Thursday, November 27, 2025

இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

 


இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் – பிறப்பும் வளர்ச்சியும்

டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

(அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமர்பித்த ஆய்வுரை)

 

பக்.3

பாம்ப்பியின் (pompii) சிதைவுகள் போன்ற சில வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்திருப்பீர்கள். இவற்றின் தொன்மைச் சிறபபையும் வரலாற்றையும் விளக்கியுரைப்பதற்கென்று பணியாற்றும் வழிகாட்டிகளின் வருணனைகளை வியந்து கேட்டிருப்பீர்கள். என் கருத்துப்படி மானுடவியல் மாணவர்களும் ஒரு வகையில் இந்த வழிகாட்டிகளைப் போன்றவர்களே என்பேன். அவர்களைப் போன்றே சமூக நிறுவனங்களை விளக்கியுரைப்பதற்குத் தம்மால் முடிந்த அளவு தம் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து அதேவேளையில் மிகுந்த ஆர்வத்தோடும் பொறுப்போடும் அவற்றின் தோற்றத்தையும் செயற்பாடுகளையயும் இவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

 

பக்.4

இந்தியாவில் சாதிமுறை உள்ளவரை இந்துக்கள் கலப்பு மணம் செய்யமாட்டார்கள். அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பிழைக்கச் சென்றாலும் இந்திய சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்.

 

சாதியின் மூலாதாரங்களை நான் முழுமையாக விளக்கிவிட முடியாது. சாதி முறையின் தோற்றம், அமைப்பியக்கம் மற்றும் அதன் வளர்ச்சி ஆகியவற்றை மட்டும் விளக்கியுரைப்பதற்கு நான் வரையறை செய்துகொள்வேன்.

 

சாதிச் சிக்கல் ஒரு வட்டார சிக்கல் ஆனால் மிகப் பரந்தளவு தீங்கு தரும் வல்லமையுடையது 

 

பக்.5

மானிடவியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஆரியர்கள் திராவிடர்கள் மங்கோலியர்கள் சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர்.இவர்கள் அனைவரும் பன்னெடுங் காலத்திற்கு முன்னர் பல்வேறு திசைகளிலிருந்தும் பலவகைப்பட்ட பண்பாடுகளோடும் இந்தியாவுக்குள் நுழைந்த பழங்குடிகளாவர். போரிட்டுத் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதைத் தொடர்ந்துவந்த போராட்டங்களுக்குப் பின் நிலையாகத் தங்கி பிறருடன் அண்டை அயலாராகி அமைதியாக வாழத் தொடங்கினர். பின்னர் இவர்களுக்குள் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்பின் மூலமாகவும் கலந்து பழகியதாலும் தத்தம் தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டினை இழந்து அவர்களுக்குள் ஒரு பொது பண்பாடு உருவானது. எனினும் பலவகை இனமக்களின் தனித்தனி பண்பாடு மறைந்து ஒன்றுபட்ட ஒரே பண்பாடு ஏற்பட்டுவிடவில்லை என்பது தெளிவு.

 

பண்பாட்டு ஒருமைப்பாட்டினால் இணைந்துள்ள இந்திய தீபகற்பத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு வேறு எந்த நாடும் இல்லை என்று துணிந்து கூறுவேன்.

 

 இந்து சமுதாயம் ஒரே கூட்டமைப்பு அல்ல. சாதி ஒவ்வொன்றும் தனி கூட்டமைப்பு 

 

 

 

பக்.5,6

 இந்து சமுதாயம் என்பது ஒன்றுக்கொன்று தனித்தனியே இயங்கும் பிரிவுகளின் ஒரே கூட்டமைப்பாக மட்டும் இருக்குமேயானால் இந்த சிக்கல் எளிதானதாக இருக்கும். ஆனால் சாதி ஏற்கனவே ஓரியல் பாய் உள்ள பிரிவுகளின் கூட்டமைப்பாக உள்ளதால் சாதியின் தோற்றத்தை பற்றி விளக்குவது கூட்டமைப்பாக அமைந்த முறையினை விளக்குவதாக ஆகின்றது.

 

 பக்.6

சாதியின் இயல்பு பற்றிய சிலரது விளக்கங்கள் 

செனார்ட் (பிரெஞ்சு அறிஞர்) 

ஒரு குறுகிய ஆட்சி மன்றம் கோட்பாட்டளவில் எல்லா வகையிலும் வாழையடி வாழையாகக் கண்டிப்புடன் இயங்குவது. தலைவர் ஒருவரையும், ஒரு ஆலோசனைக் குழுவையும் தன்னகத்தே கொண்டு மரபு வழியில் தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்பு ஏறகத்தாழ நிறைந்த அதிகாரம் கொண்ட பேரவையாகக் கூட்டுவது, குறிப்பிட்ட சில திருவிழாக்களின் போது ஒன்று சேர்வது, மணவிழா, உணவு, தீட்டு சம்பந்தப்பட்ட சடங்குகள் தொடர்புடைய அதிகார வரம்புகளை வரையறை செய்யும் பொது அலுவல்களால் பிணைக்கப்பட்டிருப்பது, பலதரப்பட்ட கட்டளை வரம்புகளை நிர்ணயிப்பது மூலம் தன் உறுப்பினர்களை ஆள்வது, தண்டனைகளை விதிப்பதன் மூலம் மாற்ற முடியாத வண்ணம் தன்உறுப்பினர்களைத் தம் கூட்டத்திலிருந்து நீக்கி வைக்கும் பெருந்தண்டனை விதிக்கும் அளவுவரை சென்று தன் அதிகாரத்தை உணர்த்துவது.

 

நெஸ்பீல்டு

 சாதி என்பது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் ஒரு குழுமமாக அமைந்து பிற குழுவினருடன் எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாமலும் கலப்பு மணவுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலும் தங்கள் குழுவினரைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பிறருடன் கலந்து உணவு அருந்தவோ தண்ணீர் முதலியவற்றைக் குடிக்கவோ செய்யாமலிருப்பது ஆகும் 

 

பக்.6,7

சர். எஸ். ரிஸ்லி

 சாதி என்பதனை ஒரு பொதுப்பெயர் கொண்ட குடும்பங்களின் அல்லது பல குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தின் தொகுப்பு என விளக்கலாம். இந்தப் பொதுப் பெயர் குறிப்பிட்ட தொழில்கள் சார்ந்ததாகவோ அல்லது புராணத் தொடர்புடைய முன்னோர் அல்லது தெய்வங்கள் செய்துவந்த தொழிலை தாமும் தொடர்ந்து செய்து வருவதாகவோ அமைந்திருப்பது. சாதி பற்றிய கருத்தினைக் கூறத் தகுதியள்ளவர்களால் ஓரியல்பான ஒரு குழுவின் உருவாக்கமே சாதி எனக் கருதப்படுவது.

 

பக்.7

டாக்டர் கெட்கர்

 சாதி என்பது இருவகை இயல்புகளின் சமூகக் குழு 

1. உறுப்பினராகும் உரிமை என்பது உறுப்பினர்களுக்கு பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு 

2. தன் குழுவிற்கு வெளியே மண உறவு  தடை

 

 அறிஞர்களின் விளக்கங்கள் மிக அதிகப்படியாக அல்லது மிக குறுகியதாக உள்ளது. முழுமையானதாகவோ சரியானதாகவோ இல்லை. சாதியின் மையக்கருத்து தவறப்பட்டுள்ளது. 

 இவர்களின் கருத்துக்கள் ஒன்றின் குறையை மற்றொன்று நிறைவு செய்வதாக அமைந்திருக்கின்றது. 

 

செனார்டை பரிசீலித்தல்

 தீட்டு தூய்மை பற்றிய பொதுவான நம்பிக்கை. 

 புரோகிதரும் தூய்மையும் கூட்டாளிகள்.

 தீட்டு பற்றிய கருத்து சாதியத்தில் ஒரு பண்பாகும். 

 

பக்.8

நெஸ்பீல்டை பரிசீலித்தல் 

 ஒன்றிணைந்து உணவு உண்ண தடை.

சாதி என்பது தன்னைத்தானே அடைப்பு கொண்ட அலகு. 

 இது ஒரு மதக்கட்டளை.

பிற்காலத்தின் வளர்ச்சி. 

 

ரிஸ்லியை பரிசீலித்தல் 

 சிறப்பாக புது கருத்து எதனையும் அவர் சொல்லவில்லை. 

 

 டாக்டர் கெட்கரை பரிசீலித்தல் 

 கலப்புமண தடை மற்றும் பிறப்பு வழி உறுப்பினராகும் தன்மை இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்  

 

 பக்.9

அகமணம் - தன் இனத்திற்கு உள்ளே மணம் நடைபெறும். தன்  இனத்திற்கு வெளியே மணம் தடை செய்யப்படும்

 

 இந்தியாவில் பல்வேறு பகுதிகள் பரவியுள்ள பல்வேறு இனத்தவரான இந்திய மக்கள் அனேகமாக ஒன்று கலந்து ஒரு இயல்பு தன்மையுற்ற பண்பாட்டு ஒருமையை அடைந்துள்ளனர் .

 

பக்.9,10

ஒரு இயல்பு தன்மையுள்ள பண்பாட்டு ஒருமையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்திய மக்களிடம் நிலவும் சாதிச் சிக்கல் புதுமையான தன்மை உள்ளதாக ஆகின்றது.

 

பக்.10

இந்தியாவில் சாதி என்பது மக்களை செயற்கையாக கூறுபடுத்தி பிரித்து அகமனம் புரியும் வழக்கத்தால் ஒன்று மற்றொன்றோடு இணைவதில் இருந்து தடுத்து வரையறுக்கப்பட்ட பிரிவுகளாக ஆக்கியுள்ளது என்பதே இதன் பொருள். 

 

 சாதி முறைக்கு தன் இன திருமண வழக்கம் அல்லது அகமண வழக்கமே தனித்தன்மை வாய்ந்த ஒரே இயல்பு என்னும் முடிவு தவிர்க்க முடியாததாகிறது. ஆகையால் அகமண வழக்கம் எவ்வாறு கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்பதை நிறுவுவதில் நாம் வெற்றி பெற்றால் சாதியின் பிறப்பையும் அமைப்பியக்கத்தையும் சரியாக நிரூபித்தவர்கள் ஆவோம் 

 

 10

சாதிய அமைப்பு என்னும் மர்ம பேழையைத் திறப்பதற்கு திறவுகோல்= அகமண வழக்கம் 

 

 இந்திய சமுதாயத்தை தவிர வேறு எந்த நாகரிக சமுதாயத்திலும் நாகரீகமற்றிருந்த பழங்காலத்திற்குரிய மிச்ச சொச்சங்கங்கள் நிலவி வருவதை காண முடியாது.

1. மதங்கள்

2.அகமணமுறை

 

பக்.11

அகமணமுறை என்பது இந்தியர்களுக்கு அந்நியமானது என்ற உண்மையை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பல்வேறு கோத்திரங்களும் புறமண வழக்கத்தைக் கொண்டவைதான்.

 

 இந்திய மக்களைப் பொருத்தமட்டில் புறமணம் என்பது எவரும் மீளத்துணியாத ஒரு சமய கோட்பாடாகவே உள்ளது.

 இந்த இயல்பின் காரணமாக சாதிகளுக்குள் அகமண வழக்கம் கடைப்பிடிக்கப்பட்ட போதிலும் சாதிகளின் தன் இன மக்களுக்குள்ளே புறமனம் என்பது என்றும் மீறத்துணியாத ஒரு சமயக் கோட்பாடாக உள்ளது. 

 

அகமன வழக்கத்தை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டங்கள் புறமண வழக்கத்தை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டங்களைவிட மிகக் கடுமையானவை. 

 

 புறமணம் என்றாலே கலந்து ஒன்றாவது 

 புறமணத்தின் விளைவாக சாதி இருக்க இயலாது 

 

*

இந்தியாவைப் பொறுத்தமட்டில் சாதிகளின் படைப்பு என்பது புறமணத்தைவிட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டதின் விளைவு. 

 புறமணத்தை விட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டிருப்பதே சாதியும் தோற்றம் ஆயிற்று. எனினும் இது அவ்வளவு எளிதான நிகழ்ச்சி அல்ல. 

 

பக்.12

அகமண வழக்கத்தைக் கட்டி காக்க வேண்டுமானால் இல்லற வாழ்க்கைக்கான அல்லது மண உறவுகளுக்கான உரிமைகள் குழுவுக்குள் இருந்தே அளிக்கப்பட  வேண்டும். இல்லையெனில் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் வட்டத்தை விட்டு வெளியேறி தங்களால் முடிந்த வழிகளில் எல்லாம் தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள முனைவார்கள் 

 

*? தம்மைத் தானே ஒரு சாதியாக ஆக்கிக்கொள்ள விரும்பும் குழுவினர் திருமணத்திற்கு ஏற்ற ஆண்கள் பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை சம அளவினதாக இருக்குமாறு பேணுவது அவசியம் ஆகிறது 

 இதுபோன்ற ஒத்த எண்ணிக்கை சமநிலையை பேணுவதன் மூலமே அகமண வழக்கத்தைக் கட்டிக்காக்க முடியும். 

 ஆண் பெண் எண்ணிக்கையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வு அகமண வழக்கத்தை நிச்சயமாகத் தகர்த்து விடும். 

 

பக்.13

*?

 ஆண் பெண் எண்ணிக்கை அளவு எப்போதும் சமமாக இருக்க வேண்டுமானால் இயற்கையில் ஆண் பெண்ணாக இருக்கும் கணவனும் மனைவியும் மரணத்தின் போது ஒரே காலத்தில் இறக்க வேண்டும் 

 

பக்.14

 கணவனை இழந்து கூடுதலாக உள்ள பெண் 

 

 -இறந்து போன அவளுடைய கணவனோடு அவளையும் எரிக்காமல் போனால் அவளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் 

 

- எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அவளை விதவையாக வற்புறுத்தி வைப்பது 

 

- விதவையாக வைத்துக் கொண்டிருப்பதை விட அவளை எரித்து விடுவதே நல்ல தீர்வாக அமையும் 

 

பக்.15

 மனைவியை இழந்து கூடுதலாக உள்ள ஆண் 

 

 தடை ஆணைகளை ஆக்கி தருபவன் என்ற வகையில் ஆண் இந்த ஆணைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறான் 

 இந்த நிலையில் ஒரு சாதியில் கூடுதலாக உள்ள ஒரு பெண்ணை நீங்கள் நடத்தும் அதே முறையில் கூடுதலாக உள்ள ஆணை நீங்கள் நடத்த முடியாது 

 

?

 ஆண் என்பதனாலேயே உடன்கட்டை கூடாது 

 எரித்துக்கொன்றால் வலுவான ஒரு உயிரை இழக்க நேரும் 

 

பக்.15,16

?

 அவன் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை உண்மையாக அனுசரித்து உலக இன்பங்களைத் துறந்தவனாக இருக்கின்ற நிலையில் சாதிய அக மண ஒழுக்கத்தை பேணி காப்பதற்கும், சாதி ஒழுக்க நெறிகளை காப்பதற்கும், ஐயத்திற்கு இடம் இன்றி ஒரு இடராக இருக்க மாட்டான். ஆனால், அவன் உலகியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவனாக இருப்பானானால் அவனால் ஆபத்து இருக்கும். 

 

பக்.16

 மனைவியை இழந்து கூடுதலாக உள்ள ஆணை குழுவுடன் இணைத்து வைத்திருப்பதற்கான ஒரே வழி திருமணப் பருவம் எய்தாத ஒரு பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைப்பதே.

 கூடுதலாக உள்ள ஆணின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உள்ள வழிகளில் இதுவே சிறந்தது எனலாம். 

 இதனால் அவன் சாதிக்குள்ளேயே நிலைநிறுத்தப்படுகின்றான். 

 அவன் வெளியேறுவது தடுக்கப்படுவதால் குழுவின் எண்ணிக்கை குறையாமல் காப்பாற்றப்படுகிறது. 

 அக மணவழக்கத்தின் ஒழுக்கமும் காக்கப்படுகின்றது. 

 

17

 ஆண் பெண் சமநிலை

1. கணவனுடன் மனைவியை எரித்து கொன்று விடுதல் 

2. எரிப்பதை விட சற்று மென்மையாக விதவை நிலையை கட்டாயப்படுத்துதல் 

3. மனைவியை இழந்தவரின் பிரம்மச்சரிய ஒழுக்கம் 

4. மனைவியை இழந்தவருக்கு திருமண பருவம் எய்தாத பெண்ணை மணம் முடித்து வைத்தல் 

 

*

 சாதியும் அகமண வழக்கமும் அதற்கான வழி வகைகளும் சாதியோடு ஒத்தது 

 

 இந்தியாவில் சாதி மிகத் தொன்மையான நிறுவனம்.

 அதை அறிவதற்கு நம்பத்தக்க சான்றுகளோ எழுதப்பட்ட பதிவேடுகளோ இல்லாத நிலையில் 

 அதுவும் உலகே மாயம் என்ற கருத்தும் வரலாற்றை எழுதி வைப்பது மடமை என்ற எண்ணமும் உள்ள இந்துக்கள் தொடர்புடைய வகையில் ஆய்வு மேலும் கடினமானது

 வரலாறு நெடுங்காலமாக எழுதப்படாமல் இருந்த போதிலும் 

 சாதி அமைப்பு மிகத் தொன்மையானது என அறிய முடிகின்றது 

 

பக்.18

 இந்து சமூகத்தில் மனைவி

1. உடன்கட்டை எரித்துக்கொல்தல்

2. விதவை நிலைக்குக் கட்டாயப்படுத்துதல் 

3. பேதை ( சிறு பெண்) மணம்

 

எனக்கு தெரிந்த வரையில் இன்றளவும் இந்த பழக்கவழக்கங்களின் தோற்றத்திற்கு அறிவியல் வழியிலான விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. 

 இந்தப் பழக்கவழக்கங்கள் ஏன் மதிக்கப்பட்டன என்பதை எடுத்துரைக்கும் ஏராளமான தத்துவங்கள் உள்ளன. ஆனால் அந்த பழக்க வழக்கங்கள் ஏன்? எப்போது? எப்படி? யாரால்? தோற்றுவிக்கப்பட்டன என்பதையோ, எவ்வாறு நிலைத்து நிற்கின்றன? என்பதையோ விளக்குவதற்குதான் எதுவும் இல்லை. 

 

 உடன்கட்டை

 கணவனுடன் மனைவியின் ஆன்மா இரண்டறக் கலத்தல்

 கணவன் மீதான மனைவியின் பக்தி பெருக்கு 

 

பக்.20

இந்தப் பழக்கவழக்கங்கள் சாதீய அமைப்பை உருவாக்கவே தேவைப்பட்டன. இந்தப் பழக்கவழக்கங்களை பாராட்டி பிரபலமாக்குவதற்கு தத்துவங்கள் தோன்றின. 

 சாதாரண வழிமுறைகளைச் சீரிய லட்சியங்களாக உயர்த்திக் காட்டுவது செயல் திறனோடு இயங்கும் ஆற்றலை நோக்கமாகக் கொண்டிருந்தது 

 

 சதி எனும் உடன்கட்டை ஏறுதல்

கட்டாயமாக கைம்பெண் ஆக்குதல்  

 குழந்தை மணம் 

 ஆகியப் பழக்கவழக்கங்கள் ஒரு சாதியின் கூடுதல் ஆண் கூடுதல் பெண் எனும் சிக்கலைத் தீர்ப்பதையும் அகமண வழக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது. 

 

பக்.21

*

 சாதியின் தோற்றம் என்பது அகமண வழக்கத்தின் அமைப்பியக்கமே சாதிக்கு வித்திட்டது என கருதுகிறேன் 

 

 தனிமனிதர்களே சமுதாயத்தை உருவாக்குகிறார்கள், எனக் கூறுதல் அற்பமானது. சமூகம் என்பது எப்போதும் வர்க்கத்தினரை உள்ளடக்கியது. 

 வர்க்க முரண்பாடு பற்றிய கொள்கையை வலியுறுத்துதல் மிகைப்படுத்துதலாக இருக்கலாம் ஆனால் ஒரு சமூகத்தில் பலதரப்பட்ட வர்க்கங்கள் இருந்து வருவது என்பது உண்மையே 

 இந்த வர்க்கங்களின் அடிப்படைகள் மாறுபடலாம் 

 வர்க்கங்கள் பொருளாதார அல்லது அறிவு வகைப்பட்ட அல்லது சமூக அடிப்படை உடையவையாக இருக்கலாம் ஆனால் சமூகத்தால் தனிமனிதர் எப்போதுமே ஏதோ ஒரு வர்க்கத்தில் உறுப்பினராகவே இருக்கிறார் இது உலகம் அறிந்த உண்மை தொன்மையான இந்து சமூகம் இந்த உண்மைக்கு விதிவிலக்கானது அல்ல

 நாம் இந்த உண்மையை கருத்தில் கொள்வது சாதியின் தோற்றம் பற்றிய நம் ஆய்வுக்கு உதவியாக இருக்கும் 

 ஏனெனில் எந்த வர்க்கம் முதலில் சாதியாக உருமாறியது என்று தீர்மானிப்பது போதும் ஏனெனில் 

 

*

 சாதியும் வர்க்கமும் அண்டை வீட்டுக்காரர்கள் மாதிரி.

 மிகச் சிறிய இடைவெளியே இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்கிறது. சாதி என்பது தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கமே ஆகும். 

 

பக்.22

 இந்து சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள பிராமணர்களே மேற்கூறிய இந்த பழக்க வழக்கங்களைக் கண்டிப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் கடைபிடிக்கின்றனர்.

 பிராமணர் அல்லாத பிற சாதியினர் கண்டிப்பாகவும் முழுமையாகவும் பின்பற்றுவது இல்லை. 

 பிராமணர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள். 

 

பக்.22,23

 சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் தம்மைத்தானே அகந்தையோடு நிலை நிறுத்திக் கொண்டுள்ளதை கொண்டு அனைத்து பண்டைய நாகரிகத்தைச் சார்ந்த புரோகித வர்க்கத்தினரை இந்த இயற்கைக்கு மாறான நிறுவனங்களை இயற்கைக்கு புறம்பான வழிகளில் தோற்றுவித்து பாதுகாத்து வருபவர்கள் என்பதை நிறுவி விடலாம். 

 

பக்.23

 இந்திய நாடு முழுமைக்கும் சாதிமுறை எவ்வாறு பரவி வளர்ந்தது?

 

*

நான் அறிந்த வரையில் சாதியின் தோற்றமும் பரவுதலும் பற்றிய கேள்விகள் தனித்தனியானவை அல்ல 

 

ஏதோ ஒரு வகை தெய்வத்தன்மை பொருந்திய மத கோட்பாடாக எதற்கும் எளிதில் வளைந்து கொடுக்கும் இந்திய மக்கள் மீது சட்டம் இயற்றும் ஒருவரால் சாதி திணிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இந்திய மக்களுக்கு மட்டுமே உரித்தான வகையில் சமூக வளர்ச்சி விதியால் சாதி உருவாகி வளர்ந்து வந்திருக்க வேண்டும் எனவும் அறிஞர்களிடையே பொதுவாக கருத்து நிலவுவதே மேல் கூறியவாறு நாம் கருதுவதற்கு காரணமாகும் 

 

பக்.24

 நான் உங்களுக்கு வலியுறுத்தி கூறுவது எல்லாம் சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. மனுவுக்கு நெடுங்காலத்திற்கு முன்பு இருந்தே நெடுங்காலமாக சாதி நிலவி வருகிறது .

 

 இன்றுள்ள நிலையில் காணப்படும் இந்து சமுதாயத்தை மனு உண்டாக்கவில்லை, உண்டாக்கவும் முடியாது. தற்கால பழக்கத்திலிருந்து சாதி வழக்கங்களை விதிகளாக தொகுத்தமைத்து சாதி தர்மத்தைப் போதித்ததோடு மனுவின் பணி முடிந்தது. 

 

 பிராமணர்களே சாதியைப் படைத்தனர் என்னும் கோட்பாடும் அர்த்தமற்றது. 

 

 சாதிமுறை பரவுவதற்கு பிராமணர்கள் தங்கள் நயமான தத்துவங்களின் மூலம் துணை புரிந்து இருக்கலாம். ஆனால், தங்கள் வரையறைகளுக்கு அப்பால் தங்களுடைய திட்டத்தை உந்தி தள்ளி நிச்சயமாக அவர்கள் புகுத்தி இருக்க முடியாது. 

 

பக்.25

 மத சம்பிரதாயம் புனிதம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது என்றோ மத சம்பிரதாயங்களுக்கு எதிராக பேசும் சீர்திருத்தவாதிகளுக்கு உதவுவதற்காகவோ அல்ல நான் பேசியது.

 பிரச்சாரம் செய்வதால் சாதிமுறை தோன்றி விடாது தோன்றிய சாதிமுறை பிரச்சாரத்தால் அழியவும் முடியாது மத சம்பிரதாயம் புனிதத்தை விஞ்ஞான விளக்கத்திற்கு நிகராக வைக்கும் போக்கு எவ்வளவு தூரம் தவறானது என்பதை தெரிவிப்பதே என் நோக்கமாகும் 

 

 மேனாட்டார் கருத்துபடி இந்தியாவில் சாதிகள் தோன்றிய கரு 5

1. தொழில்

2. பழங்குடியினர் அமைப்புகளின் எச்சங்கள் 

3. புதிய நம்பிக்கைகளின் தோற்றம் 

4. கலப்பின விருத்தி 

5. குடிபெயர்ப்பு 

 

 உலகமெங்கும் உள்ள பொதுத்தன்மை என்றால் ஏன் உலகில் மற்ற பகுதிகளில் இந்த ஜாதி முறை உருவாகவில்லை?

 

பக்.27

 இந்து சமுதாயம் பிற சமுதாயங்கள் போலவே பல வர்க்கங்களை கொண்டிருந்தது 

1. பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம் 

2 சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம் 

3. வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம் 

4.சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம்

 

 *

இந்த அமைப்பில் ஒரு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தன் தகுதிக்கேற்ப பிரிது ஒரு வர்க்கத்தினராக மாற முடியும். எனவே, வர்க்கங்கள் தங்கள் நபர்களை மாற்றிக் கொள்ளலாம்.

 இந்துக்களின் வரலாற்றில் ஏதோ ஒரு காலகட்டத்தில் புரோகித வர்க்கத்தினால் பிறரிடம் இருந்து தங்களை தனியாக பிரித்துக் கொண்டு பிறருடன் கலவாமல் இருக்கும் கொள்கைப்படி தனி ஒரு சாதியினராக ஆனார்கள். 

 இவர்களைப் போலவே பிற வர்க்கத்தினர்களும் சமுதாய உழைப்பு பங்கீட்டு விதியின்படி பெரிதும் சிறிதுமாக சிதறிப் போயினர்.

இன்றைய எண்ணிலடங்காத பல்வகை சாதிகளை உருவாகியவை தொடக்க காலக் கருப்பைகளான வைசிய வர்க்கமும் சூத்திர வர்க்கமுமே ஆகும் 

 

 பிறரோடு கலவாமல் தனித்திருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்களா அல்லது அவர்களே கதவுகளைத் தாழித்துக் கொண்டார்களா?

 

 பக்.28

சிலர் தாங்களே பிரிந்து தனித்த சாதி ஆகினர். சிலர் கலவாமல் தடுத்து நிறுத்த பட்டனர்.

 

 அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பிராமணன் அல்லாத வர்க்கத்தினரும் விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கியுள்ளனர் 

( இது போலச்செய்தல் மனப்பாங்கு )

 

32

 மதத்தை உயிர் மூச்சாகக் கொண்ட சமுதாயத்தில் கடவுள் ஊழியனைத்தவிர வேறு யார் மற்றவர்களுக்கு இத்தகைய முன்மாதிரியாக அமைய முடியும் 

 

 பிறர் உள்ளே நுழைய முடியாதபடி கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக மற்றவர்கள் எவ்வாறு அடைபட்டனர்? 

 

 இதைத்தான் நான் சாதிய உருவாக்கத்தின் இயந்திர கதியில் நடந்த முறை என்பேன். இந்த விதமாக இயந்திரகதியில் சாதி வளர்ச்சி அமைந்தது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. 

 

சாதி என்பது எண்ணிக்கையில் ஒன்றே ஒன்றாக இருந்திருக்க முடியாது. அது பண்ணையிலேயே நிலவி வந்திருக்கின்றன 

 

பக்.33,34

 சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டோரைத் தங்களைத் தாங்களே ஒரு புதிய சாதியாக உருவாகிக் கொள்ளத் தூண்டியது எது? சாதிகள் அடைக்கப்பட்ட பிரிவுகள். விலக்கிவைக்கப்பட்டவர்களைத் தாங்களே ஒரு சாதியாக உருவாக்கிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதே ஆகும்.

 

பக்.34

தனித்து விடப்பட்டவர்கள் அல்லது சாதி சடங்குகளுக்கு எதிர்ப்பாக இருந்த காரணத்தினால் உருவாக்கப்பட்ட புதிய குழுக்கள் தானே இயங்குகின்ற ஒரு இயந்திர விதியில் புதிய சாதிகளாக மாற்றப்பட்டு பன்மடங்காகப் பெருகின. 

 

 எனது கருத்துக்களின் முக்கிய கருத்துக்கள் 

 

 ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது என தேவைக்கு மேலாக வலியுறுத்தி இருக்கிறார்கள். 

 

தோல் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வெகு காலத்திற்கு முன்பே கைவிடப்பட்டது என்று டாக்டர் கேட்கர் வாதிடுவது சரி 

 

பக்.35

 தொழில் அடிப்படையில் அமைந்த குழுக்கள் சாதிகளானது ஏன் என்பதை இன்னும் கண்டறியவில்லை இந்த கேள்வியை இதுவரை எவரும் எழுப்பவும் இல்லை 

 

 *

எனது ஆய்வு நான்கு முக்கிய கருத்து

1. பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தாலும் ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உண்டு 

2. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதியில் சிறு சிறு தொகுதிகளை சாதிகள் 

3. தொடக்கத்தில் ஒரு சாதியை இருந்தது 

4. போல செய்தல் மற்றும் சாதி விலக்கு விளைவாக வர்க்கங்கள் வகுப்புகள் சாதிகள் ஆயின 

 

பக்.36

 சாதி பற்றிய கோட்பாடு அடிப்படைகள் குறித்து எனக்கு எழுந்த ஆர்வமே சாதி குறித்த சில முடிவுகளையும் இந்த முடிவுகளுக்கு துணை இருக்கின்ற ஆதாரங்களையும் உங்கள் முன் வைக்கத் தூண்டியது. ஆனால், அவை முற்றிலும் சரியானவை முடிவானவை என்றோ அல்லது பிரச்சனைக்கு விளக்கம் அளிப்பதற்கு அதிகம் சொல்லிவிட்டதாகவோ கருதவில்லை. 

 

 என்னுடைய தத்துவங்கள் தவறு என்று தெரிந்தால் நான் அவற்றை அழித்து விடவும் ஆர்வம் காட்ட தயங்க மாட்டேன். 

 சாதி பற்றிய கோட்பாட்டில் உங்கள் முன் வைக்க பேரார்வம் கொண்டேன்.

 அவை ஏற்றுக்கொள்ள தக்கவை அல்ல என்று எடுத்துக்காட்டினால் அவற்றை கைவிட தயங்கவும் மாட்டேன் 

 

பக்.37

உண்மையை உண்மைதான் எனத் தெரிந்துகொள். உண்மைக்குப் புறம்பானது உண்மையல்ல என்பதையும் தெரிந்துகொள். – புத்தர்

 

பகுத்தறியாதவன் பிடிவாதக்காரன்

பகுத்தறிய முடியாதவன் அறிவிலி

பகுத்தறியத் துணியாதவன் அடிமை – எச்.டிரூமாண்ட்

 

 

பக்.55

இந்திய நாட்டில் சமூகச் சீர்திருத்தத்திறகான வழி சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைப் போலவே கரடுமுரடானது. இந்தியாவில் சமூகச்சீர்திருத்தத்திற்கு உதவவல்ல நண்பர்கள் சிலரே. ஆயின் குறை கூறுபவர்களோ ஏராளம். குறை கூறுபவர்கள் இரு வகையினர்.

1.அரசியல் சீர்திருத்தக்காரர்கள்

2.சோசலிஸ்டுகள்

 

பக்.56

டபிள்யூ.ஸி.பானர்ஜி உரை

(1892 அலகாபாத் காங்கிரசு மாநாடு)

நம்முடைய சமுதாய அமைப்பைச் சீர்திருத்தம் செய்யாமல் அரசியல் சீர்திருத்தத்திற்கு நாம் தகுதியுடையவர்கள் அல்ல என்போர் கூற்றினை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் அரசியல் சீர்திருத்தத்திற்கம் என்ன தொடர்புள்ளது என்பது எனக்கத் தோன்றவில்லை. நம்முடைய விதவைகள் மறுமணம் செய்துகொள்ளாமல் இருப்பதனாலும், நம்முடைய பெண்களுக்கு மற்ற நாட்டுப் பெண்களைவிட இளமையிலேயே திருமணத்தை நடத்தி விடுவதாலும் நாம் நம் நண்பர்களைக் காணச் செல்லும்போது நம் மனைவியரையும் மகளிரையும் நம்முடன் அழைத்துச் செல்லாததாலும் அல்லது ஆக்ஸ்போர்டுக்கோ கேம்பிரிட்ஜ்க்கோ நம் பெண்களைப் படிப்பதற்கு அனுப்பாததாலும் நாம் அரசியல் சீர்திருத்தத்திற்கு அருகதை அற்றவர்களாகி விடுவோமா என்ன?

 

பக்.57

தீண்டாதார் எவ்வாறல்லாம் நடத்தப்படுகின்றனர் என்பதை எடுத்துரைப்பேன்.

மராத்தியம்-பேஷ்வாக்கள் ஆட்சி-

இந்துக்களின் மீது தீண்டாதார் நிழல் பட்டால்கூட தீட்டாகும் என்பதால் வீதிகளில் நடக்க அனுமதியில்லை.

 

தவறுதலாக இந்துக்கள் தொட்டு தீட்டாவதைத் தடுக்க தீண்டாதார் தங்கள் அடையாளமாகக் கழுத்திலோ மணிக்கட்டிலோ கருப்புக்கயிறை கட்டிக்கொள்ள வேண்டும்.

 

பேஷ்வாக்களின் தலைநகரான புனே-

தீண்டாதார் தெருவில் நடந்து புழுதி எழுந்து எதிர்படும் இந்துவின் புனிதம் கெட்டு தீட்டாவதைத் தடுக்க தீண்டாதாரின் காலடித்தடத்தை கூட்டியபடி செல்ல அவரது இடுப்பில் விளக்குமாறு கட்டித்தொங்க வேண்டும்.

பக்.58

இந்தூர் மாவட்டத்திலுள்ள 15 கிராமத்தில் பலாய் இனத்தாருக்கு மேல் சாதிகள் விதித்துள்ள விதிகள் 

(1928 ஜனவரி 24 - டைம்ஸ் ஆப் இந்தியா )

1. தங்கச் சரிகை கரை போட்டு உடைகளை அணியக் கூடாது 

2. சாயம் துவைத்து அழகான உடைகளை அணியக்கூடாது 

3. இந்து ஒருவன் இறந்து போனால் இறந்தவனுடைய உறவுகளுக்கு அவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் இழவு செய்தியைப்போய் சொல்ல வேண்டும் 

4. இந்து திருமணங்களில் ஊர்வலத்தின் போதும் திருமணம் நடக்கும் போதும் பலாய்கள் மேளதாளங்களை இசைக்க வேண்டும்

5. பலாய் சாதி பெண்கள் தங்கம் வெள்ளி நகைகளை அணியக்கூடாது, அழகான ஆடை ரவிக்கைகளை உடுத்த கூடாது  

6. இந்து பெண்களின் பிரசவங்களின் போது பலாயி பெண்கள் தேவையான ஊழியங்களைச் செய்ய வேண்டும் 

7. பலாய் சாதியினர் எவ்வித கூலியும் கேட்காமல் தொண்டு செய்ய வேண்டும். இந்துக்கள் மனம் உவந்து தருவதை வாங்கிக் கொள்ள வேண்டும்  

8. பலாய்கள் இந்த நிபந்தனைகளை ஏற்று நடக்க மறுத்தால் அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள் 

 

 ஆதிக்கம் செய்யும் இந்துக்களின் நிபந்தனைகளை மறுத்த பலாய் சாதியினர் நிலைமைகள் பின்வருமாறு 

 

1. கிராமத்து கிணற்று தண்ணீர் மறுக்கப்பட்டது 

2. கால்நடைகள் மேய்ச்சல் தடுக்கப்பட்டது 

3. ஆதிக்க சாதியினரின் நிலங்களுக்கு மையமாக உள்ள சொந்த நிலங்களுக்குச் செல்ல பலாய் சாதிகளுக்குத் தடை ஏற்பட்டது  

4. ஆதிக்க சாதிகளின் கால்நடைகளால் பலாயி சாதிகளின் நில விளைச்சல்கள் அழிக்கப்பட்டன 

5. பலாய் சாதியினர் தம் முன்னோர்கள் வாழ்ந்த கிராமங்களை விட்டு அண்டை சமஸ்தானங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள் 

 

பக்.59

 குஜராத் கவிதா கிராமம் - தீண்டத்தகாதார் குழந்தைகளை பொதுப்பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்ததே கூடாது 

 

 குஜராத் அகமதாபாத் ஜானு கிராமம் - வசதியான தீண்ட தகாதப் பெண்கள் உலோகப் பானைகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து வன்முறை

 

 ஜெய்ப்பூர் சக்வாரா கிராமம் – 1936ல்  தீர்த்த யாத்திரைக்குச் சென்று திரும்பியவர் தன் தீண்ட தகாத சாதி உறவினர்களுக்கு விருந்துகளில் நெய் பயன்படுத்தியதற்காக ஆதிக்க சாதிகளின் வன்முறை நிகழ்ந்தது 

 

பக்.61

 எந்த ஒரு நாட்டுக்கும் பிற நாடுகளை அடக்கி ஆழத் தகுதியில்லை என்னும் மில் (MILL) அவர்களின் கோட்பாட்டினை திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டாக கூறுகின்ற காங்கிரஸ் ஆர் அனைவரும் எந்த ஒரு சாதிக்கும் பிற சாதிகளை அடக்கியாளத் தகுதி இல்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் 

 

 சமூக சீர்திருத்தவாதிகள் செய்த கிளர்ச்சிகள் இந்து குடும்பத்தை சீர்திருத்துவதா? (விதவை மறுமணம், குழந்தை மணம் தடுப்பு) அல்லது 

இந்து சமுதாயத்தைச் சீர்திருத்தி புத்தாக்கம் செய்வதா?    ( சாதி ஒழிப்பு)

 

பக்.62

 இந்திய சமூக அமைப்பைத் திருத்தியமைக்க வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டாக வேண்டும் என்னும் என் கொள்கை மறுத்தற்கு இயலாதது 

 

 பெர்டினண்டு லாசால் ( காரல் மார்க்சின் நண்பர் 1862)

அரசியல் சாசனம் பற்றிய பிரச்சினை முதலாவதாக உரிமை பற்றிய பிரச்சனை அல்ல ஆதிக்க வலிமை பற்றிய பிரச்சினையே ஆகும். நாட்டில் நிலவும் சமூக சக்திகளின் உண்மையான நிலைமையைச் சார்ந்தே அந்த நாட்டின் அரசியல் அமைப்பின் ஆணிவேர் அமைகிறது. எனவே, சமூகத்தில் நிலவும் உண்மையான நிலையையும் சக்தியையும் வெளிப்படுத்தும் அரசியல் அமைப்பே மதிப்புடையதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க முடியும். 

 

 பல்வேறு வகுப்பினருக்கும் இனத்தார்க்கும் விகிதாசாரப்படி அரசியல் அதிகாரம் வழங்கும் வகுப்புவாரி தீர்ப்பின் சிறப்பு தன்மை என்ன?

 அரசியலமைப்பு சமூக அமைப்பினை பொருத்து அமைய வேண்டும் என்பது அதன் தத்துவம் என்பதே என் கருத்தாகும் 

 

பக்.64

 அரசியல் சீர்திருத்தவாதிகள் அவர்கள் விரும்பும் எந்த வழியில் சென்றாலும் சரி அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கும் போது நம் நாட்டின் நிலவும் சமுதாய அமைப்பில் இருந்து எழுகின்ற பிரச்சனைகளை புறக்கணித்துவிட்டு அரசியலமைப்பை உருவாக்கி விட முடியாது 

 

பக்.65

 பொதுவாக அரசியல் புரட்சிகளுக்கு முன்பே சமூக மத சம்பந்தமான புரட்சிகள் ஏற்படுகின்றன என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு 

I. ஐரோப்பிய மக்களின் அரசியல் விடுதலைக்கு மார்ட்டின் லூதர் துவக்கிய மதச் சீர்திருத்தங்கள் 

II. இங்கிலாந்தில் கிறிஸ்தவ மத சீர்திருத்தங்களை அரசியல் விடுதலைக்கு வழிகோலியது 

III. அமெரிக்க விடுதலைப் போருக்கு வெற்றி கிட்ட காரணமாக கிறிஸ்துவ மத சீர்திருத்தங்கள் அமைந்தன 

IV. முகமது நபி துவக்கிய மத புரட்சியை அரேபியர்களின் அரசியல் சக்தி 

V. புத்தரின் மதப் புரட்சியும் சமுதாய புரட்சியும் சந்திரகுப்த மௌரியரின் அரசியல் புரட்சி 

VI. சிவாஜியின் அரசியல் புரட்சிக்கு முன்னோடி மகாராஷ்ட்ர சன்னியாசிகளின் மத சீர்திருத்தங்களும் சமுதாய சீர்திருத்தங்களும் 

VII. சீக்கியர்களின் அரசியல் புரட்சிக்கு குரு நாணயத்தின் மத சமுதாய புரட்சி முன்னோடியாக இருந்தது 

 

 மக்களின் அரசின் விரிவாக்கத்திற்கு மன விடுதலையும் ஆன்ம விடுதலையும் தேவை 

 

பக்.66

 சொத்தை சமமாக பங்கிடும் பொருளாதார சீர்திருத்தமே எல்லா சிறு திருத்தங்களுக்கும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதாக போதிக்கின்ற சோசியலிஸ்ட் களின் வாதம் குறித்து எவரும் எதிர்வாதம் பேச முடியும் 

 

 பல தருணங்களில் தனிமனிதனின் சமுதாய அந்தஸ்து மட்டுமே அவரது ஆட்சி உரிமைக்கும் அதிகாரத்திற்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது 

 மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைக்கும் சான்றுகளால் இதை விளக்க முடியும் 

 

 இந்தியாவின் ஒரு நீதிபதியை விட புரோகிதர் சாதாரண மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் அல்லவா 

 

 வேலைநிறுத்தம் தேர்தல்கள் முதலியனவும் மதசார்பாகி விடுகின்றன மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது 

 

பக்.67

 ரோமானிய பொதுமக்களின் நம்பிக்கையின்படி டெல்பியின் குறி சொல்பவரால் டெல்பி தேவதையின் சம்மதம் பெற்றவராக அறிவிக்கப்படாத எவரும் ஒரு அதிகாரியாகத் தன்னுடைய அதிகாரப் பொறுப்புகளை நிறைவேற்றும் பணியை ஆற்ற முடியாது 

( அரசை ஆளும் பாட்ரிசீயர்கள் 

 அரசுரிமை பெற்றிருந்தாலும் பயன்படுத்த இயலாத பிளீபியன்கள்)

 

 டெல்லி தேவதையின் சம்மதம் தேவையில்லை என்று பிளீபியன்கள் வாதாடி இருந்தால் தாங்கள் பெற்ற அரசியல் உரிமையின் முழு பயனையும் அனுபவித்திருக்க முடியும் 

 

 பிளீபியன்கள் மதத்தை விட்டொழிப்பதற்கு பதிலாக அரும்பாடு பட்டு அடைந்த அரசியல் உரிமையை இழந்தார்கள் 

 

பக்.68

 ஒரு சமுதாயத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் மதமும் சமுதாயமும் அடிப்படைகளாக இருந்தால் அந்தக் கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமாக மதம் மற்றும் சமுதாய  சீர்திருத்தங்கள் அமைகின்றன 

 

பக்.69

 நாம் சோசியலிஸ்ட் களை கேட்க விரும்புவது எல்லாம் முதலில் சமுதாய அமைப்பை சீர்திருத்தி அமைக்காமல் பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வர முடியுமா என்பது தான் 

 

 என் நண்பருக்கு பிரபலமான சோசியலிஸ்ட் எழுதிய கடிதம் இது 

 

" ஒரு வகுப்பால் இன்னொரு வகுப்பாரை அடக்கி ஒடுக்கி இழிவாக நடத்தும் நிலை தொடர்ந்து நீடிக்கும் வரை இந்தியாவில் சுதந்திரமான ஒரு சமூகத்தை நிலை நாட்ட முடியுமா என்று நான் நம்பவில்லை. எனினும் சோசலிச லட்சியத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளதால் பல்வேறு வகுப்பினருக்கும் குழுவினருக்கும் முழுமையான சமத்துவம் கிட்டும் என நம்புகிறேன் சோஷலிசம் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு இது போன்ற மற்ற எல்லா பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வாக இருக்கும் எனவும் நான் நம்புகிறேன் "

 

 நம்பிக்கையே போதும் என்பதிலேயே திருப்தி அடைந்து விடுகின்ற ஒரு சோசலிஸ்ட் சோசியலிசம் என்பதில் என்னவெல்லாம் அடங்கியிருக்கிறது என்பதை சற்றும் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறார் 

 சோசியலிசம் என்பது நீண்ட காலத்திற்குப் பின் நிறைவேற கூடிய வெறும் லட்சியம் மட்டுமல்ல அது ஒரு செயல் திட்டம் 

 

பக்.70

*

 அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சி ஒன்று இல்லாமல் சோசியலிஸ்ட்கள் நினைக்கும் பொருளாதார சீர்திருத்தம் ஏற்படாது என்பது தெளிவு. அதிகாரத்தை கைப்பற்றுபவர் பாட்டாளிகளாகத்தான் இருந்தாக வேண்டும். நான் கேட்கும் முதல் கேள்வி இந்த புரட்சி செய்வதற்கு இந்திய பாட்டாளிகள் இணைந்து வருவார்களா? மக்களை அவ்வாறு இணைத்து ஒன்றுபடுத்தத் தூண்டுவது எது?

 பிறவற்றில் எல்லாம் சமத்துவம் இருந்தபோதும் தன்னோடு இணைந்து ஒன்றுபடும் மற்றவர்களின் சமத்துவத்திலும் சகோதரத்துவத்திலும் இவை அனைத்திற்கும் மேலாக நீதியிலும் நம்பிக்கை வைத்து அந்த உயர்வால் தூண்டப்படும்போதுதான் அவ்வாறு இணைந்து செயல்படும் உணர்வு தோன்றும் என்று எனக்குத் தோன்றுகிறது 

 

 புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்பு தாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவோம் பிறர் தம்மிடம் சாதி மத வேறுபாடு பாராட்ட மாட்டார்கள் என்று தெரிய வந்தால் ஒழிய சொத்துரிமையை பொதுவுடமை ஆக்குவதற்கான புரட்சியில் மக்கள் சேர மாட்டார்கள் 

 

இந்திய நாட்டு பாட்டாளி வர்க்கத்தினர் அதாவது ஏழை எளிய மக்கள் தம்மிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டைத் தவிர வேறு எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லையா?

 பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஓரணியாக திரள முடியாத நிலையில் புரட்சி எப்படி சாத்தியமாகும்?

 

பக்.70,71

 ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொள்வோம் எதிர்பாராத வகையில் இந்தியாவில் புரட்சி ஒன்று நடந்து அதனால் சோசலிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலையில் அவர்கள் இந்தியாவில் நிலவுகின்ற குறிப்பிட்ட சமூக அமைப்பின் காரணமாக எழும் பிரச்சனைகளை அவர்கள் கவனிக்காமல் விட்டு விட முடியுமா? 

 இந்திய மக்களிடையே பழக்கத்தில் இருக்கும் மேல், கீழ், தூய்மையானவர், தூய்மையற்றவர் என்பதால் வருகின்ற வேற்றுமைகளால் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்காமல் இந்தியாவில் சோசலிச அரசு ஒரு கன நேரமாவது எப்படி செயல்படும் என்று எனக்கு விளங்கவில்லை.

 வெறும் வார்த்தை அலங்காரங்களில் மனநிறைவு அடைந்து விடாமல் சோசலிச இலட்சியத்தை ஒரு நடைமுறைக்குரியதாக ஆக்குவதற்கு சோசியலிஸ்ட் விரும்புவதனால் சமூகச் சீர்திருத்த பிரச்சனையே அடிப்படையானது என்பதையும் அதிலிருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியாது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் 

 

பக்.71

 ஒருவேளை எதிர்பாராமல் புரட்சி நடந்து விட்டாலும் தன் இலட்சிய நிறைவேற்றத்திற்கு இந்த சாதி பிரச்சினையை எதிர்த்து நிற்க வேண்டியதாக இருக்கும் என்பதே என் ஆணித்தனமான கருத்தாகும் 

 புரட்சிக்கு முன்பு சாதி பிரச்சனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள தவறினால் புரட்சிக்கு பின்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும் 

 

 நீங்கள் எந்த திக்கில் திரும்பினாலும் சாதிய அரக்கன் வீதாற்றி உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனை கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமும் பொருளாதாரச் சீர்திருத்தமும் பெற முடியாது 

 

பக்.72

 சாதிமுறை இயல்பான போக்கில் உருவானது அல்ல. மனிதர்களின் இயற்கையான போக்கினாலும் அமைந்ததில்லை.

சாதி அமைப்பு ஒருவரது வேலையை முன்கூட்டியே நிர்ணயித்து விடுகிறது 

 

பக்.73

 மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவனுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் இல்லாவிட்டால் வாழ்வதற்குரிய தன் பிழைப்பை தேடிக் கொள்ள முடியாமல் போகும் 

 

பக்.73,74

 தனிமனிதனின் இயற்கையான ஆற்றல்களுக்கும் இயல்பான விருப்பங்களுக்கும் எதிராக சமூக விதிகள் என்ற பெயரால் கட்டாயத்துக்கு உள்ளாக்குவதே சாதியின் தன்மையாக இருப்பதால் ஒரு பொருளாதார அமைப்பு என்ற வகையில் சாதி என்பது தீமை பயக்கின்ற ஒரு நிறுவனமே 

 

பக்.75

 “அன்னிய கலப்பு இல்லாத சாதியோ வகுப்போ இந்தியாவில் எதுவுமில்லை” திரு டி ஆர் பந்தார்கர்

 நூலின் பெயர் 

இந்திய மக்களிடையே அந்நிய கலப்பு  

 

 சாதிமுறை இனக்கலப்பை தடுக்கவும் ரத்த தூய்மையை காப்பாதற்காகவும் உருவானது அல்ல. சாதி பாகுபாடு என்பது உண்மையில் இனப் பாகுபாடும் அல்ல. 

பஞ்சாபி பிராமணனும் சென்னை பிராமணனும் ஒரே இனமா?

வங்கதேசத்து தீண்டத்தகாதாரும் சென்னை தீண்டத்தகாதாரும் ஒரே இனமா? 

 

பக்.76

 சென்னை பிராமணனும் சென்னை பறையனும் இருவரும் ஒரே இனம்தான் 

 

பக்.77

 சமபந்தி விருந்தினால் ரத்தகதூய்மை கெட்டுவிடுமா? 

 

பக்.78

100க்கு 90 பேர் ராணுவத்துக்கு தகுதியற்றவர்கள் என அறியப்பட்டவர்களை கொண்ட நாடு இந்தியா

 

கொடுமை படைத்த இந்துக்களின் ஆணவத்தையும் சுயநலத்தையும் சாதிமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது 

 

பக்.79

இந்துக்களைச் சாதி முற்றிலுமாக சிதைத்து சீரழித்து சின்னாபினமாக்கி இருக்கிறது. 

இந்துச் சமூகம் என்பதே வெறும் கற்பனை. 

இந்து என்ற பெயரில் ஓர் அந்நிய பெயரதான்.

தம்மில் இருந்து இந்நாட்டவரை தனித்துக்காட்ட முகமதியர் வைத்த பெயர்தான் இந்து.

முகமதியர் படையெடுப்புக்கு முந்திய எந்த சமஸ்கிருத நூலிலும் இந்து என்ற சொல் காணப்படவில்லை. 

இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை.

இருப்பதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே.

ஒவ்வொரு சாதியும் தான் ஒரு தனித்த சாதியாக இருப்பதாகவே உணர்கின்றன. 

ஒரு சாதி என்ற அளவில்தான் ஒவ்வொரு சாதிக்கும் தான் இருப்பது பற்றிய உணர்வும் குறிக்கோளும் ஆகும். 

பல சாதிகளும் ஒரு கூட்டமைப்பாக கூட ஆகவில்லை.

 

பக்.80

உண்மையில் உண்மையான இந்து வேறு எவரிடமும் தொடர்பு கொள்ளாமல் தன் வலையிலேயே வளர்ந்து கொண்டிருக்கும் எலியாகவே இருக்க வேண்டும் 

 

 சமூகவியலாளர் கூறும் குழு உணர்வு இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும் 

 நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை 

 ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கும் உணர்வு என்பது தன் சாதி உணர்வு மட்டும்தான் 

அதனால் இந்துக்களை ஒரு சமூகமாகவோ அல்லது நாடாகவோ கருத முடியவில்லை 

 

வெளிப்படையாகத் தெரிகிற வேற்றுமைகளுக்கு இடையில் இந்திய நாடு முழுமைக்கும் பரவி காணப்படும் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் சிந்தனைகள் ஆகியவற்றின் ஒத்தத் தன்மை இருப்பது என்னவோ உண்மைதான். இதனால், இந்துக்கள் ஒரு சமூகமாக அமைகின்றனர் என்ற முடிவு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை.

 

நெடுந்தொலைவில் இருப்பதால் ஒருவர் தன் சமூகத்தில் உறுப்பாக இருக்கக் கூடாதவனாகி விடுவதில்லை. 

மனிதர் பலர் நெருங்கி வாழ்வதால் மட்டும் அவர்கள் ஒரே சமூகத்தினர் என்றாகி விடவும் மாட்டார்கள். 

 

பக்.81

மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றைப் பெறுகிறார்கள். அதாவது, சமூகம் மக்களுடன் கலந்து உறவாடுதல் மட்டுமே சமூக ஆகிறது. 

 ஒருவர் பிறருடைய செயல்பாடுகளோடு ஒத்த முறையில் செயல்பட்டால் மட்டும் போதாது.

 சாதிகள் ஒரே சமூகமாக இணைய வேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்கு பெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல்படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன. 

கூட்டு நடவடிக்கைகளில் தனி மனிதர் பங்கு பெறவும் பகிர்ந்து கொள்ளவும் நேரும்போதுதான் அந்தக் கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவர்கள் உணர்வார்கள். 

இந்த உணர்வே மக்களை ஒருங்கிணைத்து ஒரே சமூகமாக ஆக்குகின்றது 

 

பக்.82

 கடந்த உலகப் போரின்போது ஜெர்மனியர்கள் ஆங்கிலேயரை எந்த அளவுக்கு வெறுத்து வசை பாடினார்களோ அதே அளவில் ஒவ்வொரு சாதியினரும் பிற சாதியினரை வெறுத்து வசைபாடி மகிழ்கிறார்கள் 

 

பக்.82

எங்கெல்லாம் ஒரு கூட்டம் தம் சொந்த நலன்களைக் காத்துக் கொண்டுள்ளதோ அங்கெல்லாம் இந்த சமூக விரோத வெறுப்பு மனப்பான்மை காணப்படும். 

இந்தச் சமூகம் விரோத மனநிலையை அந்தக் கூட்டத்தார் மற்ற கூட்டத்தாரோடு முழுமையாகக் கலந்து உறவாடுவதைத் தடுக்கிறது 

 

பக்.83

 இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டுமல்லாமல் தம் சொந்த நலன்களுக்காக சுயநல நோக்கங்களுக்காக ஒருவரோடு ஒருவர் போட்டி பூசலிடுகின்ற குணமுள்ள குழுக்களாக உள்ளனர்

 

இங்கிலாந்தில் ரோஜா யுத்தமும் கிராம்வெல் யுத்தமும் நெடுங்காலத்திற்கு முன்பு நடந்தது. ஆனால், இன்றைய தலைமுறைகள் முன்னோர்களின் போரினால் எவ்வித வெறுப்பையோ வன்மத்தையோ கொண்டிருக்கவில்லை 

ஆனால், சாதிய உணர்வு வெறுப்பையும் வன்மத்தையும் மறக்காமல் காத்து நிற்கும். மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும். 

 

பக்.84,85

130 இலட்சம் பழங்குடி மக்களை நாகரீகம் உள்ளவர்களாக ஆக்கவும் மருத்துவ உதவிகள் செய்யவும் சீர்திருத்தவும் நல்ல குடிமக்களாக ஆக்கவும் இந்துக்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததுதான் அவர்கள் நாகரீகம் அற்றவர்களாக நீடிக்க காரணம் என்பேன். 

கிறிஸ்தவ மிஷனரிகள் பழங்குடியினருக்காக செய்யும் ஊழியங்களை இந்து ஒருவர் செய்ய முடியுமா? 

முடியாது என்று பணிவுடன் கூறுவேன்.

காரணம் இந்த பழங்குடி மக்களை நாகரீக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்த வேண்டும்.

அவர்களுக்குள் ஒருவராக வாழ வேண்டும் 

தோழமை உணர்வை வளர்க்க வேண்டும் 

சுருக்கமாக சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும் 

 

பக்.85

 இவ்வளவு நாகரிக வளர்ச்சிக்கும் மத்தியில் நாகரிகமற்ற மக்கள் நாகரிகமற்றவர்களாகவே நீடிப்பதை எந்தவித வெட்கமோ வேதனையோ மனசாட்சியின் உறுத்தலோ இல்லாமல் இந்துக்கள் அனுமதித்திருப்பதற்கு காரணம் சாதி உணர்வுதான் 

 

பக்.86

 மராத்திய மாநிலத்தில் நன்கு அறியப்பட்ட சோனார்கள் மற்றும் பதேரி பிரபுக்கள் பிராமணர்களைப்போல சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முயன்றுள்ளார்கள் 

 சோனார்கள் - தைவந்த்ய பிராமணர்கள் - பஞ்சகச்ச வேட்டி - வணக்கத்திற்கு பதிலாக நமஸ்காரம் 

 

பதேரி பிரபுக்கள் - கைம்பெண் நிலைமை  பிராமணர்களுக்கு  நிகராக கடைபிடிக்கவும் முயன்றார்கள் 

 

பேஷ்வாக்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி துணையுடன் பிராமணர்கள் இவர்களைத் தடுத்து வென்றார்கள் 

 

பக்.88

இந்து மதம் ஒரு காலத்தில் மிஷனரி மதமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்தான் ஆக வேண்டும். அது மிஷனரி மதமாக இருந்திராவிட்டால் இந்தியாவெங்கும் இந்த அளவக்கு மரவி இருக்க முடியாது.

 

இந்து மத மிஷனரி மதமாக இருந்ததா இல்லையா என்பதல்ல பிரச்சினை 

 

 அது ஏன் சமயத்தைப் பரப்பும் பணியில் நீடிக்க முடியவில்லை என்பதுதான் பிரச்சனை 

 

 இந்துக்கள் இடையே சாதிமுறை வளர்ந்ததால்தான் இந்து மதம் ஒரு மிஷனரி மதமாக நீடிக்க முடியவில்லை என்பது என் கருத்து 

 

 மன்றங்களில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆவது போல சாதிகளில் ஆகிவிட முடியாது

 சாதி சட்டதிட்டங்களின்படி எந்த ஒரு சாதியிலும் உறுப்பினராகும் உரிமை அந்த சாதியில் பிறந்தவருக்கு மட்டுமே உரியது 

 

பக்.90

 சீக்கியிரும் முகமதியரும் தைரியசாலியாக இருக்கிறார்கள். ஆனால், இந்து கோழையாகவே இருக்கிறார். காரணம் ஆபத்து ஏற்பட்டால் எல்லோரும் ஒன்று திரண்டு அவர்களைக் காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கை சீக்கியரிடமும் முகமதியரிடமும் தைரியத்தைத் தருகிறது.

இந்துக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லோரும் ஒன்று திரண்டு அவர்களைக் காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கை கிடையாது.

இந்து என்பதில் ஒற்றுமையைவிட சாதிப்பிரிவுகளே முன் நிற்கிறது.

 

பக்.91

 சீக்கியர்களும் முகமதியர்களும் பின்பற்றும் வாழ்க்கை முறை அவர்களிடம் சகோதர மனப்பான்மையை உருவாக்குகிறது இந்துக்களிடம் சாதி பிளவையை உருவாக்குகிறது 

 

பக்.92

ஒரு தனிமனிதன் தனது சொந்தக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் தனது சொந்த சுதந்திரததயும் நலனையும், தான் சார்ந்துள்ள குழுவின் நெறி வரையறைகளையும் குழு அதிகாரத்தையும் குழு நலன்களையும் மீறி வலியுறுத்துவதுதான் எல்லாச் சீர்திருத்தங்களுக்கும் தொடக்கமாகும். ஆனால் சீர்திருத்தம் தொடக்கத்தோடு நின்று விடாமல் மேலும் தொடருமா என்பது தனிமனிதனின் கருத்தை வலியுறுத்துவதற்குக் குழு எவ்வளவு தூரம் வாய்ப்பளிக்கிறது என்பதைப் பொறுத்தது.

 

 அத்தகைய மனிதர்களிடம் குழு சகிப்புத்தன்மையுடனும் நியாய புத்தியுடனும் நடந்து கொண்டால் அவர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி இறுதியில் மற்றவர்கள் அவற்றை ஏற்கச் செய்ய முடியும். மாறாக, குழு சகிப்புத்தன்மை இல்லாமல் எந்த வழியிலேனும் அவர்களை ஒடுக்கிவிட நினைத்தால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். சீர்திருத்தங்கள் மறைந்து போகும்.

 

பக்.94

 தன்னுடைய சாதியைச் சேராத ஒருவரின் திறமையை போற்றும் பண்பு ஒரு இந்துவிடம் இல்லை. 

அவர் செய்தது தப்போ சரியோ என்பதல்ல பிரச்சினை அவர் ஏன் சாதிக்காரரா இல்லையா என்பதுதான் பிரச்சனை. 

 

பக்.95

 இந்துக்கள் தமது சாதிகளின்  நலன்களை பெரிதாக கருதி தமது நாட்டுக்கே துரோகம் செய்யவில்லையா 

 

பக்.96

 சாதி கூடாது என்றால் உங்கள் லட்சிய சமூகம் என்பது எப்படிப்பட்டது?

-சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் 

-ஜனநாயகம் என்பது ஒரு ஆட்சி முறை மட்டுமல்ல முதன்மையாக அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை 

-கூட்டாக ஒருவருக்கொருவர் தமது அனுபவங்களை தெரியப்படுத்திக் கொண்டு வாழும் முறை 

 -மனிதர்கள் தங்களுக்குள் மதிப்பும் மரியாதையையும் வைத்து நடப்பதை சாராம்சமாக கொண்டுள்ளது 

 

பக்.97

 ஒரு மனிதனின் திறன் மூன்று விஷயங்களை சார்ந்து இருக்கிறது 

1. உடல் ரீதியான பரம்பரை இயல்பு 

2. சமூகச் சூழ்நிலை அதாவது பெற்றோர் கவனிப்பு, கல்வி, விஞ்ஞான அறிவின் வளர்ச்சி நிலை 

 (காட்டுமிராண்டிகளை விட நாகரிக மனிதனாக திறமையை வளர்ப்பதற்கான அம்சங்கள் )

3. அவனது சொந்த முயற்சி 

 

பக்.99

 ஆரிய சமாஜிகள் 

 சமூக அமைப்பு சதுர் வர்ணம் அதாவது நான்கு வகுப்புகள் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கை 

 

பக்.100

 மக்கள் மனதில் புதிய கருத்துக்களை வளர்க்க வேண்டும் என்றால் பழைய முத்திரைகளை விட்டொழித்து புதிய பெயர்களைக் கொடுக்க வேண்டும்

 

பக்.101

 சாதிய அடிப்படை தத்துவம் வேறு வர்ணத்தின் அடிப்படை தத்துவம் வேறு மேலும் இவை நேர் எதிரானவை 

 

பக்.102

 பிளேட்டோவின் குடியரசுக்கு கூறப்படும் எல்லா விமர்சனங்களும் சதுர்வர்ண முறைக்கும் பொருந்தும்

 

 மனிதர்கள் அனைவரையும் ஒரு சில வகுப்புகளில் அடக்கி வகைப்படுத்துவது பரிசீலிக்கவே தகுதி இல்லாத மேலெழுந்தவாரியான கருத்து என்பதை நவீன விஞ்ஞானம் எடுத்துக்காட்டுகிறது 

 

பக்.103

 சதுர்வர்ண முறையை சட்டத்தின் மூலமே நடைமுறைப்படுத்த முடியும். தண்டனை ஏற்பாடு இல்லாமல் சதுர் வண்ண இலட்சியத்தை அடைய முடியாது. 

 

பக்.107

 சமூக அநீதி பற்றி எங்கிருந்து என் உதாரணங்களை எடுத்துக் காட்டினாலும் மனுவின் சட்டங்களுக்கு முன் அவை துரும்புக்குச் சமமாகிவிடும் 

 பெருந்தொகையான மக்கள் இவ்வாறு சமூக கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதும் அவர்கள் அவற்றை ஏன் சகித்துக் கொண்டார்கள் 

 உலகின் மற்ற நாடுகளில் சமூக புரட்சிகள் நடந்துள்ளன இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை 

 

பக்.108

இந்திய வரலாற்றிலேயே சுதந்திரமும் பெருமையும் புகழும் மிகுந்து விளங்கிய ஒரே காலம் மௌரிய பேரரசின் காலம் தான் சதுர் வர்ணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சூத்திரர்கள் நாட்டின் ஆட்சியாளராக ஆனார்கள் 

 

பக்.109

 பிராமணர்களுக்கும் சத்ரியர்களுக்கும் இடையே நடந்த போராட்ட நிகழ்ச்சிகள் மகாபாரதத்திலும் புராணங்களிலும் நிறைய உள்ளன 

 

பக்.113

 வாழ்க்கையை பற்றி இந்துக்களின் நோக்கு என்ற பேராசிரியர் எஸ் ராதாகிருஷ்ணனின் நூலிலுள்ள கருத்துக்களை அம்பேத்கர் எதிர்க்கிறார்

 

பக்.115

 உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. 

சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமல் போகும். 

 

 சாதி சீர்திருத்தத்தில் முதல் படி கிளை சாதிகளை ஒழிப்பதே என்பது தவறான கருத்தாகும். இம்முயற்சி சாதியை முன்னிலும் அதிக வலுவுடையதாக்கும் 

 

பக்.115

 உணவு விஷயத்தில் சைவர்கள் தக்காண தென்னிந்திய பிராமணர்கள் 

 உணவு விஷயத்தில் அசைவர்கள் காஷ்மீரி வங்காள பிராமணர்கள்

 

பக்.116

 சாதி ஒழிப்பிற்கு உண்மையான வழி கலப்பு மணந்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன் 

 

பக்.117

 சாதியை ஒழிப்பது ஒரு பௌதிக தடையை அழிக்கும் செயல் அல்ல. மக்களின் எண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல். 

 

பக்.117,118

 ஆழ்ந்த மதப் பற்றினால் சாதி முறையை பின்பற்றுகிறார்கள். சாதிமுறையை பின்பற்றுவது மக்களின் தவறு அல்ல. சாதிமுறையை அவர்கள் உள்ளத்தில் ஊற வைத்திருக்கும் மதத்தைத்தான் இதற்கு குறை கூற வேண்டும். 

 சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை ஒழிப்பதே இதற்கு சரியான வழியாகும். 

 மக்களின் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் சாஸ்திரங்களே உருவாக்கும் நிலை தொடர்வதை அனுமதித்தால் உங்கள் நோக்கம் எப்படி நிறைவேறும்

 சாஸ்திரங்களை மூலமாகக் கொண்டுள்ள நம்பிக்கைதான் மக்களின் செயல்பாடுகளுக்கு காரணம். 

 புத்தரும் குருநானக்கும் செய்தது போல சாஸ்திரங்களின் அதிகாரத்தை மறுக்கத் துணிய வேண்டும்.  மக்களிடம் சென்று உணர்த்த வேண்டும்.

 

பக்.119

 சாதி புனிதமானது தெய்வீகமானது என்ற கருத்தை அழிக்க வேண்டும். இறுதியாக பார்க்கும்போது சாஸ்திரங்கள் வேதங்கள் ஆகியவற்றின் அதிகாரத்தை அழிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். 

 

 

பக்.122

?

 சாதியை ஒழிக்கும் இயக்கத்தில் பிராமணர்கள் முன் நின்று நடத்த வருவார்களா மாட்டார்களா என்பது முக்கியமில்லாத விஷயம் என்று உங்களில் சிலர் கூறுவார்கள். 

 இவ்வாறு நினைப்பது ஒரு சமுதாயத்தின் அறிவு உயர்ந்த வகுப்பினரின் பணியின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்துவதாகவும் 

 

 ஒரு நாட்டின் தலைவிதியை அறிவுத்திறன் கொண்ட வகுப்பையே சார்ந்து இருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல 

 

பக்.124

 உழைக்கும் வர்க்கத்தைப் பொருளாதார புரட்சி செய்ய தூண்டுவதற்காக காரல்மார்க்ஸ் அவர்களை நோக்கி உங்கள் தளைச்சங்கிலிகளைத்தவிர நீங்கள் இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் சாதிக்கு எதிராக புரட்சி செய்ய இந்துக்களை இப்படித் தூண்ட முடியாது 

 

பக்.125

 ஒரு இந்து தனது பகுத்தறிவின் படி சுதந்திரமாக நடக்க முடியாது 

 

பக்.129

 சாதிக்கோட்டையை உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பகுத்தறிவு மற்றும் ஒழுக்கம் ஆகியன செயல்படுவதற்கு இடம் கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரிகளையும் நீங்கள் தகர்க்க வேண்டும்.

 சுருதிகளை சுமிர்திகளை அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும் 

 

பக்.131

 மதம் என்று ஒரு இந்து குறிப்பிடுவது பல்வேறு ஏவல்களும் தடைகளும் கொண்ட ஒரு தொகுப்பே 

 

பக்.132

 எல்லாவற்றிலும் பெரிய தீமை அந்த சட்டங்கள் நேற்றும் இன்றும் இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே.

 இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்பதில் எனக்கு தயக்கம் இல்லை 

 

பக்.133

 இந்து மதச் சீர்திருத்தம் பற்றிய வழிகாட்டுதல்கள் ஐந்து 

1.இந்து மதத்துக்கு ஒரேஒரு பிரமாணமான புத்தகம் இருக்க வேண்டும். இது எல்லா இந்துக்களும் ஏற்கத்தக்கதாக. ஒப்புக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைத்தவிர வேதங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் முதலாக புனிதமானவையாகவும் அதிகாரபூர்வமானவையாகவும் கருதப்படும் எல்லா இந்து மத நூல்களையும் அவ்வாறு கருதப்படக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இவற்றில் கூறப்பட்டுள்ள மதக்கொள்கைகளையோ சமூகக்கொள்கைகளையோ பிரச்சாரம் செய்வதை தண்டனைக்குரியதாக்க வேண்டும்.

 

2.இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் ஒழித்துவிடுவது நல்லது, ஆனால் இது இயலாது என்று தோன்றுவதால் புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் பரோகிதராக இருப்பதற்கு அரசின் அனுமதி பத்திரம் பெறாத எந்த இந்துவும் புரோகிதராக இருக்கக்கூடாது.

 

3.அனுமதிப் பத்திரம் இல்லாத, பெறாத புரோகிதர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அனுமதிப்பத்திரம் பெறாதவர் புரோகிதராகச் செயல்படுவதைத் தண்டனைக்குரியதாக்க வேண்டும்.

 

4.புரோகிதர் அரசின் பணியாளராக இருக்க வேண்டும். ஒழுக்கம், நம்பிக்கைகள், வழிபாடு ஆகிய விஷயங்களில் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் மற்ற எல்லாக் குடிமக்கணையும்போல அவரும் நாட்டின் பொதுவான சட்டத்துக்கு உட்பட்டவராயிருக்க வேண்டும்.

 

5.புரோகிதர்களின் எண்ணிக்கையை தேவையின் அடிப்படையில் ஐ.ஸி.எஸ். அதிகாரிகளின் விஷயத்தில் செய்யப்படுவதுபோல அரசு வரையறை செய்து நிர்ணயிக்க வேண்டும்.

 

பக்.141

 சாதியை வேருடன் களைந்தெறிவதற்கு நீங்கள் உங்கள் முயற்சியைச் செய்ய வேண்டும்.

 என்னுடைய வழியில் இல்லாவிட்டால் உங்கள் வழியிலாவது அதைச் செய்ய வேண்டும். 

 நான் உங்களுடன் இருக்க மாட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

நான் உங்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்ட பின்பும் உங்கள் இயக்கத்தைப் பரிவுணர்வுடன் கவனித்து வருவேன்.

 

பக்.142

இந்து சமூகம் சாதியற்ற சமூகமாக மாறினால்தான் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேண்டிய பலத்தைப் பெற முடியும் என்பது என் கருத்து.  அத்தகைய உள் வலிமை இல்லாமற் போனால் இந்துக்களுக்கு சுயராஸ்யம் கிடைப்பது அடிமைத்தனத்தை நோக்கிச் செல்வதாகவே இருக்கும். நீங்கள் வெற்றி பெற நல்வாழ்த்துக் கூறி விடைபெறுகிறேன்.

  

 

இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

  இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் – பிறப்பும் வளர்ச்சியும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் (அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ...

அதிகம் பார்க்கப்பட்டவை