Monday, May 25, 2020

வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும் 2


2.6.வனம்
2.6.1.பாங்காடு - சோளகர்கள் தங்களுக்குத் தேவையான மூங்கில் போன்ற காட்டுப் பொருட்களைப் பெறுவதற்காக ஊரின் அருகிலுள்ள வனத்திற்குச் செல்கிறார்கள்ஊரிலிருந்து நெடுதூரமாக அல்லாமல் அருகாமையாக அமைந்துள்ள இந்த வனத்தைப் பாங்காடு என்று அழைக்கிறார்கள்.
2.6.2.ஊசிமலை – கொத்தல்லி எட்டடி வேங்கையை இந்த இடத்தில்தான் எதிர்கொண்டு வீழ்த்தினார்.
2.6.3.கத்திரி மலை – ஜோகம்மாளின் தாத்தா இந்த மலையில் இரண்டு புலிகளைக் கொன்றிருப்பதாகத் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறாள்.
2.6.4. கரடிப்பாவி – வனத்திலுள்ள கரடிப்பாவி என்ற பகுதியில் செங்குத்தான பாறையின் அடிப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தேன்கூட்டிலிருந்து சிவண்ணா தேனெடுத்தான்.
2.6.5. தோனிமடுவு – வனத்திலுள்ள தோனி மடுவு என்ற பகுதியிலுள்ள புளியமரத்தில் ஏறி சிவண்ணா தேனெடுக்க முயற்சி செய்தபோது சந்தனக்கடத்தல் வீரப்பனது ஆட்கள் துப்பாக்கிகளுடன் செல்வதைக் கவனிக்கிறான்இப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
2.6.6. சீமாற்று புல்வெளி – வனத்தில் தோனிமடுவுக்குப் போகும் வழியில் சீமாற்று புல் வெளி இருக்கின்றதுஆட்களை மறைத்துவிடுமளவிற்கு அந்தப் புற்கள் மிக உயரமாக வளர்ந்திருக்கின்றனஇதனைப் போளி என்று அழைக்கிறார்கள்.
2.6.7. லண்டானா புதர் – வெள்ளியங்கிரி மலையடிவாரங்களிலுள்ள வனங்களில் லண்டானா எனும் ஒரு வகையான புதர்கள் இருக்கின்றன.
2.6.8.அடர்த்தியான தாணி மரங்கள் – ஆணை சுனையிலிருந்து தாணிக்கண்டி நோக்கி வருகின்ற ஓடையானது இருமருங்கிலும் அடர்த்தியான தாணிமரங்கள் அமைந்திருக்கின்றன.
2.6.9.மேற்குதொடர்ச்சி மலைகள் – வெள்ளியங்கிரி மலையானது மேற்குத்தொடர்ச்சி மலையின் அங்கமாக இருக்கின்றது.
2.6.10.வெள்ளியங்கிரியில் முதல்மலை - வெள்ளிவிநாயகர் கோயில் அமைக்கப்பெற்றிருக்கின்றது.
2.6.11.வெள்ளியங்கிரியில் இரண்டாம் மலை - பாம்பாட்டிச் சுனை இருக்கின்றது.
2.6.12.வெள்ளியங்கிரியில் மூன்றாம் மலை – கைதட்டிச்சுனை இருக்கின்றது.
2.6.13.வெள்ளியங்கிரியில் நான்காம் மலை - ஒட்டர் சித்தர் சமாதி இருக்கின்றது.
2.6.14.வெள்ளியங்கிரியில் ஐந்தாம் மலை - பீமன் களியுருண்டை மலை என்று அழைக்கப்படுகின்றது.
2.6.15.வெள்ளியங்கிரியில் ஆறாம் மலை – சேத்திழைக்குகைஆண்டிசுனை இருக்கின்றன
2.6.16.வெள்ளியங்கிரியில் ஏழாம் மலை – சுயம்புலிங்கம் இருக்கின்றது
2.6.17.வைதேகி – வனத்தில் வைதேகி என்றொரு பகுதி இருக்கின்றதுஇந்தப் பகுதியில் தீப்பிடித்த காரணத்தினால் தீயணைப்பதற்காக வனத்துறையினர் தாணிக்கண்டி மக்களை அழைத்துச் செல்கிறார்கள்.
2.6.18.தேவர்காடு – நாற்றாப்பாளையத்தில் இருக்கின்ற ஒரு வனப்பகுதிகடவுளின் ஆற்றலுள்ள வனப்பகுதியாக தேவர் காடு நம்பப்படுகிறது.
2.6.19.நீலகிரி தோப்பு – உயரமான தைலமரங்கள் நிறைந்த நீலகிரி தோப்பில் கூடி பண்ணையார் கோவிந்தரெட்டியை பலிவாங்குவதற்கான திட்டம் பற்றி இளைஞர்கள் முடிவெடுக்கிறார்கள்.
2.6.20.வனம் பற்றிய பிற செய்திகள் - படகர்கள் வாழ்கின்ற மரகதமலையிலுள்ள வனங்களில் கற்பூர விருட்சங்கள் என்று அழைக்கப்படுகின்ற தைல மரங்களின் வாசம் பரவியிருக்கின்றனபன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்ற குறிஞ்சிப் பூக்கள் பூத்திருக்கின்றன.

2.7.வன உயிரினங்கள்
            ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஐந்து புதினங்களில் இடம்பெறும் விலங்குகள்மற்ற உயிரினங்கள் பற்றி இப்பகுதியில் காணலாம்.
2.7.1.விலங்குகள்
2.7.1.1.யானை - வனத்திலிருந்து யானைகள் மூங்கில் குறுத்துக்களை தேடிவருகையில்  விளைநிலங்களுக்கும் வந்துவிடுகின்றன.  படகல் மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்கின்ற வன வழியில் ஒரு கொம்பன் யானை இறந்து கிடந்ததுதந்தத்திற்காகச் சுடப்பட்ட அந்த யானை தப்பித்துவந்து இறந்திருக்கிறதுவனத்துறையினர் வந்து தந்தத்தை அறுத்துச் சென்றுள்ளார்கள் என்று ஒரு சோளகணைக்காரன் விளக்குகிறான்தாணிக்கண்டிக் காரர்கள் வனத்தில் புளி சேகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் காட்டு யானையிடம் சிக்கிக்கொள்கிறார்கள்ரங்கராஜனை பொன்னி காப்பாற்றி விடுகிறாள்ஆனால் காட்டு யானையால் தூக்கி வீசப்பட்ட பொன்னி மருத்துவப் பலனின்றி இறந்துபோகிறாள்தளியிலுள்ள மலை ஓடையில் யானைகள் கூட்டங்கூட்டமாக வந்து சென்றுள்ளதற்கான அடையாளங்கள் இருக்கின்றன.           நாற்றாம்பாளையம் வனத்தில் மக்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடிய மூன்று காட்டுக்கொள்ளையர்கள் யானைகளால் கொல்லப்படுகிறார்கள்.      மலையாளிகள் படகர்கள் பற்றிய புதினங்களில் யானைகள் பற்றிய தகவல்கள் இல்லை.
2.7.1.2.வேங்கை – கொத்தல்லி என்பவர் கூட்டாளிகளோடு ஊசிமலைப் பக்கம் சென்று கொண்டிருந்தபோது எட்டடி வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்துகிறார்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் வேங்கை பற்றிய செய்திகள் இல்லை.
2.7.1.3.         கரடி – கொத்தல்லியின் மூத்தமகன் கரடியால் தாக்கப்பட்டு மருத்துவப் பலனின்றி இறந்துபோகிறார்சிக்குமாதா தன்னைத் தாக்க வந்த கரடியைச் சுட்டுக் கொல்கிறார்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் கரடி பற்றிய செய்திகள் இல்லை.
2.7.1.4.மான் – பாறைக்குழி குட்டையில் தண்ணீர் குடிக்க வந்த மான்களில் ஒன்றை வேட்டைநாய்களின் உதவியுடன் சிவண்ணா வேட்டையாடுகிறான்படகர்களின் விவசாய விளைச்சல்களை மான்கள் இரவில் வந்து உண்கின்றனசிக்குமாதா ஒருமுறை கடமான் ஒன்றை வனத்தில் மூன்று மைல்வரை விரட்டிச்சென்று வேட்டையாட முயன்றிருக்கிறார்செந்நாயால் வேட்டையாடப்பட்ட கடமான் ஒன்று உயிர் தப்பி தாணிக்கண்டி அருகே வந்துவிடுகின்றதுதாணிக்கண்டி மக்கள் வனத்துறைக்குத் தெரியாமல் ரகசியமாக அடித்து உண்டுவிடுகிறார்கள்மலையாளிகள்தேன்கனிக்கோட்டைப் பகுதி இருளர்கள் பற்றிய புதினங்களில் மான்களைப் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.5.காட்டெருமை - காட்டுத்தீ பரவியிருந்தபோது இரண்டு காட்டெருமைகள் தொட்டியின் வனத்தையொட்டியிருந்த பாறைகுழி குட்டையில் நின்றுகொண்டிருந்தனமலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் காட்டெருமை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.6.புலி – புலியைச் சோளகர்கள் பெருநரி என்று அழைக்கிறார்கள்கத்திரிமலையில் இரண்டு பெருநரியை ஜோகம்மாளின் தாத்தா கொன்றிருக்கிறார்.         மலைக்கு வந்து காடழிச்சு விவசாயம் செய்த கவுண்டனது மாட்டை ஒரு மிருகம் வேட்டையாடி பாதி உடலை விட்டுவைத்திருக்கிறதுஅவன் அந்த உடலில் பூச்சி மருந்தை பரப்பி வைத்துள்ளான்புலி அந்த விசம் பரப்பப்பட்டுள்ள மாமிசத்தை உண்டு இறந்துபோனதுபுலியின் இறந்த உடலை ஊரார் வேடிக்கைப் பார்க்கிறார்கள்கீழ்நாட்டுக்காரங்க விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகு இதுபோல புலிகள் ஏராளமாக விசம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஜோகம்மாள் கூறுகிறாள்.   மரகதமலை ஹட்டியின் அருவிக்கரை அருகில் மருத்துவப் பராமரிப்பிலிருந்த கால் முறிந்த எருமையைப் புலி வேட்டையாடி உண்டதுமலையாளிகள்இருளர்கள் பற்றிய புதினங்களில் புலி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.7.சிறுத்தை – பாங்காட்டில் பூனைபோல சிறுத்தை அதிகம் திரிகின்றதை ரதி பார்த்திருக்கிறாள்ஜடைசாமி கோயிலுக்குச் சென்றபோது ஆட்களைக் கண்ட சிறுத்தை மரத்திலிருந்து குதித்து புதருக்குள் ஓடியதைப் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறாள்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் சிறுத்தை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.8.காட்டுப்பன்றி – சிக்குமாதா இரவில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட விரட்டிச்சென்றபோது யானை தாக்கி மருத்துவப்பலனின்றி உயிரிழக்கிறான்தேன்கனிக்கோட்டையின் ஏரிப்பகுதியில் கொட்டிக் கிழங்குகளைப் பன்றிகள் மூக்கால் அகழ்ந்து திண்கின்றனகாட்டு்ப்பன்றிகளை கோணவாயன் என்று அழைக்கிறார்கள்பயிர்களைக் காவல் செய்கின்ற கொல்லைக் காவலர்கள் கோணவாயன் கூட்டமாக வருவதாக எச்சரிக்கிறார்கள்மலையாளிகள்படகர்கள்தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் காட்டுப்பன்றி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.9.நரி – தொரிய மல்லனுடன் லிங்கையா காவல் பரணுக்குச் செல்லும்போது கூட்டமாக நரிகள் ஊளையிடுகின்றனவளர்ப்புக் கோழியை நரி பிடித்துச் சென்ற செய்தியை மல்லன் சொல்கிறான்சோளகர்கள்மலையாளிகள்தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் நரி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.10.செந்நாய் – கடமானை வேட்டையாடிய செந்நாயைத் தாணிக்கண்டி மக்கள் கவனித்துவிடுகிறார்கள்செந்நாயிடம் இருந்து தங்களுடைய மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை எச்சரிக்கை உணர்வுடன் பேசிக்கொள்கிறார்கள்சோளகர்கள்மலையாளிகள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் செந்நாய் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.1.11.குரங்குகள் – பூண்டி கோயிலின் முன்பாகப் புளியமரங்களில் குரங்குகள் சேட்டை செய்கின்றனதேன்கனிக்கோட்டை ஏரியிலுள்ள புளியமரத்தில் குரங்குகள் தாவிக்குதித்துக் கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கின்றனசோளகர்கள்மலையாளிகள்படகர்கள் பற்றிய புதினங்களில் குரங்குகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.

2.7.2.பறவைகள்
2.7.2.1.செம்பூத்துப் பறவைகள் – சோளகணை செல்வதற்கான வன வழியில் சற்று ஓய்வாக அமர்ந்த போது ஜோகம்மாள்ரதிமல்லி ஆகியோர் ஓடையின் கரையில் இரண்டு செம்பூத்துப் பறவைகள் ஓடுவதைப் பார்க்கிறார்கள்பேதனுடன் படகல் மாதேஸ்வரன் கோயிலுக்கு படையல் வைக்க வந்தபோது செம்பூத்துப் பறவைகள் கூட்டமாக இருந்தன.  படையலுக்குரிய தானியங்களை பேதன் கொஞ்சம் கைகளில் எடுத்து வைத்ததும் அந்தப் பறவைகள் கொத்தித் தின்று ஓடினமலையாளிகள் பற்றிய புதினத்தில் செறிவானத் தகவல்கள் இல்லைபடகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் செம்பூத்துப் பறவை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.2.காட்டுக் கோழிகள் – சோளகணை செல்வதற்கான வன வழியில் சற்று ஓய்வாக அமர்ந்த போது ஜோகம்மாள்ரதிமல்லி ஆகியோர் காட்டுக் கோழிகளின் சத்தங்களைக் கேட்கிறார்கள்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் காட்டுக்கோழிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.3.சிட்டுக்குருவிகள் – சிவண்ணாவின் வீட்டிற்கு மாதி மனைவியாக வந்ததும் ராகியை இரண்டு கைகளிலும் அள்ளி வாசலில் விசிறுகிறாள்சிட்டுக்குருவிகள் பறந்துவந்து அவற்றைக் கொத்தித் தின்கின்றனமலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் சிட்டுக்குருவிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.4.கௌதாரி – அரசமரத்திலுள்ள பிசினில் கால்கள் மாட்டிக்கொண்ட கௌதாரியை ரதி மரத்திலேறி பிடிக்கிறாள்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் கௌதாரி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.5.மலைக் கழுகு – நாற்றாம் பாளையம் வனப்பகுதியில் தந்தத்திற்காக கொல்லப்பட்ட இரண்டு யானைகளின் இறைச்சிகளை உண்ட மலைக்கழுகுகள் யானைகளின் வயிற்றிலிருந்து வெளிவந்து வட்டமிட்டுப் பறக்கின்றனசோளகர்கள்மலையாளிகள்படகர்கள்தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் மலைக்கழுகு பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.2.6.ஆள்காட்டிக் குருவி – பழமரத்துப்பட்டியில் வாழ்கின்ற மக்கள் சாஸ்திரக்குருவி என்று அழைக்கிறார்கள்பண்ணையார் கோவிந்த ரெட்டியாரின் சித்திரவதைகளுக்கு ஆளானவர்களை தேன்கனிக்கோட்டைக்கு தூக்கிச் செல்கின்றபோது இந்தக் குருவியின் சப்தத்தை கேட்டு சகுனம் பார்க்கிறார்கள்சோளகர்கள்மலையாளிகள்படகர்கள்தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் ஆள்காட்டிக்குருவி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.

2.7.3.ஊர்வன
2.7.3.1.எறும்புத் திண்ணி – ஜோகம்மாள் மகள் ரதியுடன் படகல் மாதேஸ்வரன் கோயிலுக்கு கானகம் வழியே சென்றபோது  மரத்திலிருந்த எறும்புக் கூடுகளை அழித்துவிட்டு இறங்கிவருகின்ற எறும்புத்திண்ணியைப் பார்க்கிறார்கள்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் எறும்புத்திண்ணி பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.3.2.         மலைப்பாம்பு – கோடைக்காலம் உக்கிரமில்லாத பருவத்தில் கடத்தல்காரர்களால் உருவாக்கப்பட்டிருந்த காட்டுத்தீயில் நீளமான மலைப்பாம்பு கருகி இறந்திருந்ததைச் சோளகர்கள் பார்க்கின்றனர்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் மலைப்பாம்பு பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.3.3.கரு நாகம் – இருளர்கள் பாம்பை மட்டை’ என்றும் அழைக்கிறார்கள்கூழைக்கிழவனும் நஞ்சன் மனைவியும் புளியமரக் காட்டைக் கடந்து பயணம் சென்றபோது கருநாகத்தை காணுகிறார்கள்சோளகர்கள்மலையாளிகள்படகர்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் மலைப்பாம்பு பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.7.3.4.முள்ளம்பன்றி - வனத்திலிருந்து படுகர்களின் விவசாயக் காடுகளின் விளைச்சல்களை உண்பதற்காக முள்ளம்பன்றிகள் வருகின்றனசோளகர்கள்மலையாளிகள்இருளர்கள் பற்றிய புதினங்களில் முள்ளம்பன்றிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.

2.7.4.பூச்சிகள்
2.7.4.1.தேன் பூச்சிகள் – கரடிப்பாவியிலுள்ள செங்குத்தான பாறையில் இறங்கி சிவண்ணா தேன் சேகரித்த போது குளவி போன்ற தேன் பூச்சிகள் பறக்கின்றனதேன்கனிக்கோட்டை மலைகளில் வறட்சிக் காலத்தில் தேனிக்கள் உயிர்பிழைக்க வேறு பகுதிகளுக்குச் சென்றுவிடுவதால் மலைவாழ் பழங்குடிகளுக்குத் தேன் கிடைக்கவில்லைமலையாளிகள்படகர்கள்தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் தேன் பூச்சிகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.

2.7.5.வன உயிரினங்கள் பற்றிய பிற செய்திகள் 
            செம்பூத்துப்பறவைதொட்டரக்காக் குருவிபீச்சிட்டாங்குருவிகிசிரை போன்ற பறவைகள் கொல்லி மலையில் இருக்கின்றனமலையாளிகள் இரவில் சந்தைக்குச் சுமையுடன் மலை பாதையில் செல்லும் போது தவளைகள்நீர் பாம்புகள்முள்ளம் பன்றிகள் ஆகியவற்றின் நடமாட்டத்தை உணர்கிறார்கள்கொல்லிமலையில் பெருதல வண்டு என்ற பூச்சியினம் இருக்கின்றதுநரிகள்ஆந்தைகோட்டான் ஆகியவற்றின் சத்தங்கள் பழமரத்துப்பட்டிக்காரர்களுக்கு இரவு முழுதும் கேட்கின்றனநீர்க்கோழிகளும்கானாங்கோழிகளும் தேன்கனிக்கோட்டை ஏரியில் காணப்படுகின்றன


2.8.தொழிற் கருவிகள்
தொழிற் கருவிகள் என்பது மனிதர்களின்  தொழில்நுட்பத் திறனில் அடங்கும். தொழில்நுட்பம் என்பது திட்டமிட்ட மாற்றங்களை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும மனித அனுபவம், புறநிலை எதார்ததம் பற்றிய மனித அறிவு,இயற்கை வளங்கள் மற்றும் கருவிகளும் ஆயுதங்களும் தொழில்நுட்பத்தில் அடங்குகின்றன.
2.8.1.வெட்டுக் கருவிகள்
2.8.1.1.அருவாள் – பாங்காட்டில் மூங்கில் வெட்டுவதற்குச் சோளகர்கள் பயன்படுத்துகிறார்கள்.
2.8.1.2.மண்வெட்டி – மண்வெட்டியை மம்பட்டி என்று அழைக்கிறார்கள்வயல் வரப்புகளில் மண்ணை வெட்டிப் பக்குவப்படுத்துவதற்கு பயன்படுத்துகின்ற கருவி.
2.8.1.3.கொடுவாள் – அடுப்பெரிக்கத் தேவையான விறகுகளை வெட்டியெடுக்க பயன்படுத்தும் வெட்டுக் கருவியாகும்கொல்லிமலையில் திருமி இக்கருவியைப் பயன்படுத்துகிறாள்தாணிக்கண்டி இருளர்கள் இந்தக் கருவியை இறைச்சி வெட்டவும் பயன்படுத்துகிறார்கள்கடமானின் கரியை எடுப்பதற்கு இந்தக் கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
2.8.1.4.சூரிக்கத்தி – இந்தக் கருவியை தாணிக்கண்டி இருளர்கள் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள்கடமானின் இறைச்சியை எடுப்பதற்காக மணியான் என்ற இருளன் பயன்படுத்துகிறான்.

2.8.2.குத்துக் கருவிகள்
2.8.2.1.வேல் – பழைமையான வேட்டைக் கருவி ஆகும்இரையைக் குத்துதல் மூலமாகக் கொல்வதற்கு வேல் என்ற கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.
2.8.2.2.கொம்பு – பன்றி வேட்டைக்குச் செல்லும் மலையாளிகள் கொம்பு என்னும் குத்துக் கருவியை வேட்டைக்குப் பயன்படுத்துகிறார்கள்.
2.8.2.3.ஈட்டி - பழமையான வேட்டைக் கருவியாகிய ஈட்டியை மலையாளிகள் பன்றி வேட்டையின்போது பயன்படு்த்துகிறார்கள்.
2.8.2.4.முள் – படகர்கள் தங்கள் நிலங்களை குத்தி உழுவதற்காகப் பயன்படுத்துகின்ற கூர்மையான கருவி ஆகும்இதனை முள் என்று அழைக்கிறார்கள்.
2.8.2.5.கோணிஊசி – காடுகளில் சேகரிக்கப்பட் புளியம்பழங்களை மூட்டையாகக் கட்டுவதற்கு தாணிக்கண்டி இருளர்கள் கோணி ஊசி என்னும் குத்துக் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.

2.8.3.தோண்டு கருவிகள்
2.8.3.1.கொத்துக் கருவி – விதைப்பிற்கு தயார் செய்வதற்காக விவசாய நிலங்களை கொத்தி உழுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சிறிய கருவியாகும்இந்தக் கருவியைப்  பெண்கள் கிழங்கு எடுப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
2.8.3.2.கடப்பாரை – வனத்திலுள்ள கிழங்குச் செடிகளைத் தோண்டி கிழங்கு எடுப்பதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

2.8.4.எய்தல் கருவிகள்
2.8.4.1.கருங்கல் – சிவண்ணா மானை வேட்டையாடுவதற்குக் கையளவு கருங்கல்லை ஆயுதமாகப் பயன்படுத்துகிறான்மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் கல்லை ஆயுதமாகப் பயன்படுத்துகின்ற  செய்திகள் இடம்பெறவில்லை.
2.8.4.2.வில் – வில் என்பது பழமைவாய்ந்த வேட்டைக்கருவி ஆகும்இந்தக் கருவியிலுள்ள நாணில் அம்மை வைத்து இழுத்து குறிபார்த்து வேட்டையாடுகிறார்கள்இந்தக் கருவியை சோளகர்கள் பயன்படு்த்துகிறார்கள்.
2.8.4.3.அம்பு – மரத்தால் செய்யப்பட்டுள்ள அம்புகளின் கூரிய பகுதிகள் மட்டும் இரும்பால் செய்யப்பட்டிருக்கும்இதனை வில்லில் பொருத்தி இரையைக் குறிவைத்து எய்த வேண்டும்அம்பு இரையின் உடலைத் துளைத்து மாய்க்கும்இந்தக் கருவியை சோளகர்கள் பயன்படு்த்துகிறார்கள்.

2.8.5.பறித்தல் கருவிகள்
2.8.5.1.சல்லைக்கத்தி – காட்டில் சென்று புளியம்பழங்களைச் மரங்களிலிருந்து பறிப்பதற்காக தாணிக்கண்டி இருளர்கள் பயன்படுத்தப்படுகின்ற கருவியாகும்.

2.8.6.சேகரிப்புக் கருவிகள்
2.8.6.1.சுரைபுருடை – சுரைக்காயினை தாகத்திற்கு அருந்துவதற்கான தண்ணீரை நிரப்பிக்கொள்கின்ற கருவியாகப் பயன்படுத்துகின்றனர்இதனை சுரைபுருடை என்று அழைக்கிறார்கள்தொழில் நிமித்தமாகவோ பிற காரணங்களுக்காகவோ பயணம் செல்பவர்கள் சுரைபுருடையில் நீரை நிரப்பி எடுத்துச் செல்கின்றனர்இந்தக் கருவியை சோளகர்கள் பயன்படுத்துகிறார்கள்.
2.8.6.2.மூங்கில் கூடை – காடுகளிலிருந்து மூலிகைப் பொருட்களைச் சேகரித்து வருவதற்கும்காயவைத்துப் பராமரிப்பதற்கும் மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

2.8.7.கட்டுக் கருவிகள்
2.8.7.1.கயிறு – பாங்காட்டில் வெட்டப்படுகின்ற மூங்கிலை கட்டிக் கொண்டுவர பயன்படுத்துகிறார்கள்தேனெடுக்கச் செல்லும்போது தேனெடுக்க இறங்கும் நபரை பள்ளத்தில் இறக்குவதற்கும்தகர டின்களை பள்ளத்தில் இறக்குவதற்கும் கயிற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
2.8.7.2.நார் – லண்டானா புதரிலிருந்து ஒரு வகைச் செடியை வெட்டி நாராகப் பயன்படுத்துகிறார்கள்அந்த நாரைக் கொண்டு பொருட்களைக் கட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள்கடமானின் கால்களைக் கட்டித்தூக்குவதற்கு இந்த நாரைப் பயன்படுத்தினார்கள்.

2.8.8.செதுக்குக் கருவி
2.8.8.1.வாச்சி – மரத்துண்டை ஏர்கலப்பையாகச் செதுக்குவதற்கு வாச்சி என்ற கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.

2.8.9.பிற கருவிகள்
2.8.9.1.துப்பாக்கி – சுறுசுறுப்பான வேட்டைக்காரராகிய சிக்குமாதா என்ற சோளகன் தனது தாத்தாவின் யானைத் தந்தம் பதித்த துப்பாக்கியை மிகவும் நேசிக்கிறார்கொல்லி மலை மலையாளிகள் பன்றி வேட்டையின்போது துப்பாக்கியை முக்கியக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
2.8.9.2.வேட்டை நாய்கள் – இந்த வேட்டை நாய்கள் வேட்டைக்குக் கிடைக்கின்ற இரையை கவ்விக்கொண்டோ விரட்டிக்கொண்டோ சோளகர் தொட்டிக்கு வந்து சேர்கின்றனபடுகர்கள் காவல் பரணுக்குச் செல்கின்றபோது நாய்களைக் கருவியாக அழைத்துச் செல்கிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் பாம்பைப் பிடிப்பதற்கு நாய்களைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
2.8.9.3.சணல் பை – வேட்டைக்குத் தேவையான கரிமருந்து மற்றும் ஈயக்குண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுகின்றது.
2.8.9.4.தலையில் கட்டும் விளக்கு – இரவில் வேட்டைக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிவேட்டைக்குரிய இரை விளக்கின் வெளிச்சத்தைப் பார்த்து மிரண்டு நிற்கும்போது வெளிச்சத்திற்குப் பின்னாலுள்ள இருட்டிலிருந்து சுட்டு வீழ்த்துவார்கள்.
2.8.9.5.சப்தம் எழுப்பும் கருவி – மூங்கில் தப்பைகள் பத்திற்கும் மேற்பட்டவற்றை வரிசையாக அடுக்கிக் கட்டிவைத்துஒரு நீண்ட கயிற்றை அவற்றோடு பிணைத்துக் காவல் பரண்களில் இணைத்திருப்பர்காவல் பரணிலுள்ள காவலாளி கயிற்றின் ஒரு முனையை இழுத்துவிட மூங்கில் தப்பைகள் மரத்தில் மோதி “டமீர்”  என்ற சப்தத்தை எழுப்பும்.  அறுவடைக் காலங்களில் இக்கருவியைப் பயன்படுத்தி காட்டெருமையானைபன்றி போன்ற மிருகங்கள் நிலத்தில் நுழையாமல் காவல் செய்வதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
2.8.9.6.கைப்பிடி போட்ட தகர டின்கள் – தேன் சேகரிக்கின்ற போது  நெருப்பு பந்தத்தைப் பயன்படுத்துவதற்கும்தேனடையை நிரப்புவதற்கும் இத்தகைய டின்கள் பயன்படுத்துகின்றன.
2.8.9.7.ஞெலிக்கோல் – இது நெருப்பை உருவாக்குவதற்குப் பயன்படுகின்ற கருவியாகும்தேனடையைச் சேகரிக்கச் செல்பவர்கள் நெருப்புக்காட்டி தேனீக்களை விரட்ட இந்த ஞெலிக்கோல்களை எடுத்துச் செல்வார்கள்.
2.8.9.8.மின்மோட்டார் – சோளகரிடமிருந்து அபகரித்த சீர்காட்டில் துரையன் மின்மோட்டார் என்ற நவீன கருவியைப் பயன்படுத்தத் தொடங்கினான்மின்சாரம் மூலமாக கிணற்றிலிருந்து நீரெடுத்து வயல்களில் பாய்ச்ச மின்மோட்டார் பயன்படுத்தப்படுகின்றது.
2.8.9.9.மின்கம்பி வேலி -  துரையன் தான் நவீனப்படுத்தியுள்ள சீர்காட்டில் மஞ்சள்கரும்புப் பயிர்களை விளைவித்திருக்கிறான்விளைச்சலைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க இரவில் மின்சாரம் பாய்கின்ற மின்வேலியை அமைத்திருக்கிறான்பல நேரங்களில் மான்கள் பன்றிகள் போன்ற உயிரினங்கள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.
2.8.9.10.உளி -  ஏர்கலப்பை செய்கின்ற மரத்துண்டை இரண்டு முனையிலும் வாச்சியால் செதுக்கி கூர்மையாக்கிய பிறகு கலப்பையின் நடுவில் துளையிட உளி என்ற கருவியைச் சோளகர்கள் பயன்படுத்துகிறார்கள்.
2.8.9.11.பன்றி கூண்டு – பன்றிகள் வளர்ப்பதற்காக மலையாளிகள் பன்றிக்கூண்டை பயன்படுத்துகிறார்கள்.
2.8.9.12.பன்றி வலை – பன்றி வேட்டைக்குச் செல்லும் மலையாளிகள் வனத்தின் புதர்களின் அருகில் பன்றி நடமாட்டத்தின் தடயம் அறிந்து சிக்கவைப்பதற்காக வலையை விரித்து வைப்பர்இதனை பன்றி வலை என்கிறார்கள்வலையில் சிக்கியதும் துப்பாக்கியால் சுட்டோஈட்டியால் குத்தியோ வீழ்த்த வேண்டும்.
2.8.9.13.தீப்பந்தம் – இரவில் பயணம் செல்வதற்குத் தேவையான வெளிச்சத்திற்காகக் கோலில் நெருப்பைப் பிடித்துக்கொண்டு செல்வார்கள்இதனைத் தீப்பந்தம் என்கிறார்கள்மலையாளிகள் இரவில் சந்தைக்கும் காவல்பரணுக்கும் செல்லும்போது இதனைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்படுகர்கள் காவல்பரணுக்குச் செல்லும்போது பயன்படுத்துகிறார்கள்.
2.8.9.14.ஹொணே – படுகர்களால் மாட்டின் மடியிலிருந்து கறக்கப்படுகின்ற பாலானது ஹொணே என்ற இந்தப் பாத்திரத்தில்தான் நிரம்புகிறதுஇந்தப் பாத்திரம் மூங்கிலால் உருவாக்கப்பட்டுள்ளது.
2.8.9.15.வன்னிமரத்துக் குச்சி – தாணிக்கண்டி இருளர்கள் சுமையைக் கட்டித் தூக்கவதற்குக் கருவியாக வன்னி மரத்துக் குச்சியைப் பயன்படுத்துகிறார்கள்கால்கள் கட்டப்பட்ட கடமானை இந்தக் குச்சியில் இணைத்துதான் தூக்கிச் சென்று அறுத்தார்கள்.
2.8.9.16.தகர டின் – வனவிலங்குகளிடமிருந்து கொல்லையில் காவல் செய்கின்ற காவலர்கள் ஒலி எழுப்பும் கருவியாக தகர டின்களைப் பயன்படுத்துகிறார்கள்.
2.8.9.17.வாய் வேட்டு – காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்வெடி மருந்து கலந்த இறைச்சியை காட்டுப்பன்றி கடித்ததும் வெடித்து தலைசிதறி இறந்துவிடுகின்றது.

வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும் 3

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை