Saturday, May 23, 2020

முடிவுரை


முடிவுரை

          காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டுஅரசியல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தலைப்பின் கீழ் மூன்று இயல்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
          1. காவல்கோட்டம் நாவலில் பாலின அரசியல்
          2. காவல்கோட்டம் நாவலில் சாதிய அரசியல்
          3. காவல்கோட்டம் நாவலில் சமய அரசியல்
முதல் இயலில் பாலினங்களுக்கு இடையிலான அரசியல் விளக்கப்பட்டுள்ளது. பெருந்தன்மையென்பது அதிகாரத்தின் உச்சியிலிருந்து வெளிப்படுகின்ற அரசியல். இத்தகைய பெருந்தன்மை ஆணாதிக்க வெளிப்பாடாக நாவலில் அமைந்த விதம் விளக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மூளைக்குள் ஆண்நலன் சார்ந்த சிந்தனை வெளிப்படுகின்ற விதமும்அதன் காரணமும் விளக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நிகரான வீரப்பெண்கள் என்ற போற்றுதலுக்கு உள்ளீடாக ஆண்களை முதன்மைப்படுத்தியிருக்கும் அரசியல் விளக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உலகம் ஆணுக்குள் அடங்கிவிடுகின்றது என்ற நாவலாசிரியரின் சிந்தனை வெளிப்பாடு விளக்கப்பட்டுள்ளது.
          இரண்டாம் இயலில் கதை நிகழும் காலக்கட்டத்தை விளக்க இயல்பாகப் பதிவு பெற்றிருக்கும் சாதிகளும் அவற்றுக்கு இடையிலான அரசியலும் விளக்கப்பட்டுள்ளன. நாயக்கர் சமூகத்திற்குள் அடங்குகின்ற கொல்லவாரு குலத்திற்கும்காப்புபலிஜர் குலத்திற்கும் இடையிலான மோதல்கள் விளக்கப்பட்டுள்ளன. போட்டிகளுக்கு இடையிலான சமரசத்தின் அரசியல் விளக்கப்பட்டுள்ளது. பூஜை நிகழ்வுகளுள் குறிப்பிட்ட சாதியினர் தன்னைத்தானே பலியிடுகின்ற செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. தாழ்ந்த சாதியாகக் கருதப்படுபவருக்கு விதிவிலக்காக அதிகாரம் கிடைப்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு சாதிசமயங்களின் கௌரவப் பிரச்சனையாக உருமாறுகின்ற நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது. சாதியத்தின் மீது ஏகாதிபத்திய சூழல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. சாதிய இடர்பாடுகளுக்கு இடையில் அமெரிக்க மிஷினரியின் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. மக்களால் தெய்வமாக்கப்பட்ட தாசி குலத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரின் சாதிய அரசியல் பிராமணிய எதிர்ப்பு மட்டுமே என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
          மூன்றாம் இயலில் சமயங்களுக்கு இடையிலான அரசியல் விளக்கப்பட்டுள்ளது.  அரச அதிகாரம் சமயத்தைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துகின்ற விதமும்அதிகாரத்திற்கு உட்பட்ட மக்கள் சமயத்தை வெறும் கடவுளை வழிபடுவதற்கான களமாக மட்டுமே கருதுகின்ற விதமும் விளக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மற்றும் இந்து சமயத்திற்கு இடையிலான உறவு பற்றிய பதிவுகள் இன்றைய இந்துத்துவா பயங்கரவாதிகளின் கருத்தியலுக்குச் சாதகமாக அமைந்திருக்கும் விதம் விளக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் நாவலாசிரியரின் சமண சமய ஆதரவு விளக்கப்பட்டுள்ளது. இந்த அளவில் இம்மூன்று இயல்களையும் உள்ளடக்கியுள்ள ‘காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு  அரசியல்’  என்ற தலைப்பிற்கான ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.


  

                                      துணைநூற்பட்டியல்

முதன்மை சான்றாதாரம்
1.      சு.வெங்கடேசன்,    காவல்கோட்டம்தமிழினி,
                                      67,பீட்டர்ஸ் சாலை,
                                      ராயப்பேட்டைசென்னை-16, டிச.2008

துணைமை சான்றாதாரம்
2.      எஸ்.ராமகிருஷ்ணன்,  காவல்கோட்டம் எனும் ஆயிரம்
                                      பக்கஅபத்தம்
                                               
3.      மேலாண்மை பொன்னுச்சாமி காவல்கோட்டம்
                                      மீள்விசாரணை ஆயிரம்பக்க அதிசயம்,
                                     
4.      பரந்தாமனார்,.அ.கி.மதுரைநாயக்கர் வரலாறு
                                      பாரிநிலையம்,184,பிராட்வே         
                                      சென்னை 600001,1981

5. கோ.கேசவன்,          சாதியம்,                                                                                            சரவணபாலு பதிப்பகம்

6. உ.வாசுகி,                 பெண்ணியம் பேசலாம் வாங்க…,                                                                     பாரதிபுத்தகாலாயம்,                       

7. அ.வெண்ணிலா,                சு.வெங்கடேசன் நேர்காணல்,
                             புதிய புத்தகம் பேசுது,
                             மே.2009, ப.23-33

8. கோ.கேசவன்,      முனைவர் கோ.கேசவன் கட்டுரைகள்,
                                      பரங்கியரை எதிர்த்த பாளையக்காரன்,ப.71-74,
                                      தமிழில் சமயஞ்சாராத சிந்தனையின்
                                      வரலாறு- சில குறிப்புரைகள்,ப.111-125,
                                      தீண்டாமை ப:137-149 
                                      சரவணபாலு பதிப்பகம்,

9. அ.மங்கை                 பெண்ணிய அரசியல்பரிசல்,
                                      1,இந்தியன் வங்கி காலனி
                                      வள்ளலார் தெருபத்மநாபா நகர்,
                                      சூளைமேடுசென்னை-94, 2005

10. ராஜ் கவுதமன்         தலித்திய அரசியல்பரிசல்,
                                      1,இந்தியன் வங்கி காலனி
                                      வள்ளலார் தெருபத்மநாபா நகர்,
                                      சூளைமேடுசென்னை-94, 2005

11. செ.கணேசலிங்கம்,          குந்தவிக்கு கடிதங்கள்,
                                                மான்வழிக்கு கடிதங்கள்குமரன் பப்ளிஸர்ஸ்,
                                     
12. செ.கணேசலிங்கம்,          குமரனுக்கு கடிதங்கள்,
                                      அறிவுக் கடிதங்கள்,
                                      குமரன் பப்ளிஸர்ஸ்,
                                     
13. எம்.இலியீன்,யா.ஸெகால்மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்,
(மொ.பெ.)நா.முகம்மது செரீபு,எம்.ஏ.
                             ராதுகா பதிப்பகம்மாஸ்கோயு.எஸ்.எஸ்.ஆர். 1987

14. ஜார்ஜ் தாம்சன்    மனிதசாரம் கலைஅறிவியல் ஆகியவற்றின் தோற்றுவாய்,
                                  (மொ.பெ)எஸ்.வி.ராஜதுரை,
                                      விடியல் பதிப்பகம்,
                                     
15. ஜார்ஜ் பொலிட்சர்,  மார்க்சிய மெய்ஞானம்
                                      (மொ.பெ)ஆர்.கே.கண்ணன்
                                      நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,

         
16. மாசேதுங்,         முரண்பாடுகள் பற்றி,
                   கீழைக்காற்று வெளியீட்டகம்,       



No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை