Sunday, April 5, 2026

டப்பிங் - கன்னித்தீவு பொண்ணா - யுத்தம்செய் படப்பாடல்

தானானனா தானானனா தானானனா தானனா 

தானானனா தானானனா தானானனா தானனா 

தானானனா தானானனா தானானனா தானனா 

தானனனா தன தானானனா

தீனனனா தின தீனானனா


ராணித்தேனி நீதான் கல்லூரிக்கு வாம்மா 

 ஒன்றுபட்டு உலகம் போற்ற உயர்த்தி பாடம்மா- இவன்
 கஞ்சா போட்ட வாய இடிச்சு திருத்தி போடம்மா 

 சட்டை டவுசர் போட்ட ஆடு மாடு போல 
 உரிமையா உன்ன உரசிட்டு போறான் 

 நீ நல்லுலக தேரு
 இவன் அந்தக் கால சரக்கு 
 மனித குலம் போற்றும் 
 ஒரு உத்தமனை ஏத்து ( ராணித்தேனி)

 நம்ம நாடு பாரு நோயில் பட்டு போச்சு 
 நட்பின் வீரம் காட்டு  மக்களோட வாக்கு

 பப்ஜி போதைக்குள்ள வீரம் காட்டாதே 

 படிச்சா புரியாத வாத்து கூட்டம் நீ
 பொறுப்பா பழகாத பொறுக்கி கூட்டம் நீ 
 கூட்டா நடந்தாலும் குரங்கு கூட்டம் நீ 
 மதிப்பா நடக்காத மந்தை கூட்டம் நீ

 உன் கெட்டத்தனம் செத்தா நான் ஆதித்தாயா வருவேன்  
 நீ மக்கள் துரோகி என்றால் நான் கொற்றவையாய் நிற்பேன் 
( ராணித்தேனி)

 பசிச்சா சோறு தினம் ஊட்டி விட உழவு 
 தொழில்நுட்பம் நூறு நல்லுலகக் கனவு 

 லாபவெறி பேயிக்கிட்ட நாட்டை விற்காதே

 தடுக்கி விழ வைக்கும் தான்தோன்றி நீ 
 காட்சி போதையில செத்துப் போற நீ 
 ஒப்புக்கும் விளையாத வெட்டி வேலை நீ  
 திருத்தி வாழ்ந்தால்தான் மனித குலம் நீ

 நீ மண்ணின் மக்களோடு நின்று உண்மை வழி தேடு
 தாய்தலைமை பூமி பாடும் நல்லுலகப் பாட்டு 

 ராணிதேனி நீதான் கல்லூரிக்கு வாம்மா 
 ஒன்றுபட்டு உலகம் போற்ற உயர்த்தி பாடம்மா- இவன்
 கஞ்சா போட்ட வாய இடிச்சு திருத்தி போடம்மா 

 சட்டை டவுசர் போட்ட ஆடு மாடு போல 
 உரிமையா உன்ன உரசிட்டு போறான் 

 நீ நல்லுலக தேரு
 இவன் அந்தக் கால சரக்கு 
மனித குலம் போற்றும் 
 ஒரு உத்தமனை ஏத்து ( ராணித்தேனி)


No comments:

Post a Comment

சாதிப்பித்து

  சாதிப்பித்து முனைவர் புதியவன்   உங்களுக்கு எந்த வயதில் சாதியை பற்றி தெரிந்தது?  எப்படி புரிந்து கொண்டீர்கள்?  சாதியை நீங்கள் புரி...

அதிகம் பார்க்கப்பட்டவை