(வண்டிச்சோலை சின்ராசு திரைப்படத்தின் “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே” என்ற மெட்டில் அமைந்த டப்பிங் பாடல்)
செந்தமிழ் நாட்டு புரட்சி பெண்ணே
வீரப்பாட்டு பாடு பெண்ணே
பெண்ண விற்கும் விச நாட்டில்
அறிவின் அழகாய் மாறணுமே
ஆடவர் மட்டும் சுருட்டும் உலகை
பொதுவாய் மாற்றி காட்டணுமே
மனித வாழ்வில் பொறந்தவர் நாமே
பொண்ணும் ஆணும் சம கணக்கு
காதல் மனங்கள் கலக்கின்ற போது
சாதி தீண்டும் தடை எதுக்கு
முகில்கள் வேர்க்கும் மின்னல் கூசும்
குருதி சாரல் மனப்பிறழ்வு
சாதிக் காக்கும் வன்மக் கொலைகள்
இன்றே முடிக்க போர் நடத்து
செந்தமிழ் நாட்டு புரட்சி பெண்ணே
வீரப்பாட்டு பாடு பெண்ணே
செந்தமிழ் நாட்டு புரட்சி பெண்ணே
வீரப்பாட்டு பாடு பெண்ணே
செந்தமிழ் நாட்டு வீரத் தம்பி
வீரப்பாட்டு பாடு தம்பி
மண்ண விற்கும் விச நாட்டில்
அறிவின் அழகை காட்டு தம்பி
காசும் பணமும் சுருட்டும் உலகை சமமாய் மாற்றி காட்டு தம்பி
மனித வாழ்வில் பொறந்தவர் நாமே
பொண்ணும் ஆணும் சம கணக்கு
வீரத்தனங்கள் பிறக்கின்ற போது
காட்சி போதை நமக்கெதுக்கு
வறுமை தீயில் நிற்கும் நிழலில் கானல் நீரும் மனப்பிறழ்வு
லாப பேயின் வன்மப்படைகள்
இன்றே முடிக்கப் போர் நடத்து
செந்தமிழ் நாட்டு வீரத் தம்பி
வீரப்பாட்டு பாடு தம்பி
செந்தமிழ் நாட்டு வீரத் தம்பி
வீரப்பாட்டு பாடு தம்பி
செந்தமிழ் நாட்டு தமிழர்களே
புரட்சிப் பாட்டு பாடுங்களே
பிளவு செய்யும் மத நாட்டில்
நேச விதைகள் தூவுங்களே
மரணம் மிஞ்சும் இனிய உலகை
உழைப்பில் போற்றி வாழ்த்துங்களே
அன்பு என்பது அறிவுக்கு பிள்ள
மனித பண்பை வளத்துக்கணும்
நாட்டில் நாளும் வன்முறை நீங்க
உண்மை போரில் பழகிக்கணும்
மாயை வேறு உண்மை வேறு
வேறுபாட்டை அறிஞ்சுக்கணும்
மனித உலகில் நன்மை ஒளிர
புரட்சிப் பாடு பழகிக்கணும்
செந்தமிழ் நாட்டு தமிழர்களே
புரட்சிப் பாட்டு பாடுங்களே
பிளவு செய்யும் மத நாட்டில்
நேச விதைகள் தூவுங்களே
மரணம் மிஞ்சும் இனிய உலகை
உழைப்பில் போற்றி வாழ்த்துங்களே
செந்தமிழ் நாட்டு தமிழர்களே
புரட்சிப் பாட்டு பாடுங்களே
பிளவு செய்யும் மத நாட்டில்
நேச விதைகள் தூவுங்களே
No comments:
Post a Comment