Wednesday, February 28, 2024

அணிலாடும் நெடுமரங்கள்

அணிலாடும் நெடுமரங்கள்

 

சுள்ளென்று எரித்தது வெயில்

மூன்று நெடு மரங்கள்

கோடிணைத்தால் முக்கோணம் வடிவுறும்

அகண்ட பாரதமாய் நிழலிட்டன

இலைகளுக்கு இடையில் நிலமெங்கும் வெண்புள்ளி

 

புலி கொன்ற மடமானின் எஞ்சிய எலும்பு

இந்திரனின் வஜ்ரம்போல் காட்சி தந்தது

 

ஒழுக்கமுள்ள எறும்புகள்

இந்திரனை மிதித்தபடி உணவு சேகரித்தன

 

 

ஒளிந்தொளிந்து தப்பித்து

ஓடோடும் பெண் அணிலை

மரத்திற்கு மரம் மாறி

அணிலாடும் ஆணினங்கள்

வன்புணர்ந்து விளையாடின

 

வில்லாடும் ராமன்

அணில் முதுகை வருடியபடி

நிழலாடி மகிழ்ந்திருந்தான்

 

சில்லிட்டு காற்றடிக்க

அணில்களால் கிளரப்பட்ட ராமன்

சிற்றின்ப தீனிக்கு புராணமெல்லாம் நினைவசைத்தான்

 

பார்வதியை மோகித்து மகள் புணர்ந்த பிரம்மன்

நிர்வாணத்தை எட்டிப்பார்த்து தலை இழந்த பிரம்மன்

 

அகலிகையை ஏய்த்த இந்திரன்

துளசியை ஏய்த்த ஸ்ரீவிஷ்ணு

நாரதனின் வில் ஏங்க

அறுபது பெண் புணர்ந்து வருடம் தந்தான்

மோகித்த நாரதனையும் புணர்ந்திசைத்தான்

 

சிறுத்தை அடித்த மான்

ஓநாய் திருடிக் கவர்தல் போல

சிசுபால ருக்மணியை

கிருஷ்ணன் திருடிப் புணர்ந்தான்

பிறர் மனை எழுவரை புணர்ந்த தாகம் தீராதும்

கோபியப் பெண் பத்தாயிரம்

புசிபுசித்தப் பின்பும்

ராதையும் புணர்ந்தான் கள்ளக் கிருஷ்ணன்

 

நினைவாடும் புராணங்கள்

ராமன் தலை கிறுகிறுக்க

அணிலாடு மன்றத்தில்

காம வெறி உச்சமிட

மன்றம் தொடங்கினான் ராமன்

பாலியல் ஜல்சாவில்

பலபல தொண்டர்கள்

பாரத மகள்களை வில்லெய்து எரித்தனர்

 

வன்புணர்ந்து பிசுபிசுத்த கோயில் கருவறை

கொலைபட்ட சிறுமியின் நசுங்கிய எலும்புகள்

புண்பட்டு பிளந்த யோனிபோல்

ரத்தம் பிசுப்பேறி கிடந்தன பாறைகள்

அனுமன் ஓய்வாக சாய்ந்திருந்தான்

குருதியில் வால் நனைத்து மகிழ்ந்திருந்தான்

 

ஊர்கூடி வன்புணர

நிர்வாண மகளை ஊர்வலம் செய்தனர்

மண்ணும் வானும் வெட்கி குனிந்தன

 

காற்றெங்கும் காவிகளின் ராம கோசம்

நாடெங்கும் பெண்கள்பிண நாற்றம் வீசும்

 

வில்விட்ட அம்பு உயிர் தொடுதல்போல்

உயிர்விட்ட பெண்குரல் செவி பாய்ந்தன

 

அணங்கு சூல் இசக்கி

கொல்லிப்பாவை மாரி

காளி வனப்பேச்சி

தவ்வை கொற்றவை

ஒருமித்த தமிழுடல்

சினமேறி சிலிர்த்தன

கரு நீல சிவப்பொளியில் போருடலாய் மிளிர்ந்தன

 

பாலியல் ஜல்சா வில்லர்கள்

பிண மாலை ஆனார்கள்

சனாதனப் பன்றி வெட்டி

வில்லர்கள் நெருப்பேறி

கிளரப்பட்ட பேய் கஞ்சி

காளியின் போர் கஞ்சி

சமூக நீதிக்கு நோய் மருந்து

ஜனநாயக உயிர்க்கு பெரும் விருந்து

 

கருத்த நெற்றியில் பவுர்ணமிப் பொட்டு

திரிசூலக் கூத்தாடும் முத்தமிழ் அணங்கு

புரட்சியின் மூவண்ணப் புகையாக சூழ்ந்தாள்

சனாதன ராமனை அருவமாய்ச் சூழ்ந்தாள்

தொடைநடுங்கி ராமன்

அச்சத்தின் உச்சம் தொட்டான்

சரயு நதி எங்கே?

திசையெங்கும் தேடினான்

தற்கொலைக்கு ஏங்கினான்

 

சோலி முடித்தாள் தமிழணங்கு

வில்லாடும் ராமனின் சங்கறுத்தாள் வில்லறுத்தாள்

அறுபட்ட வில் துடிதுடித்து புரள

சனாதனப் பேயன்

கடல் அழித்த சுவடானான்


Sunday, February 25, 2024

திரிசூலம்

 

திரிசூலம்

 

வெகு சில ஆண்டுகளாக

எலும்பிச்சம்பழம் குத்தப்படாமல்

பூசாரி கிழவியும் சூலாயுதமும்

பொலிவின்றி நிற்கின்றன

 

குங்குமச் சாறு பிதுங்க

எலும்பிச்சம் பழம் ஒன்றை

சூலத்தில் சூடினேன்

 

கொலை செய்த பாதகர்களே

ஓய்.. ஏய்.. என்று

பூசாரி கிழவி கொற்றவை ஆடினாள்

 

கண்ணீர் பூ உதிர்த்தபடி

வெறி பிடித்து அலறினாள்

 

மீன்குஞ்சு போல் திரிந்த

சிறுசுகளை கொளுத்துனீக

 

தெருத்தெருவா வீடுடைத்து

இளசு பெருசு துடிதுடிக்க

வாள் வீசி வெட்டுனீக

ஜெய்ஸ்ரீராம் தாகம் தீர

ரத்தப் பிண்டம் கொடுத்தீக

 

வேட்டிக்குள் விரைத்திருந்த

ராமனின் வில் பாய்ச்ச

காக்கை உடை கிழித்து

உடைந்த பெண்களை எரித்தீக

 

வில்லெடுத்த ராமன்களே

நிறைமாத கர்பிணிக்கும்

புடைத்த வயிறு கிழித்தீக

சிசுவென்று பாராது

தின்றொழித்த ஓநாய் போல்

சூலாயுத வாயால்

உயிர் செருகி எரித்தீக

 

காவி வெறி பேடிகளே

சனாதனத்தின் மலக்கழிவே

அணங்கு சூழ் கொற்றவை

காளி ஆடி வருகிறாள்

நீலம் கருப்பு சிவப்பு

திரிசூலம் ஏந்தி வருகிறாள்

 

காவிக்குடுமி பொசுங்க

விரைத்த குறி

அறுந்த வாலாய் துடிதுடித்து புரள

எலும்பிச்சம் பழம் போல்

சனாதன மூளை அழுகி பிசுபிசுக்க

சூலாயுத கூர் நாவில்

காவிக் கதை முடிப்பாள்

Saturday, February 24, 2024

மூதாதையராக சிரித்த மகள்

 

மூதாதையராக சிரித்த மகள்

 

கண்ணாடி

எம்மை பிம்பம் செய்தது

கதை பேசியபடி கண்டிருந்தோம்

செல்ல மகளும் நானும்

 

என் எழுத்து பற்றிய கதையிலும்

பாட்டி பாட்டன் பற்றிய கதையிலும்

சிலாகித்துப் போனாள் செல்ல மகள்

 

அறம் செய்வதையே விரும்பிய

அவ்வையின் நரைத்த முடிகள்

இருட்டில் வெள்ளி மழையாக பொழிந்திருக்கும்

அத்தகு நரைமுடி உன் பாட்டிக்கும் உண்டு

 

மனமே மனிதரின் ஆறறிவென்ற

தொல்காப்பியரின் கண்கள்

முல்லை நில கொடிகளின் முல்லைப்பூ ஒத்தன

உன் பாட்டனின் கண்களும் முல்லைப்பூ கண்களே

 

தெய்வங்களுக்கெல்லாம் முதல் தெய்வம்

அகர முதல எழுத்துக்களே என்றுரைத்த

வள்ளுவரின் நெற்றியொளி அரை நிலவின் ஒளி ஒத்தன

உன் பாட்டனின் நெற்றியும் அரைநிலவு கவர்ந்தனவே

 

கடவுளை மற மனிதனை நினையென்ற

பகுத்தறிவு பெரியாரின் உரையாடும் உதடுகள்

மின்னலின் அசைவுகளை ஒத்திருப்பவை

உன் பாட்டனின் உதடுகளும் அத்திறம் வாய்ந்தவை

 

வர்ண சாதி இந்து மடமைக்கு சாவு மணியடித்த

அம்பேத்கர் தாத்தனின் உள்ளங்கைகள்

சூரியனின் முழு வெப்பம் சுமந்தவை

உன் பாட்டனின் கரங்களும் அநீதிகளை எரித்தவை

 

பொதுவுடைமை சமூகத்தின் திசைகாட்டிய

காரல் மார்க்ஸ் தாத்தனின் முகத்தோற்றம்

வெண்பஞ்சு மேகமாய் திரண்டிருக்கும்

உன் பாட்டனுக்கும் நெடுந்தாடி

வெண்பஞ்சாய் நிறைந்திருக்கும்

 

மனிதகுலத்தின் தத்துவ மேதை காரல் மார்க்ஸை

தன் கலையறிவில் பெற்றுத்தந்த ஜென்னி மார்க்ஸ் 

உள்ளத்திலும் பேரழகி

தங்க நிற கொன்றை மலரின் அடுக்கான பண்பழகி

உன் பாட்டிக்கும் பண்புகள் ஜென்னி மலர் ஒத்திசைக்கும்

மனிதகுலம் முழுமைக்கும் பேரன்பு மிளிர்ந்திருக்கும்

 

கண்ணாடி முன் உடனமர்ந்து

வியந்தபடி சிலிர்த்திருந்தாள்

இல்லாத பாட்டி பாட்டனை

இட்டு கட்டி நான் இசைக்க

வியக்க வியக்க கண்டிருந்தாள்

 

பாட்டியும் பாட்டனுமாக நான் வருவேன்

உறுதியும் மகிழ்வுமாய் சொல்லிச் சிரித்தாள்

 

அய்யோ மகளே!

உனக்கு தாடியும் முதுமையும் முளைப்பதா?

 

அய்யோ அப்பனே!

என் செயல்களில் வெளிவரும் பாட்டி பாட்டனுக்கு

தாடியும் வயதும் தேவையில்லையே

 

கண்ணாடி பார்த்து வியந்தேன்

இட்டுகட்டிய பாட்டி பாட்டன்கள்

மகள் உருவில் சிரிக்கின்றார்கள்

நாங்கள் கண்ணாடி பார்த்தபடி

கனவெல்லாம் சிரித்திருந்தோம்

காவிப் பம்பரம்

 

காவிப் பம்பரம்

 

பச்சோந்தி விழிகளை மெல்ல சுழற்றுதல்போல

விரல்களின் இடுக்கிலிருந்து சாட்டையை

மெல்ல சுழற்றினாள் செல்ல மகள்

 

அனுமன் வாலால் சுற்றப்பட்ட ராமன்போல்

சுற்றப்பட்டிருந்தது காவிப் பம்பரம்

 

சொடுக்கி விடப்பட்ட வேகத்தில்

துகில் உரிக்கப்பட்ட பாஞ்சாலிபோல்

ஓம் என்று சப்தமிட்டு

புழுதி பறக்க சுற்றுகிறது பம்பரம்

 

அதானி விமானத்தில் மோடி

சுற்றுசுற்றாய் சுற்றிய

நாடும் வானும் போல

பம்பரம் சுற்றுவதாக சிலிர்க்கிறான் தந்தை

 

நம் மானத்தை மண்ணோடு பறித்து விற்ற

கேடியின் கதையை அறியலயோ

ஏய்யென்று வருந்திச் சிரிக்கிறாள் தலைவி

டெல்லிக்கிளி

 

டெல்லிக்கிளி

 

காளாண் பயிரிட பச்சிலை கத்திரித்த

பல லட்சம் எறும்புகள்போல

பச்சை கொடி கட்டி

டிராக்டர் முழங்க

டெல்லி சலோ விவசாயிகள்

அணிவகுத்துச் சென்றனர்

 

டெல்லி கோட்டைபோல

கால்விரித்து நின்றது

காவிநிற வெட்டுக்கிளி

 

பச்சிலை எம் உரிமையென

திசையெங்கும் முழங்கின எறும்புகள்

 

அலட்சியம் செய்த டெல்லிக்கிளி

முட்கள் நிறைந்த முன் கால்களால்

எறும்புகளைக் கவ்வியது

 

இறகசைத்து பறந்தும்

பின் கால்களை உதைத்தும்

அணிவகுத்த எறும்புகளைச்

சிதறி ஓடச் செய்தது

 

தாமரையின் மொட்டு போன்ற கூரிய வாயால்

கையில் கவ்விய எறும்புகளைக் கொய்து தின்றது

 

எறும்புகளின் பச்சிலைகள் சிவப்புக் கொடிகளாக மாறின

கோட்டையின் கால்களை திசையெங்கும் தாக்கின

 

கால் பரப்பி வீழ்ந்தது டெல்லிக்கிளி

மொய்த்துக் கொன்றன எறும்புகள்

 

பின்னொரு காற்றுப் பொழுதில்

காவி இறகும் தாமரை மொட்டு போன்ற தலையும்

பிறழ்ந்தன உருண்டன முடிந்தன

Sunday, February 4, 2024

சாக்யா அகாடமியுடனான செயல்பாடுகள்





 ஒரு நாள் நாடக பயிலரங்கம் (23.12.23)

கதை உருவாக்கம் 
தமிழ் கலை பயிற்சி  


























 
உலகத்தில் முதல் கருவியை கண்டுபிடித்தது
 உலகத்தில் முதல் சுதந்திரம் வாங்கி தந்தது
 உலகத்தில் முதல் பாரம்பரியத்தை கண்டுபிடித்தது
 உலகத்தில் முதல் எழுத்தை கண்டுபிடித்தது
 உலகத்தில் முதலில் தோன்றிய பாலினம்
 எல்லாம் பெண்
-
 ஓவிய தரணி
 ஐந்தாம் வகுப்பு
 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சாக்கியா அகாடமி


நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை