(வருசமெல்லாம் வசந்தம் படத்தின் “எங்கே அந்த வெண்ணிலா” மெட்டில் டப்பிங் பாடல்
மாணவர் ஜோஸ் BSW II அனுக்கிரகா சமூகஅறிவியல் கல்லூரி)
எங்கே அந்த கல்வியே எங்கே அந்த கல்வியே
இருளை ஒளியாக்கிடும் அறிவை தெளிவாக்கிடும்
எங்கே அந்த கல்வியே
தலை குனிந்து நடந்த நான்
தலை நிமிர்ந்து நடக்கிறேன்
கல்வியால் தானம்மா கல்வியால் தானம்மா
எனக்கென இருப்பது ஒரு மனசு
அது கல்விக்கு கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை அறிவுக்கு தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன
கல்விதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் கல்விதான்
எந்தன் ஒளி விளக்கு
எங்கே அந்த கல்வியே எங்கே அந்த கல்வியே
இருளை ஒளியாக்கிடும் அறிவை தெளிவாக்கிடும்
எங்கே அந்த கல்வியே
No comments:
Post a Comment