைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வது பற்றிய அனுபவங்களைப் பெற்றவன்கந்துவட்டிக்காரர்களின் அடாவடித்தனத்தை எதிர்க்க முயற்சித்தான்மலைவாசிகளின் எதிர்ப்பு உணர்விற்கு வழிகாட்ட முன்வந்தான்வெள்ளையனை அழைத்துச்சென்று கந்துவட்டிக்காரர்கள் மீது போலீஸில் புகார் செய்தான்போலீஸ்காரர்கள் கந்துவட்டிக்கார சாயுபை அழைத்து அவர் முன்னாலேயே வெள்ளையனையும் சீரங்கனையும் சித்திரவதை செய்தார்கள்பிரச்சனைகளுக்கு எதிராக மலைவாசிகள் சங்கமாக ஒன்றிணையாமல் பிரச்சனைகளை எதிர்கொள்வது கடினம் என்பதை சீரங்கன் உணர்ந்தான்.

            சேலத்திற்குச் சென்று சங்கத் தலைவர் வேலுச்சாமியை சந்தித்து கொல்லிமலையில் சங்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்சடையன் உறுதுணையாகச் செயல்பட்டான்ஊரில் நிகழும் தவறுகளை எதிர்த்து மக்களை சங்கமாக்குவதற்காக இருவரும் முயற்சித்தனர்வனத்துறையினர் ஒரு பொய்புகாரை சுமத்தி சடையனையும் சீரங்கனையும் ஒரு வருட சிறைதண்டனைக்கு ஆளாக்கினார்கள்தோழர் வேலுச்சாமி வெள்ளையனை கந்துவட்டிக்காரன் சாயபு வீட்டிற்கு அழைத்துச்சென்று சாயபுவை மிரட்டி கருமாயியை விடுவித்தார்பணம் கொடுக்காமலேயே வெள்ளையன் மனைவி விடுவிக்கப்பட்டதால் ஆச்சரியமடைந்த மலைவாசிகளிடம் சங்கத்துக்காரர்கள் மீதான நம்பிக்கை உருவெடுக்க ஆரம்பித்ததுவெள்ளையன்பெரியசாமிஆண்டிபொன்னம்மாள் போன்ற பலர் சங்கம் உருவாக ஆதரவாக உருவாகினர்.

            கீழ்நாட்டுச் சந்தையைச் சார்ந்திருப்பதுதான் நமது பலவீனம் எனில் சந்தையை மலையிலேயே உருவாக்கிக் கொள்ள வேண்டும்இந்த முயற்சிக்குச் சங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று வேலுச்சாமி உறுதியளித்தார்சிறையிலிருந்து சீரங்கனும் சடையனும் வந்ததும் முயற்சி செய்வதாக வெள்ளையன் தெரிவிக்கிறார்.

            சிறையிலிருந்து இருவரும் விடுதலையாகி வருகிறார்கள்சிறையில் வாழ்ந்தபோது தோழர் குமார் அவர்களிடம் சங்கம் பற்றியப் பாடங்களை அதிகமாகக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள்தோழர் வேலுச்சாமியின்  வழிகாட்டுதல்படி மலைவாசிகளின் சங்கத்தை இருவரும் உருவாக்குகிறார்கள்சீரங்கன் சங்கத்தலைவராகவும் சடையன் செயலாளராகவும் பொறுப்பேற்று சங்கத்தை வளர்த்தெடுக்கிறார்கள்இவர்களது புதிய முயற்சிக்கு ஊரில் ஆதரவும் எதிர்ப்பும் பலவாறாக உருவாகி வந்தனசடையனின் குடும்பம் அவனது சங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவே இருந்தது.  ஒவ்வொரு திட்டங்களையும் சங்க உறுப்பினர்கள் குழுவாகக் கலந்துரையாடி முடிவெடுக்கின்றார்கள்.

            சங்கம் இரண்டு பிரச்சனைகளை எதிர்கொள்ள உறுதியாக முடிவெடுத்திருந்தது. 1.கீழ்நாட்டுக்காரர்களின் அனைத்துத் தடைகளையும் முறியடித்து சந்தையை மலையிலேயே கூட்டுவது. 2.தைல மரங்கள் நடுவதற்காக கொல்லிமலை வாசிகளின் நிலங்களை அபகரித்துக்கொண்டு மலையிலிருந்து அகதிகளாக மக்களை வெளியேற்றுவதற்கான சர்க்காரின் திட்டத்தை முறியடித்து வெற்றிகொள்வது.

            திட்டமிட்டபடி கலெக்டரின் தலைமையில் சந்தையை மலையிலேயே உருவாக்கி வெற்றிபெறுகிறார்கள்அடுத்ததாக சர்க்காரின் நிலஅபகரிப்பில் சாவித்திருமனின் நிலமே முதலாவதாக இடம் பெற்றிருந்ததுதிருமன் நிலத்தைப் பாதுகாக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயனளிக்கவில்லைஅதிகாரிகளின் கொடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக ஏதும்செய்ய முடியாத நிலையில் கர்ஜித்துக்கொண்டிருந்தான்இறுதியாக அவன் சங்கத்தின் செயலராகிய தனது மகன் சாவிச்சடையனை கூவி அழைத்தான்

சடையனும் சங்கத்தினரும் படை சூழ நிலஅபகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர்ஒன்றுதிரண்ட மக்கள் கூட்டத்திற்கு அஞ்சி அதிகாரிகள் பின்வாங்கித் திரும்பிச் சென்றனர்நிலஅபகரிப்பிற்காக நடப்பட்டிருந்த சர்க்காரின் அதிகாரப்பூர்வமான பலகையைப் பிடுங்கி எறிந்தார்கள்சர்க்காரின் அடுத்தக்கட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள மலைவாசிகளின் சங்கம் தயாராகத் தொடங்கியது.

இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 4

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை