Saturday, August 15, 2026

உறுதிமொழி - நல்லுலகச் சிற்பிகளின் உறுதிமொழி

 உறுதிமொழி

 

1.நான் இயற்கையையும் மனித குல முன்னேற்றத்தையும் பேரன்புடன் நேசிக்கிறேன் 

 

2.நான் என்னையும் என் தாயையும் விரும்பி பாதுகாப்பது போல இயற்கையையும் மனிதகுல முன்னேற்றத்தையும் விரும்பி அரவணைத்து பாதுகாப்பேன்

 

3.மக்கள் அனைவரும் தேவையானவற்றை பெற்று மகிழவும் வாங்கும் சக்தி உள்ளவர்களாக உருவாகவும் மனதார விரும்புகிறேன் 

 

4.மக்கள் அனைவரும் உடலாலும் மனதாலும் அறிவாலும் உறவாலும் சுற்றுச்சூழல் முழுமையாலும் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக வாழ ஆசைப்படுகிறேன் 

 

5.அறிவாலும் செல்வத்தாலும் மதிப்பாலும் மக்கள் அனைவரும் சமமானவர்களாக வாழ ஆசைப்படுகிறேன் 

 

6.சாதி வெறி மதவெறி இனவெறி போர் வெறி லாபவெறி போதை வெறி ஆதிக்க வெறி காட்சி போதை வன்முறைகள் அடிமைத்தனம் அறியாமை ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் ஏழை பணக்கார பாகுபாடுகள் அனைத்தும் செத்தொழிந்து நல்ல உலகம் புத்துயிர் பெறுவதை விரும்புகிறேன் 

 

7.மனிதர்கள் முகம் பார்த்து சிரித்து ஒன்றுபட்டு கூடி உழைத்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பேரானந்தமான வாழ்வையே விரும்புகிறேன் 

 

8.ஆறு மணி நேர உழைப்பும் எட்டு மணி நேர ஓய்வும் பத்து மணி நேர பண்பாட்டு முயற்சிகளும் கொண்டாட்டங்களும் என்ற வாழ்க்கை விதிமுறைகள் இயல்பாகிட விரும்புகிறேன்.

 

9.மனிதராகப் பிறந்த அனைவருக்கும் மேன்மையான வாழ்வைப் பெற அனைத்து வாய்ப்புகளும் சமமாக கிடைத்து மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற நல்லுகை அடைவதற்காக ஆசைப்படுகிறேன்

 

10.எமது ஆசைகளையும் மனிதகுல  மேன்மைகளையும் நல்லுலக கனவுகளாக கூடி சிந்திக்கின்ற மனித குழுக்களின் அறிவியல் மனப்பான்மை நிறைந்த கனவுகளோடு எமது கரம் ஆசைப்படுகிறேன் 


11.எமது உழைப்பில் நான் நல்லுலக சிற்பியாகவும் எதிர்கால தலைமுறைகளின் கலங்கரை வெளிச்சமாகவும் எமது வாழ்வை புன்னகை பூக்களால் நிறைவு செய்திட மனதார விரும்புகிறேன்

 

 (விருப்பத்தை சொல்லிக்கொள்வதாக இருக்கிறதே. உறுதிமொழி எடுப்பதுபோலத் தெரியவில்லையே என்று நீங்கள் கருதலாம். மேற்கண்ட விருப்பங்கள் உங்கள் ஆழ்மனதின் பண்பட்ட கனவுகளாக இலக்கு பெற்றிருந்தால் அவற்றை செயல்படுத்தும் செயல்வீரர்களாக நீங்கள் திகழ்வீர்கள் என்பதை மனிதகுலம் உறுதியாக நம்புகிறது என்று பொருள். மற்றபடி உறுதிமொழி என்று வாயில் வடைசுட்டுவிட்டு செயலில் மாமா பிஸ்கோத்து என்பதாக நடந்துகொண்டால் மனிதகுலத்தின் மேன்மைக்கும் தங்களுக்கும் எந்த பயனும் இல்லையல்லவா! அதனால், உங்கள் விருப்பங்களில் இருந்தே உறுதிமொழி அங்கீகாரம் பெறுகின்றது நண்பர்களே.)

No comments:

Post a Comment

டப்பிங் பாடல் - பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே

 டப்பிங் பாடல் - பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே  (விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப்பாடல் டப்பிங்) குதிர தமிழர கழுத ஆக்கிட்டானே தமிழ வேதம்சொல்ல...

அதிகம் பார்க்கப்பட்டவை