Monday, May 25, 2020

இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 2

1.8.2.3.5.6.அன்றாட நிகழ்வுகள் சார்ந்த இனவரைவியல்
           ஒரு சமூகத்தை அல்லது பண்பாட்டை இனவரைவியல் நோக்கில் ஆராய்ந்து விளக்க வேண்டுமானால் அம்மக்களுடன் வாழ்ந்துஓர்ந்து விவரிக்க வேண்டும்அத்தகைய முயற்சியில் இனவரைவியலாளர் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளையும்ஒரு சுழற்சித்தளத்தில் காலவரிசைப்படி தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளையும் பங்கேற்று உற்றுநோக்கி ஆராய்ந்து விளக்குகின்ற எளிமையிலிருந்து சிக்கலை நோக்கி செல்லும் அணுகுமுறை என்பதாக விளக்குகின்றார்.

1.8.2.3.6.காட்சி சார் இனவரைவியல்
          எழுதுவதால் மட்டுமே ஒரு சமூகத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைத்துவிட முடியாதுஎழுத்து ஊடகத்துக்கு அப்பால் சென்று சமூகத்தைக் காட்டுவதற்கு நிறைய வகைமைகள் உள்ளனஓரு பண்பாட்டில் உள்ள பொருட்களைக் கொண்டும் அப்பண்பாட்டை விளக்க இயலும்அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு காட்சிக் கூடமும் அங்குள்ள பொருட்களின் மூலம் ஏராளமான கருத்தக்களை எடுத்தரைக்கிறதுஅவ்வாறே ஒரு சமூகத்தைப் பற்றிய நிழற்படங்களும்ஆவணப்படங்களும் பிற காட்சி சார்ந்த எடுத்துரைப்புகளும் பல்வேறு நிலைகளில் பொருள் கூறுபவையாக உள்ளனஎழுதப்படும் இனவரைவியல் பனுவல் மூலம் நூலாசிரியரின் கருத்துக்கள் மட்டுமே வாசகர்களக்கு கிடைக்கின்றனஆனால் காட்சி ஊடகமானது அதனால் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் பொருள் புரிய வைக்கிறதுகாட்சி சார் இனவரைவியல் என்பது இனவரைவியல் வகைமைகளில் மிகவும் தனித்துவமானதாகும்மொழி அறியாதவரும் புரிந்துகொள்ள முடியும்.

1.8.2.3.7.கலைக்களஞ்சியம் முறை சார்ந்தது
          கலைக்களஞ்சியம் என்பது ‘எல்லாவற்றையும் கொண்டது’ என்று பொருளாகும்அதுபோலவே இனவரைவியலில் பொதுவாக இடம்பெறாத செய்திகளையும் இணைத்துக் கொடுக்கும்போது அது கலைக்களஞ்சிய வகையிலான இனவரைவியல் என்று பெயர் பெறுகிறது.

1.9.இனவரைவியல் வரையறைகள்
            இனவரைவியல் என்பது ஒரு குறிப்பிட்ட மானிட சமுதாயம் ஒன்றினைப் பற்றிய ஆராய்ச்சி விவரிப்பாகும் என்கிறது பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (புஷ்பா,கி.2012: 18). எனவே மானிடச் சமுதாயத்தை பற்றிய உண்மைகளை விவரித்து எழுதுவதே இனவரைவியல் என்பதை அறிய முடிகிறதுஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது வட்டாரத்தில் காணப்படும் அனைத்து வகையான மரபுகள் பற்றி நிகழ்த்தப்படும் விளக்கமுறை ஆய்வு இனவரைவியல் ஆகும் என்கிறார் புரூன். (புஷ்பா,கி.2012:18). ஏதேனும் ஒரு பண்பாட்டைப்பற்றி எழுதப்பட்ட வரைவு அல்லது விளக்கம் இனவரைவியல் ஆகும்என்கிறார் ஹெர்கோவிட்ஸ். (புஷ்பா,கி.2012:18). லெவிஸ்ட்ராஸ் பல்வேறுபட்ட இனக்குழுக்களின் தொலைநோக்குடைய வாழ்வியல் நெறிகளைக் கூடியவரையிலும் துல்லியமாகப் பதிவு செய்யும் குறிக்கோள் உடையது இனவரைவியல் ஆகும் என்கிறார். (புஷ்பா,கி.2012:19).
இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட இனக்குழு மக்களைப் பற்றி எழுதுதல் மற்றும் முழுமையான கண்ணோட்ட ஆய்வு ஆகும்பண்பாட்டு ஆய்வுகளுக்கு இனவரைவியல் அடிப்படையாகும்ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை அல்லது பண்பாட்டை விளக்கும் கலை அல்லது அறிவியல் இனவரைவியல் என்று அழைக்கப்படும். (ஸ்டீபன் 2010:13)
ஒரு குழு அல்லது ஒரு பண்பாட்டைப் பற்றி விளக்கிக் கூறும் வர்ணனைக்கலை அறிவியல்தான் இனவரைவியல்இந்த வர்ணிப்பானது எங்கோ ஒரு நாட்டிலுள்ள சிறிய இனக்குழுவைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஒரு நடுத்தரமான நகரத்தில் உள்ள பள்ளிக்கூட சித்திரிப்பாகக்கூட இருக்கலாம் என்கிறார் பெடர்மென். (புஷ்பா,கி.2012:19).
எனவே இனவரைவியலானது வர்ணனைத் தன்மையும் அறிவியல் பண்பும் கொண்டதாகும் என்பதை இவ்வரையறையின் மூலம் அறிய இயலுகிறது.
ரோஜர் ஜான்ஸ் ஜெக் இனவரைவியல் என்னும் சொல்லானது இரட்டைப் பொருளுடையதுஇனவரைவியல் என்பதே வெளிப்படையாகவும் (இனவரைவியல் பிரதி– மானிடவியலாளர்களால் எழுதப்படும் கட்டுரை அல்லது நூல்கள்செயல்பாடாகவும் (பங்கேற்று உற்றுநோக்கல்களப்பணி ஆகியவைஅமையும். (புஷ்பா,கி.2012: 19).
இனவரைவியல் என்பது “ஒரு பயண எழுத்தாளரின் பயணக்கதை அல்லது புலனாய்வு அறிக்ககையைப் போன்றில்லாமல் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் விளக்கங்களை எப்படி முன்வைப்பார்களோ அப்படியே முன்வைப்பதாக அமைய வேண்டும்.
எழுத்தாளர் யாரைப் பற்றி எழுதுகிறானோ அந்த மக்களின் வாழ்க்கை முறைப் பற்றிய விளக்க உரைகள் விவர அறிக்கைகளை உருவாக்கக்கூடிய விசாரணைமுறை எழுத்து வடிவம் இனவரைவியல் ஆகும் என்கிறார் டென்சின். (புஷ்பா,கி.2012: 20).
 நமக்கு மிகவும் அன்னியமான பண்பாடுகளோடு போராடி அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு  முக்கியத்துவம் அளிக்கக்கூடிய சமூக ஆய்வியல் முறையை இனவரைவியல் என்றோ நாட்டார் பார்வையிலான விவரிப்பு என்றோ அழைக்கின்றனர் என்கிறார் ஏகார். (புஷ்பா,கி.2012: 20).
எனவே இனவரைவியல் இரட்டைப் பரிணாமங்களைக் கொண்டதுஓர் அய்வு முறையாகவும் எழுத்துப் பிரதியாகவும் சமூக ஆய்வு முறையாகவும் வரையறை செய்கின்றனர்.
ஒரு தனித்த சமூகத்தின் பண்பாட்டைப் பற்றி மானிடவியலாளர்கள் அச்சமூகத்தோடு நீண்ட காலம் ஒன்றி வாழ்ந்து ஆய்வு செய்து அதனை எழுத்தில் எழுதி அளிக்கும் தனிவரைவு நூலே இனவரைவியல் எனப்படும். (பக்தவத்சலபாரதி 2005: 887)
இனவரைவியல் என்பது களப்பணியை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டமாகும்அதாவது மானிடவியலாளர் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது ஏதேனும்  ஒரு துணைப் பண்பாட்டைப் பற்றி அப்பண்பாட்டைக் கொண்டிருக்கும் மக்களோடு குறிப்பிட்ட காலம் வரை தங்கியிருந்து அவர்களோடு  வாழ்ந்து அவரது அன்றாட வாழ்க்கையில் பங்கேற்று ஆராய்ந்து வெளிப்படுவதாகும். (தனஞ்செயன்.2006: 2)
இனவரைவியல் என்பது ஒரு குறிப்பிட்ட மனித சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற களப்பணி பண்பாட்டு ஆய்வு முறையாகவோ ஆய்வின் வெளிப்பாடாகவோ அமையக்கூடிய முடிவகளின் பிரதியாகவோ இருக்கலாம்இதன் மூலம் அம்மக்களின் பண்பாடுசட்டநியதிகள்வழிகாட்டுமுறைகள்சடங்குகள்சமயநிலைகள்போன்றவை வெளிவுலகிற்குப் புலப்படுத்தப்படுகின்றனஇவ்வரையறையானது அன்புச்செல்வன் பதிவாக அன்பரசன் ஆய்வின் மூலம் அறிய முடிவதாக ஆய்வாளர் புஷ்பா விளக்குகிறார். (புஷ்பா,கி.2012:21).
களப்பணியில் ஈடுபட்டு மக்களின் பண்பாட்டு முறைகளைப் பதிவு செய்வதே இனவரைவியல் ஆகும்இவ்வாறாக மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகளை ஆராய்ந்து எழுதப்படுவது இனவரைவியல் என்பதை அறிய முடிகின்றது.
இனவரைவியல் என்பது களப்பணி மூலம் தரவுகளைத் திரட்டும் ஆய்வு முறையாகும்மக்களின் பண்பாட்டுக் கூறுகளாக மொழிசமயம்சடங்குகள்நம்பிக்கைகள்தொழில் போன்ற பண்பாடு சார்ந்த அனைத்துவிதமான வாழ்வியல் கூறுகளைப் பற்றியும் அறிய இனவரைவியல் ஆய்வு அணுகுமுறை இன்றியமையாததாகும்.

1.10.இந்தியாவில் இனவரைவியல் ஆய்வு
இந்தியாவில் இனவரைவியல் ஆய்வு முதன்முதலாக ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டதுஇந்தியாவில் இனவரைவியல் ஆய்வு தொடங்கிய விதம் குறித்துப் பக்தவத்சல பாரதி அவர்கள் நரிக்குறவர் இனவரைவியல் எனும் நூலிற்கு வழங்கியுள்ள அணிந்துரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முதல் பெருங்கிளர்ச்சி மே 10, 1857 இல் ஏற்பட்ட பின்னர்தான் இந்தியக் குடிகளைப் பற்றி நாம் பெரிதும் அறியாதவராய் உள்ளோம் என ஆங்கிலேயர்கள் எண்ணத் தொடங்கினர்இன்னும் சில நூற்றாண்டுகள் இந்திய மண்ணை ஆண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1860களில் இந்திய மக்களைப் பற்றிய வட்டார ரீதியான தகவல்களைப் புள்ளிவிபரப்படி முறையாகத் தொகுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
            1862ல் ஒவ்வொரு மாவட்டத்திற்கென்றும் ஒரு தனிக் கையேடு உருவாக்குவது அவசியம் எனத் தீர்மானித்து விசாகப்பட்டினம் ஆட்சியராக இருந்த கார் மைக்கேல்மதுரை ஆட்சியராக இருந்த நெல்சன் ஆகிய இருவரும் கையேடுகள் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டனர்இதனைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் 1800 களின் முடிவில் அனைத்து மாவட்டங்களுக்கும் கையேடுகள் தயாரிக்கப்பட்டன. (பக்தவத்சலபாரதி 2004:5)
            எனவே இந்தியாவைப் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து ஆள வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்கின்ற சமூகம் குறித்து அறிந்துகொள்ள கையேடுகளைத் தயாரித்தனர்கையேடுகளைத் தயாரிக்க இந்திய சமூகங்கள் குறித்து ஆங்கிலேயர் செய்த ஆய்வுதான் இந்தியாவில் செய்யப்பட்ட முதல் இனவரைவியல் ஆய்வாக அறிய முடிகின்றது.
            இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்தபிறகு இந்தியர்களால் இனவரைவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுஇந்தியர்கள் செய்த இனவரைவியல் ஆய்வியல் கோட்பாட்டின் நுட்பம் இல்லாமல் விவரணப் போக்கு மட்டுமே பின்பற்றப்பட்டது.

1.11.இனவரைவியல் கூறுகள் 
இனவரைவியல் என்பது பண்பாட்டை எழுதுவது ஆகும்பண்பாடு என்பது பல கூறுகளின் தொகுப்பு ஆகும்ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் பண்பாட்டை இனவரைவியல் நூலாக எழுத முற்படும் இனவரைவியலாளர் பின்வரும் கூறுகளை இனங்கண்டு விளக்குவர்அவை, 1.புவிச் சூழலியல் 2.சுற்றுச் சூழல், 3.காலநிலை 4. குடியிருப்பு முறை 5.பொருள்சார் பண்பாடு 6.குடும்ப அமைப்பு 7.உறைவிடமுறை 8.திருமணமுறை, 9. வாழ்வியல் சடங்குகள் 10,குழந்தை வளர்ப்பு முறை, 11.பண்பாட்டுவயமாக்க முறை12.மக்களின் உள்ளத்தியல் பாங்குகள், 13.மணக்குடை, 14.மணவிலக்குமுறை, 15. வாழ்க்கைப் பொருளாதாரம் 16.தொழிற்பகுப்பு 17.உற்பத்திமுறை, 18.நுகர்வு முறை, 19.பங்கீட்டு முறை, 20.பரிமாற்ற முறை, 21.கைவினைத் தொழில்கள், 22.அரசியல் முறை, 23.அதிகார உறவுகள், 24.சமூகக் கட்டுப்பாடு, 25.மரபுசார் சட்டங்கள், 26.சமய நம்பிக்கைகள், 27.சடங்குகள், 28.வழிபாட்டு முறைகள், 29.சூனியம், 30.வழக்காறுகள், 31.விழாக்கள், 32.இசை, 33.விளையாட்டுக்கள், 34.அழகியற் சிந்தனைகள், 35.வழக்காறுகள், 36.ஈமச்சடங்குகள் முதலியவை ஒரு தனிப்பட்டச்  சமூகத்தைப் பற்றியதாக இருப்பதால் இனவவைியல் நூல்கள் தனிவரைவு நூல்கள் என்றும் அழைக்கப்படும் என்கிறார் (பக்தவத்சல பாரதி 2003:118,119). இலக்கிய மானிடவியல் எனும் நூலில் 53 கூறுகளைச் சுட்டுகிறார். 1.நில அமைப்பு, 2.சுற்றுச்சூழல், 3.காலநிலை, 4.பருவகாலங்கள், 5.மழைவெப்பம், 6.தாவரங்கள்விலங்குகள், 7.வாழிடம், 8.குடியிருப்பு முறை, 9.புழங்கு பொருட்கள், 10.குடும்ப அமைப்பு, 11.திருமண முறைகள், 12.மணக்கொடை, 13.மணவிலக்கு, 14.மறுமண முறைகள், 15.உறவுமுறை, 16.உறைவிடமுறை, 17.வாழ்க்கை வட்டச் சடங்குகள், 18.குழந்தைவளர்ப்பு முறை, 19.பண்பாட்டுவயமாக்க முறை, 20.உளவியற் பாங்குகள், 21.நடத்தை முறைகள், 22.வாழ்க்கைப் பொருளாதாரம், 23.தொழிற் பகுப்பு, 24.பாலினப்பாகுபாடு, 25.உற்பத்தி முறைகள், 26.நுகர்வு முறைகள், 27.பங்கீட்டு முறைகள், 28.பரிமாற்ற முறைகள், 29.உணவுமுறை, 30.கைவினைத் தொழில்கள், 31.அரசியல் முறைகள், 32.அதிகார உறவுகள், 33.சமூகக் கட்டுப்பாடு, 34.மரபுகள்சட்டங்கள், 35.குற்றங்கள்தண்டனைகள், 36.சமய நம்பிக்கைகள், 37.தெய்வ கணங்கள், 38.வழிபாட்டு முறைகள், 39.மந்திரம்சூனியம், 40.விழாக்கள், 41.இசை மரபு, 42.நடனம்கூத்து, 43.விளையாட்டுகள், 44.அழகியற் சிந்தனைகள், 45.வாய்மொழி வழக்காறுகள், 46.மருத்துவமுறை, 47.போர், 48.அறிதிறன் முறைகள், 49.வகைப்பாட்டு முறைகள், 50.ஆடை அணிகளன்கள், 51.மரபுசார் அறிவு, 52.உலகப் பார்வை, 53.பிரபஞ்சம் பற்றிய அறிவு (பக்தவத்சலபாரதி.2014: 7-9). ஒரு சமூகத்தைப் பற்றித் தொகுக்கும் இனவரைவியல் செய்திகள் அனைத்தும் அச்சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் என்பது புலனாகின்றது.

1.12.இலக்கியமும் இனவரைவியலும்        
இலக்கியமும் பண்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவைஎனவே இலக்கிய வடிவில் எழுதப்பட்ட மக்கள் திரளின் பண்பட்டினைக் குறிப்பிடுவது ஆகும்.
இலக்கியம்இனவரைவியல் ஆகிய இவ்விரு பண்பாட்டுப் பனுவல்களும் ஒன்றோடொன்று வேறுபடுகின்ற இடங்களும் உண்டுஒன்றுபடுகின்ற இடங்களும் உண்டு.

1.12.1.இலக்கியத்திலிருந்து இனவரைவியல் வேறுபடும் இடங்கள்
இலக்கியவாதி தான் வாழும் சமூகத்திலிருந்து  பெற்ற அனுபவங்களைக் கொண்டும்சமூகத்தைப் பற்றிய செய்திகளை ஒரு பார்வையாளனாக இருந்து சேகரித்துக் கொண்டும் புனைவுகளுடன் இலக்கியத்தைப் படைக்கிறான்ஆனால் இனவரைவியலாளன் எந்தப் பண்பாட்டை ஆராய விழைகிறானோ அந்தப் பண்பாட்டைச் சேர்ந்த சமூகத்தில் தானும் ஓர் உறுப்பினராக இருந்து சேகரித்த செய்திகளைத் தன் உள்ளப்பாங்கிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி இனவரைவியலைப் படைக்கிறான்.
ஒரு புலவன் தன்னுடைய இன்ப துன்ப நிலைகளை அல்லது புகழ் பெற்ற மனித குல சமுத்திரத்தையே செய்யுள் வடிவிலோ உரைநடை வடிவிலோ எடுத்துக் கூறுவது இலக்கியம் ஆகும்இது முழுக்க முழுக்க புலவனின் மன இயல்பைக் கூறுவதையே முழு நோக்கமாகக் கொண்டிருக்கும்சமூகப் பயன் இனவரைவியலிலே மிகுதியாக உண்டுஇலக்கிய ஆய்வின் மூலம் சமூகப் பயன்பாடு மிகுதியாக இருக்காது.
மேலும் இலக்கியம் படைக்கப்பட பெரும்பாலும் எந்த தரவுகளும் தேவைப்படாதுஆனால் இனவரைவியல் ஆய்வுக்கு களப் பணியே மூல ஆதாரம்களப்பணி அன்றி இனவரைவியல் ஆய்வு அமையாது.

1.12.2.இலக்கியமும் இனவரைவியலும் ஒன்றுபடும் இடங்கள்
இலக்கியமும் இனவரைவியலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும்இரண்டுமே அனுபவங்களை எழுத்து வடிவில் அமைக்கப்பட்ட பிரதி ஆகும்.
இலக்கியவாதியும் இனவரைவியலாளனும் தம் முன்னோர்களின் வழியில் செயல்படுகின்றனர்இதில் இலக்கியவாதி தம்முன்னோர்கள் பற்றிக் கூறுவதில்லைஆனால் இனவரைவியலாளர் தம் முன்னோர்களைத் தவறாமல் குறிப்பிடுவர்.
எனவே இலக்கியம்இனவரைவியல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக காணப்பட்டாலும் சில முறைகளில் ஒத்த தன்மையைப் பெற்றுள்ளதாக இருப்பதால் இலக்கியத்தை இனவரைவியலுக்குத் தேவையான ஆதாரமாகக் கருத இடம் உண்டு.
இலக்கியம் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறதுபண்பாட்டின் ஒரு பகுதியான இலக்கியத்தையும் ஆராய வேண்டும்இக்கருத்தை ஒரு பண்பாட்டைப் பற்றி ஆராய முற்படும்போது அந்தப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் குழுவினர் பின்பற்றும் உறவுமுறைகள்ஒழுங்கு அமைப்புகள்அவர்களின் உணவுமுறைகள்வாழ்க்கை வட்டச் சடங்குகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோன்று இனவரைவியலார் இலக்கியத்தையும் ஆராய்வது அவசியம் என்பதை வின்னர் வலியுறுத்துகிறார். (தனஞ்செயன். 2006:12)
எனவே இனவரைவியலாளர்கள் இனவரைவியல் ஆய்வை மேற்கொள்ளும்போது இலக்கியத்தையும் ஆராய வேண்டும் என்பதை அறிய முடிகின்றதுவேறு வகையான ஆவணங்கள் எவையும் கிடைக்கப் பெறாத ஒரு கடந்த காலத்திய சமூகத்தின் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் ஆராய்வதற்கும் அச்சமூகம் படைத்தளித்தக் கலை இலக்கிய வடிவங்களையே முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்துவதை ஒரு தவிர்க்க முடியாத விதி மீறலாக நாம் ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். (தனஞ்செயன். 2006:38)

1.12.3.தொல்காப்பியத்தில் காணப்படும் இனவரைவியல் கூறுகள்
தமிழ் நூல்களில் முதன்மையான நூலாக விளங்குவது தொல்காப்பியமாகும்தொல்காப்பியர் மக்கள் வாழ்க்கையை அகம்புறம் என இரண்டாகப் பகுக்கிறார்மக்களின் குடும்பம் சார்ந்த செய்திகள் அகத்திணையியலிலும் சமூகம் சார்ந்த செய்திகள் புறத்திணையியலிலும் கூறப்பட்டுள்ளதுஅகம் சார்ந்த திணைகள் ஏழு என்றும்அதற்குரிய புறம் சார்ந்த திணைகள் ஏழு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இனவரைவியல் என்பது நுட்பமான பரந்த தளத்தைக் கொண்டதாக அமைந்துள்ளதுஇச் செயல்பாடுகளுக்குக் கருத்தியல் அடிப்படையிலான ஒரு வரைவுத் திட்டம் தேவைஅத்திட்டம் பண்பாட்டின் ஒவ்வொரு கூறையும் தனித்தனியாகவும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்ப்பதாகவும் பொருள் கொள்வதாகவும் அமையும்.
தொல்காப்பியர் திணைக்குரிய பொருட்களாக மூன்றினைக் குறிப்பிடுகிறார். 1.முதற்பொருள், 2.கருப்பொருள், 3.உரிப்பொருள்.

1.12.3.1.முதற்பொருள்
நிலம்பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் ஆகும்இக்கருத்து
 “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே” (தொல்.அகத்நூற்பா. 4) என்ற நூற்பாவில் இடம் பெற்றுள்ளது.
நிலம் என்பது மக்களின் வாழ்வியலுக்கான புவியின் பரப்பாகும்பொழுது என்பது மக்களின் வாழ்வியலுக்கான காலத்தைக் குறிப்பதாகும்.

1.12.3.2.கருப்பொருள்
தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப” என வரையறுக்கிறார்இவற்றைக் கருப்பொருளின் கூறுகளாகக் கொள்ளும் தொல்காப்பியர் இவற்றோடு தொடர்புடைய பிறவும் கருப்பொருட்கள் எனச் சொல்வர் என்கிறார்அதாவது தெய்வம் என்பது தெய்வத்தின் பெயரை மட்டும் குறிப்பதன்றுஅத்தெய்வம் சார்ந்த மரபை முழுமையாகக் குறிப்பதாகும்வழிபாடு சடங்குகள் நம்பிக்கைகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதே தெய்வம் ஆகும்.
இவற்றிலிருந்து தொல்காப்பியர் சமயநம்பிக்கைகள்,  சடங்குகள்வழிபாட்டு முறைகள் போன்ற இனவரைவியல் கூறுகளைப் பின்பற்றியுள்ளார்.

1.12.3.3.உரிப்பொருள்
ஒரு குறிப்பிட்ட திணைக்குரிய ஒழுக்கமே உரிப்பொருள் ஆகும்தொல்காப்பியர் ஐவகைத் திணைகளின் ஒழுக்கத்தைப்
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே” (தொல்அகத்நூற்பா.16)
என்ற நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் கூறியுள்ள முதற்பொருள்கருப்பொருள்உரிப்பொருள் ஆகியவற்றில் இனவரைவியலாளர்கள் கூறியுள்ள இனவரைவியல் கூறுகள் காணப்படுகின்றன.

1.13.பழங்குடிகள்
          மனித இனம் என்பது பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும்ஆயினும் பல நிலைகளில் மாற்றங்களை ஏற்று வாழும் மனித சமூகத்தில் பழங்குடி மக்கள் நாகரிக உந்துதல்களுக்கு ஆட்படாமல் காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தல்வேட்டைத் தொழில்மந்தைத் தொழில்இயற்கை விவசாயம் ஆகிய தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.  பழங்குடிமக்களின் இடம்மொழிசூழல்வீட்டின்அமைப்புஉடையமைப்புஉணவுமுறைவைத்தியமுறைபுழங்குபொருட்கள்பஞ்சாயத்துமுறை போன்ற செய்திகள் மனித வரலாற்று வளர்ச்சியின் தனித்துவங்களைப் பெற்றிருக்கின்றன.

1.14.பழங்குடிகள் விளக்கம்            Tribe  எனும் ஆங்கிலச்  சொல்லின் மொழிபெயர்ப்பாகப் “பழங்குடி” எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. “இனக்குழுமக்கள்” என்றும், “மலைவாழ்மக்கள்” என்றும் இச்சொல்லுக்கு வேறு மொழிபெயர்ப்புகள் தமிழறிஞர்களால் கூறப்படுகின்றனவெரியர்எல்வின்லூயிஸ்போன்றோர் ‘Tribe’ எனும் சொல்லை நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் எனும் பொருளிலேயே பயன்படுத்துகின்றனர்டி.என்.மஜீம்தார் (D.N.Majumdar) இச்சொல்லின் பொருள் தெளிவின்றி இருப்பதாகக் குறிப்பிடுகின்றார். (ரஞ்சன்,.2008:11) இச்சொல் பண்பாட்டிலும் மொழியிலும் ஒரே நிலையுடைய ஒரு குழுவினரைக் குறிப்பதாக அவர் விளக்கம் கூறியுள்ளார்மாக்ஸ்வேபர் (Max Waber), இச்சொல் வேறு சில பொருள்களையும் உள்ளடக்கியுள்ளது என்பார்.  1.குறிப்பிட்ட நிலப்பகுதி, 2.வேலைவாய்ப்பு சிறப்பில்லாததன்மை, 3.பெரிய சமுதாயங்களோடு ஒப்பிடும்போது சமுதாயத் தரக்குறைவு, 4.அவர்களுக்குள் ஒரு அரசியலமைப்பு இருத்தல், 5.வேறு பழங்குடிகளுடனே திருமணத்தொடர்பு கொள்வது (Exogamy) தங்கள்இனத்துக்குள்ளேயே திருமணம் (Endogamy), செய்துகொள்வது பற்றித் தெளிவான தன்மை இன்மை பகுத்தறிவு உட்பட்ட சட்ட திட்டமின்மை என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். (ரஞ்சன்,.2008:11)­
            Tribe என்ற சொல் சிறிய அரசு போன்ற அமைப்புடைய ஒத்த மொழி பேசுகின்ற ஒரு சமுதாயக் குழுவைக் குறிப்பதாக ரிவர்ஸ் (Rivers) கருதுகின்றார். (ரஞ்சன்,.2008:12) சமூகவியலறிஞர்கள் மொழியமைப்புபண்பாடு ஆகியவற்றின் ஒற்றுமையின் அடிப்படையில் பழங்குடிகளைப் பாகுபடுத்துவர்பழக்க வழக்கங்களில் மிகப் பழமையைக் கொண்டுள்ள இனத்தவரையே பழங்குடிகள் எனும் சொல் குறிக்கிறது என்று டாக்டர் நசீம்தின் கூறுகின்றார். (ரஞ்சன்,.2008:12) பழங்குடி என்பது தொல்மரபு அல்லது ஆதிகாலத் தேறியகுடி என்று தமிழ்மொழியகராதி கூறுகின்றது. (ரஞ்சன்,.2008:12) தொன்றுதொட்டு மேம்பட்டுவருகின்ற குடியின்கட் பிறந்தவர் என்று தமிழ்ச் சொல்லகராதி கூறுகின்றது. (ரஞ்சன்,.2008:12)
            பழங்குடி எனும் சொல் இலத்தீன் மொழியில் “மூன்றில்ஒன்று” (One third) எனும் பொருளைத் தருகின்றதுஇச்சொல் முதன் முதலில் எபிரேயரைக் குறிக்கப் பயன்பட்டதுகட்டுக்கோப்பற்ற நிலையில் பன்னிரண்டு குழுக்களாக வாழ்ந்த எபிரேயர்கள் தங்களின் ஒவ்வொரு குழுவையும் ஜேக்கப் (Jacob) இன் பன்னிரண்டு குழுக்களுக்கும் பொதுவான மூதாதையராக விளங்கினான்இதனால் இக்குழுக்கள் இஸ்ரேலில் “பன்னிரண்டு பழங்குடிகள்” எனவும் கூறப்பட்டனஇதன் பின்னரே பழங்குடிகள் எனும் சொல் பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றிய பல குடும்பங்களைக் கொண்ட எந்த ஒரு குழுவையும் குறிக்கும் சொல்லாயிற்று. (ரஞ்சன்,.2008:12)
            பழங்குடி எனும் சொல் தொன்மை நிலையையும் வளர்ச்சியடையாத பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் குழுவைக் குறிக்கின்றதுமேலும் பொதுவான பெயரையும்குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் தன்மையையும் ஒரு மொழியைப் பேசும் இயல்பையும் திருமணம்செய்யும் தொழில் அல்லது பணியில் சில விலக்குகளைக் கொண்டு விளங்கும் தன்மையுடையவராய் ஒருவருக்கொருவர் கட்டுப்பாட்டுடனும் பொருட்களைப் பரிமாறிக் கொண்டும் வாழும் பல குடும்பங்களில் தொகுதியே பழங்குடிகள் என்று பக்தவத்சலபாரதி கூறியுள்ளார். (பக்தவத்சலபாரதி.1990:303-305). பண்டைக் காலத்தில் கொள்ளைக்காரர்களும் சிற்றரசர்களும் இந்தியா மீது படையெடுத்து மக்களைக் கொன்று துன்புறுத்தி அடக்கிஅவர்களுடைய பூமிகளைக் கைப்பற்றியதோடு அவர்களை அடிமைகள் போல் நடத்தினர்இக்கொடுமைக்குப் பயந்து அநேகக் குடும்பங்கள் நாட்டை விட்டு விலங்குகள் வசிக்கும் காட்டிலும் மலைகளிலும் குடியேறி வேட்டையாடியும்விவசாயம் செய்தும் வாழ்ந்து வந்தார்கள்அதன் பிறகு இவர்கள் நாட்டின் பொதுமக்களோடு எந்த விதமான தொடர்புமில்லாமல் தனித்தே காட்டிலும் மலையிலும் கிடைக்கும் காய்கனிகிழங்குவிலங்குகள் இவற்றைக் கொண்டு வாழ்ந்துவந்தனர்இவர்களைத்தான் இப்போது பழங்குடிகள் என்று அழைக்கிறோம் என்று எஸ்.ஆர்வேங்கடராமன் கூறியுள்ளார். (ரஞ்சன்,.2008:13)
            பண்டைக்கால மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள்இவர்கள் மேய்ச்சல் நிலங்கள் பெருகிய நதிக்கரையோரங்களைத் தேர்ந்தெடுத்து அக்கால மக்கள் பல குழுக்களாகச் சென்று அங்குக் குடியேறி நதிக்கரையோரப் பண்பாட்டினை வளர்த்து வந்தனர்அவ்வாறான பண்பாட்டு வளர்ச்சி பெற்ற நகர மக்களும் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய கிராமமக்களும் பலவகையான இயற்கை உந்துதல்களாலும்வசதிகளாலும்நாகரிகநிலை பெற்றிருந்தனர்புவியியற்சூழலில் ஒதுக்கப்பட்ட சில இனத்தார் மட்டும் இனக்குழு வாழ்விலேயே பின்தங்கிவிட்டனர்அறிவியல் உலகம் பல வித அதிசய சாதனைகளை நிதழ்த்திவரும் இக்காலகட்டத்திலும் கல்வியறிவற்ற நிலையில் பழமையெனும் மூடுபனியில் மூழ்கிப் புதுமையினைக் கண்டு மருளும் இப்பழங்குடிகளும் வாழ்ந்து வருகின்றனர் என்று டாக்டர்பீநசிம்தீன் கூறியுள்ளார். (ரஞ்சன்,.2008:13) ஓர் அரசன் வேறு அரசனின் ஊர்களைப் பிடித்துக் கொண்டதும் தங்களுடைய ஊர்களை விட்டுவிட்டு இந்திய அரசனுக்குப் பயந்து நாடோடிப் பிச்சைக்காரர்களாக ஆனார்கள் என்கிறார் பிலோஇருதயநாத். (ரஞ்சன்,.2008:13)
            காட்டில் கிடைக்கும் இலைதழைகளை ஆடையாக அணிந்து காட்டுப்பன்றிகளையும் கரடிகளையும் போல கிழங்குதேன் முதலிய காட்டில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களையே உண்டுகாடுகளில் கண்காணாத வகையில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இப்பொழுது ஐரோப்பியர்களோடு கொண்ட தொடர்பின் செல்வாக்கால் நாட்டு மனிதர்களாக மாறி வாழ்க்கை நெறிஒழுக்கமுறை ஆகியவற்றை மாற்றிக்கொண்டதோடு பேசும் மொழியிலும் கூட மாறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர் என்று எட்கர் தர்ஸ்டன் கூறியுள்ளார். (ரஞ்சன்,.2008:13) தொல் குடிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் அவர்களுடைய சமூக மற்றும் பண்பாட்டின் எச்சத்தினையும் கொண்டிருப்பவர்களே இன்றுள்ள பழங்குடிகள் ஆவர் என்று இராமுருகன் கூறியுள்ளார். (முருகன்,இரா. 2003: 46) பழங்குடிகள் தங்களுக்கெனத் தனிப்பட்ட பண்பாட்டோடும்அடையாளத்தோடும் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளுடன் சமத்துவ உணர்வுடனும்பகிர்ந்தளிக்கும் எண்ணத்துடனும் வாழ்பவர்கள்பூமியைத் தாயாக நினைத்துப் பொதுநல நோக்குடன் பாரம்பரிய அறிவை பயன்படுத்தி வாழ்பவர்கள் என்று கேகிருஷ்ணன் கூறியுள்ளார். (ரஞ்சன்,.2008:14). இவ்வாறு பழங்குடி என்பதற்குப் பலர் பல நிலைகளில் விளக்கம் கூறியுள்ளனர்பரிணாம வளர்ச்சியின் இறுதிநிலையே மனித இனத்தின் தோற்றமாகும்இத்தகு மனித இனம் சமூகப் படிமலர்ச்சியில் மாற்றம் பெற்று இனக்குழு அமைப்பை அடைந்ததுபின்னர் மனிதர்கள் சிறுசிறு குழுக்களாகவும் பெருங்கூட்டமாகவும் ஓரிடத்தில் நிலையாகவோ நாடோடிகளாகவோ வாழ்ந்துவந்தனர்இவர்களில் சில குழுவினர் பலவகையான இயற்கை உந்துதல்களாலும்வசதிகளாலும் நாகரிக நிலையைப் பெற்றனர்சில குழுவினர் புவியியல் சூழலால் இனக்குழு வாழ்விலே பின்தங்கிவிட்டனர்இவர்களில் பலர் இயற்கை சீற்றத்தில் அழிந்தனர்சில குழுவினர் இன்றும் காடுகளில் வேட்டைத் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டு முன்னோர்களின் பண்பாட்டு எச்சத்தினைப் பெற்றுபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகக் காணப்படுகின்றனர்இப்பழங்குடிகள் தமிழகத்திலும் புதுவையிலும் பல பிரிவினர்களாக வாழ்ந்துவருகின்றனர்.

1.15.இந்தியப்பழங்குடிகள்
            உலக நாடுகளில் தென்னாப்பிரிக்காவிலேயே மிகுதியாகப் பழங்குடிகள் காணப்படுகின்றனர்அடுத்து இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். “1971 இல் பழங்குடிகள் கணக்கெடுப்பில் அதிகமாகப் பாரதநாட்டில் வசிக்கும் பழங்குடிகளின் சனத்தொகை (3,80,15,162) பாரதநாட்டுச் சனத்தொகையில் ஏழு சதவிகிதத்தினர் ஆவர்” (ரஞ்சன்,.2008:14). இந்தியாவில் 27 மாநிலங்களில் 577 வகையான பழங்குடியினர் வாழ்கின்றனர்இந்தியாவில் வாழும் பழங்குடிகளின் இருப்பிடம் மற்றும் மொழியை அடிப்படையாகக் கொண்டு ஓங்கே பழங்குடிகள்நிகோபர்த் தீவுப் பழங்குடிகள்சந்தால் பழங்குடிகள்கல்லொங் பழங்குடிகள்இந்து-மிஷ்மிப் பழங்குடிகள்முரியா பழங்குடிகள்காரோ பழங்குடிகள்போண்டோ பழங்குடிகள்அங்காமி பழங்குடிகள்கிராசியா பழங்குடிகள்அசுரப் பழங்குடிகள்அஸ்ஸாம் காசிப்பழங்குடிகள் என்று பலவகையில் வகைப்படுத்தியுள்ளனர்.

இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 3

No comments:

Post a Comment

கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?

    கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது?   புதியவன் முனைவர் கே.சிவக்குமார் SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்...

அதிகம் பார்க்கப்பட்டவை