டப்பிங் பாடல் – 4 - மண்ணில் இந்தக் காதலின்றி...
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணி அவர்களுக்கு சமர்ப்பணம்
நினைவன்புடன் புதியவன்
மண்ணில் வர்க்கப்
போர்களின்றி நாளை வாழ்தல் கூடுமோ
வர்ணம் சாதி
பேதமின்றி நாடு வசந்தம் பாடுமோ
ஆண்மை இன்றி
மண்ணில் வன்மம் ஏதடா
வன்மம் நீங்கி
அறிவில் இன்பம் காணடா
மண்ணில் வர்க்கப்
போர்களின்றி நாளை வாழ்தல் கூடுமோ
வர்ணம் சாதி
பேதமின்றி நாடு வசந்தம் பாடுமோ
ஆண்மை இன்றி
மண்ணில் வன்மம் ஏதடா
வன்மம் நீங்கி
அறிவில் இன்பம் காணடா
சொல்லழகின்
கன்னித் தமிழும் மக்களின் துணையின்றி
என்னவிதம் சிந்து
படிக்கும் உண்மையின் முகமின்றி
சிந்தனையும்
வர்க்கப் பகையும் பொங்கிடும் உணர்ச்சியும்
சிந்திவரும்
பொய்யின் அரசும் மாற்றிடும் புரட்சியும்
கல்விமகள் பணமாய்
இருந்தால் கசக்கும்
கல்வி துணை
இருந்தால் சமரும் இனிக்கும்
மொழியினில்
கருத்தினில் செயலினில் விளைவினில்
தலைமுறை சுகம்தரும்
சமத்துவ அரசியல் காண்
மண்ணில் வர்க்கப்
போர்களின்றி நாளை வாழ்தல் கூடுமோ
வர்ணம் சாதி
பேதமின்றி நாடு வசந்தம் பாடுமோ
உண்ணும்கனி
தானியங்களும் ஊட்டிய உழவரும்
வண்ணக்கலை அற்புதங்களும்
படைத்த கலைஞரும்
சிற்றிடையின்
வண்ணத்துணியும் நெய்திடும் நெசவரும்
சுற்றுலகம்
செய்யும் தொழிலும் மக்களின் வலிகளும்
எண்ணிவிட மறுத்தால்
எதற்கோ பதவி
எத்தடையும்
உடைத்தால் அதில்தான் புரட்சி
முடிமுதல் அடிவரை
அறிவியல் முகம்தரும்
சமத்துவம் படைத்திடும்
மகத்துவம் முழங்கிடவா
மண்ணில் வர்க்கப்
போர்களின்றி நாளை வாழ்தல் கூடுமோ
வர்ணம் சாதி
பேதமின்றி நாடு வசந்தம் பாடுமோ
ஆண்மை இன்றி
மண்ணில் வன்மம் ஏதடா
வன்மம் நீங்கி
அறிவில் இன்பம் காணடா
மண்ணில் வர்க்கப்
போர்களின்றி நாளை வாழ்தல் கூடுமோ
வர்ணம் சாதி
பேதமின்றி நாடு வசந்தம் பாடுமோ
No comments:
Post a Comment