Tuesday, May 18, 2021

இயற்கை அன்னை முடிப்பேன் விட மாட்டேன்

 

 

ஊர்க்காவலன் படத்தில் எடுத்த சபதம் முடிப்பேன் பாடல் மெட்டு

 

இயற்கை அன்னை முடிப்பேன் விட மாட்டேன்

உயிர்கள் மக்கள் மகிழ மடி கொடுப்பேன்

இந்த பாவி கார்ப்ரேட் சாமி இனி நான் விட மாட்டேன்

 

காடு மலைகளை இலாப வெறியுடன் கொல்வது நியாயமா

ஆதி குடிகளும் யானை புலிகளும் சாபத்தில் வாழுமா

நாடு கொன்று வாழ்தல் உந்தன் கணக்கா!

காடு இன்றி நாட்டில் வாழ்க்கை இருக்கா?

இலாப வெறி வாழ்வின் சாபக் கேடடா

இயற்கைக்கு மேலே சக்தி ஏதடா                       (இயற்கை)

 

மக்கள் தொழுதிடும் ஆதிக்கடவுள்நான் விட்டு விடுவேனா

வாழும் உயிர் தினம் பாடு பட்டசனம் சாக விடுவேனா

தாகம் போக்கும் நீரில் இலாபக் கணக்கா!

மூச்சு பேசும் காற்றில் காசு இருக்கா?

ஆதித் தெய்வம் நானே வருவேனே

இலாபவெறி பேய்நீ முடிப்பேனே                      (இயற்கை)

No comments:

Post a Comment

நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை